கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

Wednesday, May 30, 2012
தலைப்பை படித்ததும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே தயவு செய்து கோபம் கொள்ள வேண்டாம். நிச்சயமாக அந்த நியாய தீர்ப்பு நாளில் ஏக இறையோனாகிய அந்த ஒரே இறைவனிடம் இருந்து உங்களை காப்பாற்ற இயேசு(ஈசா(அலை) )சக்தி பெறமாட்டார்.தான் சக்தி பெறமாட்டேன் என்று தன் வாயாலே உங்கள் பைபிளிலே இயேசு சொல்வதை பாருங்கள்.இதை பொய் என்பவர் உண்மை கிறிஸ்தவரே அல்ல!!!!பரலோகத்திலிருக்கின்ற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கின்றவனே பரலோக ராஜியத்தில் பிரவேசிப்பானே யல்லாமல் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்கிறவன் பிரவேசிப்பதில்லை. 
(புதிய ஏற்பாடு – மத்தேயு 7:21).
 
ஏசு சொல்கின்றபடி ஒரே இறைவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்கவேண்டும். அதை விடுத்து ஏசுவையே வணங்குவது,ஏசு சொன்னதற்கு மாற்றமாகாதா…? ஏசுவின் பெயரைச் சொல்லி இல்லாத காரியம் பண்ணுகின்றவர்களை ஏசு மிகவும் எச்சரிக்கிறார். 
 
ஏசு தம்மை வணங்குபவரை கைவிட்டுவிடுவார்
 
அந்நாளில் (நீதி விசாரணை நாளில்) அநேகர் என்னை நோக்கி கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலேயே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா…? உமது நாமத்தினாலேயே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா…? என்பார்கள். அப்போது நான் (ஏசு) ஒருக்காலும் உங்களை அறியவில்லை… அக்கிரமச் செய்கைகாரரே! என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். (மத்தேயு – 7:21-23)
 
அன்பான சகோதர, சகோதரிகளே…! ஏசு வணங்கப்படுபவர் அல்லர். ஏசுவுடன் சேர்ந்து நாமும் வணங்கவேண்டியது அந்த கர்த்தரை மடடும்தான்! கர்த்தர் என்பதைத்தான் ஆங்கிலத்தில் (God) என்றும் அரபி மொழியில் அல்லாஹ் என்றும் அழைக்கின்றனர். அந்த கர்த்தராகிய அல்லாஹ், ஏசுவைப் பற்றி இறுதி ஏற்பாடாகிய திருக்குர்ஆனிலே குறிப்பிடுகிறார். ஏசுவை திருக்குர்ஆன் ஈஸா என்று கூறி 25 இடங்களிலே அவர் பெயரைச் சிறப்பிக்கிறது.
நன்றி http://christianpaarvai.blogspot.com/2008/11/blog-post.html
 
 
சிலுவைகளையும், சிலைகளையும் வணங்கக்கூடாது
விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அதறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளா யிருக்கிறார்கள். அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.
ஏசாயா 44:9 (44:6,9-20)

 
சிலுவைகளையும், சிலைகளையும் வணங்குபவன் அவைகளைப் போன்ற ஊமைகளும், குருடர்களுமே அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8)
Source: http://injealislam.wordpress.com/
 
இஸ்லாமிய சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்:நீங்கள் அறிந்துவைத்துள்ள  வேதங்களின் சிறந்த அறிவுரைகளை ஆதாரத்துடன் பதித்து நம் தாவா சகோதரர்களுக்கு உதவுங்கள்! இதன்மூலம் அல்லாஹ்விடம் நற்கூலியை பெறலாம்!

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

2 comments:

 1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ///
  நான் பிறந்த ஊரின் பெயரில் வலைப்பூவா என்று வேறொரு வலைப்பூ மூலமாக ஓடோடி வந்துள்ளேன்.
  பெருமையாக இருந்தது.தாங்களின் பெயரை ஏனோ குறிப்பிடவில்லை.இல்லை சந்தோஷத்தில் என் கண்களுக்கு தென்படவில்லையோ என தெரியவில்லை.
  தாங்கள் விருப்பம் இருந்தால் தெரிவிக்கவும்.
  மிகவும் பொதுவான விஷயங்கள் கொண்டு நல்ல விஷயங்கள் எழுதி வருவது தெரியவருகின்றது.
  இன்னும் முழுமையாக படித்து என் கருத்தினை பகிர்கின்றேன் இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
 2. வ அலைக்கும் சலாம் சகோ.,

  தங்களின் இந்த பின்னூட்டத்தை கண்டு நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.apsara-illam என்பது உங்கள் வலைப்பூவா?நல்ல கருத்துக்களை சொல்ல பெயர் தேவை இல்லை என்பதால் நான் என் பெயரை இட விரும்பவில்லை.......

  இந்த தளத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று உங்களின் கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் தாராளமாக தெரிவியுங்கள்...தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.......வருகைக்கு நன்றி........

  ReplyDelete