இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம்

Thursday, November 24, 2011

http://dharumi.blogspot.com   என்ற தளத்தில் தொடர் கட்டுரையின் மூலயமாக இஸ்லாத்தை கடுமையாக விமர்சித்து இருந்தார்கள் அதற்கு மறுப்பே இக்கட்டுரை.இம்மறுப்பு அவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
உங்கள் கட்டுரைக்கான மறுப்பிற்கு போவதற்கு முன் ஒரு சில விஷயத்தை நன்றாக புரிந்துக் கொள்ளுங்கள் இஸ்லாத்தைப் பற்றி பேசும்போது முஸ்லிம்களின் செயல்பாடுகளைப் பற்றி பேசக்கூடாது,இது இஸ்லாத்திற்கு மட்டுமல்ல அணைத்து மதத்திற்கும் பொதுவானது,மதத்தினுடைய கோட்பாடு என்பது வேறு மனிதர்களின் புரிதல்,செயல்பாடுகள் என்பது வேறு.நீங்கள் ஒரு மதத்தை பற்றி விமர்சிக்கும் போது அந்த மத நூல்களிலே குறிப்பிட்டுள்ள அறிவுக்கு ஒப்பாத சட்டங்களை விமர்சனம் செய்யலாம் ஆனால் அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களை குறைக்கூறி பிரயோஜனம் இல்லை ஏனென்றால் அது அவர்களின் புரிதலிலே ஏற்பட்டுள்ள குறைப்பாடு.அவர் அவர்களுக்கு புரிந்த அளவுக்கு அந்த மதத்தினுடைய கோட்பாடுகளைப் பின்பற்றுவார்கள் அது சரியாகவும் இருக்கலாம்,தவறாகவும் இருக்கலாம்.நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால் குர்ஆனை மட்டுமே விமர்சிக்க வேண்டும்,நீங்கள் முஸ்லிம்களை விமர்சிப்பது கட்டுரைக்கு வேண்டும் என்றால் சுவாரஸ்யத்தைக் கூட்டும்,அறிவுக்கு பொருந்தாது.அடுத்தது நீங்கள் நபிமொழிகளை(ஹதீஸ்) விமர்சிக்கும் போது ஆதாரமான நபிமொழிகளை மட்டுமே விமர்சிக்க வேண்டும்,அதற்கு ஹதீஸ் என்று இன்று நாங்கள் சொல்வது என்ன என்பதை தெரிந்துக் கொள்ளவேண்டும்.அது என்ன ஆதாரமான நபிமொழி,ஆதாரம் இல்லாத நபிமொழி என்று நீங்கள் நினைக்கலாம், ஆதாரமில்லாத ஹதீஸ்களை ஒதிக்கிவிட வேண்டியதுதானே அதை ஏன் இன்றும் வைத்துள்ளீர்கள் என்று நீங்கள் கேட்டக் கேள்வி நியாயமானது தான்(ஹதீதுகள் (சில சமயங்களில்) வேண்டாமென்கிறீர்கள். அவைகள் பொய்யென்றால் பின் ஏன் அதை இன்னும் தூக்கிப் பிடித்துள்ளீர்கள்; அதெல்லாம் எங்களுக்குப் புறம்பானது என்று ஒதுக்கி வைக்க .. இல்லை ...இல்லை... எறிந்து விட வேண்டியதுதானே. அதை விட்டு விட்டு, சிலவற்றை strong ஹதீதுகள், சிலவற்றில் weak ஹதீதுகள் என்று காலத்திற்கேற்றாற்போல், வசதிக்கு ஏற்றாற்போல் நீங்களே கூறிக்கொள்வதா? ஹ்தீதுகளை நீங்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் அதில் வரும் கேள்விகளை எப்படி நீங்கள் புறந்தள்ள முடியும்? -தருமி ).எங்களது மார்கத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை உள்ளத்தாலும்,செயலாலும் பின்பற்ற வேண்டும் என்பது கட்டளை.இன்று வாழ்ந்து கொண்டிருக்க கூடிய நாம் நபி(ஸல்) அவர்களுடைய போதனைகளை பின் பற்ற வேண்டும் என்றால் அதில் உண்மை எது பொய் எது என்பது தெரிந்து இருக்க வேண்டும்,ஆனால் நாமோ காலத்தால் அவர்களை(நபி (ஸல்)) விட சுமார் 1400 ஆண்டுகள் பின்தங்கியுள்ளோம்.அவர்களுடைய போதனைகளில் பொய் கலந்து இருந்தால் அது தெரியாமல் அந்த பொய்யையும் பின்பற்றிவிடுவோம்.இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக 1400 ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஹதீஸ்களை தொகுத்த அறிஞர்களின் மூலயமாக பல நபர்களின் வரலாறு பதியப்பட்டுள்ளது அப்படி பதியபட்டவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்து லட்சம்.இந்த ஐந்து லட்சம் நபர்களின் முழு வாழ்வையும் அலசி ஆராய்ந்து இவர்கள் நம்பகமானவர்கள்,பொய் சொல்லமாட்டார்கள்,நியாபக சக்தி உள்ளவர்கள், தனது அண்டை வீட்டாருடன் சுமுகமாக நடப்பவர்கள்,என்று எல்லா சோதனைகளிலும் வெற்றிப்பெற்றவர்கள்.இந்த சோதனைமுறை அவர்களுக்கு தெரியாமல் மறைந்து இருந்து உளவு பார்த்து,அக்கம் பக்கத்தில் விசாரித்து அறிந்துக் கொண்டது.அந்த ஐந்து லட்சம் நபர்களின் வரலாறு அனைத்தும் இன்றும் இஸ்லாமிய உலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.இது தவிர அந்த சோதனை முறைகளில் தேர்ச்சி பெறாதவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும்.அது சரி நபிமொழிகளில் பொய் எப்படி கலந்தது என்கிறீர்களா?இஸ்லாத்தை அதன் உண்மை பாதையிலிருந்து திருப்பி அதை அழிக்கவேண்டும் என்பதற்காகவே யூதர்களும்,கிறிஸ்தவர்களும் நிறைய சிரமப்பட்டு இஸ்லாமியர்கள் போல தங்கள் உருவ அமைப்புகளை மாற்றிக்கொண்டு பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு(அது ஒரு சில தலைமுறைகளை தாண்டும்,இஸ்லாமிய வரலாற்றை ஆராய்ந்தவர்களுக்கு தெரியும்) பொய்யான நபிமொழிகளை பரப்பினர்,அவர்களுடைய தோற்றத்தை பார்த்து இஸ்லாமியர்களும் ஏமாந்து போய் பொய்யான நபிமொழிகளை பின்பற்றி தன சந்ததிகளையும் பின்பற்ற வைத்தனர்,இப்படிதான் பொய் கலந்தது,ஆனால் எங்களிடத்திலே பாதுகாக்கப்பட்டுவரும் ஹதீஸ் அறிவிப்பாளர்களை(ஐந்து லட்சம் நபர்கள்) வைத்து எப்பொழுது வேண்டுமானாலும் அந்த பொய்யை பிரித்துவிடலாம்.இந்த உண்மையை சமீபகாலமாக அறிந்த இஸ்லாமியர்கள் பொய்யான ஹதீஸை இனம்கண்டு புறம் தள்ளி,உண்மையான ஹதீஸை பின்பற்றிவருகிறார்கள்,இனி பொய்யான ஹதீஸை வைத்து இஸ்லாமியர்களிடம் வாலாட்ட முடியாது.அது சரி இந்த விஷயம் கூடவா இத்தனை நாள் தெரியாமல் அவர்களின் கூற்று,இவர்களின் கூற்று என்று முகவரி தெரியாதவர்கள் வைத்து இஸ்லாத்தை குறை கூறவந்தீங்க வாத்தியாரே. 

 இஸ்லாமியத்தை யாராவது இழிவு செய்ய முனைந்தால் பெருத்த சினத்தோடு கொதித்தெழுகிறார்கள் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்,இது அனைத்து மனிதர்களின் பொதுவான இயல்புதானே, தன்னுடைய நம்பிக்கையை இன்னொருவர் பாழ்படுத்தும் போது வரும் கோபமே தவிர வேறு இல்லை.அதை இஸ்லாமியர்களின் தனி பட்ட கோவமாக நீங்கள் சொல்லியதிலிருந்து இஸ்லாத்தின் மீதும்,இஸ்லாமியர்களின் மீதும் நீங்கள் கொண்ட தனிப்பட்ட காழ்புணர்ச்சி தெரிகின்றது.இனி கட்டுரை மறுப்பிற்கு போவோம் இன்ஷா அல்லாஹ்.


தருமி:16-ம் நூற்றாண்டில் Shaykh எழுதிய  The Perfumed Garden  என்ற நூலில் இஸ்லாமியத்தில் பெண்மையினைப் பற்றிக் கூறியுள்ளார். பெண்மை பல தொல்லைகளின் பிறப்பிடம்; பெண்களின் மதமே அவர்களின் யோனியில் தானிருக்கிறது என்று கூறியுள்ளார். (290)


Bullough, Bousquet & Bouhdiba - இஸ்லாம் கிறித்துவம் போலன்றி பாலின மையம் கொண்டது என்கிறார். (Islam is a sex-positive religion in contrast to Christianity.)  இஸ்லாமியத்தில் பெண்கள் கீழான நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள். பாலினக் கோட்பாடுகள் இஸ்லாமியத்தில் ஆண்களின் பார்வையில் மட்டுமே காணப்படுகிறது.(291)

பதில்:இது தனிப்பட்டவர்களின் கருத்து தானே தவிர இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை.


தருமி:முகமது நல்ல, பெரிய, தீர்க்கமான மாற்றங்களை அரேபியப் பெண்களுக்காகக் கொண்டு வந்தார். அதில் இரு முக்கியமானவைகள்: பெண் குழந்தைகளை உயிரோடு கொல்லும் பழக்கத்தை மாற்றினார்; பெண்களுக்கான சொத்துரிமையைக் கொண்டு வந்தார். 
பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தது சமயத் தொடர்பானதாகவும், அரிதாக நடக்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் இஸ்லாமிய எழுத்தாளர்களே இது அடிக்கடி நடக்கும் ஒரு செயல் போல் தவறாகத் தங்கள் எழுத்துக்களில் காட்டி விட்டார்கள்.(292)

பதில்:பெண் சிசு கொலை அரபு தேசத்தில் அன்றைய காலக்கட்டத்தில் அரிதாக தான் நடந்தது என்பதற்கு உங்களிடத்திலே உள்ள ஆதாரத்தை தாருங்கள்.வரலாறு தெரியாமல் கட்டுரை எழுதவரக்கூடாது.


தருமி:இஸ்லாம் பெண்களுக்கு எதிரான ஒரு சமயம். பெண்களை எல்லா வகையிலும் - உடல், அறிவு, ஒழுக்கம் எல்லாவற்றிலும்  கீழானவர்களாகவே மதிப்பிட்டு வந்துள்ளது. குரானின் வசனங்களும், ஹதீத்துகளிலும் இந்தக் கருத்துக்களே உள்ளன. (293)

முகமது பெண்களைப் பற்றிச் சொல்லும் வசனம் :  ’பெண்களை நல்லுறவில் வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வளைந்த நெஞ்செலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்; ஆனால் அந்த எலும்பு வளைந்த ஒன்று. அதை நேராக்க நினைத்தால் ஒடிந்து விடலாம்’.  ஆனால் ஒன்றும் செய்யாமல் வைத்திருந்தால் எப்போதும் வளைந்தே இருக்கும்.’(295)பதில்:ஒரு திருத்தம் பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப்பெற்றதாகத் தான் எங்கள் இஸ்லாம் சொல்கின்றது நீங்கள் சொல்வதுப்போல் "நெஞ்செலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள்"அல்ல.இது பெண்களுடைய இயற்க்கை குணநலன்கள்,சுபாவத்தை கருத்தில் கொண்டு சொன்னது.நிஜ வாழ்க்கையில் பெண்களின் சுபாவத்தின் அடிப்படையில் கணவனுடைய எல்லா வார்த்தைகளையும் கேட்கமாட்டார்கள்.உதாரணத்திற்கு கணவனுக்கு பொது சேவையிலே ஈடுபாடு இருக்கும் அதனால் பொது சேவையில் ஈடுபடுவான் அதே சமயத்தில் வீட்ற்கும் செய்யவேண்டியதை செய்வான் ஆனால் எல்லா பெண்களுக்கும் இப்படி இருப்பது பிடிக்காதே,சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது,பொதுவாக பெண்களைப் பொறுத்தவரை தன்னைப்பற்றியும்,தன் வீட்டில் உள்ளவர்களைப் பற்றியும் தான்  அவர்களுடைய கவனம் இருக்கும் .பொது சேவையை தன் மனைவியையும் தன் கணவன் செய்யச் சொல்லி தூண்டுவான்,இவ்வளவு சொல்லியும் இவள் பொது சேவை செய்ய மாட்டேன் என்று இருக்கிறாளே என்று கணவனும்,இப்படி போட்டு நமக்கு பிடிக்காத விஷயத்தை நச்சரிகிறாரே என்று மனைவியும் ஒரு கட்டத்தில் மனஸ்தாபம் கொள்ளக்கூடும்,இதுவே ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு வளர காரணமாகி அவர்கள் குடும்ப வாழ்க்கை விரிசல் விட்டு விவாகரத்து வரை வந்து நிற்கும்.இது உதாரணம் தான் இன்னும் இதுப் போல எத்தனையோ உதாரணங்களை அடுக்கி கொண்டே போகலாம்(இது பெண்களை இழிவுபடுத்துவதர்க்காக சொல்லவில்லை),இதற்க்கு தான் இஸ்லாம் "பெண்கள் விலா எலும்பிலிருந்து படைக்கப்பெற்றார்கள் அவர்களை நிமிர்க்க நினைத்தால் உடைந்து விடுவார்கள்,அவர்களை அதே நிலையில் வைத்து சுமூகமாக வாழ்ந்துக்கொள்" என்று சொல்கின்றது,அதாவது பெண்ணிடத்திலே சிறு,சிறு குறைப்பாடுகள் இருந்தாலும் அதனை பொறுத்துக்கொண்டு (ADJUST),அவளிடத்திலே உள்ள நல்ல விசயங்களைக் கொண்டு திருப்தி அடைந்துக்கொள் என்று மனிதர்களுக்கு அறிவுரை சொல்கின்றது இதில் என்ன தவறு இருக்கின்றது,இதில் அப்படி என்ன பெண்ணினத்தை கேவலப்படுத்திவிட்டது.உங்களைப் போன்ற குறைகண்டு பிடிப்பவர்களுக்கு எல்லாமே தவறாகத் தான் தெரியும்.

தருமி:12. 22 - 34 குரான் வசனங்கள் ஜோசப்பின் கதையைச் சொல்கின்றன. அதில் வரும் பெண்களின் நடத்தையை வைத்து இன்றும் இஸ்லாமிய மதக் குருமார்கள் தந்திரம், பொய்மை, ஏமாற்று என்ற அனைத்தும் பெண்களின் குணங்கள் என்று சொல்வதுண்டு. பெண்கள் திருந்துவதுமில்லை; திருந்துவது அவர்களது நோக்கமுமல்ல. 


பதில்:குர்ஆனில் ஒரு பொய் கூட இல்லை,மனிதனுக்கு எக்காலத்துக்கும் பொருந்தும் சட்டம் தான் குர்ஆனில் உள்ளது என்பது 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்களாகிய நாங்கள் எடுத்துவைக்கும் வாதம்,குர்ஆனிலே ஒரு பொய் இருப்பதாக நிரூபித்தால் கூட குர்ஆனின் மேல் உள்ள நம்பிக்கை சரிந்துவிடும் ஆனால் இதுவரை யாரும் அதை ஆணித்தரமாக நிருபித்தது இல்லை,அதை நிருபிக்கும் வரை அதன்(குர்ஆன்) மேல் நாங்கள் வைக்கும் நம்பிக்கை குறையாது ஆகவே நீங்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை அப்படியே நாங்கள் நம்புகின்றோம் ஆனால் நீங்கள் சொல்வதிலே ஒரு பெரிய திருத்தம் உள்ளது,தவாறாக நடந்துக்கொள்ள முற்பட்ட ஒரே ஒரு பெண்ணின் உண்மையான சம்பவத்தையே அது சொல்கின்றது.ஒரே ஒரு பெண்ணின் கெட்ட நடத்தையை சொல்வதின் மூலம் எப்படி உலகில் உள்ள ஒட்டு மொத்த பெண்ணை பற்றியும் குறை கூறியதாகும்.ஒரு தெருவில் வசிக்கும் ஒரு பெண் கெட்ட நடத்தை உள்ளவளாக இருக்கின்றாள் என்பதை நீங்கள் சுட்டிகாட்டினால் அந்த ஊரில் உள்ள அனைத்து பெண்களும் நடத்தை சரி இல்லாதவர்கள் என்று யாராவது புரிந்துக் கொண்டால் எப்படி மிகப் பெரிய தவறோ அதே தான் நீங்கள் குர்ஆன் னை பெண்களுக்கு எதிரான வேதம் என்று நிரூபிக்க முயல்வது.குர்ஆனில் கெட்ட நடத்தை உள்ள ஆண்களையும் பற்றி சில இடத்தில் சொல்கின்றது(லூத் நபி காலத்தில் நடந்த சம்பவம்),பெண்களோடு ஆண்களை ஒப்பிடும் போது ஆண்களை வன்மையாக கண்டிக்க கூடிய வசனங்கள் குர்ஆனில் ஏராளம்.உமது குறை கூறும் கண்ணுக்கு அது எல்லாம் தெரியவில்லை போலும்,ஒரு மதத்தைப் பற்றி குறை சொல்லும் முன் அது சொல்வது அனைத்தையும் தெரிந்துக்கொண்டு விவாதம் பண்ணவேண்டும்,யாரோ அரைவேக்காட்டுதனமாக எழுதியதை எல்லாம் படித்து வைத்துக் கொண்டு அதை நம்பி மற்ற மதத்தில் மூக்கை நுழைத்தால் அது அறுபட்டு தான் போகும்.ஆணினம் என்பதற்கோ,பெண்ணினம் என்பதற்கோ ஒருவரை கண்டிப்பதும்,தண்டிப்பதும் இறைவனுடைய வேலை இல்லை.அது எல்லாம் தவறு செய்தவர்களை கண்டித்தும்,தண்டித்தும் இறங்கிய வசனங்கள்.


பெண்மையை, பெண்களைக் குறை சொல்லும் சில குரான் வசனங்கள் இவை: 


தருமி:4 : 117;    ....ஷைத்தானை அவர்கள் வணக்கத்துக்கு உரியவனாக எடுத்துக் கொள்கிறார்கள்.


பதில்:வணக்கத்திற்கு தகுதியானவன் அல்லாஹ்(அரபு மொழியில் இறைவன் என்பதற்குரிய வார்த்தை-அல்லாஹ்) ஒருவனே என்பது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படை,1400ஆண்டுகளுக்கு முன் அரபு தேசத்தில் வாழ்ந்த மூடர்கள் பலர் ஒரு கற்சிலையை செய்து அதை பெண் தெய்வம் என்றுக்கூறி வழிபட்டனர் இதனை தான் இந்த குர்ஆன் வசனம் சொல்கின்றது,இதில் குர்ஆன் பெண்களை குறை சொல்கின்றது என்பதற்கு நீங்கள் எடுத்துவைக்கும் point என்ன.சும்மா ஏதாவது குர்ஆன் வசன எண்ணை மட்டும் போட்டால் போதுமா,உங்கள் தலைப்பிற்கும் இந்த குர்ஆன் வசனத்திற்கும் சம்மந்தமே இல்லை.  


தருமி:43 : 15 - 19;   
52 : 39;
37 : 149-150;
53 : 21 - 22
53 : 27
(43: 15-19; 52:39; 37: 149-150 - இந்த வசனங்களில் ‘...பெண்மக்களை அல்லாஹ் தனக்காகக் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? (37 : 153)என்றெல்லாம் கூறுவதற்குப் பொருளென்ன என்று புரியவில்லை ...?)


பதில்:மற்ற வேதங்களை நீங்கள் அனுகுவதுப் போன்று குர்ஆணை நீங்கள் அனுகியதாலே இப்பிரச்சனை அதாவது குறிப்பிட்ட குர்ஆனினுடைய வசனத்தில் குறிப்பிட்ட வசன எண்ணை மட்டும் வைத்துக்கொண்டு விவாதிப்பதை விட அந்த வசனம் இறங்கப்பட்ட காலசூழ்நிலை எது என்பதை தெரிந்துக்கொண்டு விவாதிப்பதே சிறந்த வழி,மேலும் பெண்மக்களை அல்லாஹ் தனக்காகக் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? (37 : 153)என்றெல்லாம் கூறுவதற்குப் பொருளென்ன என்று புரியவில்லை என்று நீங்கள் கேட்பதிலிருந்தே உங்களுடைய ஆய்வின் முதிர்ச்சின்மை தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரபிக்கள் ஆண் குழந்தை பிறந்தால் சந்தோசமடைந்தும்,பெண் குழந்தை பிறந்தால் கவலை அடைந்தும்,சில சமயங்களில் வரம்பு மீறி உயிருடன் பெண் குழந்தைகளை குழி தோண்டி புதைத்தனர்.ஆனால் தங்க ஆபரணங்களால் சிலையை செய்து அதை பெண் தெய்வங்களாக வணங்கினர் மேலும் அந்த பெண் தெய்வங்களை அல்லாஹ்வுடைய சந்ததி என்று தங்கள் கற்பனையில் உதித்ததை எல்லாம் கூறினர்.இதை தான் பெண்மக்களை அல்லாஹ் தனக்காகக் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? அதற்க்கு ஆதாரம் என்ன என்று அக்கால மக்களை பார்த்து இந்த குர்ஆன் கேட்கின்றது.விவாதம் பண்ண வரும் பொழுது உங்களுக்கு புரியாத விசயங்களை,உங்களுக்கு ஏழும் கேள்விகளை தனியாக கேட்கவேண்டும்,இப்படி பெண்மையை, பெண்களைக் குறை சொல்லும் சில குர்ஆன் வசனங்கள் என்ற தலைப்பின் கீழ் (43: 15-19; 52:39; 37: 149-150 - இந்த வசனங்களில் ‘...பெண்மக்களை அல்லாஹ் தனக்காகக் தேர்ந்தெடுத்துக் கொண்டானா? (37 : 153)என்றெல்லாம் கூறுவதற்குப் பொருளென்ன என்று புரியவில்லை ...?)என்று உங்கள் கேள்வியை கேட்ககூடாது.உங்களுக்கு புரியவில்லை என்பதால் அந்த குர்ஆன் வசனம் பெண்மையை குறை சொல்வதாக சொல்வது வடிகட்டிய மடத்தனம்,மீண்டும் இந்த முட்டாள் தனத்தை செய்யாதீர்கள். பெண்களை வெறுக்கும் இன்னும் சில வசனங்கள்:
தருமி:2 : 228; ஆண்கள் ஒரு படி பெண்களை விட உயர்ந்தவர்கள்.


பதில்: இவ்வசனத்தை நீங்கள் தவறாக விளங்கி வைத்துள்ளீர்கள்,அதிலும் ஆண்களுக்குபெண்களைவிட ஒருவித உயர்வும் மேலாண்மையும் இருகின்றது என்று தவறாக புரிந்து வைத்துள்ளீர்கள்.ஓர் இறைவசனத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென்றால் முழுகுர்ஆனையும் முன்வைத்து இவ்விசயத்தில் குர்ஆனுடைய கருத்து என்ன என்று ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ள 4:34 ல் அல்லாஹ் கூறுகின்றான் "பெண்களை விட ஆண்கள் உயர்ந்தவர்கள் ".இந்த இறைவசனத்தில் "கவ்வாம்" என்ற அரபு சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "கவ்வாம்" என்றால் உயர்ந்தவர்,சிறந்தவர் என்றே பொருள் கொள்கின்றார்கள்."கவ்வாம்" எனும் சொல் "இகாமஹ்"என்ற சொல்லில் இருந்து பிறந்துள்ளது.உதாரணமாக தொழுகைக்கு சற்று முன்னாள் கொடுக்கப்படும் அழைப்பிற்கு பெயர் "இகாமத்".அதாவது தொழுகைக்காக எழுந்து நில்லுங்கள் என்றுப் பொருள்.அப்படியென்றால் "கவ்வாம்" என்பதற்கு பெண்ணைவிட ஆண் உயர்ந்தவன் என்றோ,சிறந்தவன் என்றோ பொருள் கொள்ளக்கூடாது. பெண்ணை விட ஆணுக்கு பொறுப்புகள் அதிகமாக உள்ளன என்றே பொருள் கொள்ளவேண்டும்.புகழ்பெற்ற குர்ஆன் விரிவுரையான இப்னு-கசீரை எடுத்துபார்த்தீர்கள் என்றால்,அந்நூலில் இவ்வாறே எழுதப்பட்டுள்ளதை காண்பீர்கள்


தருமி: 2 : 282: ஒரு ஆண் அல்லது இரு பெண் சாட்சி சொல்ல வேண்டும்.


பதில்:முதலில் நீங்கள் ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.எல்லா இடங்களிலும் எல்லா பிரச்சனைகளிலும் இரண்டு  பெண்களின் சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சியத்துக்கு நிகராக கருதபடுவதில்லை.சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தான் இவ்வாறு மதிப்பிடபடுகின்றது.ஆண்,பெண் பால் வேறுபாடு பார்க்காமல் ஐந்து இடங்களில் குர்ஆன் சாட்சியளிப்பதைப் பற்றி பேசுகின்றது.நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் இரண்டு பெண்களுடைய சாட்சியத்தை ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு ஒப்பாக கூறுகின்றது.2:282 இவ்வசனம் பொருளாதாரம் தொடர்பான விஷயத்தை பற்றி மட்டுமே பேசுகின்றது.காசுபணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் மட்டும்தான் இரண்டு பெண்களின் சாட்சியானது ஒரு ஆணின் சாட்சிக்கு ஒப்பானதாக கருதப்படும்.இன்னும் சொல்லப்போனால் பொருளாதாரம் சம்மந்தப்பட்ட காரியங்களில் இரண்டு ஆண்களையே சாட்சியாக்குங்கள்,அப்படி இரண்டு ஆண் கிடைக்காவிட்டால் ஒரு ஆணையும்,இரண்டு பெண்ணையும் சாட்சியாக்கி கொள்ளுங்கள் என்றுதான் இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது.


ஒரு உதாரணத்தைக் கொண்டு இதை விளக்கலாம்.நீங்கள் ஒரு சர்ஜரியோ அல்லது ஒரு ஆபரேஷனையோ செய்யவேண்டியுள்ளது.சர்ஜரிக்கு முன்பாக இரண்டு மருத்துவ நிபுனர்களையாவது கலந்தது கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு இயல்பாகவே தோன்றுகின்றது ஆனால் ஒரு மருத்துவ நிபுணர் தான் கிடைத்தார்.அந்த டாக்டரிடம் ஆலோசனை கேட்டுகொண்டதோடு இரண்டு சாதாரண எம்.பீ.பீ.எஸ் டாக்டரிடம் ஆலோசனை கேட்டுகொண்டீர்கள்,ஏன் என்றால் இரண்டு  எம்.பீ.பீ.எஸ் டாக்டரிடம் ஆலோசனை கேட்பதைவிட ஒரு சர்ஜரி டாக்டரிடம் ஆலோசனை மேலானது என்று நீங்கள் கருதுவது தான்.சாட்சி பிரச்சனையும் இதுப்போன்று தான்.வருமானம் ஈட்டுவதையும்,பொருளாதாராம் சம்பாதிப்பதையும் இஸ்லாம் ஆணினின் மீதே கடமையாக்கியுள்ளது,அதனால் ஒரு இஸ்லாமிய சமூகத்தில் ஆண்கள்தாம் பொருளாதார அறிவையும்,அனுபவத்தையும் பெற்று இருப்பான்.இதன் காரணமாக தான் இரண்டு ஆண்களுடைய சாட்சியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கின்றது.நீங்கள் குர்ஆனில் 5:106 வசனத்தை படித்துப்பாருங்கள்.இங்கும் பிரச்சனை பொருளாதாரம் சார்ந்ததாக இருப்பதால்.ஆண்களை சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.இதை கருத்தில் கொண்டுதான் ஒரு சில இஸ்லாமிய மார்க்க சட்டவியலாளர்கள் "கொலைக்குற்றம்,விபச்சாரத்திற்கான தண்டனை" ஆகியவைகளுக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கும் இதே விதியை(இரண்டு பெண்களின் சாட்சியம் ஒரு ஆணுடைய சாட்சியத்திற்கு ஒப்பாகும்) பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.ஆக இரண்டே இரண்டு பிரச்சனைகளில் மட்டுமே இரண்டு பெண்களின் சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்கு சமமாக கருதப்படும்.


1. பொருள்சார்ந்த பிரச்சனைகள்
2. கொலைத்தண்டனை பிரச்சனைகள்


எல்லா சமயங்களிலும் இரண்டு பெண்களுடைய சாட்சி ஒரு ஆணுடைய சாட்சிக்கு நிகரானதாக நீங்கள் கூறுவது தவறு.


சாட்சி சம்மந்தமாக குர்ஆன் கூறுவதென்ன.குர்ஆனில் 24:6 முதல் 9 வசனங்களை படித்துபாருங்கள்.ஒரு ஆண் தன்னுடைய மனைவி மீது குற்றம்சுமத்தினாலும்,ஒரு பெண் தன் கணவன் மீது குற்றஞ்சுமத்தினாலும் இவருடைய சாட்சியமும் ஒன்று போலவே கருதப்படும்.இவ்வாறே பிறை பார்த்து சாட்சி சொல்வதிலும் ஆணுக்கும்,பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லை.ரமழானுடைய பிறைக்கு ஒரு சாட்சியும்,ஷவ்வாலுடைய பிறைக்கு இரண்டு சாட்சியும் வேண்டும் என சில இஸ்லாமிய மார்க்க சட்டவியலாளர்கள் கூறுகின்றனர்.அந்த சாட்சியம் ஆணாகவும் இருக்கலாம்,பெண்ணாகவும் இருக்கலாம்.


இன்னும் ஒரு சில பிரச்சனைகளில் பெண் மட்டுமே சாட்சியளிக்க முடியும்.அதாவது இறந்துபோனவரை அடக்கம் செய்வது போன்ற முழுக்க முழுக்க பெண்கள் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளில் பெண் தான் சாட்சியளித்தாக வேண்டும்.இத்தகைய காரியங்களில் பெண்களின் சாட்சியத்தை ஒப்புக்கொண்டாக வேண்டும்.   


தருமி: 4 : 3;     ‘...உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணமுடித்துக் கொள்ளுங்கள்.’


பதில்: இந்த கேள்வியை ஒட்டியே நீங்கள் கேட்ட இன்னொரு கேள்வியும் உள்ளதால் இரண்டுக்கும் சேர்த்து பதில் கீழே உள்ளது. 


தருமி:4 : 11:  இரண்டு பெண்களுக்குச் சமமாக ஒரு ஆண் ...
4 : 34:  ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர்; ஆண்களை அல்லா உயர்வை அளித்துள்ளான்.


பதில்:இரண்டுக்கும் மேலே பதில் சொல்லியாகிவிட்டது

தருமி:4 : 43:  ’...நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் ...உங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.’
5 : 6        ’... பெண்களைத் தீண்டியிருந்தால்..தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்துங்கள்.’ ( ஏன் ஒரே விதமான கட்டளைகள் இரு இடத்தில் ..? ஜிப்ரேல் / அல்லா மறந்து இரு முறை சொல்லியதோ? )


பதில்:நீங்கள் மேலே குறிப்பிட்ட இரண்டு குர்ஆன் வசனங்களிலும் பெண்களை தீண்டியிருந்தால் என்று சொல்வது பெண்களை தொடுவதை குறிக்காது மாறாக உடலுறவையே குறிக்கும்.தொழுகை என்பது இஸ்லாத்தை பொறுத்தவரை உள்ளசுத்ததுடன் உடல்சுத்தமும் சேர்ந்து நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாகும் அதனால் தான் தொழுகைக்கு தயாராகும் பொழுது அசுத்தத்தை விட்டும்(சிறுநீர்,மலம் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது,பெண்களை தீண்டியோ அல்லது தானாகவோ விந்து வெளிப்பட்டும் கடமையான குளிப்பு குளிக்காமல் இருப்பது,குடிபோதை..குறிப்பு:பெண்கள் ஆண்களை தீண்டி இருந்தாலும்(உடலுறவு),சிறுநீர்,மலம் கழித்துவிட்டு சுத்தம் செய்யாமல் இருப்பது,பெண்களை தீண்டியோ அல்லது தானாகவோ விந்து வெளிப்பட்டும் கடமையான குளிப்பு குளிக்காமல் இருப்பது பெண்களுக்கும் இதே சட்டம் தான் ) விலகி உங்களை தூய்மை ஆக்கிகொள்ளுங்கள் என்று குர்ஆன் கூறுவதில் பெண்களை குறை சொல்லும் விஷயம் என்ன உள்ளது. ஏன் ஒரே விதமான கட்டளைகள் இரு இடத்தில் என்றால் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரபுக்கள் கல்வியறிவு,நாகரீகம்,தனிமனித ஒழுக்கம் ஆகியவற்றிலிருந்து விலகி அதனை என்னவென்றே அறியாமல் முரடர்களாக இன்னும் சொல்லப்போனால் முரட்டு முட்டாள்களாக வாழ்ந்தனர் அத்தகைய மிக மோசமான நிலையிலிருந்த மக்களை இறைவன் தன்னுடைய இறைதூதர் மூலயமாக அவர்களுடைய சுபாவத்தை கருதி சிறிது,சிறிதாக அறிவுரையை  வழங்குகின்றான்.அந்த அறிவுரையிலிருந்து அவர்கள் சிறிது அசட்டையாக விலகும் பொழுது மீண்டும் அதே கட்டளையை இறைவன் இடும்பொழுது மக்கள் மீண்டும் சரியான பாதைக்கு வந்து அதே பாதையிலே தங்களை நிலை நிறுத்திக்கொண்டார்கள்.சுருக்கமாக சொல்வதென்றால் அல்லாஹ்வோ ஜிப்ரில்(அலை)அவர்களோ மறந்து இருமுறை சொல்லியதில்லை,இரண்டாம் தடவை கட்டளையிடுவது முதல் தடவையிட்ட கட்டளையை ஆணித்தரமாக வலியுறித்தி சொல்வதாகும்.குர்ஆனிலே இரு முறை கட்டளையிட்டதால் கேளிசெய்கின்றீர்கள் உங்கள் அன்றாட வாழ்க்கையில் நிகழ்வதை அசைபோடுங்கள்.உங்கள் குழந்தை மண்ணில் புரண்டு விளையாடி மிக அசுத்தமாக வீடு வருகின்றது உங்கள் குழந்தையை மீண்டும் இப்படி செய்யக்கூடாது என கண்டிக்கின்றீர்கள்,ஆனால் மறுநாளும் அதே போல அசுத்தத்துடன் உங்கள் குழந்தை வீடு வந்தால் மீண்டும் கண்டிப்பீர்கள் சரிதானே,இதனை பார்க்கும் யவரொருவரும் சொன்னதையே சொல்கின்றாரே இவருக்கு நியாபக மறதியா அல்லது இவருடைய குழந்தைக்கு காது கேட்கவில்லையா என நினைக்கமாட்டார்கள்.   


தருமி:33 : 32, 33   நபியின் மனைவியருக்குத் தனிக்கட்டளைகள் ..
35 : 53        ‘... நபியின் மனைவியரிடம் ஏதும் கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள். உங்களுடையவும், அவர்களுடையவும்உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.’ (அடக் கடவுளே ... நபியின் மனைவியர், மற்றைய ஆண்கள் - யார் மேலும் அல்லாவுக்கு நம்பிக்கையில்லை போலும்!)
33 : 59  ‘நபியே! உம்முடைய மனைவிகள், உம்முடைய புதல்விகள் ... தங்கள் துப்பட்டிகளின் முந்தானையைத் தங்களின் மீது தொங்கவிட்டுக் கொள்ளட்டும்.’(ஓ! பர்காவின் ஆரம்பம் இங்குதான், இப்படித்தான் போலும்! )


பதில்:இறைதூதர் என்பவர் தன்னுடைய தூது செய்தியை சொல்ல பல இடங்களுக்கு செல்ல நேரிடும்,பல மக்களை சந்திதிக்க நேரிடும்.அது போல பல மக்களும் தங்கள் அன்றாட வாழ்வில் ஏற்படும் சந்தேகங்களை தீர்க்க,மார்க்க சட்டங்களை அறிய இறைதூதருடைய இல்லத்திற்கு வருவார்கள். இதுபோன்ற சமயங்களில் இறைதூதருடைய மனைவிமார்கள் மட்டும் தங்களுடைய இல்லங்களில் தனித்து இருப்பார்கள்,அந்த சந்தர்பங்களில் யாரேனும் அந்நிய ஆண்கள் வந்தால் திரைக்கு பின்னிருந்தே அவர்களுடைய கேள்விக்கு நளினம் காட்டாமல் குலைந்து,குலைந்து பேசாமல் பதில் தருமாறு இறைவன் சொல்கின்றான்.இதன் மூலம் விளையும் நன்மைகள் பல,ஆண்கள் பெண்களை எந்த திரையும் இல்லாமல் நேருக்கு நேர் பார்ப்பதால் பெரும்பாலான சமயங்களில் தவறான சிந்தனைகளையே தூண்டும் அதுவும் பெண்கள் நளினமாக பேசினால் நிச்சயம் அது கெட்ட செயலில் தான் முடியும்,ஆக திரைக்கு பின்னால் இருந்து பெண்கள் பேசுவது ஆண்,பெண் இருவருடைய கற்புக்கும் பாதுகாப்பு, இதற்க்கு அன்றாட செய்திதாழ்களே சாட்சி.கணவனுக்கு தெரியாமல் மனைவி இன்னொருவருடன் கள்ள தொடர்பு,மனைவிக்கு தெரியாமல் கணவன் இன்னொரு பெண்ணுடன் செல்போன் மூலமாக கள்ளத்தொடர்பு இது போன்ற செய்திகளை படித்தும்,பார்த்தும்,கேட்டும் இப்படி ஒரு கேள்வி கேட்கும் உங்களுக்கு உண்மையாகவே அறிவாளி என்ற பட்டத்தைத்தான் சூட்டவேண்டும்,மேலும் முஹம்மத் நபி(ஸல்) அவர்களை எந்தவிதத்தில் குறை சொல்லி அவர்களை நோகடிக்கலாம்,எதில் குறை கண்டுபிடிக்கலாம் அந்த குறையை கொண்டு எப்படி இஸ்லாமிய பிரசாரத்தை தடுக்கலாம் என்று எதிரிகள் சந்தர்பம் பார்த்து காத்துகிடந்தார்கள்,ஆனால் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையோ எந்த ஒரு குறையும் தோண்டினாலும் கிடைக்காது.இன்னும் சொல்லப்போனால் கற்புநெறி நல்லொழுக்கம், அண்டை வீட்டாருடன் நன் முறையில் பழகுதல்,வாக்குறுதி நிறை வேற்றுதல் ஆகிய வாழ்கையின் அனைத்து துறையிலும் மிகச்சரியாக அப்படி ஒரு அப்பழுக்கற்ற வாழ்கையை இறைதூதை சொல்வதற்கு முன்னரும்,பின்னரும் வாழ்ந்தார்கள் ஆகவே எதிரிகளால் நபி(ஸல்) அவர்களுடைய தூது செய்தியைத்தான் குறை சொல்ல முடிந்ததே தவிர,அவர்களுடைய கற்புநெறியையோ,நல்லொழுக்கத்தையோ குறைசொல்லி நபி(ஸல்) அவர்களுடைய சமகாலத்தில் வாழ்ந்த முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த ஒருவராலும் எழுதப்பட்ட ஒரு சிறு குறிப்பையும் நாம் காணமுடியாது.இத்தகைய ஒழுக்கசீலரை குறை காணமுடியாது என்பதால் 
அவர்களுடைய மனைவிமார்கள் மூலயமாக அவமானபடுத்தக்கூடும் என்பதால் அல்லாஹ் கூறும் அறிவுரையே மேலே நீங்கள் குறிப்பிட்ட குர்ஆன் வசனம்.பிரபலமான அனைவருடைய வாழ்கையும் இப்படி தான் மற்றவர்களால் தோண்டி துருவி பார்த்து புறம் பேசப்படும்.ஆகவே தான் அரசியவாதிகள்,சினிமாகாரர்கள் இப்படி பிரபலமான என்னற்றறோருடைய வாழ்கையும் உன்னிப்பாக பார்கபடுகின்றது ஒன்று பிரபலமானவர்களை அல்லது அவர்களுடைய மனைவி,மக்களை.எனவே நீங்கள் வீணான அவதூறுகளில் சிக்காமல் உங்கள் உள்ளங்களை தூய்மையாக்கி கொள்ளுங்கள்,மேலும்அவதூறுகளில் சிக்கி இறைதூதருக்கும் சிக்கலையும்,அவமானத்தையும் ஏற்படுத்திவிடாதீர்கள் என்பதற்காகவே இறைவன் இறைதூதருடைய மனைவிமார்களுக்கு 33 : 32, 33]இல் உள்ளப்படி கட்டளையிடுகின்றான்.


அறிவீனர்களாக,தனிமனித ஒழுக்கமில்லாதவர்கலாக வாழையடி வாழையாக வாழ்ந்த மக்களை படிப்படியாக சீர்படுத்திய அல்லாஹ் ஒரு கட்டத்தில் பெண்களுக்கு உரிய ஒழுக்க முறைகளை குர்ஆனின் 33:59,24:31 ஆகிய வசனங்களில் சொல்லிதருகின்றான்.தங்களுடைய வெட்கஸ்தலங்களை பேனிபாதுகாத்துக்கொள்ளுங்கள்,முந்தானைகளை கொண்டு மார்புகளை மூடிக்கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறுகின்றது இதில் என்ன தவறு இருகின்றது,ஒன்னும் அறியாத மக்களுக்கு ஒழுக்கம் என்றால் என்ன என்பதை இறைவன் கற்று தருகின்றான்.இந்த சட்டம் ஏன்? பெண்களுடைய உடலமைப்பு ஆண்களை எளிதில் கவர்ந்துவிடும் என்பதால் இந்த சட்டம்.பெண்களுக்கு ஒழுக்கத்தை சொல்வதற்கு முன் ஆண்களிடம் (குர்ஆனில் 24:30 வசனத்தை படிக்கவும்)ஒழுக்கத்தை இறைவன் பயிற்றுவிக்கின்றான்.ஒழுக்கம் சம்மந்தமாக ஆண்களுக்கு தரவேண்டிய சட்டத்தை ஆண்களுக்கும்,பெண்களுக்கு தரவேண்டிய சட்டத்தை பெண்களுக்கும் மிகச் சரியாக தந்துள்ளான்.பெண்களுக்கு ஒழுக்கத்தை சொல்லிதருவதுகூட உமது குறைக் கண்டுப்பிடிக்கும் கண்ணிற்கு தவறோ!      


தருமி:ஹடீத்துகளிலும் இதே போல் இஸ்லாமில் பெண்களின் நிலை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். ஒரு பெண் வீட்டிலிருந்து கொண்டு, ஆண்களின் கட்டளைகளுக்குச் சிரம் தாழ்த்தி, அவனுக்குக் கீழ்ப்படிந்து, கணவனது நிம்மதியான வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். 


சில சான்றுகள்: 
-- காலில் விழுந்து வணங்குவதைத் தடை செய்யாமல் விட்டிருந்தால், முதலில் பெண்கள் தங்கள் கணவனது காலில் விழுந்து வணங்கும்படி சொல்லியிருப்பேன். கணவனை ‘சம்ரஷிக்காத மனைவி’ கடவுளுக்கான கடமைகளையும் செய்ய மாட்டாள். (கல்லானும் கணவன்; புல்லானாலும் புருஷன்!!   கணவனே கண்கண்ட தெய்வம் !!!)


-- கணவனுக்கு நல்ல  ’சம்ரஷணை’ செய்த மனைவிக்கு நேரே மோடசம். (அந்த மோட்சத்தில் அவளுக்கு என்ன கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது! ஆண்களைப் போல்தான் அவளுக்குமென்றால் - கணவனும் இன்னும் 70 ஆண்களும் அவளுக்குக் கிடைக்கும் என்று பொருளாகிறது!!)


-- ஒரு மனைவி கணவனுக்கு எப்போதும் .... மறுக்கவே கூடாது, அவள் குதிரையில்  மேலே இருக்கும்போது கூட!! ( அடப்பாவமே ! இது  ’புல்லானாலும் புருஷன்’ என்ற “உயர் தத்துவத்தை’ விடவும் மிகவும் ‘உயரத்தில்’ அல்லவா இருக்கிறது!!)


-- முகமது நரகத்தைக் கனவில் எட்டிப் பார்த்த போது அது முழுவதும் கற்பு தவறிய பெண்களால் நிறைந்திருந்தது. ( அப்போ .. அவர்களோடு தங்கள் கற்பைத் தவற விட்ட  ஆண்கள் எங்கே?)


-- வீடு, பெண், குதிரை - இந்த மூன்றும் அபசகுனங்கள்.(நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)


பதில்:நாம் ஏற்கனவே சொன்னதுபோல ஆதாரமான ஹதீஸ் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டு இனி கட்டுரை எழுதுங்கள்.மேலும் நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸ்களில் உண்மையும் பொய்யும் கலந்து கூறியுள்ளீர்கள்(ஒரே ஹதீஸில் பாதி உண்மை பாதி பொய்).உதாரணமாக: முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் கனவில் நரகத்தை எட்டிப் பார்த்ததாக சொல்லியுள்ளீர்கள்,அவர்கள் கனவில் பார்க்கவில்லை அல்லாஹ்வினுடைய கட்டளைக்கிணங்க விண்வெளி பயணம் மேற்கொண்டு(இதைப் பற்றி நீங்கள் கேள்வி எழுப்பினால் பதில் கிடைக்கும்) உண்மையாகவே தான் நேரில் பார்த்தார்கள்.அங்கு நரகம் முழுவதும் கற்புத்தவறிய பெண்களை பார்த்ததாக ஆதாரமான ஹதீஸில் இல்லை மாறாக நரகில் பெரும்பாலும் பெண்களையே கண்டேன் என்று தான் உள்ளது. நரகம் முழுவதும் கற்புத்தவறிய பெண்கள் என்பதற்கும்,நரகில் பெரும்பாலும் பெண்களையே கண்டேன் என்பதற்கும் வித்தியாசம் அதிகம்.இனியாவது ஹதீஸை பற்றி தெரிந்து கட்டுரை எழுதவாருங்கள் கைக்கு வந்ததை யாரோ எழுதியதை எல்லாம் ஆதாரமாக வைக்ககூடாது.

தருமி:இஸ்லாமிய மத நூல்கள் மட்டுமல்ல  இஸ்லாமிய கலிஃபாக்கள், மதக் குருமார்கள், தத்துவ மேதாவிகள் எல்லோருமே பெண்களுக்கு எதிரானவர்களாகவே உள்ளார்கள். சான்றுகள்:


பதில்:இஸ்லாத்தை பற்றி ABCD கூட தெரியாமல் இஸ்லாத்தை தாக்கி கட்டுரை எழுதவந்தீர்கள் என்று மேலே உள்ள தலைப்பை பார்த்தாலே தெரிகின்றது.இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும்,அவனுடைய தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்களும் சொன்னதை மட்டும் தான் முஸ்லிம்கள் பின்பற்ற வேண்டும்.நபி தோழர்களுடைய சொந்த கூற்றையோ அவர்களுடைய செயல்களையோ பின்பற்றக்கூடாது.அதுபோல தான் மார்க்க அறிஞர் என்று நீங்கள் குறிப்பிடும்  al-Ghazali  என்பவரையும் உட்பட நீங்கள் எவரையெல்லாம் மார்க்க அறிஞர் என்று குறிப்பிடுவீர்களோ எவருடைய சொந்தக்கூற்றுக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமில்லை,அந்த கூற்றுக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.இந்த கொள்கை இஸ்லாத்தில் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது இது தான் இஸ்லாத்திற்கும் மற்ற மதத்திற்கும் உள்ள வேறுபாடு.இங்கு தடியெடுத்தவனெல்லாம் தண்டல் காரனாகிவிட முடியாது,எனவே கீழே நீங்கள் குறிப்பிட்டு உள்ளது அனைத்தும்  நபிதோழர்,மார்க்க அறிஞர் ஆகியோருடைய சொந்த கூற்று ஆகவே அதற்கு பதிலளிக்க தேவை இல்லை இருந்தாலும் சில இடங்களில் தேவையைகருதி விளக்கம்தந்துள்ளோம்.(குறிப்பு:நபிதோழர்கள் கீழே குறிப்பிட்டுள்ளதுப்போல சொல்லக்கூடியவர்கள் இல்லை எனவே நீங்கள் எந்த ஆதாரமான நூலில் இருந்து இந்த செய்திகளை எடுத்தீர்களோ அந்த நூலுடைய பெயர் பட்டியலை தாருங்கள்).


தருமி:ஒமார், இரண்டாம் கலிஃப்:  
-- பெண்களை எழுதப் படிக்க  அனுமதிக்காதீர்கள். ( கலிப் சொன்னதை இப்போது இவர்கள் ஏன் மீற ஆரம்பித்து விட்டார்கள்.)


 பதில்:எந்த ஆதாரமான நூலில் இருந்து இந்த செய்திகளை எடுத்தீர்களோ அந்த நூலுடைய பெயர் பட்டியலை தாருங்கள் ஏனென்றால் கலீபா உமர்(ரலி)இவ்வாறு கூறி இருக்கமாட்டார்கள் என்பதற்கு அவர்களுடைய காலத்தில் நடந்த ஒரு சம்பவமே சாட்சி.
ஒரு முறை பள்ளிவாசலில் மஹர்(இஸ்லாத்தில் திருமணத்திற்கு முன் ஒரு ஆண் பெண்ணிற்கு தரும் வரதட்சணை)தொகை தொடர்பாக ஒரு கலந்தாய்வை உமர்(ரழி) நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.மஹர் தொகையை கட்டுபடுத்தி குறைந்தபட்ச மஹர் தொகையை நிர்ணயிக்க வேண்டும் என்பது  உமர்(ரழி)யின் ஆவலாக இருந்தது.இளம் வாலிபர்களுக்கு மஹர் காரணமாக திருமணம் முடிப்பது சிரமமாக இருந்ததே காரணம்.அப்போது ஒரு பெண் எழுந்து நின்று குர்ஆனில் 4:20 வசனத்தை ஓதி காண்பித்து பின் அந்த பெண்மணி கூறினார்,"குவியல்,குவியலாக மஹர் கொடுக்குமாறு குர்ஆன் குறிப்பிட்டுள்ளது",நீங்கள் அதை குறைக்கவா நினைக்கிறீர்கள்?அதை செய்ய உமருக்கு எங்கிருந்து வந்தது அதிகாரம் என்று கேள்வியை எழுப்பினார்.
"உமர் சொல்லியது தவறு,இந்த பெண்மணி சொல்லியது தான் சரி"என்று சொல்லியவாறு உடனே உமர்(ரழி) தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றுகொண்டார்கள்.இத்தனைக்கும் அந்தப் பெண்மணி சாதாரணப் பெண்மணி,புகழ்பெற்ற எல்லோருக்கும் தெரிந்தப் பெண்மணியாக இருந்து இருந்தால் ஹதீஸின் அறிவிப்புகளில் குறிபிடபட்டு இருக்கும்,யார்க்கும் தெரியாத சாதாரண பெண்மணியாக இருந்ததனால் அவரின் பெயர்கூட குறிப்பிடப்படவில்லை.அப்படியெனில் ஒரு சாதாரண பெண்மணிக்கும் இஸ்லாம் தன்னுடைய கருத்தை தைரியமாக சொல்ல சுதந்திரம் கொடுத்துள்ளதை அறியலாம்.இத்தனைக்கும் அந்த பெண்மணி செய்தது சாதாரண செயல் இல்லை,இப்பொழுது நாம் பயன்படுத்தும் தொழில் நுட்ப வார்த்தைகளை பயன்படுத்தி சொல்லவேண்டும் என்றால் அப்பெண்மணி "சட்டமீறலை"எதிர்த்து குரல் கொடுத்துள்ளார்,ஆம் இஸ்லாத்தை பொறுத்தவரை குர்ஆன் தான் சட்டம்.குர்ஆனின் ஒரு வசனத்திற்கு எதிராக சட்டம் இயற்றப்படுவதை எதிர்க்கின்றார் அதுவும் அன்றைய காலக்கட்டத்தில் உலகின் பெரும் பகுதியை தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த மிகப் பெரிய ஜனாதிபதியை எதிர்கின்றார்,அச்சட்டம் உருவாகாமல் தடுகின்றார்,சட்ட இயற்றளில் பங்கெடுத்திருக்கின்றார்.
இஸ்லாம் பெண்களுக்கு கல்வியறிவை புகட்டக்கூடாது என்று தடுத்திருந்தால் இப்பெண்மணி எப்படி குர்ஆனை கற்றிருக்க முடியும்(குர்ஆனை கற்பது கல்வி தான் ஏனென்றால் குர்ஆன் தான் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் சட்ட புத்தகம்),மேலும் உலக அறிவையும் பெற்றிருந்ததினால் தான் மஹர் தொகை தொடர்பான கருத்தாய்வில் கலந்துக்கொள்கின்றார்.இங்கு கவனிக்க வேண்டியது அப்பெண்மணி உமர்(ரழி)அவர்களின் ஒரு செயலை கண்டித்து தவறு என்கின்றார், தனக்கெதிராக குரல் எழுப்பியது பெண் என்று தெரிந்தப்பின்னரும் அக்கருத்தை ஆமோதித்து தான் செய்தது தவறு தான் என்று ஜனாதிபதி உமர்(ரழி)ஒத்துக்கொண்டு தன்னுடைய தவறி திருத்திக்கொண்டு தன்னுடைய கருத்தை வாபஸ் பெற்றுகொண்டார் இத்தகைய ஒருவரை தான் பெண்ணினத்திற்கு எதிரானவராக தாங்கள் சித்தரிக்க முயல்கின்றீர்கள். இஸ்லாம் பெண்களுக்கு தரும் கருத்து சுதந்திரம் பற்றி இந்த ஒரு சம்பவமே போதும்.16 ம் நூற்றாண்டில் ரோம தேசத்தில் கூடிய கிறிஸ்துவ அறிஞர்கள் பெண்களுக்கு ஆன்மாவே இல்லை என்ற ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.அதாவது பெண்கள் என்பவர்கள் உயிரற்ற சடலத்திற்கு ஒப்பாவார்கள் என்று கருதினர் ஆனால் இஸ்லாமோ பெண்களுக்கு கல்வியறிவு,பேச்சி சுதந்திரம்,கருத்து சுதந்திரம்,சொத்தில்வாரிசு உரிமை இன்னும் எண்ணற்ற உரிமைகளை ஆகியவற்றை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்துவிட்டது இது எல்லாம் இப்பொழுது சொல்லவேண்டுமானால் சுலபமாக இருக்கும் அன்றைய காலசூழ்நிலையில் இதையெல்லாம் கற்பனையில் கூட சிந்திக்கமுடியாதவோன்றை இஸ்லாம் உண்மை படுத்தியது.


தருமி:அலி, முகமதுவின் உறவினரும், நண்பரும் : 
-- பெண்கள் என்றாலே தீமைதான்; அதனிலும் மோசம் என்னவெனில் அவர்கள் தேவையான தீமை. 


தருமி:-- பெண்களிடம் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்; அவர்களைப் பிற ஆண்களின் கண்களிடமிருந்து ஒளித்து வையுங்கள். (ஓ! பர்கா போடுவது பெண்கள் கெட்டுப் போய்விடுவார்கள் என்பதால்தானா??!  நல்லது. )அவர்களோடு அதிக நேரம் செலவிடாதீர்கள். அவர்கள் உங்களைத் தாழ்த்தி விடுவார்கள். ( no chat ..நோ கடலை ...ப்ளீஸ் !)


பதில்:"ஹிஜாப்" பற்றி நீங்கள் கேள்வி ஏழுப்பியுளீர்கள்.இதை சற்று ஆழமாக பார்ப்போம் ஏனென்றால் இனி "பர்த்தவை" பற்றிய தவறான புரிதல் உங்களிடம் இருக்ககூடாது என்பதால்.


குர்ஆனில் பெண்களுக்கு பர்தாவை கட்டளை இடுவதுபோல ஆண்களுக்கும் கட்டளை இடுகின்றது,அதுவும் பெண்களுக்கு கட்டளை இடுவதற்கு முன்பே.பார்க்க குர்ஆன் 24:30,31      

அதாவது ஆண்கள் தங்கள் தொப்புளிலிருந்து,முழங்கால்வரை மறைத்தாக வேண்டும்.பெண்கள் திருமண உறவு தடை செய்யப்படாத உறவுகள் முன் தங்கள் முழுவுடலையும் மறைத்தாக வேண்டும், முகத்தையும், மணிகட்டுவரையிலான கைகளையும் தவிர்த்து(அதாவது வெளிப்படுத்தலாம்).முகத்தையும், முழு கைகளையும் மறைக்க விரும்பினால் அது அவர்கள் விருப்பம்,இதற்கு இஸ்லாத்தில் தடை இல்லை.

பர்தா(ஹிஜாப்) என்றால் என்ன அதனுடைய சட்டதிட்டங்கள் என்ன என்று முதலில் தெரிந்துகொள்வோம்.முஸ்லிம் பெண்கள் இன்று அணிந்துக்கொள்ளும் மேலங்கி(புர்கா)என்பது அதிகப்படியான மேலாடையே,இது அவர்களின் விருபத்தின் பேரிலேயே அணியப்படுகின்றது, ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு அவர்கள் அன்றாடம் அணியக்கூடிய ஆடைகளையே சில நிபந்தனைகளுடன் அணிந்துகொள்ளலாம் என்று சொல்கின்றது.அதாவது நாம் அணியக்கூடிய ஆடையானது உடல் தெரியும் அளவு மெல்லியதாக இருக்கக்கூடாது,உடலுடைய அமைப்புகள் தெரியும் அளவுக்கு இருக்கமானதாக இருக்கக்கூடாது,பிறரை தூண்டும் வகையில் கவர்ச்சியாக இருக்கக்கூடாது,தலையினுடைய முடியை முழுவதுமாக மறைத்து இருக்கவேண்டும்.தலை முடியை ஏன் மறைக்க வேண்டும் என்றால் அது பெண்களுக்கு அழகை கூட்டும்,மொட்டைத்தலையுடன் உள்ள பெண்ணை விட,தலையில் முடியுடன் உள்ளப் பெண் உங்களை எளிதில் கவர்ந்துவிடுவாள் என்பதை நினைவில்கொள்ளுங்கள்.இப்படியாக சில சட்டதிட்டங்கள் அதில் உள்ளன.இஸ்லாமிய ஹிஜாபை பற்றி பார்த்தாகிவிட்டது.பெண்கள் ஏன் ஹிஜாப் அணிய இஸ்லாம் கட்டயப்படுத்துகின்றது,ஆண்களோடு பழகுவது ஏன் தடை செய்கின்றது.

இக்கேள்விக்கான பதிலை பார்க்க பார்க்கும் முன்,பர்தா அணியும் சமுதாயம்,பர்தா அணியாமல் அதைப்பற்றிய கவலையும் படாத சமுதாயம் இதைப்பற்றி பார்ப்போம். 

இன்று உலகிலேயே அதிகமான குற்றங்கள் நடக்கும் நாடு அமெரிக்கா தான்.அமெரிக்காவினுடைய FEDERAL BUREAU OF INVESTIGATION  1990 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின்படி அவ்வாண்டில் மட்டும் 1200 பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் நடைப்பெற்றுள்ளன.இது காவல் துறையில் பதியப் பட்டுள்ள புள்ளி விபரமே,பதியப்படாதது எத்தனையோ. 

1993 ம் ஆண்டு அளிக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி ஒவ்வொரு ஒன்னேகால் நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறாள். இதன் அளவு அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிகமாகி கொண்டே செல்கின்றது.இன்று சர்வ சாதாரணமாக ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 900 முதல் 1000 பாலியல் வல்லுறவுகள் நடைப்பெருகிறது.

இந்தியாவில் கூட NATIONAL  CRIME  BOARD வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஒவ்வொரு 54 நிமிடங்களுக்கு ஒருமுறை பாலியல் வல்லுறவு தொடர்பான ஒரு வழக்கு பதியப்படுகின்றது.நம்முடைய நாட்டில் நடைப்பெறும் பாலியல் வல்லுரவுகளைக் கணக்கிட்டுப் பார்த்தல்,சராசரியாக 2 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள்.   

பர்தா அணிந்தப் பெண்ணிற்கும்,பர்தா அணியாதப் பெண்ணிற்கும் வித்தியாசம் என்னவெனில் உணவுடன் உள்ள பாத்திரம் திறந்துகிடப்பதற்கும் மூடி இருப்பதற்குமே உள்ள வித்தியாசம் தான்.இதை ஒரு உதாரணத்தைக் கொண்டு நீங்கள் உணரலாம்.

அழகான இரண்டுப் பெண் ஒரு வீதி வழியாக செல்கின்றனர்.அதில் ஒருவர் பர்தா அணிந்தவர்,இன்னொருவர் மிகவும் பேஷனாக அங்கங்கள் தெரியும் அளவுக்கு இறுக்கமான அணிந்திருப்பவர்.அவ்வீதியின் முனையில் ஒரு முரட்டு இளைஞன் அங்கு வரும் பெண்களை சீண்டிகொண்டுள்ளான். இவ்விருவரையும் பார்த்தால் யாரை சீண்டுவான்,யாரை கேலி செய்வான்.
நிச்சயமாக பேஷன் ஆடை அணிந்திருக்கும் பெண்ணையே சீண்டுவான்.
அல்லது அவ்விருவரில் ஒருவர் பர்தாவும்,இன்னொருவர் மிகவும் டைட்டாக சல்வார் அணிந்துள்ளார்,அதுவும் தலைமுடியை மறைக்க துப்பட்டா அணியாமல் உள்ளார்.அதே இளைஞன் இவ்விருவரையும் பார்த்தால் யாரை கிண்டல் செய்வான்,யாரை சீண்டுவான்.நிச்சயமாக சல்வார் அணிந்தப் பெண்ணே சீண்டப்படுவாள்.இன்றைய சூழலில் பர்தா பலராலும் கிண்டல் செய்யப்பட்டாலும் அவள் அதை பாதுகாப்பாகவே உணர்வால்.அவர்களுடைய மானமும்,மரியாதையும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கே இஸ்லாம் பெண்களை பர்தா அணிய சொல்கின்றது அவளை கேவலப்படுத்தவோ, அடிமைப்படுத்தவோ அல்ல.

பெண்களுக்கு முழுமையான உரிமைகளை நீங்கள் தான் வழங்குகிறதாக சொல்லலாம்.அந்த உரிமைகள் எல்லாம் எழுத்திலும்,பேச்சிலும் மட்டுமே உள்ளன.படிபதற்கும்,பேசுவதற்கும் அவை நன்றாக உள்ளன.உண்மையில் எதார்த்தத்தில் பார்த்தால் நவநாகரீகம் என்ற பெயரில் இறுக்கமான ஆடைகளை அணியவைத்துவிட்டீர்கள்.இப்படி கணவன் மட்டுமே பார்த்து ரசிக்கவேண்டிய உடல் அங்கங்களை ஊருக்கே தெரியும் அளவிற்கு ஆடைகளை அணிவதுதான் பெண் சுதந்திரம்,பெண் உரிமையென்றால் எங்கள் இஸ்லாமிய பெண்களுக்கு அந்தப் பெண்ணுரிமையே வேண்டாம்.


இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம் பெண்கள் ஹிஜாப் அணிவதினால் மட்டும் எப்படி ஆண்களின் கள்ளத்தனமான பார்வையைவிட்டும்,தவறான செயல்பாடுகளைவிட்டும் பாதுகாப்பு பெறுவார்கள் என்று.முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை பேண சொன்ன அல்லாஹ்,ஆண்கள் அன்னியப் பெண்களை பார்பதைவிட்டும் தங்கள் பார்வைகளை தாழ்த்திகொள்ள வேண்டும்,தங்கள் வெட்கத்தலங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றும் கட்டளை இடுகின்றான்.இங்கு ஆண் பெண் இருவருமே ஒழுக்கமான வாழ்கை வாழவேண்டும் என்பதே இஸ்லாம் காட்டும் வழி.  

-- ஆண்களே, பெண்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். 


-- பெண்களுக்குக் கல்வி தருவது தீமையோடு கவலையைச் சேர்ப்பது போன்றது(299)


முகமதுவிற்குப் பின் வந்த மிகப் பெரிய இஸ்லாமியர் எனக் கருதப்படும் al-Ghazali (1058 - 1111)  என்ற இஸ்லாமியத் தத்துவ அறிஞரின் The Revival Of The Religious Sciences என்ற நூலிலிருந்து இரு மேற்கோள்கள்:


-- பெண்கள் பெரிய ஏமாற்றுக்காரர்கள்; தவறானவர்கள்;  கெட்ட குணம் நிறைந்தவர்கள்; தாழ்ந்த மனதுக்காரர்கள்.


-- ஆண்களுக்கு ஏற்படும் தாழ்வுகள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் பெண்களிடமிருந்தே வரும். (300)


இஸ்லாம் பெண்களை அறிவு, பண்பு, உடல்கூறு இவைகளில் மிகவும் பலவீனமானவர்கள் என்கிறது. ( ஓ! இதனால் தான் அடிக்கடி நம் பதிவர்கள் பெண்கள் உடலளவில் மிகவும் பலவீனமானவர்கள் என்று அடிக்கடி எதிரொலிக்கிறார்களோ! )
முகமது ‘ பெண்கள், அடிமைகள்’ இருவருமே ‘பாவப்பட்டவர்கள்’ என்கிறார்.


பெண்களைத் தாழ்த்தும் இன்னும் சில ஹடீத்துகள்:


-- ஒரு பன்றி தன்மேல் உரசிச்செல்வதை அனுமதித்தாலும், ஓர் ஆண் தான் அனுமதிக்காத ஒரு பெண்ணின் முழங்கை கூட தன் மேல் படுவதை அனுமதிக்கக் கூடாது.-- கறுப்பு நாய், ஒரு பெண், ஒரு கழுதை இதில் எது வந்தாலும் உங்கள் தொழுகையை நிறுத்திக் கொள்ளுங்கள். (301) (நாங்கள் சகுனமே பார்ப்பதில்லை என்றல்லவா அவர்கள் சொல்வார்கள்!!??)


பதில்:இது எல்லாம் தனிப்பட்ட மனிதர்களின் சொந்தகூற்றே இதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தம் இல்லை.இதனை முஸ்லிம்கள் பின்பற்றுவது  இல்லை இப்படி ஒரு சட்டமும் எங்கள் மார்கத்தில் இல்லை. 


பாலினத்து வேறுபாடுகள்:


தருமி:இஸ்லாம் ஒரு பாலின மையம் கொண்ட மதம்.  ஆனால் இதில் அவளது பாலினத் தேவைகள் கணக்கில் இல்லை. இஸ்லாமியக் குரு ஒருவர், திருமணத்தின் மூலம் ஒரு பெண்ணின் பிறப்பு உறுப்புக்கள் மேல் முழு ஆதிக்கம் ஒரு ஆண் செலுத்த முடியும் என்கிறார்.  ஆனால், அவனது உறுப்புகள் அதுபோல் ஒரே ஒரு பெண்ணுக்கு மட்டும் உரித்தானதல்ல. சுரா 4:3-ல் ஆணுக்குப் பல பெண்களை குரான் அளிக்கிறது. 


4 : 129 -- ”மனைவியருக்கு இடையே முழுக்க முழுக்க நீதியாக நடந்து கொள்ள நீங்கள் விரும்பினாலும், அது உங்களால் முடியாது.”  இப்படி உண்மையைச் சொன்னாலும் ஏன் குரான் பலதார மணத்தை ஒத்துக் கொள்கிறது?


‘திருமணம்’ என்ற சொல்லுக்கான அரபி வார்த்தை ‘நிக்காஹ்’.  ‘புணர்ச்சி’ (coition) என்பதற்கும் இதுவே வார்த்தை. இன்றைய பிரஞ்சு சொல் ‘niquer' என்ற சொல்லுக்கு ‘புணர்தல்’ (to fuck) என்பதே பொருள். 


Bousquet என்பவர் இஸ்லாமியத் திருமணத்தைப் பற்றிக் கூறுவது:
இஸ்லாமியத் திருமணத்தில் பெண் தன் பாலினத் தேவைகள் அனைத்தையும் தன் கணவனுக்கு முழுமையாக ஒப்புக் கொடுக்க வேண்டும். அது மட்டுமின்றி, இன்னும் அதிகப்படியான மூன்று மனைவியர்களையும், பல வைப்பாட்டிகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும். இதிலும் முகமதுவிற்கு அதிகப்படியான வசதிகள் இறைவனால் கொடுக்கப்படுகின்றன. அவர் நான்கு மனைவியருக்கு மேல் வைத்துக் கொள்ளவும், அவர்களுக்கு நடுவே அவருடைய இரவுகளைச் சமமாகப் பங்கு கொள்ளத் தேவையில்லை என்பதும் அந்த “வசதி”.  
குரானில் இப்படி சொல்லப்பட்டுள்ளது:
3 :50 (33 : 50 )  --- “நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும், மற்றும் உம்மோடு ஹிஜ்ரத் செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் ம்கள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள்  ஆகியோரையும் திண்ணமாக, நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கிறோம்.( அம்மாடி .. ! முகமதுவிற்கு மட்டும் எப்படி இவ்வளவு liberalization ..!) .... இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை. (அப்படியானால் இதுபோன்று யாரையும் திருமணம் செய்வது முகமதுவிற்கு மட்டும்தானா?)

3:51 --- உம்முடைய மனைவியரில் உம்முடைய விருப்பப்படி சிலரை உம்மைவிட்டுத் தனிமைப்படுத்தி வைப்பதற்கும், நீர் விரும்புகின்றபடி வேறு சிலரை உம்முடன் வைத்துக் கொள்வதற்கும், நீர் தனிமைப்படுத்தி வைத்தவர்களில் எவரையாவது நீர் ழைத்துக் கொள்வதற்கும் அனுமதி இருக்கிறது. இந்த விவகாரத்தில் உம் மீது எத்தகைய தவறுமில்லை. 
(அடிக்கடி நம் இஸ்லாமியப் பதிவர்கள் ’நீங்கள் குரானை முழுமையாக வாசித்துப் பலன் பெற வேண்டுமென்று' வேண்டுகோள் வைப்பதுண்டு. வாசிக்கும் சில பகுதிகளே இவ்வளவு மோசமான லாஜிக்கோடும். தவறான தத்துவத்தோடும் இருக்கிறதே ....முழுமையாக வாசித்தால் நிலைமை எப்படியிருக்குமென்றே தெரியவில்லையே!  இதுபோன்ற பகுதிகளை அவர்கள் வாசித்த பின்னும் இப்பகுதிகள்  எல்லாம் கடவுளின் சரியான கட்டளைகள் என்ற எண்ணம் எப்படி ஏற்படுகிறது?  Simple brain washing ...?


முகமது ‘இஷ்டத்திற்கு’ எது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று அல்லா சொன்னதாக முகமதுவே சொல்லிக் கொள்கிறாரென்றால் அது ஒரு குற்றவாளியே (தனக்கெதிரான வழக்கில்) கொடுக்கும் ஒரு (ஒப்புதல்) வாக்குமூலம் போலுள்ளது என்று ஏற்கெனவே நான் முன்பு எழுதியுள்ளேன்  12- வது பாய்ண்டாக நான் எழுதியுள்ள பகுதி இங்கு .....Is it not strange to accept that God himself would have come to give excuses to the excess of his dear and last disciple?


இதோடு, ஆயிஷா என்ற முகமதுவின் மனைவி முகமதிவிடமே ‘உமக்குத் தேவையான கேள்விகளுக்கு வசதியான பதில் சொல்ல கடவுளே உம் உதவிக்கு ஓடோடி வருகிறார் என்று சொல்லியுள்ளார். (A GOOD JOKE !ஆயிஷா சொன்னது எனக்குப் புரிகிறது; உங்களுக்கு ...? )


பதில்:இஸ்லாமிய குரு சொன்னார்,அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதைவிட்டு விட்டு இஸ்லாம் ஏன் 4 திருமணம் வரை அங்களுக்கு அனுமதியளித்துள்ள்ளது,பெண்களுக்கு ஏன் அது இல்லை?முஹம்மத் நபிக்கு மட்டும் ஏன் அதிகப்படியான திருமணம் செய்துக்கொள்ள இஸ்லாத்தில் அனுமதி என்பதை  மட்டும் பார்போம்.


நான்கு திருமணங்கள் வரை ஆண்களுக்கு ஏன் அனுமதி:  
முதலில் ஒரு விஷயத்தை நீங்கள் தெரிந்துக்கொள்ள கடமைபட்டுளீர்கள்.உலகிலுள்ள வேதங்களில் ஒருதார திருமணத்தை வலியுறுத்தும் ஒரே வேதம் குர்ஆன் தான்(குர்ஆன் 4:3),அதுப்போல ஒருதார திருமணத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்(மதம்) இஸ்லாம் மட்டுமே.
ஒரு பக்கம் ஒருதார திருமணத்தோடு போதுமாக்கிகொள்ளுங்கள் என்று சொன்ன இஸ்லாம் மறுபக்கத்தில் 4 திருமணத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கட்டளையும் இடுகின்றது.அதேபோல ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மனைவிகள் இருந்தால் அவர்கள் அனைவரையும் நீதமாக சரிசமமாக நடத்தவேண்டும் என்றும் இஸ்லாம் கட்டளை இடுகின்றது.குர்ஆன் 4:129 வசனத்தை குறிப்பிட்டு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட திருமணம் செய்தால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அவர்களிடையே நீதமாக நடக்கமுடியாது என்று குர்ஆன் தான் குறிப்பிடுகின்றது பின் ஏன் 4 திருமணத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.நீங்கள் உட்பட பலரும் பலதாரமணத்தை இஸ்லாம் கடுமையாக வலியுறுத்துகின்றது என்றே நினைகின்றனர்,அதை தங்கள் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு பயன்படுத்திகொள்கின்றனர்.  இப்பொழுதாவது நன்றாக தெரிந்துக்கொள்ளுங்கள் அதாவது பலதாரமணம் என்பது தொழுகை,நோன்பு இதுபோன்ற இன்ன பிற கடமைகள் போல பொதுவிதி கிடையாது.அதுஒரு சலுகையே ஆகும்.மேலும் இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் அது மூன்றாம் நிலை செயல் அதாவது அதைசெய்தால் தவறில்லை,அதை செய்யாமல் விட்டாலும் தவறில்லை.பலதாரமணத்தை வலியுறுத்துகின்ற ஒரே ஒரு குர்ஆன் வசனமும் இல்லை,ஒரே ஒரு நபிமொழியும்(ஹதீஸ்)இல்லை.அதே சமயத்தில் பலதாரமணத்தை செய்யக் கூடாது என்று வன்மையாக கண்டிக்கவும் இல்லை.ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் செய்யும் முஸ்லிம் ஒரு திருமணம் செய்த முஸ்லிமை விட சிறந்தவன் என்று  குறிப்பிடும் குர்ஆன் வசனமோ,நபிமொழியோ இல்லை.ஒன்றுக்கும் பேர்மட்ட திருமணம் செய்ய இஸ்லாம் ஏன் அனுமதி வழங்கியுள்ளது என்று சற்று ஆராய்ந்துப் பாப்போம் வாருங்கள்.


இயற்கையாக ஆண்களும்,பெண்களும் சரிசம விகிதாச்சாரங்களில் தான் பிறக்கிறார்கள் ஆனால் ஆண் குழந்தையைவிட,பெண்குழந்தையின் உடலில் நோய் எதிரிப்பு சக்தி அதிகமாகவும்,வீரியமாகவும் உள்ளது,மேலும் நோய் கிருமிகளையும்,வைரஸ்களையும் எதிர்த்துப் போராடும் சக்தி ஆண் குழந்தையைவிட பெண் குழந்தைக்கே அதிகம் என மருத்துவ கண்டுபிடிப்பு சொல்கின்றது,மேலும் இதன் காரணமாக ஆண் குழந்தைகள் சில சமயங்களில் நோயின் பாதிப்பு அதிகமானால் இறந்துப்போக நேரிடும். பால்குடி பருவத்திலிருந்தே இதன் காரணமாக பெண் குழந்தையின் விகிதாச்சாரம் அதிகமாகின்றது.உலகில் எப்போதும் ஏதோ ஒரு காரணத்தால் போர்கள் நடைப்பெற்றுகொண்டே உள்ளன.உங்களுக்கே தெரியும் போர் களத்தில் பெண்களை விட ஆண்களே அதிகமாக உயிரை இழக்க நேரிடும்.சில வருடங்களுக்கு முன் நடந்த அப்கானிஸ்தான் போரில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேர் உயிரை இழந்தனர்.இதில் பெரும்பாலானோர் ஆண் உயிர்தியாகிகளே.அன்றாடம் நடைப்பெறும் சாலை விபத்துகளில் அதிகமாக உயிரிழப்போர் ஆண்களே மேலும் கள்ளசாராய சாவுகளில் ஆண்களுடைய எண்ணிக்கையே மிகுதியாக இருப்பதையும் காணமுடியும்.மேற்கண்ட  காரணங்களின் மூலமாக ஆண்களைவிட பெண்களின் தொகை அதிகமாகின்றது.ஆசிய,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள சில நாடுகளை தவிர்த்து மற்ற எல்லா பகுதிகளிலும் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கையே அதிகம்.பெண்களின் எண்ணிக்கை கம்மியாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று,இங்கு பெண் சிசு கொலையும், கருவிலே பெண் குழந்தையை கலைப்பதும் வடமாநிலங்களில் அதிகம் என்று ஒரு அறிக்கை சொல்கின்றது ,இதன் காரணமாக இங்கு ஆண்களே அதிகம் எண்ணிக்கையில் உள்ளனர்.பெண்குழந்தை கொல்லப்படுவதும்,பெண் சிசு கொலை செய்வதும் இங்கு அறவே தடுக்கப்பட்டால் சில வருடங்களில் ஆண்களை விட பெண்கள் மிகுதியவார்கள்.           


ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ள இடங்களில் சில:
கீழே உள்ளது எல்லாம் சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட  ஒரு ஆய்வறிக்கையின் ரிப்போர்ட் சந்தேகமெனில் வெப்சைட் இல் check செய்துக் கொள்ளவும்.
 நியூயார்க்[அமெரிக்கா]-ஆண்களைவிட பெண்கள் சுமார் 1 லட்சம் பேர் அதிகம்.அமெரிக்கா முழுவதிலும் ஆண்களைவிட பெண்கள் சுமார் 78 லட்சம் பேர் அதிகம்,மேலும் நியூயார்க் மாகணத்தில் மட்டும் 4 ல் 1 பங்கு ஆண்கள் ஓரினச்சேர்கையில் செய்பவர்கள் உள்ளனர்.அமெரிக்க நாடு முழுவதிலும் சுமார் இரண்டரைக் கோடி பேர் ஓரினச்சேர்கையாளர்கள்.ஓரினச்சேர்கையில் ஈடுபடுபவர்களுக்கு பெண்களின் மேல் நாட்டம் செல்லாது என்பது மருத்துவ கண்டுபிடிப்பு.பிரிட்டன்-ஆண்களைவிட பெண்கள் சுமார் 40  லட்சம் பேர் அதிகம்.ஜெர்மன்-ஆண்களைவிட பெண்கள் சுமார் 50 லட்சம் பேர் அதிகம்.ரஷ்யா-ஆண்களைவிட பெண்கள் சுமார் 60 லட்சம் பேர் அதிகம்.பட்டியல் இப்படியே நீள்கின்றது இப்போது நீங்களே கணக்கிட்டுகொள்ளுங்கள் உலகம் முழுவதிலும் ஆண்களை விட எத்தனை பெண்கள் அதிகமாக இருப்பார்கள் என்று.


இப்பொழுது உங்களிடம் ஒரு கேள்வி,உங்கள் தங்கையோ,அக்காவோ அல்லது சொந்தக்கார பெண்மணி யாரோ ஒருவர் அமெரிக்காவில் உள்ளார்.அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஏனென்றால் எல்லா ஆண்களும் ஏற்கனவே ஒருமுறை திருமணம் செய்துக்கொண்டுவிட்டனர். இப்போது அவருக்கு முன் இரண்டே இரண்டு வழிகளே உள்ளது.ஒன்று ஏற்கனவே திருமணம் ஆனா ஒரு ஆணுக்கு இரண்டாம் மனைவியாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாழ்க்கைப்படவேண்டும்.அல்லது "பொதுசொத்தாக(விபச்சாரி)" மாறிவிட வேண்டும்.மூன்றாவதாக வேறு வழி இல்லை.நீங்கள் மேற் சொன்ன அந்தப் பெண்ணிற்கு காப்பாளராக இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள்?நீங்கள் எத்தனை பேரிடம் இந்த கேள்வியை கேட்டாலும் முதல் பதிலை தான் சொல்வார்கள்.தங்களை போன்ற அதிபுத்திசாலிகள் மூன்றாம் வழி இருப்பதாக சொல்லலாம் அதாவது இரண்டாம் மனைவியாக வாழ்கைபடுவதை விட கன்னியாகவே இருப்பது சிறந்தது என்று.இவ்வாறு இருப்பது இயற்கைக்கு முரணானது,அப்படி இருப்பது சாத்தியமே இல்லை என்று மருத்துவம் சொல்கின்றது. ஆணோ,பெண்ணோ காலம் முழுவதும் கன்னி கழியாமல் இருப்பது நடைமுறைக்கு ஒத்துவராத இயற்கைக்கு முரணான செயல்,மேலும் இவ்வாறு இருப்பது முறை கேடான வாழ்க்கைக்கும்,ஒழுக்க சீரழிவுக்கும் வழிவகுத்து விடும்.


"சர்ச் ஆப் இங்கிலாந்து"சபையை சார்ந்த பெரும்பாலான பாதிரிமார்களும்,போதகர்களும்,கன்னியாஸ்திரிகளும் முறைகேடான பாலுறவிலும்,ஓரினச்சேர்கையிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஒரு ஆய்வறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.இவர்கள் இப்படி முறைகேடான உறவுகளில் ஈடுபடக்காரணம் இல்லறவாழ்கையை துறந்து திருமணம் தேவையில்லை என்று துறவறம் பூண்டதே.இதனால் தான் இஸ்லாம் சொல்கின்றது"துறவறம் இஸ்லாத்தில் இல்லை"என்று,மேலும் துறவறத்தை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கின்றது.அப்படி இல்லற வாழ்கையை துறந்து துறவறம் பூண்டவர்களை நம்பாதே அவர்கள் மக்களை ஏமாற்றும் அயோக்கியர்கள் என்று எங்களுக்கு இஸ்லாம் அடையாளம்காட்டுகின்றது.


பெண் ஏன் பலதாரமணம் செய்யக்கூடாது:
இதுவிசயத்தில் மருத்துவம் சொல்லக்கூடிய ஒரு உண்மையை மனதில் கொள்ளவேண்டும் அது என்னவென்றால்,ஆணுக்கு பெண்ணை விட அதிகமான இச்சையும் உணர்வும் ஏற்ப்படும்.உடலமைப்பை பொறுத்தவரை ஆணும் பெண்ணும் வேறுபடுகின்றார்கள்.ஒன்றுக்கும் மேற்பட்ட துணையோடு சேர்ந்து வாழ்வதற்குரிய உடலமைப்பை ஒரு ஆண் பெற்றிருக்கின்றான்,மேலும் அது அவனுக்கு எளிதாகவும் இருகின்றது,ஆனால் பெண்ணால் அது இயலாத காரியம்,மருத்துவ அறிவின்படி பெண்ணிற்கு மாதவிலக்கு ஏற்படும் நாளில்தான் அவளின் மனமும்,சிந்தனையும் வெகுவாக பாதிக்கப்படுகின்றது.அவளுடைய நடவடிக்கைகளிலும்,பழக்கவழக்கங்களிலும் ஒருவித சிடுசிடுப்பை வெளிப்படையாக பார்க்கமுடியும் பொதுவாக அக்காலங்களில் தான் கணவன் மனைவி இடையே சண்டையும் சச்சரவுகளும் அதிகமாக தோன்றுகின்றன. பெண் குற்றவாளிகள் பற்றிய ஓர் ஆய்வறிக்கை சமிபத்தில் அமெரிக்காவில் வெளியாகியது.அவ்வறிக்கை அளிக்கும் தகவலின்படி பெண் குற்றவாளிகள் பெரும்பாலானோர் அந்தக் குற்றங்களை மாதவிலக்கு காலங்களில் தான் செய்துள்ளனர்.


ஒரு பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களோடு உறவு கொண்டால், அவளுடைய உடல் பல்வேறு நோய்களுக்கு இலக்காகிவிடும் என்று மருத்துவம் தெரிவிக்கின்றது,அந்நோய் அதிவிரைவில் பல்கிபெருகும் என்றும் மருத்துவ குறிப்பு நமக்கு சொல்கின்றது.அதேசமயம் ஒரு ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட 4 பெண்களை திருமணம் செய்வதால் அத்தகைய பாதிப்பு ஏதும் அவனுக்கு ஏற்படுவதில்லை.ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்தாலும் அவனுக்கு பிறக்கும் குழந்தைக்கு யார் தன் தந்தை,யார் தன் தாய் என்று தெரியும்,அதுவே ஒரு பெண் பல திருமணங்கள் செய்துகொண்டால் அக்குழந்தைக்கு தன் தாய்,தந்தை யார் என்று எப்படி தெரியும்.தன் தாய்,தந்தை யார் என்பதை அறிந்துவைப்பது இஸ்லாத்தில் மிகமுக்கியமான விஷயம்,உளவியல் அறிஞர்களும் இதற்க்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர்.ஏன் என்றால் தன் தாய்,தந்தை யார் என்று அறியாதவனுக்கு மனது மிகவும் பாதிப்பு அடைகின்றது,அவனுடைய சிந்தனையின் வளர்ச்சியும் இயல்பாகவே பாதிப்படையும்.இதற்க்கு உதாரணமாக தவறான நடத்தைக்கொண்ட பெண்ணிற்கு பிறக்கும் குழந்தையின் இளமைப்பருவம் மிக மோசமாக இருப்பதை நீங்கள் காணலாம்.       ஏதேனும் ஒரு குழந்தையை பள்ளிகூடத்தில் சேர்க்க நினைத்தால் என்ன செய்வீர்கள்?பெற்றோர் என்று இரண்டு பேருடைய பெயர்களை எழுதியாகவேண்டுமே?இம்மாதிரியான குழந்தைகளை மற்றவர்கள் எப்படி கூப்பிடுவார்கள் என்றுக்கூட உங்களுக்கு தெரியாதா ?இப்படி பெண்களுக்கு ஏன் பலதாரமணத்தை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்ற தலைப்பில் ஒரு நாள் முழுக்கவேண்டுமானாலும் பேசிக்கொண்டே போகலாம்.
ஒரு ஆண் தன் மனைவியை பிடிக்கவில்லை என்றால் சில நிபந்தனைகளோடு எப்படி தலாக் என்னும் விவாகரத்து செய்யலாம் என இஸ்லாம் அனுமதித்துள்ளதோ அதுப்போல,ஒரு பெண்ணிற்கு தன் கணவனை பிடிக்கவில்லை என்பதாலோ ,அல்லது அவன் நடத்தை சரியில்லை என்பதாலோ அவனை விவாகரத்து செய்ய விரும்பினால் தாரளமாக செய்யலாம் இந்த சலுகையையும் இஸ்லாம் பெண்களுக்கு 1400 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கியுள்ளது,ஒரு பெண் தன் கணவனை விவாகரத்து செய்யும் சலுகையை உலகில் உள்ள எந்த மதமும் தரவில்லை இஸ்லாத்தை தவிர்த்து,இன்னும் சொல்லப்போனால் நாம் வாழக்கூடிய இந்த நவீனயுகத்தில் கூட ஒரு பெண் விவாகரத்து வாங்க விரும்பினால் குறைந்தது  சில,பல மாதங்களாவது நீதிமன்ற வளாகத்தில் காத்துகிடக்கவேண்டும்.அந்த சிரமத்தைகூட இஸ்லாம் பெண்களுக்கு தரவில்லை.இத்தைகைய சிறப்பிற்குரிய மார்கத்தை எப்படி உங்களால் "இஸ்லாம் ஒரு பாலின மையம் கொண்ட மதம்.  ஆனால் இதில் அவளது பாலினத் தேவைகள் கணக்கில் இல்லை" என்று வாய்கூசாமல் சொல்லமுடிகின்றதோ.


முஹம்மத் நபி(ஸல்)அவர்களுக்கு மட்டும் ஏன் இஸ்லாத்தில் சிறப்பு சலுகை: 
ஒரே சமயத்தில் ஆண்களுக்கு 4 திருமணங்கள் வரை மட்டுமே அனுமதித்த இஸ்லாம்,நபி(ஸல்)அவர்களுக்கு மட்டும் ஏன் பல திருமணங்களை அனுமதித்தது என்பது நீங்கள் உட்பட இஸ்லாமை சரியாக விளங்கிக்கொள்ளாத பலரும் கேட்கும் கேள்வி தான் ஆகவே அதை சற்று விரிவாக பார்ப்போம்.

நபி(ஸல்)அவர்களுக்கு 11 திருமணங்கள் வரை இஸ்லாம் அனுமதித்ததை மட்டும் விமர்சனம் செய்வோர் ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர் அல்லது மறைத்துவிடுகின்றனர்.அதாவது பொதுவாகவே ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தன்னுடைய துணையை பிடிக்கவில்லை எனில் விவாகரத்து செய்ய அவர்களுக்கு இஸ்லாம் அனுமதியளித்துள்ளது,ஆனால் 11 திருமணங்கள் வரை நபி(ஸல்)அவர்களுக்கு அனுமதித்த இஸ்லாம் அதையும் ஒரு வரைமுறைக்குள் கொண்டுவந்து நபி(ஸல்)அவர்களுக்கு ஒரு கட்டளை இடுகின்றது இதை குர்ஆனில் 33 :52 வசனத்தை படித்தால் தெரியும்.இறைவனின் தூதரின் மனைவியாக இருந்த அத்தனைப்பேரையும் அப்படியே தொடர்ந்து மனைவியாக வைத்துக்கொள்ளும் அனுமதியை குர்ஆனின் இவ்வசனம் வழங்குகின்றது.அத்தோடு வேறு எந்தப் பெண்மணியையும் மனைவியாக்கிகொள்ளகூடாது,அடிமைப் பெண்களைத்தவிர,என்ற தடையையும் நபி(ஸல்)அவர்களுக்கு இஸ்லாம் கட்டளை இடுகின்றது.

சுருங்கசொல்லின் இனி வேறு எந்தப்பெண்ணையும் திருமணம் செய்யக்கூடாது,மனைவியாக உள்ள யாரையும் தலாக் (விவாகரத்து) செய்யக்கூடாது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கைய மக்களுக்கு நினைவுட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது.ஏனனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையையத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் "நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே  சான்றாகக் காட்டும் தைரியம்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே இருந்தது.
இதை முன்வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.
"அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன்.விளங்க மாட்டீர்களா?'' என்று (முஹம்மேத!) கூறுவீராக! (அல்குர்ஆன் 10:16 )

தம்மை இறைத்தூதர்  என்று வாதிட்ட நாற்பதாம் வயது வரை அவர்கள் பெண்கள் விஷயம் உட்பட அனைத்திலும் குறை சொல்ல முடியாத வாழ்க்கை வாழ்ந்துள்ளதில் இருந்து அவர்கள் காமெவறி காரணமாகப் பல திருமணங்கைளச் செய்தார்கள் எனக் கூறுவது அடிப்படை அற்றது என்பதை  அறிந்து கொள்ளலாம்.

பிற்காலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கைளக் கொலை செய்திட வேண்டும் என்கிற அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் அவர்களை வெறுத்தது. பல்வேறு இழிந்த பட்டங்கைளச் சூட்டி அவர்களை இழிவுபடுத்த முனைந்த அந்தக் கூட்டம், இவ்வளவு வெருப்பிர்க்குரியவராக  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆகிவிட்ட பின்னும் கூட நபியவர்களின் கடந்த கால ஒழுக்க வாழ்கையை பற்றி விமர்சித்ததில்லை.

கையைப் பிடித்து இழுத்தார்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும் கடைக் கண்ணால் பார்த்தார்கள் என்ற அளவாவது அவர்களால் கூற முடிந்ததா என்றால் அதுவும் இல்லை. எதிரிகளாலும் விமர்சிக்க முடியாத பரிசுத்த வாழ்க்கை  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடையது.

நபி(ஸல்) அவர்களின் முதல் திருமணம் கூட தன்னைவிட வயதில் முதிர்ந்த ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்தார்கள்.அத்திருமணம் செய்யும் பொழுது நபி(ஸல்)அவர்களுக்கு வயது 25 அப்பெண்மணிக்கு[கதிஜா(ரலி)] வயது 40.அன்னை கதிஜா(ரலி)அவர்கள் இறந்துபோகும் வரையில் நபி(ஸல்)அவர்கள் யாரையும் திருமணம் செய்யவில்லை.

நபி(ஸல்)அவர்களின் 50 ஆவது வயதில் அன்னை கதிஜா(ரலி) இறந்தார்கள். நபி(ஸல்)யாரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொண்டு பலதிருமணங்கள் செய்ததிற்கு அடங்காத உடல் இச்சைதான் காரணம் என்றால்,உடல் இச்சை அதிகாமாக உள்ள இளமை பருவத்தில் தன்னை விட வயது குறைந்த கன்னிப்பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே,அல்லது குறைந்தப்பட்சம் ஏற்கனவே திருமணம் ஆகாத ஒரு பெண்ணை மணமுடித்து இருக்கலாமே,ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி கணவரை இழந்த வயது முதிர்ந்த விதவையை திருமணம் செய்வார்களா?

தவறான வழியில் சென்று விடாமல் இருக்க ஒரு மனைவி தேவை என்ற சாதாரண நோக்கம் தான் அவர்களுக்கு இருந்ததே அன்றி இளமை, அழகு, கண்ணித் தன்மை எல்லாம் நிறைந்திருக்கக் கூடிய அதிகத் தகுதியுள்ள மனைவி  ேவண்டும் என்ற அளவுக்குக் கூட அவர்களின் நோக்கம் இல்லை. இந்தப் பருவத்தில் சராசரி மனிதன் விரும்பக் கூடிய அளவை விட தாம் குறைந்த அளவையே அவர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் முதல் திருமணேம சான்றாக உள்ளது.மீதமுள்ள 10 திருமணங்களையும் 53 வயதிற்கும் 56 வயதிற்கும் இடையிலே தான் நபி(ஸல்) செய்துகொண்டார்கள்.வயது ஏற,ஏற இச்சை குறையும் என்று மருத்துவமே சொல்கின்றது.பின் ஏன் இத்தனை திருமணம் என்பதை ஆராய்ச்சி கண் கொண்டுப் பார்த்தால் அனைத்து திருமணமும் ஏதோ சமுகநலனையும்,அரசியல் காரணங்களையும் முன்னிறுத்தியே செய்யப்பட்டிருப்பதை காணலாம்.

நபி(ஸல்)அவர்கள் செய்த திருமணங்களில் இரண்டே இரண்டு மனைவியரை தவிர மற்ற அனைவரும் 36 வயது முதல் 50 வயதிற்கு இடைபட்டவர்களாகவே இருந்தனர்.இதுவும் அளவுக்கு மிஞ்சிய காம உணர்வினால்தான் பல திருமணங்கள் செய்தார்கள் என்று சொல்வதற்கு தடையாக உள்ளது.

உதாரணத்திற்கு:
1 .அன்னை ஜுவைரியா(ரலி)உடனான திருமணத்தை எடுத்துகொள்வோம்.அன்னை ஜுவைரியா(ரலி) பனூ முஸ்தலிக் என்னும் கோத்திரத்தை சார்ந்தவர்,அவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமான உறவும்,தொடர்பும் அக்காலக்கட்டத்தில் மிகவும் சீர்கெட்டு இருந்தது.முஸ்லிம்கள் அக்கோத்திரத்தார் மீது போர்தொடுத்து வெற்றியும் பெற்றனர்.அவ்வெற்றியை தொடர்ந்து நபி(ஸல்)அவர்கள் ஜுவைரியா(ரலி)அவர்களை திருமணம் செய்தார்கள்.அதன் பிறகு நபிதோழர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள பிணைகைதிகள் அனைவரையும் விடுவித்தனர்.எங்கள் இறைதூதருடைய உறவினர்களை எப்படி நாங்கள் கைதியாக நடத்தமுடியும் என்று முஸ்லிம்கள் காரணம் கூறினார்கள்.அதன் பிறகு முஸ்லிம்களுக்கு பனூ முஸ்தலிக் கோத்திரத்துடனான உறவும்,தொடர்பும் எந்தளவு சீர்பெற்றது என்பதற்கு வரலாறே சாட்சி.

2 .அன்னை  மைமூனா(ரலி)  உடனான திருமணத்தையும் எடுத்துக்கொள்வோம்.நஜ்த் என்னும் கோத்திரத்தாருடைய தலைவரின் தங்கை அவர்.அந்தக்கோத்திரத்தினர் என்ன செய்தார்கள் தெரியுமா?இஸ்லாத்தை எற்றுகொள்கின்றோம் என்று கூறி முஸ்லிம்களை நம்பவைத்து அவர்களை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்து செல்கின்றோம் என்று கூறி அழைத்து சென்று,முஸ்லிம்கள் 70 பேரை கொடூரமாக கொன்றுவிட்டனர் முஸ்லிம்கள் ஷஹீதாக்கப்பட்டனர்.இதற்க்கு பின் முஸ்லிம்களுடைய கடும் பகைவர்களானார்கள்.நபி(ஸல்)அவர்கள் மைமூனா(ரலி) அவர்களை திருமணம் செய்துகொண்டப் பின் என்ன ஆனது தெரியுமா?இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்விடங்களையும் வசிப்பிடங்களையும் காலி செய்துவிட்டு மதீனாவிர்க்கே(முஸ்லிம்களை நோக்கி) குடிவந்துவிட்டார்கள் மேலும் எந்தவித நிர்பந்தமும் இல்லாமல் நபி(ஸல்)அவர்களை இறைதூதராக ஒப்புக்கொண்டு,தூய இஸ்லாமிய மார்கத்தில் இணைத்துகொண்டனர்.

இப்படி தன் திருமணத்தில் கூட மக்களின் ஒற்றுமையையும் சமூகனலனையுமே பார்த்தார்கள்.நபி(ஸல்)அவர்களை பெண்கள் விசயத்தில் குறை கூற விரும்புவோர் குறிப்பாக 2 திருமணங்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.ஒன்று அன்னை ஆயிஷா(ரலி)யுடனானது,இன்னொன்று அன்னை ஜைனப்(ரலி)யுடனானது அதைப்பற்றியும் பார்ப்போம்.

1 .ஆயிஷா(ரலி ):
இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கைளத் திருமணம் செய்கிறார்கள். கதீஜா (ரலி) அவர்கள் மரணித்து மூன்றாண்டுகளுக்குப் பின் தமது ஐம்பத்தி மூன்றாம் வயதில் ஆயிஷா (ரலி) அவர்களை திருமணம் செய்கிறார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆறு வயது மாத்திரமே.அன்றைக்குப் பால்ய விவாகம் சர்வ சாதாரணமாக இருந்ததை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.பிறகு இஸ்லாத்தில் அது தடை செய்யப்பட்டு விட்டது.

ஆயிஷா (ரலி) அவர்கள் மாத்திரேம நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியில் கன்னியாக இருந்தவர்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கைளத் திருமணம் செய்ததற்குக் கூட காம வெறியைக் காரணமாகக் கூற முடியாத அளவுக்கு நியாயங்கள் உள்ளன.

காம வெறிக்காக திருமணம் செய்பவர்கள் அப்போதைக்கு காம உணர்வைத் தணித்துக் கொள்ள தகுதியான ஒருத்தியைத் தான் மணமுடிப்பார்கள். உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட காரியங்கள் யாவுமே அப்போதே அதை நிறைவேற்ற வேண்டும் என்ற தன்மை வாய்ந்தவைதான்.

ஒருவனுக்குக் காம உணர்வு மேலோங்கி பெண்களை அனுபவிக்கும் எண்ணம் வந்து விட்டால் உடனேயே அந்த உணர்வைத் தணித்துக் கொள்ளத்தக்க பெண்களைத் தான் நாடுவானேயன்றி ஐந்து வருடங்களுக்குப் பின் பருவமடையக் கூடியவளை மணக்க மாட்டான். அவ்வாறு எவரேணும் மணந்தால் அதற்குக் காம உணர்வு அல்லாத வேறு ஏதோ பின்னணி இருக்கும். எல்லா உணர்வுகளின் நிலையும் இது தான்.

இப்போது ஒருவருக்குப் பசித்தால் இப்போதே அதற்குறிய உணவைத் தேடுவானே அன்றி, இப்போதைய  பசிக்கு மூன்று நாட்கள் கழித்துப் பழுக்கக் கூடிய காய்களைத் தேடமாட்டான். முதல் மனைவியிடம் கடைசிப் பத்தாண்டுகளாக இல்லற வாழ்க்கை கிடைக்காத நிலை. இரண்டாம் மனைவியிடம் அதற்குறிய தகுதியை இழந்துவிட்ட முதிர் விதவை.

இந்த நிலையில் பதின்மூன்று ஆண்டு காலம் இல்வாழ்வை அனுபவிக்கும் வாய்ப்பை இழந்த ஒருவர் - காம வெறி மேலோங்கி நிற்கும் ஒருவர் – அடுத்து தேர்ந்தெடுக்கும் மனைவி உடனே அனுபவிக்க ஏற்றவளாக இருக்க வேண்டும் என்றே  விரும்புவார்.ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நிலையை அடைந்தும் ஆயிஷா (ரலி) அவர்களை மூன்றாவதாக மணந்த போது ஆயிஷா அவர்களின் வயது வெறும் ஆறு மட்டுமே!இல்லறத்துக்குத் தகுதியில்லாத அவர்களை பெயரளவுக்கு தான் திருமணம் செய்கிறார்கள்.

இத்திருமணம் நடந்த பின் ஆயிஷா (ரலி) தனது தந்தை வீட்டில் தான் இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷா ரலி உடன் இல்லறம் நடத்தவில்லை. மக்காவைவிட்டு நாடு துறந்து மதீனா சென்ற பின்பு தான் ஆயிஷா (ரலி அவர்கள் பருவ வயதை அடைந்தார்கள். அதன் பின்னர் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுக்கு மனைவியாக அனுப்பப்பட்டார்கள்.

எனவே இத்திருமணத்திற்கு காம வெறியை காரணமாகக் கூற இது தடையாக நிற்கிறது.

உலகமெல்லாம் நபியவர்களைப் பொய்யர் எனக் கூறிய போது உண்மையாளர் என்று ஏற்றவர் ஆயிஷாவின் தந்தை அபூபக்கர்( ரலி)அவர்கள்.

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மக்காவில் வசிக்க முடியாத அளவுக்கு நிலைமை முற்றிய போது அவர்கைளக் கொலை செய்ய திட்டம் தீட்டிய போது யாருக்கும் தெரியாமல் மதீனாவுக்கு புறப்பட்டார்கள். உயிரைப் பணயம் வைத்து செய்த இந்தப் பயணத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் நபிகள் நாயகம் ஸல் அவர்களுக்குத் துணையாக வந்தனர். இந்த சமுதாயத்திலேயே  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவர் நேசித்த அளவுக்கு வேறு எவரும் நேசிக்க முடியாது என்ற அளவுக்கு நபியவர்களுக்கு நெருக்கமானவர்.

இந்த நேசத்துடன் நெருக்கமான சொந்தமும் ஏற்பட வேண்டும் என்ற காரணம் இருந்தால் மட்டுமே பருவமடையாத ஆயிஷாவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மனந்திருக்க முடியும். இதனால் தான் அபூபக்கர்(ரலி) அவர்கள் மனமகிழ்வுடன் தம் மகளைத் திருமணம் செய்விக்கிறார்கள். மற்றவர்களை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் நான்குக்கு மேல் மணம் முடிக்க சலுகை வழங்கப்பட்டதற்கு இதைக் காரணமாக் கூற முடியாது என்றாலும், பிரத்தியேகமாக ஆயிஷாவைத் தேர்வு செய்ததற்கு நிச்சயமாக இதைக் காரணமாகக் கூற இயலும்.

2 .ஜைனப்(ரலி):
நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய வளர்ப்பு மகனாக ஜைது(ரலி)அவர்களை வளர்த்தார்கள்,அவர் அன்றைய காலத்தில் அடிமைகுலத்து இளைஞர்.

சொந்த மகன் போலவே ஜைதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இருபத்தைந்தாவது வயது முதல் தமது ஐம்பத்தி ஐந்தாம் வயது வரை வளர்த்து வந்தார்கள். ஜைது அவர்களின் எல்லாக் காரியங்களுக்கும் நபியவர்களே பொறுப்பாளராக இருந்தார்கள். அது போல் ஜைது அவர்கள் தமது எல்லாக் காரியங்களுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே சார்ந்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தந்தையின் சகோதிரியான  உமைமா  என்பவரின் மகள் ஜைனப் அவர்களை - அதாவது தமது மாமி மகளை ஜைதுக்கு ஹிஜ்ரி முதல் ஆண்டில் திருமணம் செய்து வைத்தார்கள். மிகவும் உயர்ந்த குலம் என்று பெருமை பாராட்டிய தமது குலத்துப் பெண்ணாகிய தமது மாமி மகளை ஒர் அடிமைக்கு  திருமணம் செய்து வைப்பதென்பது அன்றைய  சமூக அமைப்பில்  கற்பனையிலும் செய்து பார்க்க முடியாத மிகப்பெரிய புரட்சியாகும்,ஆனால் இத்திருமணம் ஓராண்டுக்கு மேல் நிலைக்காமல் என்ன காரணத்தாலோ கணவன்,மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேற்றுமையால் விவாகரத்தானது.விவாகரத்தான அப்பெண்ணை நபி(ஸல்)அவர்கள் திருமணம் செய்ததும்,தன் மருமகளையே திருமணம் செய்துகொண்டார் என மக்களிடையே பெரும் விமர்சனம் எழுந்தது.

திருக்குர்ஆன் 33:37
நபிகள் நாயகத்துக்கு ஜைனபை அல்லாஹ்வே மணமுடித்துத் தந்ததாக (இறைவனின் நாட்டம்) இவ்வசனம் கூறுகிறது.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. வளர்ப்பு மகணை, மகன் எனக் கருதி மகனுக்குரிய எல்லா உரிமைகளும் வளர்ப்பு மகனுக்கு உண்டு என அன்றைய சமுதாயம் நம்பி வந்தது. வளர்க்கப்பட்டவர், தனது மனைவியை விவாகரத்துச் செய்த பின் வளர்த்தவர் அப்பெண்ணை மணந்து கொள்ளலாம்; அது, மருமகளை விவாகம் செய்ததாக ஆகாது என்ற சட்டத்தை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்பது இத்திருமணத்திற்குரிய காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜைனப் மீது ஆசைப்பட்டு, ஜைதை விவாகரத்து செய்யச் சொன்னதாக இஸ்லாத்தின் எதிரிகள் சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

ஜைனப் மீது நபிகள் நாயகத்திற்கு ஆசை இருந்தால் அவர்கள் கன்னிப் பருவத்திலேயே ஜைனபை திருமணம் செய்திருக்க முடியும். அவர்கள் தான் அப்பெண்ணிற்குப் பொறுப்பாளராகவும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஜைதுக்கே மணமுடித்துத் தருகிறார்கள்.

இளமையோடு இருக்கும் போது அவரை மணந்து கொள்ளாமல்,ஒரு வருடம் ஜைதுடன் வாழ்க்கை நடத்திய பிறகு அவரை மணந்து கொண்டதற்கு உடல் ரீதியான காரணத்தைக் கூறுவது முற்றிலும் தவறாகும்.

நபி(ஸல்)அவர்களின் இத்திருமணம் மூலயமாக போலித்தனமான உறவுமுறைகளை அல்லாஹ் தகர்த்தெறிய விரும்பினான்.நீங்கள் புரிந்தகொள்ள சிலக்காரனங்கள்.

தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவுகள் இறைவனால் தீர்மானிக்கப்படுபவை. இறை நம்பிக்கை அற்றவர்களின் வார்த்தையில் சொல்வெதன்றால் இயற்கையால் தீர்மானிக்கப்படுபவை. இவன் தான் எனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்று எந்தத் தந்தையும் தீர்மானிக்க இயலாது.இவர் தான் எனக்குத் தந்தையாக இருக்க வேண்டும் என்று எந்த மகனும் தீர்மானம் செய்ய முடியாது. எனக்கு அண்ணனாக இவர் தான் இருக்க வேண்டும்;எனக்குத் தம்பியாக இவர் தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் எவரும் முடிவு செய்ய முடியாது. அது இறைவனின் தீர்மானப்பில் நடக்கக் கூடியதாகும் (அல்லது இயற்க்கையின் நியதிப்படி நடக்கக் கூடியதாகும்)
ஆனால் தத்தெடுக்கும் போலித்தனமான உறவு முறைகள் செயற்கையை இயற்கையைப் போல் ஆக்கும் ஏமாற்று வேலையாக உள்ளது.

யாருடைய உயிரனுவின் மூலமும், எவருடைய சினை முட்டை  மூலமும் ஒருவன் பிறந்தானோ,அந்த இரத்த உறவை ரத்து செய்து விட்டு ஒரு சம்பந்தமுமில்லாதவர்கைளப் பெற்றோர் எனப் பிரகடனம் செய்வது இரத்த சம்பந்தத்தை அர்த்தமற்றதாக ஆக்கி விடுகிறது.

இப்படி இத்திருமணம் மூலயமாக விளைந்த நன்மைகள் ஏராளம்.இது தெரியாமல் இனி நபி(ஸல்)அவர்களை பழித்து பேசவேண்டாம்(மேலதிகமான தகவலுக்கு:நபிகள் பல திருமணங்கள் செய்தது ஏன்?என்ற புத்தகத்தைப் படிக்கவும்,மேற் சொன்ன தகவல்களில் பல அதிலிருந்தே எடுக்கப்பட்டது-இந்நூலை பதிவறக்கம் செய்ய இங்கே க்ளிக்செய்யவும்).


தருமி:al-Ghazali முகமது பற்றிச் சொல்கிறார்:
ஒவ்வொரு காலையிலும் முகமது தன் ஒன்பது மனைவிமார்களோடும் உறவு கொள்ள முடிந்தது என்கிறார்.


பெண்கள் ஆண்களின் தேவைக்காகவே படைக்கப்பட்டதாகவே தோன்றுகிறது.  மேலும் al-Ghazali ஒரு மனைவி போதவில்லையென்றால் இன்னும் மூன்று மனைவிகளைச் சேர்த்துக் கொள்; அதுவும் உனக்குப் பற்றவில்லையெனில் அந்த மனைவிகளை மாற்றி விடு. What could be simpler!
(303)


பதில்:தனி நபர்களின் கூற்றுக்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமில்லை அது அவர்களையே சாரும் என்பதே இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டிருக்கும் கொள்கை.நீங்கள் கேட்டதற்கும் சேர்த்து மேலே பதில் உள்ளது.
தருமி:ஆண்களின் உரிமைகளைக் காப்பது பற்றி மட்டுமே இஸ்லாம் பேசுகிறது.முகமதுவின் காலத்தில் சில ஆண்களிடம் பெண்ணை முன்னிருந்தும், பின்னிருந்தும் பாலின்பம் அனுபவிக்கும் பழக்கமிருந்திருக்கிறது. இதனால் சில பெண்கள் முகமதிவின் பார்வைக்கு இதனைக் கொண்டு வருகிறார்கள். (நல்ல வழக்குகளை முகமதுவிடம் கொண்டு வருகிறார்கள்! ம்ம் .. ம்.. ஆனால் அல்லாவே நேரடித் தீர்ப்பு தருகிறார் !!) “சரியாக” அல்லா தன் தூதரிடம் இதற்கான பதிலை இறக்குகிறார். 2 : 223-ல் ‘உங்கள் மனைவியர் உங்களுக்குரிய விளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்.’ (304)  
(ஆஹா! மிக நல்ல கடவுள்!)


பதில்:தனக்கு தெரியாத விசயங்களை தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்வதில் என்ன தவறு இருக்கின்றது.ஒரு மாணவர் தனக்கெழும்  சந்தேகங்களை தன் ஆசிரியரிடம் கேட்கின்றார் அவ்வாசிரியர் அம்மாணவனின் சந்தேகங்களை தீர்த்துவைப்பார் இது உலகியல் நடைமுறைதானே.இஸ்லாத்தைப் பொறுத்தவரையில் நபி(ஸல்)அவர்களே ஆசிரியர்,ஏனென்றால் எங்கள் வாழ்வியல் துறை அனைத்திற்கும் அவர்தானே வழிகாட்டி.ஒருவன் எந்த முறையில் தூங்குவது,எந்தமுறையில் பல்துலக்குவது முதற்கொண்டு எப்படி இயற்க்கை தேவைகளை நிறைவு செய்யவேண்டும் என்பது முதற்க்கொண்டு,வியாபாரம்,ஒழுக்கம்,இல்லறம் என்று இஸ்லாம் தொடாத வாழ்வியல் துறையே இல்லை,இவை அத்தனைக்கும் நபி(ஸல்)அவர்களே வழிகாட்டி.அவரிடத்திலே இந்த சந்தேகங்களை கேட்காமல் பின் யாரிடத்திலே கேட்பது.ஓகே இப்போ பாயிண்ட்க்கு வருவோம்.பின் துவாரத்தில் உடலுறவு கொள்வதை இஸ்லாம் ஹராம்(தடுத்துள்ளது)ஆக்கியுள்ளது.


இவ்விசயத்தை விஞ்சானப்பூர்வமாக அணுகினால் பின் துவாரத்தில் உடலுறவு கொள்வதை ஏகோபித்த மருத்துவர்கள் வன்மையாக எதிர்கிறார்கள்.காரணம் அப்படி உடலுறவு கொள்வதின் மூலமாக எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லிநோய் வரும் அபாயம் உள்ளது,மேலும் அம்முறையில் உடலுறவுக்கொள்ளும் அவ்விருவருக்குமோ அல்லது அவ்விருவரில் ஒருவருக்கோ தொற்று கிருமிகள் பரவும் அபாயம் உள்ளதாக சமீபத்திய மருத்துவ கண்டுபிடிப்புகள் சொல்கின்றது.இது போல உடலுக்கு தீங்கு விளைவித்து,உயிரையே கொள்ளும் ஒரு கெட்ட  பழக்கத்தை "மனிதர்களே செய்யாதீர்கள் அது உங்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது" என்று சொல்லும் அல்லாஹ் உண்மையிலே மிக நல்ல கடவுள் தான்.அப்பறம் ஒரு விஷயம் நீங்கள் கேட்ட இந்த கேள்விக்கூட இஸ்லாத்தை உண்மைதான் படுத்துகின்றது,எனவே இக்கேள்வி கேட்டமைக்கு நன்றி.    


விருத்த சேதனம் செய்வது ஒரு சிபார்சுதான்; ஆனால் கட்டாயமல்ல. குரானில் இது சொல்லப்படவும் இல்லை. ஒமார் என்ற பக்தி நிறைந்த ஓமர், ‘முகம்து உலகை இஸ்லாமிய மயமாக்கவே வந்தார்;  உலகை விருத்த சேதனம் செய்வதற்காக வரவில்லை.’

இஸ்லாமியம் ஆணின் பாலுறவு இன்பங்களுக்குச் சிறப்பிடம் கொடுக்கின்றன. முகமதுவே மிக அதிகமான பாலுறவு இன்பங்களைச் சுவித்தவர் என்பதும், அதை கிறித்துவம் மிகவும் அருவருப்போடு பார்த்ததும் வரலாற்றில் உண்டு.

பதில்:இஸ்லாம் பாலினம் கொண்ட மதம்,முஹம்மத் நபி காம வெறியர் இல்லை என்பதை தெளிவாக மேலே உள்ள பதில்களில் விளக்கியாகிவிட்டது,வேண்டும் என்றால் அவற்றை மீண்டும் ஒரு முறை படித்துகொள்ளுங்கள்.[முகமதுவே மிக அதிகமான பாலுறவு இன்பங்களைச் சுவித்தவர் என்பதும், அதை கிறித்துவம் மிகவும் அருவருப்போடு பார்த்ததும் வரலாற்றில் உண்டு.]நீங்கள் நல்லவராக உள்ளீர்கள்,இருந்தும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் உங்களை கேவலமாக பேசுகிறார்,கேவலாமாக பார்கிறார் என்றால் அதில் உங்கள் தப்பு ஏதுமில்லையே.இதே பதில் தான் முஹம்மத் நபிக்கும்.   

தருமி:குரானின் சுவனம் பாலின்பம் மிக்கது. அதுவும் ஆண்களின் பாலினச் சுகம் மட்டுமே. இதனைக் குறிக்கும் சில அல்லாவின் வசனங்கள்:

பதில்:ஐயையையே ஒரே மாதிரியான கேள்வி எத்தனதடவ கேட்பிங்க, உங்களுக்கு பதில் எழுதியே கைவலிக்குதுபா.

தருமி:78 : 31 - 33 -- 32-ல் ‘தோட்டங்களும் திராட்சைகளும் (fermented ...? 33 சம வயதுடைய கன்னிப் பெண்களும், 34 நிறைந்த கிண்ணமும் (then ... definitely fermented !) உள்ளன.

55 :  54 - 58 -- 56-ல் இந்த அருட்கொடைகளுக்கு மத்தியில் நானும் விழிகளைக் கொண்ட பெண்களும் இருப்பார்கள். இந்தச் சுவனவாசிகளுக்கு முன்னர் எந்த மனிதனும், ஜின்னும் அவர்களைத் தொட்டுக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள்.(so fresh!)

56 : 35 - 38 -- ‘வலப்பக்கத்தில் இருப்போருக்காக ஹவுரிகளைக் கன்னிகைகளாகப் படைத்து துணைகளாக வைத்திருப்போம்.

52 : 19 - 20 -- ‘அழகிய கண்களைக் கொண்ட மங்கையரை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுப்போம்.’

37 : 45 - 49 -- ’மது ஊற்றுகளிலிருந்து நிரப்பப் பெற்ற கிண்ணங்கள் அவர்களிடையே சுற்றிவரச் செய்யப்படும். ஒளிரக்கூடிய மது - அது பருகுவோருக்குச் சுவையாக இருக்கும்.  .. மேலும், தாழ்த்திய பார்வையுடைய அழகியக் கண்களைக் கொண்ட நங்கையரும் அவர்களிடம் இருப்பர். அப்பெண்கள் முட்டை ஓட்டின் கீழே மறைந்திருக்கும் மெல்லிய தோலைப் போன்று மென்மையாக இருப்பார்கள்.

44 : 51 - 55 -- 54-ல் ‘நாம் அழகிய தோற்றமுள்ள எழில்விழி மங்கையரை அவர்களுக்கு ஜோடிகளாக்கிக் கொடுப்போம்.’

38 : 49 - 54 -- 52-ல் ‘அவர்களின் அருகில் நாணமுடைய சம வயதுடைய மனைவியர் இருப்பர். (சம வயது என்றால் சுவனத்திற்குச் செல்வோரின் சம வயதா ... இல்லை... அந்தப் பெண்கள் எல்லோரும் சம வயதினரா ...?? தெரிஞ்சி வச்சிருக்கணும்ல ...!)

2 : 25 --’அந்தத் தோட்டத்தில் அவர்களுக்கான அழகான மனைவியர்கள் இருப்பார்கள்; அவர்கள் அனைவரும் எப்போதும் உயிரோடு இருப்பார்கள்.

இதனால்தான் முகமது சுவனத்தில் திருமணம் ஆகாதவர்களே இருக்க மாட்டார்கள் என்கிறார். (அறிவியலுக்கும், நடப்புக்கும் இது சரியான, பொருத்தமான வசனமாகத் தெரியவில்லையே!  ஏனெனில்,  சிறு வயதிலேயே இறந்த இளம் ஆண் பிள்ளைகள் என்னவாவார்கள்? அவர்களுக்கும் அல்லா கல்யாணம் செய்து வைத்து விடுவாரா? 

சுவனத்தில் பெண்களைப் பற்றிய கவலையே அல்லாவிற்கும், முகமதுவிற்கும் கிடையாது போலும்!)

சுவனத்தைப் பற்றியவை எல்லாமே அறிவற்ற, பாலியல தொடர்பான கற்பனைகளாகவே உள்ளன. அங்கும் பெண்கள் ஆண்களுக்குத் தொண்டு செய்யவே படைக்கப்படுகின்றனர். அந்தப் பெண்களுக்கென்று கறுப்புக் கண் கொண்ட - gigolo (A man who has sex with and is supported by a woman)-க்கள் - ஆண்கள் இல்லை.

இந்த சுவனக்காட்சிகளை வர்ணிப்பதில் பல இஸ்லாமியர் பெரும் பெருமையடைவதுண்டு. (307)

Suyuti என்பவர் எழுதியது : -- ஒவ்வொரு முறையும் அந்த ஹவுரிகளிடம் கூடிய பிறகும் அவர்கள் மீண்டும் கன்னிகைகளாக ஆகி விடுகிறார்கள்; ஆண்களின் பாலியல் குறி எப்போதும் தயார் நிலையிலேயே இருக்கும். அவர்களின் விறைப்பு எப்போதும் குறைவதில்லை.   அங்கு நடக்கும் புணர்ச்சி போல் இந்த உலகில் நடந்தால் ஆண்கள் மயக்கமாகி விடுவார்கள். ஒவ்வொருவரும் 70 ஹவுரிக்களை மணமுடிப்பார்கள்; அதோடு அவர்களின் மனைவிமார்களும் சேர்ந்து இருப்பார்கள். இவர்களின் யோனிகள் எப்போதும் தயார் நிலையிலேயே எப்போதும் இருக்கும்.

(இந்த வசனங்களைப் படித்த பின்னும் இவையெல்லாம் எல்லாம் வல்ல ஒரு கடவுளால் கொடுக்கப்பட்ட வசனங்கள் என்ற எண்ணம் எப்படி ஒரு மனதில் தோன்ற முடியும்? இவைகளை மட்டும் வாசித்தாலே இந்த மதத்தையும், குரானின் மேலுள்ள மரியாதையையும் எளிதாகப் புறக்கணிக்கலாம்.

இந்த வசனங்களை மட்டும் வாசித்தாலே, இவையெல்லாம் ஒரு மனிதனின் கீழான கற்பனைகளே என்று மட்டும் தான் மனதில் தோன்ற வேண்டும். இந்த வசனங்களை மட்டும் வாசித்து உணர்பவன் இந்த மதத்தின் “தன்மையை & உண்மையை” மிக எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

The "Donkey- Carrot philosophy is the only possible explanation for this low-level, absurd and senseless but sensual (sic!) motivation.

இதுபோன்ற சில கேள்விகளிலிருந்து பதிவர்கள் விவாதங்களில் வழக்கமாக ஒதுங்கிப் போவதும்  ஒரு ‘எஸ்கேப் - பாலிசி’ தான்!)

பதில்:முகவரியற்றவர்களின் மற்றும் இஸ்லாமிய மதகுரு என்று நீங்கள் சொல்பவர்களின் விளக்கங்கள்,வியாக்கியானங்களை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு குர்ஆன் எழில்விழி மங்கையரை பற்றி என்ன சொல்கின்றது என பார்போம்.

இஸ்லாம் பாலின இன்பம் கொண்ட மதம் அதில் ஆண்களுக்கே முன்னுரிமை என்கின்ற வாதத்தில் நீங்கள் எடுத்துவைக்கும் உச்சபட்ச ஆதாரம் இதுவென்றே நாம் கருதுகின்றோம்.

இந்த குறையை நீங்கள் சொல்லக் காரணமே உங்களுக்கு அரபி மொழியின் இலக்கணம் தெரியாததே.இப்போது உங்களுடைய கேள்விக்கான பதிலுக்கு போவோம் வாருங்கள்.

அழகிய கன்னியர்,எழில்விழி மங்கையர் என்றெல்லாம் நீங்கள் குறிப்பிட்ட தமிழ் வார்த்தைக்கு "ஹூருல்"என்பதே அரபி வார்த்தை.இந்த சொல் குர்ஆனில் 4 இடத்தில் பயன்படுத்தியுள்ளது.பார்க்க:44 :55 ,52 :25,55 :50,72 ,56 :22 

"அழகிய கன்னியர்"என்றே ஏறக்குறைய எல்ல குர்ஆன் விரிவுரையாளர்களும் இச்சொல்லை மொழிபெயர்த்துள்ளனர்.அழகிய பெண் என்று நாம் இதற்கு அர்த்தம் வைத்தால் பெண்களுக்கு சொர்கத்தில் என்ன கிடைக்கும் என்ற கேள்வி இயல்பாகவே வரும்.

உண்மை என்னவென்றால்,அச்சொல்லுக்கு"அழகிய கன்னியர்"என்று மட்டும் கிடையாது.ஹூருல் என்னும் சொல் பன்மைச் சொல்லாகும்.அதனுடைய ஒருமை "அஹ்வர்" மற்றும் "ஹவ்ர்" ஆகும்.அஹ்வர் என்பது ஆண்பால், ஹவ்ர் என்பது பெண்பால்.இவ்விரண்டிற்கும் பன்மையே  ஹூருல் என்ற ஒரு சொல்.

இச்சொல்லின் மொழிப்பொருள் "அழகிய பெரு விழிகள்" என்பதாகும். இச்சொல்லோடு பல்வேறு இடங்களில் "அஜ்வாஜ்" என்ற சொல்லும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.பார்க்க:2:25,4:57 

"ஜவ்ஜ்"என்ற வார்த்தையின் பன்மை தான் அஜ்வாஜ்."ஜவ்ஜ்" என்றால்,இணை என்று பொருள்.வாழ்கை துணையாக வருபவள் ஆதலால் மனைவியை ஜவ்ஜ் என்கின்றோம்,ஆணுக்கு பெண் ஜவ்ஜ் என்றால்,பெண்ணக்கு ஆண் ஜவ்ஜ்.
குர்ஆணை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் இச்சொல்லை மிகச்சரியாக 
மொழிபெயர்த்துள்ளார்கள்.உதாரணமாக:முஹம்மத் அசத் இச்சொல்லை "spouse"என்றும்,அப்துல்லாஹ் யூஸுப் அலி "companion"என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.இவ்விரண்டு சொற்களும் எந்த பால்வேறுபாட்டையும் காண்பிப்பதில்லை.இச்சொல் ஆண்பாலுக்கும் பயன்படுத்தப்படும்,பெண்பாலுக்கும் பயன்படுத்தப்படும்.அதுப்படி ஆண்களுக்கு அழகிய பெருவிழி கன்னியர் கிடைப்பார்கள்,பெண்களுக்கு அழகிய பெருவிழி காளையர் கிடைப்பார்கள். 

குர்ஆனில் பெருவிழி கன்னியர் என்று பின் ஏன் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்று கேட்கின்றீர்களா.குர்ஆன் மொழிபெயர்ப்பாளர்கள் அது அவர்கள் புரிந்தளவே மொழிபெயர்ப்பு செய்துள்ளார்கள்.நீங்கள் இவ்வளவு குறைகளை காண்பித்ததும் மொழிபெயர்ப்பை தான் குர்ஆனின் மூலமொழியை அல்ல,குர்ஆனின் மூல பிரதி 1400 ஆண்டுகளுக்கும் மேல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.முஸ்லிம்களை பொறுத்தவரை அரபி மொழியில் உள்ளது தான் குர்ஆன் அதன் பக்கத்தில் உள்ள தமிழ்,ஆங்கிலம்,ஹிந்தி,இன்னும் பிற மொழிகளில் உள்ளது அனைத்தும் மொழிபெயர்ப்பு தான்.பெரு விழி கன்னியர் சம்மந்தமாக நாம் சொன்னது அனைத்தும் நேரடி விளக்கங்கள் தான்.வேண்டும் என்றால் அரபு மொழியின் இலக்கணத்தை சரளமாக அறிந்தவரிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளுங்கள்.  

இஸ்லாத்துக்கு எதிராக இப்ப இவ்வளவு பாயின்ட் எடுத்துவைத்தும் மழையில் நினைந்த வெடிப் போல நமத்துப் போச்சா உங்கள் வாதம்.இதற்கெல்லாம் காரணம் என்ன?குர்ஆனில் குறை இருப்பதாக சொல்பவரில் 98% செய்யும் தவறு குர்ஆணை அதன் மூல மொழியை அறியாமல் விமர்சிப்பது தான்.அதாவது நீங்கள் ஷேக்ஸ்பியருடைய புத்தகங்களை விமர்சிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு கட்டாயம் ஆங்கிலம் தெரிந்து இருக்க வேண்டும்,ஏனென்றால் அவருடைய புத்தகங்களின் மூல மொழி ஆங்கிலம்.நீங்கள் ஆங்கிலத்தை அறிந்தால் மட்டும் போதாது அதில் நீங்கள் சரளமாக இருக்க வேண்டும்,அதன் இலக்கணத்தை நன்கு அறிந்து வைத்து இருக்க வேண்டும் ஏனென்றால் மூல மொழியில் உள்ளதை விமர்சனம் செய்தால் மட்டுமே ஷேக்ஸ்பியருடைய புத்தகத்தை விமர்சனம் செய்ததுப் போல ஆகும்,இல்லையேல் உங்கள் விமர்சனம் மொழிபெயர்த்தவருக்கு தான் எதிரானதாக இருக்கும்.இதே விதி குர்ஆணை விமர்சிக்க மட்டும் ஏன் கடைபிடிக்கப்படுவது இல்லை.இங்கே நாம் அரபு மொழியை அறிந்திருக்க வேண்டும் என்று சொல்வது ஏதோ அரபு நாட்டிற்க்கு சென்று அரபு பேச கற்று வருவார்களே அந்த அளவு அல்ல,அதைவிட இலக்கண சரளமாக கற்கவேண்டும் என்பதே இங்கே நாம் சுட்டி காண்பிப்பது.குர்ஆணை விமர்சனம் செய்வோர் இனியாவது திருந்துவார்கள?இந்த அடிப்படை கூட தெரியாமல் குர்ஆணை விமர்சனம் பண்ணவந்துட்டீங்க?வாத்தியார் பையன் மக்கு என்பதை பொய்பித்து,இங்கு வாத்தியாரே மக்காகி போனதேனோ...  

அரபு இலக்கணத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து சொல்கின்றோம் என்றால் விஷயம் இருகின்றது.குர்ஆன் இறக்கப்படுவதற்கு முன்பிருந்தே அரபு மொழி இருந்து வருகின்றது,ஆனால் குர்ஆன் இறக்கப்பட்டபின் அரபு மொழியினுடைய இலக்கணமே மாற்றி அமைக்கப்பட்டது என்றால் மிகையாகாது,அரபு இலக்கனத்துடைய தரத்தைபாருங்கள்.குர்ஆனில் அல்லாஹ்வால் கையாளப்பட்ட அரபு இலக்கணம் உயர்ந்த தரமானது,இன்னும் சொல்வதென்றால் அரபு மொழியின் இலக்கணத்தின் உச்சபட்சமே குர்ஆன் தான்.இது ஏதோ மிகைபடுத்தி சொல்வதற்காக சொல்லவில்லை அரபு மொழியின் இலக்கணத்தை சரளமாக அறிந்த முஸ்லிம்,முஸ்லிம் அல்லாதோர் ஆகியோரில் பெரும்பாலானோர் ஏகமனதாக ஒத்துக் கொண்டது.குர்ஆனில் உயர்ந்த தரமான இலக்கணம் பயன்படுத்தப்பட்டதிற்கான காரணம்,எழுத படிக்கத்தெரிந்தவர் அன்றைய அரபு தேசத்தில் மிகசிலரே,அவர்களில் கவிதை புனைவோர் இன்னும் சிலரே.கவிதை புனைவோர் அரபு இலக்கணத்தை பயண்படுத்தி எவ்வளவு தரமான இலக்கணத்தில் நான் கவிதை இயற்றியுள்ளேன் என பாருங்கள் என்று பெருமையடித்துகொண்டனர், முஹம்மத் நபி(ஸல்)அவர்கள் எழுத படிக்கதெரியாதவர்கள் அத்தகையவர்களிடம் இருந்து இவ்வழுவு உயர்ந்த தங்களால் கூட தரமுடியாத தரமான இலக்கணம் குர்ஆனில் வருகிறது என்றால் அது இவர் எழுதியது அல்ல,அவருக்கு பின் ஒரு மிகப் பெரிய சக்தியுள்ளது என அதிசயித்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள் ஏராளம்.இது ஏதோ அரபு மொழியை தூக்கி பிடிபதர்க்காக சொல்லவில்லை.முஸ்லிம்களை பொறுத்தவரை எல்லா மொழிகளும் சமமே,ஏனென்றால்"அரபு மொழி அறிந்தவன்,அரபு மொழியை அறியாதவனை விட சிறந்தவன் இல்லை"என்று எங்கள் இறைத்தூதர் கூறி சென்றக் காரணத்தால் தான்.        

(அறிவியலுக்கும், நடப்புக்கும் இது சரியான, பொருத்தமான வசனமாகத் தெரியவில்லையே!  ஏனெனில்,  சிறு வயதிலேயே இறந்த இளம் ஆண் பிள்ளைகள் என்னவாவார்கள்? அவர்களுக்கும் அல்லா கல்யாணம் செய்து வைத்து விடுவாரா? என்று கேட்டுள்ளீர்கள் குர்ஆன் சொல்லும் அறிவியலைப் பாருங்கள்.அதில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளைப் பாருங்கள்.ஒருவன் குர்ஆன் சொல்வது உண்மையென்று ஏற்றாலே அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம்.அத்தகைய அல்லாஹ் பேராற்றலுடையவன் அவன் அவன் நாடினால் சிறுவயதில் உள்ளவர்களை இளைஞராக மாற்றி அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கலாம் அது அவனுடைய அறிவில் உள்ளது.மேலும் அது அவனுக்கு சாதாரணம்.இறந்தவரை உயிர்பிக்கும் போது இது முடியாதா என்ன?

இதை உண்மைப்படுத்தும் விதமாக ஒரு ஹதீஸில்"சுவர்க்கம் செல்லும் மனிதர்கள் இளைஞராகவே(இளைஞ்சியாகவே)தான் சொர்க்கம் செல்வார்கள்" என்று உள்ளது.

நீங்கள் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லியாகிவிட்டது. பார்ப்போம் எஸ்கேப் பாலிசியை பின்பற்றுகிறீர்கள,அல்லது ஆக்கபூர்வமாக பதில் சொல்கின்றீர்களா என்று.

நன்றி:dr.zakir naik கின் women's rights in islam என்ற புத்தகத்திலிருந்தும்,pj அவர்களின் நபிகள் நாயகம் பல திருமணங்கள் ஏன் செய்தார்கள்? என்ற புத்தகத்திலிருந்தும் நிறைய பாயிண்ட்கள் எடுக்கப்பட்டுள்ளது.        

முக்கிய குறிப்பு:ஆரம்பத்தில் உங்கள் மொத்த கட்டுரைகளுக்கும் ஒவ்வொன்றாக பதில் தர நாம் முடிவு செய்தோம்,இந்த கட்டுரைக்கு பதில் எழுதவரும் பொழுதுதான் உங்கள் கட்டுரையில் உள்ள ஆய்வின்மை, அடிப்படை தெரியாமல் விமர்சிப்பது,ஹதீஸ் என்றால் என்ன,குர்ஆன் என்றால் என்ன இவைகூட உங்களுக்கு தெரியவில்லை.இன்னும் சொல்லப்போனால் ஒரு இஸ்லாமிய மார்க்க மேதை சொல்கின்றார், ஒரு மதகுரு சொல்கின்றார் என்று இப்படியே உங்கள் விமர்சனம் செல்கின்றது இதற்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் ஏதும் இல்லை என்பது கூட உங்களுக்கு தெரியவில்லை.குர்ஆணை அரபு மொழியில் அணுகாமல் மொழிபெயர்ப்பில் அணுகுவது....இப்படி எண்ணற்ற தவறுகள் உங்கள் எல்லா கட்டுரைகளிலும் நிறைந்துள்ளதால்,அதற்கு பதில் எழுதுவது நேரத்ததை வீணடிப்பதற்கு சமம் என்பதால் மற்ற கட்டுரைகளுக்கு மறுப்பு தருவது கைவிடப்பட்டது.......     

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

10 comments:

 1. தங்கள் வருகைக்கு நன்றி வான்ஜூர் பாய்...இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.....தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..

  ReplyDelete
 2. உங்கள் நேரத்தையும் பார்க்காது 'தருமி' இன் கேள்விகளுக்கு பதில் சொல்லியுள்ளீர்கள் ஆனால் அவரின் ப்ளாக் Heading-ற்கு பக்கத்தில் பார்த்தீர்களா " கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!" என்று எழுதி இருப்பதை !! .

  உங்கள் மார்க்க அழைப்புபணி சிறக்க என் மான்மார்த்த வாழ்த்துக்கள்.

  Regards,
  Ungalblog.blogspot.com
  niduronline.blogspot.com

  ReplyDelete
 3. தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி Abu Nadeem...இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.....தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..

  அந்த வரிகளையும்(" கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே!")பார்த்த பின் தான் மறுப்பு எழுதினேன்.பொதுவாக இது போன்றவர்கள் தன்னால் முடிந்தவரை அறிவுக்கு பொருந்தாத அல்லது அறிவில்லாமல் யாரோ எழுதிய புத்தகத்திலிருந்தே மேற்கோள் காட்டுகின்றனர்.இதற்கு பதில் என்ற பெயரில் கருத்துரையில் வந்து தலைப்பை வேறுபக்கம் கொண்டு சென்று விடுவார்கள்,பின் நாம் முதலில் எதற்கு பதில் சொன்னோமோ அதே கேள்வியையே கேட்பார்கள் இது என்னடா தலைவலின்னு நாம ஒதுகினதும் அவர்கள் ப்ளோகில் "பதில் சொல்ல திணறிய முஸ்லிம்கள்"என்று கொட்டை எழுத்தில் தலைப்பை போட்டுகொள்வார்கள்..இது தான் அவர்கள் வாடிக்கை..இருந்தாலும் இது போன்ற கட்டுரைகள் அவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிமக்களை BRAIN WASH பன்னுவதிளிரிந்து காக்கும் என்பது எண்ணம்...அவர்கள் இதற்கு மறுப்பு கொடுத்தாலும் இன்ஷா அல்லாஹ் அதற்கும் மறுப்பு எழுதுவேன்......ஆனால் இது மட்டும் போதாது முஸ்லிம்களாகிய நமக்குள் புரிதலும்,ஒற்றுமையும் வேண்டும்.ஒருவரின் ஆக்கங்களை இன்னொருவர் ஊக்கப்படுத்த வேண்டும்,அப்பொழுது தான் இஸ்லாத்தை பற்றி பொய் பிரச்சாரம் செய்யும் கள்ளப் பேர்வளிகளுக்கு சரியான பதிலடியை இஸ்லாமிய தளங்கள் தரும்...

  ReplyDelete
 4. தருமி என்பதன் அர்த்தம் என்ன பெயருக்கு அர்தம் தந்தால் கேள்விக்கு பதில் தெரிந்து விடும். நன்றி

  ReplyDelete
 5. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரரே...

  மிக நீண்ட விளக்கம். தெளிவாக கொடுத்துள்ளீர்கள். அறிவுடையோருக்கு நிச்சயமாக இது போதுமானது. இனியாவது தருமி ஐயா சிந்திக்க முயற்சிக்கின்றாரா என்று பார்ப்போம்.

  வாசிப்பதற்கே இவ்வளவு நேரம் எடுக்கும் போது... உங்கள் உழைப்பு தெரிகிறது. அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் நன்மைகளை வழங்குவானாக...

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அழைக்கும்
  மிக நீண்டதொரு விளக்கம். இஸ்லாத்தின் பால்உள்ள ஈர்ப்பால் நான் நேரம் எடுத்து படித்தேன். கேள்வி மட்டுமே கேட்க தெரிந்த (பிழை இருந்தால் அதற்கு தக்க தொகை குறைத்து பரிசு பெற எண்ணமுள்ள தருமி) இதனை முழுவதுமாக படிப்பாரா என்பது சந்தேகமே. இருப்பினும் சொல்வது மட்டும் தான் நமது கடமை. தாங்கள் அதனை நிறைவேற்றி விட்டீர்கள். இறைவன் அதற்கு நற் கூ்லி வழங்கட்டும். ... AYFA

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் சகோ.

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 7. தருமி போன்ற ஆட்களிடம் விவாதம் செய்து கொண்டிருப்பது வீண் வேலை. நம்மை போன்றவகளையெல்லாம் அரைகுறை அறிவை வைத்து சுலபத்தில் மடக்கி விடுவார். இது போன்ற ஆட்களையெல்லம் டாக்டர் ஜாகிர் நாயக் போன்ற மேதைகளிடம் விட வேண்டும். தருமியை தலை தெறிக்க ஓட வைத்து விடுவார்.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் சகோ.

   நம்மை போன்றோர்களின் கேள்விகளுக்கே இதுவரை பதில் தர முடியாதவர் திருவாளர்.தருமி...இதுல இவருக்கு ஜாகிர் நாயக்லாம் ரொம்ப ஓவர்.....

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete