பகுத்தறிவாளர்கள் என்னும் பல முட்டாள்கள்

Tuesday, September 17, 2013
இன்று பகுத்தறிவு பேசும் பல போலி பகுத்தறிவாளிகள் தன்னை தவிர புத்திசாலிகள் யாரும் இல்லை,நான் அறிவாளி நீ முட்டாள் என்னும் உயர்ந்த கருத்தை!!! தங்கள் கொள்கையாகவே வைத்துள்ளனர்.இவர்களின் வடிகட்டிய மடத்தனத்தை விளக்கும் முன் இவர்கள் யார் என்பதை நாம் சற்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.


ஹிந்து மதத்தில் உள்ள தீண்டாமை,நிறத்தின் அடிப்படையிலே,செய்யும் தொழிலின் அடிப்படையிலே மக்களை பிரித்து நீ உயர்ந்தவன்,நீ தாழ்ந்தவன் என்றெல்லாம் உள்ள கொடுமைகளை லாஜிக்கான கேள்விகளை கேட்டு எதிராளியை  மடக்கி அவர்களை எதிர்த்தவர்களுக்கு மக்கள் சூட்டிய பெயர் தான் பகுத்தறிவு கூட்டத்தினர்.நாளடைவில் குருட்டாம் போக்கில் ஹிந்து கடவுள்களை விமர்சிக்க போய்,அனைத்து மத கடவுளையும் எதிர்க்க ஆரம்பித்துவிட்டனர்.இதற்க்கு அவர்கள் சொல்லும் காரணம் மனிதன் தான் கடவுளை ஏற்படுத்தினான்,கடவுள் என்பவன் இல்லை என்று சொல்லானார்கள்,பிறகு மனிதன் எப்படி பிறந்தானம் என்ற கேள்விக்கு டார்வின் என்ற முட்டாளின் பரிணாம வளர்ச்சி என்ற கட்டு கதைகளை பரப்பிவிட்டனர்.

ஹிந்து மதத்தின் பார்பனர்களை ஆரம்பத்தில் வழுவாக எதிர்த்தனர்.கிறிஸ்த்தவம்,இஸ்லாம் ஆகியவைகளையும் விட்டு வைக்கவில்லை.

கடவுளை மறுக்கும் இவர்கள் பகுத்தறிவுவாதிகளா?

மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுகளில் இன்றியமையாதது பகுத்தறிவு,இது தான் நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே.

கண் - பார்த்தல்
காது - கேட்டல்
மூக்கு - மணத்தல்
நாக்கு - சுவைத்தல்
தோல் - உணர்தல்

இந்த ஐந்து அறிவை கொண்டு அறியமுடியாத விஷயத்தை 6 ம் அறிவான மூளையை கொண்டு சிந்தித்து அறிவதே பகுத்தறிவாகும்.

உதாரணத்திற்கு சென்னை மவுன்ட் ரோடு எவ்வளவு பிசியான சாலை என்று நமக்கு தெரியும்,அச்சாலையில் ஒரு 5000 நபர்கள் போராட்டம் நடத்த முன் அனுமதியின்றி செல்கிறார்கள்.நமக்கு என்ன சட்டென தோன்றும் இவர்கள் அங்கு சென்றால் பெரும் ட்ராபிக் நெருக்கடி ஏற்படும் என்று தோன்றும்.அவர்கள் அங்கு போய் அமர்ந்து அதன் பின் ஏற்படும் ட்ராபிக் நெருக்கடியை முன்கூட்டியே நம் கண்ணால் பார்க்காமல் நாம் முடிவு செய்கிறோம் இது தான் பகுத்தறிவு.

இதே கருத்தை கடவுளுக்கு பொருத்தி பார்ப்போம்.

கடவுள் என்பவனை கண்ணால் பார்த்தோ,அவனின் பேச்சை நேரடியாக காதால் கேட்டோ,அவனின் வாசனையை மூக்கால் நுகர்ந்தோ,அவனை நாவால் நக்கியோ,அவனை தொட்டு பார்த்தோ இந்த 5 அறிவை கொண்டு கடவுள் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்ப முடியாத பொழுது,கடவுள் என்ற ஒருவன் இல்லை என்றால் இந்த பிரபஞ்சமும்,அதில் உள்ள உயிர்களும் சீராக இயங்குமா? என்று பகுத்தறிவை கொண்டு சிந்தித்து கடவுளை அறிபவனே உண்மையான பகுத்தறிவாதி.

ஒரு நிர்வாகம் திறம்பட இயங்கவே ஒரு தலைமை தேவைபடுகிறது. முடிவெடுக்க,எடுத்த முடிவை செயல்படுத்த அந்த தலைமை செயல்படுகிறது.

ஒரு வங்கி இருக்கிறது என்றால் அதற்க்கு பல ஊழியர்கள் இருந்தாலும் பிரிவு மேலாளர்(BRANCH MANAGER) என்று ஒருவர் தான் இருப்பார்.வேலைபார்க்க கூடிய ஊழியர்கள் விருப்பம் போல வரலாம்,விருப்பம் போல எங்கும் செல்லலாம்.என்ன வேலையை வேண்டுமானாலும் பார்க்கலாம்,எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று ஒரு வங்கி செயல்படுமானால்,அந்த வங்கி,வங்கியாக இருக்குமா?????அந்த வங்கியில் யாரவது பணம் போடுவார்களா.அது லாபகரமான முறையிலே இயங்குமா.இப்படி பல கேள்விகள் எழும்.

அது போல இறைவன் என்று யாரும் இல்லை கோள்கள் அனைத்தும் தானகவே உண்டாகி கண்காணிப்பவன் இன்றி செயல்படுகின்றது என்று வைத்துக்கொண்டால் அது முறையாகுமா.

ஒரு சிறு குழந்தைக்கு பாடம் நடத்த,அந்த குழந்தையை கண்காணிக்க ஒரு ஆசிரியர் தேவைபடுகிறார்,அந்த ஆசிரியர் தனக்கு கொடுத்த பணிகளை முறையாக செய்கிறாரா என பார்க்க ஒரு மேலதிகாரி தேவை படுகிறார் என்றால்.இன்றைய அறிவியல் அறிவு சொல்கிறது கோள்கள் ஒன்றோடு ஒன்று ஈர்த்துவிடாமல் இருக்க கண்ணுக்கு புலப்படாத எதோ ஒரு எதிர்ப்பு விசை செயல்படுகிறது என்று.இப்பொழுது சொல்லுங்கள் இதை கண்காணிப்பவன் இல்லை என்றால் முறையாக இயங்குமா ???அப்படி யாரும் இல்லை என்றால் உலகம் என்றோ அழிந்திருக்கும்.

இவ்வுலகை காப்பவனின் தகுதி என்ன (இங்கே கிளிக் செய்யவும்)?

அவன் யார்? 

மேற் சொன்ன அனைத்து தகுதிகளை உடையவனையே நாம் இறைவன் என்று தமிழிலும்,அல்லாஹ் என்று அரபியிலும் குறிப்பிடுகிறோம்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment