திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்

Saturday, May 26, 2012

சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தில்திருமண மண்டபத்தில் நிக்காஹ் நடந்துகொண்டிருந்ததுஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட 
அந்த திருமணவைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி 
பார்வையில் பட்டது.


மணமகளிடம் 'திருமண ஒப்புதல் கையெழுத்துவாங்குவதற்காகபெண் வீட்டார்கள் மணப்பெண்ணுக்கு ஒதுக்குப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைகிறார்கள்.மணப்பெண்ணிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள்இதில் என்ன அதிர்ச்சி என்றுகேட்கிறீர்களாஇனிமேல்தான் அந்த அதிர்ச்சியே!

மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியபிறகு பெண்வீட்டு ஆடவர்கள்நிகாஹ்மஜ்லிசுக்கு வந்து விடுகிறார்கள்ஆனால் மணகள் கையெழுத்திடுவதை 'வீடியோ'எடுப்பதற்காக சென்றவர்கள் மணமகளின் கையெழுத்தை பதிவு செய்ததோடுநிற்கவில்லைமணப்பெண் தங்கியிருக்கும் அறையில் மணமகள் முக்காட்டைவிலக்கி கேமராவுக்கு 'போஸ்கொடுப்பதற்காக; தோழிகள் போன்ற பெண்வீட்டார்களே பெண்ணின் முக்காடை விலக்கி விட மணப்பெண் கூச்சத்தில்தடுத்தாலும், தோழிகள் கழுத்து நகைகளை சரிசெய்யும் சாக்கில் முக்காடுவிலக்கப்படுகிறதுஇதை 'வீடியோ கேமராவும்பதிவு செய்கிறது..

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், இந்த காட்சிகள் அனைத்தும் நேரடிஒளிபரப்பும் செய்யப்படுகிறதுஅந்த நிக்காஹ் மஜ்லிஸில் இரு புறமும்வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காடசிப் பெட்டியில் அந்த காட்சிகள்ஓடிக்கொண்டிருக்கும்போதுஇங்கு மஜ்லிஸில் இமாம் திருமண ஒப்பந்தநடைமுறைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.

தற்செயலாக கூடட்டத்தில் உட்கார்ந்திருந்த விருந்தாளிகளை கவனிக்கும்போது
நடுவிலுள்ள மேடையில் நடக்கும் திருமண நிகழ்ச்சியை அவர்கள் பார்ப்பதாகத்தெரியவில்லை.அவர்களுடைய தலைகளெல்லாம் இடது புறமோ வலது புறமோ நிலைகுத்தி ஆவலோடு எதையோ பார்ப்பதுபோல் தெரிந்தது.மணமகன் கூட மணப்பெண்ணின் முகத்தைஅலங்காரத்தை பார்த்திருப்பாரோ என்றுதெரியாது.ஆனால் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள்மணமகளின் ஒவ்வொருஅசைவையும் அலங்காரத்தையும் கண்டுகளித்தார்கள்.எவ்வளவு பெரிய கொடுமைசில சமயம் மணப்பெண் அறையில் அமர்ந்திருக்கும் பெண்களின்கூட்டத்தையும்கூட வீடியோ கேமராக்கள் விட்டு வைப்பதில்லை.
  
திருமணம் என்கின்ற சுன்னத்தான ஒரு நிகழ்ச்சிக்கு புர்கா அணிந்து கொண்டுவந்திருக்கும் நம் வீட்டு பெண்மணிகளைபெண்கள் மட்டுமே தங்கியிருக்கும்அறைக்குள் (திருமணத்திற்கு வந்திருக்கும் பெண்மணிகளின்அனுமதியின்றிவீடியோ எடுப்பதற்கு திருமண வீட்டாருக்கு யார் உரிமை வழங்கியது?இன்னும் சில வீடுகளில் திருமணத்திற்காக வீடியோவா அல்லது வீடியோவிற்காக திருமணமா என்று தெரியாத நிலையில் உள்ளது. 

இதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின்கட்டாயமாக இருக்கிறதுவருங்கால திருமண நிகழ்ச்சிகளின் போதாவது இது போன்ற 'முற்றிலும் ஹராமான'சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமைமட்டுமல்லவருங்கால சழுதாயக்காவலர்களான இளைஞர்களின்ஊர் ஜமாஅத்தார்களின் கடமையும்கூடஅல்லாஹ் காப்பாற்றுவானாகஆமீன்.

நன்றி:http://www.nidur.info

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

11 comments:

 1. ஆமாங்க இது தடுக்கப்படவேண்டிய ஒரு விஷயம்தான்.

  ReplyDelete
 2. இது தடுக்கப்படவேண்டிய ஒரு விஷயம்தான்

  ReplyDelete
 3. இது தடுக்கப்படவேண்டிய ஒரு விஷயம்தான்

  ReplyDelete
 4. உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி Fakrudeen Ali

  ReplyDelete
 5. உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி தொடர்ந்து தொடர்பில் இருங்கள் சகோ.Lakshmi

  ReplyDelete
 6. காலத்தேற்கேற்ற சமூதாய விழிப்புணர்வு கட்டுரை! வாழ்த்துக்கள்!!
  http://azeezahmed.wordpress.com/
  இதைப்பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின்கட்டாயமாக இருக்கிறது. வருங்கால திருமண நிகழ்ச்சிகளின் போதாவது இது போன்ற 'முற்றிலும் ஹராமான'சம்பவங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோர்களின் கடமைமட்டுமல்ல, வருங்கால சழுதாயக்காவலர்களான இளைஞர்களின், ஊர் ஜமாஅத்தார்களின் கடமையும்கூட! அல்லாஹ் காப்பாற்றுவானாக, ஆமீன்.
  http://azeezahmed.wordpress.com/

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ.AzeezAhamed.இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.....தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..தொடர்ந்து தொடர்பில் இருங்கள்

   Delete
 7. இது தடுக்கப்படவேண்டிய ஒரு விஷயம்தான்

  ReplyDelete
 8. கண்டனத்துக்குரிய செயல்தான் ...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....தொடர்ந்து தொடர்பில் இருங்கள்...

   Delete
 9. ethaipattri oru thalaippu vaithu nam marrka thalaivargal oru koottam vaithaal thaan oru vilippunarvu varum!

  adhu varai makkalidam edhupondra seyalgal thaan!

  ReplyDelete