டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு-குற்றவாளிகளுக்கு தூக்கு

Friday, September 13, 2013
பரபரப்பான டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் டெல்லி விரைவு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்பளித்தது.
நாட்டு மக்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பில் குற்றவாளிகள் முகேஷ்,அட்சை,பவன் குப்தா,வினய் ஆகிய நால்வருக்கும் தூக்கு தண்டனை விதித்ததில் இறந்த பெண்ணின் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி.

பெற்றோர்கள் இது பற்றி என்ன கூறினார்கள்:நீதித்துறையின் மீது எங்களுக்கு இருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. என்று மாணவியின் தாயார் கண்ணீர் விட்டபடி கூறினார்.

இந்த தீர்ப்பு வந்ததை அடுத்து நான் முழு மகிழ்ச்சி அடைகிறேன் என உயிரிழந்த மாணவியின் தந்தை கூறியுள்ளார். இவர் மேலும் கூறுகையில்; இந்த வழக்கில் போலீசாரும், நீதித்துறையும் தனது கடமையை சரியாக செய்துள்ளது என்றார்.

நாம் ஏற்கனவே குறிப்பட்டு இருந்தது போல் நாடே இந்த தீர்ப்பை தான் எதிர்பார்த்து இருந்தது,மேலும் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் வேறு வேறு கோர்ட்களில் தப்பித்துவிடக்கூடாது. தண்டனையையும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment