அல்லாஹ்வின் திருப் பெயரால்
இந்த வரலாறை பதிவேற்றம் செய்ய நமது வலைதளத்திற்கு தந்த நமதூர் பரக்கத் தெருவை சார்ந்த சே.குத்தூப்தீன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலும்,மறுமையிலும் கிருபை செய்வானாக.
வரலாற்றை தொகுத்தவர்கள்:
நமதூர் மர்ஹும் அ.முஹம்மது யாக்கூப்(வைத்தியர்,மெயின் ரோடு ) என்பவர் முயற்ச்சியால் மர்ஹும் சை.பக்கிர் முஹம்மது(புலவனார்) அவர்கள் நினைவுப்படி கூறியதன் பேரில் இந்த வரலாறு கீ.பி 1950 ல் எடுக்கப்பட்டது.அதன் பின் கீ.பி 1992 ல் அ.முஹம்மது யாக்கூப் அவர்களின் ஆலோசனைப்படி ஆரம்ப வாரிசு முதல் இன்று பிறக்கும் வாரிசு வரை அனைத்து தகவல்களையும் சேகரித்து வைத்து இருப்பவர் தான் நாம் மேலே குறிப்பிட்ட சே.குத்தூப்தீன் அவர்கள்.
ஒரு ஆலமரத்தின் விதை
லுத்தூப்சா அவர்கள் தங்கள் 4 சீடர்களுடன் அரச மரத்தடி நிழலில் தங்கி இருந்த காலத்தில்,தஞ்சாவூர் மகாராஜா தன்படை பகுதி சேனதிபதிகளுடன் வைத்தீஸ்வரன் கோவில் தரிசனம்,பூம்புகார் இந்திரவிழா காணவும் திருவாளப்புத்தூர் வழியே செல்வது வழக்கம்.சித்திரசாவடி குளத்திற்கு மேற்கே 1 கீ.மீ தொலைவில் அமைந்து இருந்த பொய்கையில் நீராடி மண்டபத்தில் தங்கி ஓய்வுக்குப்பின் பயணமாகும் ஒருநாள் மகாராஜா அவர்களுக்கு தன்னால் பொறுக்க முடியாத வயிற்றுவலி ஏற்பட்டுவிட்டது அரண்மனை வைத்தியர்கள் மகாராஜாவை குணப்படுத்த போராடினார்கள் போராட்டத்தில் தோல்வியே கிடைத்தது.கடைசியில் சித்திரசாவடியில் தங்கி இருக்கும் லுத்தூப்சா அவர்களையும்,அவர்களின் சீடர்களைப்பற்றியும் மகாராஜாவிடம் தெரிவிக்கப்பட்டது.
மகாராஜா தன் செனாதிபதிகளுடன் லுத்தூப்சா அவர்களை அரச மரத்தடியில் தொழுகை முடிந்த உடன் சந்தித்து தன் நிலைமையை தெரிவித்தார்.சித்திரச் சாவடி குளத்தில் தண்ணீரை எடுத்து ஓதி கொடுத்து மகாராஜா அந்நீரை அருந்தியவுடன் வயிற்றுவலி நீங்கியது.
வைத்திய போராட்டத்தில் வெற்றிக்கண்ட லுத்தூப்சா அவர்களுக்கு மகாராஜா மனசந்தோசமடைந்து வெகுமதிகளை அன்பளிப்பாக கொடுத்ததுடன் "தாங்கள் தங்கி இருக்க எந்த இடம் வேண்டும்" என்று கேட்டதில் சாவடியின் முன்புறம் (தற்போதுள்ள தர்கா) உள்ள இடத்தையும்,அதற்க்கு கீழ்புறம் உள்ள மானியம் (ஒன்னரை வேலி) 10 ஏக்கர் நிலம் நஞ்சையும் கொடுத்து பெரிய பக்கிர் மானியம்,சின்ன பக்கிர் மானியம் என்ற பெயரும் சூட்டப்பட்டது.மகாராஜா கொடுத்த நிலங்களையும்,தற்போது அடக்கமாயுள்ள இடங்களையும் வைத்துக் கொண்டு லுத்தூப்சா அவர்கள் சிலகாலம் வழ்ந்தப்பின் காலமானார்கள்(இன்னலில்லாஹி)
லுத்தூப்சா அவர்களை அடக்கம் செய்த சிலகாலம் கழித்து முஹப்பைத்சாவைத் தவிர மற்ற சீடர்கள் திருவாளப்புத்தூரை விட்டு போய் விட்டார்கள் முஹப்பைத்சா மட்டில் மேட்டு பக்கிர் மானியம்(தற்போது வழங்கப்படும் பெயர்),பள்ள பக்கிர் மானியத்தையும் லுத்தூப்சா அடக்கமான இடத்தையும் காவல் செய்துக் கொண்டு நிக்காஹ்(திருமணம்) செய்துக்கொண்டார்கள்.முஹப்பைத்சாவுக்கு சுல்த்தான்சா என்ற குழந்தை பிறந்தது ,சுல்த்தான்சாவுக்கு மதார்சா என்றக் குழந்தை பிறந்தது.
மதார்சா காலத்தில் ராஜகிரியில் இருந்து யானைக்காரவீடு குடும்பம் என்ற பட்டபெயர் உடையவர் பாவாச என்பவரும்,அவர் தம்பி பக்கிர் முஹம்மது என்பவரும் குடும்பத்திலிருந்து விலகி முறையே 15 ,12 வயதில் நீடூர்-நெய்வாசலில் வந்து கூலிவேலை செய்தும் வெற்றிலை வியாபாரம் செய்து வரும் காலத்தில் திருக்களாச்சேரியில் பாவாசா அவர்களுக்கு திருமணம் ஆனது.
தன்தம்பி பக்கிர் முஹம்மது அவர்களுக்கு நிக்காஹ் ஆனதும் பாவாசாவை விட்டு பிரிந்துக் கொண்டார்கள்.பாவாசா முதல் மனைவிக்கு பாச்சா ராவுத்தர், புகர்தீன் ராவுத்தர்,அப்துல் ரஹ்மான் ராவுத்தர் ஆகா மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்த பின் மூத்த மனைவி காலமாகிவிட்டார்கள்.புகர்தீன் என்பவரை தனது தம்பி பக்கிர் முஹம்மது அவர்களுக்கு வளர்ப்பு பிள்ளையாக தத்து கொடுக்கப்பட்டது.முதல் மனைவி இறந்தப் பின் மூன்று குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வரதம்பட்டு என்ற ஊரில் தங்கி பெண் குழந்தையை கடலங்குடி என்ற ஊரில் நிக்காஹ் செய்யப்பட்டது.
இரண்டாம் தாரமாக கும்பக்கோணத்தை அடுத்த மலானூர் என்ற ஊரில் விதவைப் பெண் ஒன்றி ஓர் ஆண் குழந்தையுடன் பாவாசா திருமணம் செய்துக்கொண்டார்.பாவாசாவுக்கு ஆதம்சா ராவுத்தர் என்பவரும் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்தன.அவர்களின் பெயர் தெரியவில்லை.அதில் ஒருவர் ஆயங்குடிக்கும் மற்றொருவர் வவ்வாளடிக்கும் போய்விட்டார்கள்.விதவைப் பெண்ணுடன் வந்த ஆண் குழந்தையின் பெயர் காதர்சா.
பாவாசா ராவுத்தர் வரதம்பட்டில் சிலகாலம் தங்கி இருந்து பின் பாச்சா ராவுத்தர்,அப்துல் ரஹ்மான் ராவுத்தர் ஆகா இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு மதார்சா காலத்தில் திருவாளப்புத்தூரில் வந்து தங்கி விட்டார்கள்.காதர்சா அவர்களையும் ஆதம்சா அவர்களையும் வரதம்பட்டிலே விட்டு விட்டார்கள்.இரண்டுப் பெரும் வரதம்பட்டு என்ற ஊரிலே சிலக் காலம் தங்கிவிட்டார்கள்.
பாவாசா திருவாளப்புத்தூர் வந்து கொரநாடு என்ற ஊரில் முன்றாம் தாரமாக திருமணம் செய்து கொண்டார்கள்.நத்தர்சா ராவுத்தர்,சையத் ராவுத்தர் ஆக இரண்டு ஆண் குழந்தைகளும்,ஒரு பெண் குழந்தையையும் பெற்றார்கள்.பெண் குழந்தையின் பெயர் குப்பம்மாள் (அந்த காலத்தில் இதுப் போன்ற பெயர்களை முஸ்லிம்கள் வைப்பது நடைமுறையில் இருந்தது).பாவாசா அவர்கள் சிலக் காலம் திருவாளப்புத்தூரில் இருந்து தன் பிள்ளைகள் யாவும் திருமணம் செய்தப் பின் பாவாசா காலமாகிவிட்டார்.குப்பம்மாள் என்ற பெண்ணை வானாதிராஜபுரம் என்ற ஊரில் திருமணம் செய்யப்பட்டது.
காதர்சா குமாரர்களில் சையத்சா,இப்ராஹிம் இவர்களும் வரதம்பட்டில் இருந்து விலகி நத்தர்சா காலத்தில் முன்னதாக(முதலாவதாக) திருவாளப்புத்தூர் வந்தார்கள்.இரண்டாவதாக நத்தர்சா தன் பிள்ளைகள் அனைத்தும் வரதம்பட்டில் இருந்து அழைத்துக் கொண்டு நத்தர்சா காலத்தில் திருவாளப்புத்தூர் வந்து விட்டார்கள்.முகம்மத்து கனி குமாரர்கள் வரதம்பட்டில் இருந்து நரசிங்கம்பேட்டை போய் விட்டார்கள்.
இதற்கு பின்னரே திருவாளப்புத்தூரில் முஸ்லிம்கள் பல்கி பெருகினார்கள்.

சுமார் கீ.பி 1600 வருடத்திற்கு முன்பு திருவாளப்புத்தூர் சித்திரச் சாவடி குளம் அரசமரத்தடி அருகில் உள்ள சாவடியில்(தற்போதுள்ள லுத்தூப்சா தர்காவிற்க்கு எதிர்ப் புறம்)லுத்தூப்சா அவர்கள் சிலகாலம் தங்கிய வாழ்க்கையையும் நம் முன்னோர்களையும் காண்போம்(இன்ஷா அல்லாஹ்).

வரலாறு ஆச்சர்யப்படக்கூடியதாக உள்ளது. இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இத்தளம் மெருகேறி உள்ளதாகவே நான் உணர்கிறேன். இன்னும் ஆரோக்கியமான தகவல்களுடன் உங்களை நான் எதிர்பார்க்கிறேன்.
ReplyDelete//வரலாறு ஆச்சர்யப்படக்கூடியதாக உள்ளது. இந்த முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.//
ReplyDeleteதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.....
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ.கிளியனூர் இஸ்மத், உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்.........
ReplyDelete