Mr.Bean இஸ்லாத்தை ஏற்றாரா?facebook ல் வேகமாக பரவும் செய்தி

Saturday, October 5, 2013
புகழ் பெற்ற காமெடி நடிகரும்,இங்கிலாந்து நாட்டவருமான Mr.Bean(Rowan Atkinson)இஸ்லாத்தை ஏற்றதாக சில வெப்சைட்கள் மூலமாகவும்,Facebook மூலமாகவும் ஒரு செய்தி பரவி இருகின்றது.அதன் உண்மை தன்மையை பற்றி அறியும் முன்னரே பல இஸ்லாமிய நண்பர்களும் Share செய்து வருகின்றனர்.இந்த செய்தியின் உண்மை நிலை என்ன என்றும் பார்ப்போம்.

சில தினங்களாக வேகமாக பரப்பப்பட்டு வரும் செய்திகளில் ஒன்று தான் மேலே உள்ள செய்தி.நான் கூகுளில் தேடிய பொழுது எந்த ஒரு செய்தியும் அவர் இஸ்லாத்தை தழுவியதாக தெரிவிக்கவில்லை.அது மட்டுமில்லாமல் பெரிய செய்தி ஊடகங்களான Time, The New York Times, Washington Post, etc. இதில் எது ஒன்றும் Rowan Atkinson இஸ்லாத்தை தழுவியதாக எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை.

பெயர் தெரியாத இஸ்ரேலிய சார்பு இணையதளம் மட்டும் Rowan Atkinson இஸ்லாத்தை தழுவினார் என்று ஆரம்பத்தில் பரப்பியது,இதன் மூலம் தனக்கு அதிகமான வருகையாளர்கள் வந்ததால் தங்கள் தளம் டிராபிக் சிக்கல் ஏற்பட்டது என்றும் தெரிவித்தது.பின் Rowan Atkinson இஸ்லாத்தை தழுவியதை மறுத்து கட்டுரை வெளியிட்டது.

இது தான் கூகிள் தேடலில் வந்த தேடல் முடிவுகள்,இதில் எந்த பெரிய ஊடக தளங்களின் செய்தியும் இல்லை:
Mr Bean Islam2

Rowan Atkinson இஸ்லாத்தை ஏற்றார் என்பதற்கு சான்றாக,அவர் செய்தி யாளர்களிடம் பேசும் பொழுது ஒரு விரலை மட்டும் உயர்த்தி ஷஹாதத்(இறைவன் ஒருவன் தான் என்பதற்கு சாட்சியம் பகர்தல்) சொன்னார் என்று காட்டும் Youtube வீடியோவும் முழு பொய்யாக உள்ளது.  

எல்லாவற்றிற்கும் மேலாக தான் இஸ்லாத்தை ஏற்றதாக இதுவரை எந்த ஒரு மீடியாவிலும் அவர் செய்தி வெளியிடவில்லை.இது தொடர்பாக சில ஊடகங்கள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்த பொழுது,அவர் சார்பாக அவரின் பிரதிநிதி லூசி என்பவர் "Rowan Atkinson இஸ்லாத்தை தழுவவில்லை" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன் எத்தனையோ பிரபலங்கள் இஸ்லாத்தை தழுவியதாக வெறும் வதந்தியை பரப்பியது போல இதுவும் ஒரு வதந்தியே.

ஒரு பேச்சிக்கு  Rowan Atkinson இஸ்லாத்தை தழுவிவிட்டார் என்று வைத்து
கொண்டால் கூட,அவரை வைத்து இஸ்லாத்திற்கு எந்த ஒரு புகழும் இல்லை,இழிவும் இல்லை..சத்தியம் எது அசத்தியம் எது என்று இஸ்லாம் தெளிவாக வரையறுத்துவிட்டது.யார் சத்தியத்தின் பக்கம் உள்ளார்களோ அவர் அவருக்கு நன்மை செய்து கொண்டவர் ஆவர்.யார் அதற்கு எதிரானவரோ தனக்கு தானே தீமை செய்துகொண்டவர் ஆவர்.நன்மை செய்தவற்கு சொர்கமும்,தீமை செய்தவற்கு நரகமும் தான் இறுதியில் பரிசு.

 உண்மை எதுவென்று தெரியும் முன்னரே நமது இஸ்லாமிய சகோதர்களும் Facebook,Twitter இன்னும் பல ரீதியாக இந்த பொய் செய்தியை பரப்புகின்றனர்.

என்னனே தெரியாம Like,Share பண்ணுவதை நமது சகோதரர்கள் என்று தான்  விட்டு தொலைப்பார்களோ.இது போன்றவர்கள் தான் மட்டும் கேட்டதின்றி பிறரையும் குழப்புகின்றனர்.

இவர்களை போன்றவர்களுக்கு அல்லாஹ்வும் அவன் தூதரும் விடும் எச்சரிக்கை: 

நம்பிக்கை கொண்டோரே!குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டுவந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமல் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதர்க்காக அதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்(இல்லையேல்)நீங்கள் செய்ததற்காக கவலைப்படுவீர்கள் 
 அல் குர்ஆன் :49:6 

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் “கேட்பதையெல்லாம் பேசுவதே ஒருவன் பொய் பேசுவதற்கு போதுமானதாகும்”. அறிவிப்பவர் ஹாஃபிஸ் இப்னு ஆஸிம்(ரலி) ஆதாரம்:முஸ்லிம்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

2 comments:

 1. >>>> ஒரு பேச்சிக்கு Rowan Atkinson இஸ்லாத்தை தழுவிவிட்டார் என்று வைத்து
  கொண்டால் கூட, அவரை வைத்து இஸ்லாத்திற்கு எந்த ஒரு புகழும் இல்லை; இழிவும் இல்லை..சத்தியம் எது அசத்தியம் எது என்று இஸ்லாம் தெளிவாக வரையறுத்துவிட்டது.யார் சத்தியத்தின் பக்கம் உள்ளார்களோ அவர் அவருக்கு நன்மை செய்து கொண்டவர் ஆவர்.யார் அதற்கு எதிரானவரோ தனக்கு தானே தீமை செய்துகொண்டவர் ஆவர்.நன்மை செய்தவற்கு சொர்கமும்,தீமை செய்தவற்கு நரகமும் தான் இறுதியில் பரிசு.
  என்னனே தெரியாம Like,Share பண்ணுவதை நமது சகோதரர்கள் என்று தான் விட்டு தொலைப்பார்களோ. இது போன்றவர்கள் தான் தாம் கேட்டதின்றி பிறரையும் குழப்புகின்றனர்.>>>>>>

  சாட்டையை சுழற்றி நன்றாகவே அடித்துள்ளீர்கள்!
  --- அன்புடன் உங்கள் சகோதரன்:
  பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
  My BLOG: http://portonovocomputertech.blogspot.com/ (தொட்டு விடும் தூரம்)

  ReplyDelete