டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு - நாளை தீர்ப்பு

Tuesday, September 10, 2013
 டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பரபரப்பான இத்தீர்ப்பு நாளை(11.09.2013) அறிவிக்கப்படும் என அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.இத்தீர்ப்பின் மூலம் மக்கள் என்ன எதிர் பார்கிறார்கள்.

ஒரு ஆண் அந்நிய பெண்ணுடனோ,ஒரு பெண் அந்நிய ஆணுடனோ ஒன்றாக பேசி பழகுவதை இஸ்லாம்  வன்மையாக காரண  காரியங்களுடன் கண்டித்தாலும் இந்த மாடர்ன் உலகில் அதையெல்லாம் யாரும் காதில் வாங்குவதாகவே இல்லை.இறைவன் படைத்த வரம்புகளை மீறும் பொழுது ஆங்காங்கே சில படிப்பினைகள் இந்த மனித சமுதாயத்திற்கு கிடைகின்றது.

சமீபத்தில் டெல்லி மாணவி ஒருவர் நள்ளிரவில் தன ஆன்னன்பருடன் சென்றபொழுது 6 காம வெறிகொண்ட மனித மிருகங்களால் கற்பழிக்கப்பட்டு கடுமையான முறையில் தாக்கப்பட்டார்,குத்துயுரும் கொலையுயிருமாக இருந்தவரை சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவர் இறந்ததும் ஒட்டுமொத்த இந்தியாவும் கிளர்தெழுந்த அச்சமயத்தில் 6 நபர்கள் செய்த காமவெறியாட்டம் தவறு தான் என்றாலும் இறந்த அப்பெண்ணும்,அவரின் ஆண் நண்பரும் தங்கள் பாலின வேறுபாடு இல்லாமல் பழகியதை,அந்த இரவில் ஊர் சுற்றியதை ஒரு சிலரே தைரியமாக கண்டித்தனர்.

அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கும் பொழுது தவறுகள் நிகழ அதிபட்ச வாய்ப்புகள் உள்ளதாலேயே இஸ்லாம் இதை கண்டிக்கிறது,மேலும் இது சமூக ஒழுங்கு,கலாசார ஒழுங்குகளையெல்லாம் இது கேள்வி குறியாக்கிவிடும்.

என்னதான் அப்பெண் கலாசார வரம்புகளை மீறி தனியாக சென்றாலும், கொடூரமாக கற்பழித்ததும்,கடுமையான முறையில் தாக்கியதும் மன்னிக்க முடியாத குற்றமே.குற்றவாளிகளில் ஒருவன் சிறைச்சாலையில் தற்கொலை செய்துகொண்டான்!!!.மேலும் ஒருவனை 18 வயது பூர்த்தியாகாத மைனர் என்று நீதி மன்றம் தீர்பளித்து  அவனுக்கு 2 ஆண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டது.இத்தீர்ப்பு அம்மாணவியின் குடும்பத்தார்க்கு அதிர்ச்சியை தந்து 18 வயதானவனை சிறுவன் என்பதா? என்றும் தங்கள் மனக்குமுறலை மீடியா முன் கொட்டியதையும் நாம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்கமாட்டோம்.

மீதம் உள்ள 4 பேருக்கும் உள்ள தண்டனை விபரம் நாளை(11.9.2013) அறிவிக்கப்படும் என நீதிபதி யோகேஷ் கண்ணா தெரிவித்தார்.

பெற்றோரும்,மக்களும் என்ன எதிர்பார்கின்றனர்:
இனி வரக்கூடிய காலங்களில் இதுபோன்ற தவறுகளுக்கு வழங்கக்கூடிய
தீர்ப்பு முன் உதாரணமாகவும்,தவறு செய்பவர்களுக்கு ஒரு பயத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும். பொதுவாகவே சட்டத்தை தவறாக பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிகின்றார்கள் என்பதால் காலம் கடத்தாமல்,மக்களின் சலசலப்பிற்கு அஞ்சாமல் நேர்மையான நீதியான தீர்ப்பாக இருக்க வேண்டும்.இவை அனைத்திற்கும் தீர்வு அவர்களுக்கு மரண தண்டனையே...
நாளை இறைவான் நாடினால் பொறுத்திருந்து பார்ப்போம் தீர்ப்பு எப்படி வருகிறது என....

 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment