விஸ்வரூபம்-2 :மீண்டும் முஸ்லிம்களை குறிவைகின்றாரா கமல்?

Monday, September 9, 2013
விஸ்வரூபம் என்ற படத்தை இஸ்லாமியர்களுக்கு எதிராக எடுத்து முஸ்லிம்களை கொதிக்கவைத்து,படாதபாடுபட்டு அந்த படத்தை ரிலீஸ் செய்தார் கமல்.அதன் தொடர்ச்சியாக விஸ்வரூபம் 2 ல் மீண்டும் முஸ்லிம்களை குரோதத்துடன் குறிவைகின்றாரா கமல்?வாருங்கள் அலசுவோம்.

படத்திற்கு படம் புது ட்ரெண்டை ஏற்படுத்துபவர் என்ற பெயர் கமலுக்கு நெடுளாக உள்ளது,இவர் சினிமா உலகில் அரை நூற்றாண்டுகளா வேலை செய்து வருபவர்.திருட்டு VCD களின் வருகைக்கு பின் பாதிப்பு அடைந்த சினிமாக்களில் இவரின் படமும் உண்டு,இந்த கம்பியூட்டர் காலத்தில் சினிமாக்கள் திரைக்கு வருகிறதோ இல்லையோ திருட்டுத்தனமாக இனடர்நெட்டில் வந்துவிடும்.

இதில் நேரடியாக பாதிக்கப்படுவது படத்தின் தயாரிப்பாளர் தான் என்றாலும் ஓடாத படத்தின் நடிகர்,இயக்குனர்களுக்கு பட வாய்ப்பு அமையாது என்பதால் அவர்களும் பாதிக்கப்படுவார்கள்.அவர்களின் சம்பளமும் குறையும்.ஆக படம் குறைந்த நாள் ஓடினாலும் நல்ல வசூலை அல்ல வேண்டும் அதற்க்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்த சினிமாத்துறைக்கு இதிலும் வழிகாட்டியவர் திருவாளர் கமல்.

இதற்க்கு உதாரணமாக தேவர்மகன் என்ற படத்தை சொல்லலாம்.தேவரின் புகழ்பாடி,அச்சமுதாயத்தின் இளைஞர்களுக்கு பிடித்தப்படி வீரத்துடன் நடித்து அந்த படத்தை ஓட்டினார். 

இந்த ஐடியாவும் கால ஓட்டத்தில் காலாவதியாக இவர் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுதே ஏதவாது ஒரு பிரச்னையை இந்த படத்தை நோக்கி திருப்புவார்.இது என்னுடைய கதை என்று யாரோ அறிமுகமில்லாத நபர் சொல்வார்.சூடான செய்தி கிடைத்ததாக நினைத்து செய்தி ஊடகங்களும் இதை உடனுக்குடன் பரப்பிவிடும்.இந்த பிரச்னை கோர்ட்,கேசு என்று இழுக்கும்,இறுதியில் இந்த படம் வந்ததும் அந்த அறிமுகமில்லாத நபர் காணாமலே போய்விடுவார்.

இது தேவர் மகனை நல்ல ஐடியாவாக தோன பல படங்களுக்கு இதுபோன்ற பிரச்னை வந்தது ஷங்கரின் இயந்திரன் படத்திற்கும் வந்தது நினைவிருக்கலாம்.இப்பொழுது உள்ள லேடஸ்ட் டிரன்ட் முஸ்லிம்களை குறிவைத்து எடுத்தால் அது எவ்வளவு கேவலமான படாமாக இருந்தாலும் காசு பார்த்துவிடலாம் என்ற கேவலமான புத்தி உருவாகியுள்ளது.

விஸ்வரூபம் பிரச்சனைக்கு வருவோம்.விஸ்வரூபத்தின் முதல் பாகத்தில் முஸ்லிம்களை குறிவைத்து எடுத்து அந்த மொக்கை படத்தை ஓட்டியதில் ருசிகண்ட கமல்,அதே பார்முலாவை அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் பயன்படுத்துகிறாரோ என்று யோசிக்கவைத்துள்ளது.

கலைதாகம் என்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத உப்பு சப்பில்லாத உருப்படாத படங்களை எடுத்துவரும் கமல் இந்த விஸ்வரூபத்திர்காக இதுவரை 100 கோடி முதலிடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது (பாகம் 1 & 2 சேர்த்து தான்).

முதல் பாகத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் பிரச்சனை வெடிக்கும்(துப்பாக்கி படத்தின் எதிரொலி) என்று எதிர்பாத்திருந்த கமல் DTH ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு தோற்றுபோனார்.   

இஸ்லாமியர்களின் ஒருகிணைந்த போராட்டத்தால் விஸ்வரூபம் படம் வெளியாக தாமதமானாலும்,எதிர்வினையான கருத்துக்கள் கிடைத்தாலும் படத்தின் பப்ளிசிட்டிக்கு உதவியதில் கமலுக்கு ரொம்பவே சந்தோசம்.பத்தாததிற்கு முஸ்லிம் ஹிந்து பிரச்னை போல மீடியாக்கள் இதை திசை திருப்பி மாத்திவிட படமும் வசூலில் தெரியாது.

மீண்டும் இது போல ஒரு பிரச்னை இனி ஏன் படத்திற்கு வருமானால் நான் தேசம் துறப்பேன் என்று சென்ற முறையே மீடியாக்களை கூட்டி கண்ணீர்விட்டு நடித்ததால்,ஒட்டு மொத்த மீடியாவும் அவர் பக்கம் திரும்பி இவர் எவ்வளவு பெரிய கலைஞன் இவர் போனால் நமக்கு பெரிய இழப்பு,முஸ்லிம்கள் தான் அறிவில்லாமல் கண்மூடித்தனமாக எதிர்கிறார்கள் அந்த படத்தை வெளியிட்டால் தானே தெரியும் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதா இல்லையா என்று ? என்ற கருத்தை பரப்பியது.

கமல் என்ன செய்தாலும் ஆஹா ஓஹோ என்று பிதற்றும் சில மீடியாக்களும்,சில ரசிகர்களும் முஸ்லிம்களை மையபடுத்தி விளம்பரபடுத்தும் படத்தை மனிதனின் இயல்பான வெறியினால் தூண்டப்பட்டு அப்படத்தை வரவேற்கின்றனர்.

விஸ்வரூபம் ரிலீசுக்கு முன்பே இது முதல் பாகம் தான் இரண்டாம் பாகமும் வெளிவரும் என்று சொல்லிவிட்டு படத்தை கைவிட்டுவிட்டால்,முதல் பக்கத்தினால் ஏற்பட்ட படிப்பினையால் பயந்து போய் உள்ளார் என்று தன சக சினிமா மற்றும் மீடியா நண்பர்களே தன்னை கேவலபடுத்திவிடுவார்களோ என்ற பயத்தினாலும்,இத்தனை வருடங்களாக சினிமாத்துறையில் உள்ளேன் நான் பின் வாங்குவதா என்ற ஈகோவினாலும்,நான் வெளி தேசத்திற்கு சென்று விடுவேன் என்று மக்களை மிரட்டி வைத்துள்ளதாலும் விஸ்வரூபம் ஜோராக தயாராகி கொண்டுள்ளது.

இத்தனை இருந்தும் படத்தின் கதை மக்களுக்கு பிடிக்கவேண்டுமே, அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் படத்தை பயங்கரமாக விளம்பரபடுத்தும் மும்முரத்தில் உள்ளார் கமல் அதற்கான போஸ்டர்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.அந்த போஸ்டர்கள் முஸ்லிம்களை மைய்யப்படுத்தியே மீண்டும் களமிறங்கி அசிங்கமான விளம்பரம் தேட முயற்சிக்கிறாரோ கமல் என்று யோசிக்கவைகிறது.

இப்போஸ்டரின் பின்னியில் உள்ள பள்ளிவாசலின் டூம் போன்ற தோற்றம் இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி போன்று இந்த நடிகருக்கு போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. 


இந்த போஸ்டருக்கு வாசகர் ஒருவர் அடித்திருந்த கமென்ட்:
மேலே பறக்கும் அமெரிக்க ஹெலிகாப்டருக்கு பத்திரமாக தரை இறங்க கமல் விளக்கு பிடிக்கிறார் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment