திருவாளப்புத்தூர் பைத்துல்மால் மாதாந்திர பயான் நிகழ்ச்சி

Monday, September 16, 2013

திருவாளப்புத்தூரில் பைத்துல்மால் சிறப்பாக செயல்பட ஆரம்பித்து ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்ட நிலையில்.பைத்துல்மாலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக மாதந்திர பயான் நிகழ்ச்சி நடத்துவது என பைத்துல்மால் நிர்வாக கமிட்டியினரால் முடிவு செய்யப்பட்டு நாட்டாண்மை பஞ்சாயத்தார்களின் ஒப்புதலின் பெயரில் பள்ளிவாசலில் இந்த பயான் நிகழ்ச்சி அல்லாஹ்வின் உதவியால் இனிதே நடைபெற்றது.

சரியாக 7 மணியளவில் துவங்கிய இந்நிகழ்ச்சியில் ஆண்களும்,அதிகமான பெண்களும் கலந்துக்கொண்டனர்.

 இந்த பயான் நிகழ்ச்சியில் பைத்துல்மாலின் ஒருவருட கணக்கு ஒப்படைக்கப்பட்டது.ஒரு வருடத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை தந்த அல்லாஹ்வுக்கு அனைத்து புகழும்.

மயிலாடுதுறை டவுன் பள்ளி இமாம் ஜபார் அலி,(ஹசனி) அவர்கள் "பைத்துல்மாலின் கட்டமைப்பும்,இஸ்லாமியர்களின் ஒழுங்கும்" என்கின்ற தலைப்பில் பேசினார்கள்.

இஸ்லாமியர்கள் வேறுபட்ட கொள்கையாலும்,குடும்ப பாரம்பரியத்தாலும்,இன்ன பிற காரணங்களினாலும் தங்களுக்குள் பிளவுபட்டுவிடாமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு முஸ்லிம் ஜமாத்தும் இந்த பைத்துல்மாலை சிறப்பாக நடத்தினால் இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை தவிர யாருக்கும் அடிமையில்லாமல்,தன்னிறைவு பெற்றவர்களாக வாழலாம் என மக்களிடத்திலே பதிவு செய்தார்கள்.


இனிதே நடந்த இந்நிகழ்ச்சி இரவு சுமார் 8.35 மணியளவில் நிறைவுற்றது.  

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

3 comments: