இஸ்லாம்,தீவிரவாதம்,மீடியா( பகுதி-1)

Tuesday, November 1, 2011
இறைவனின் திருப் பெயரால் 





இஸ்லாம் என்ற இவ்வார்த்தைக்கு கீழ்படிதல்,கட்டுபடுதல் போன்ற அர்த்தங்கள் இருந்தாலும் இன்று இஸ்லாம் என்ற வார்த்தைக்கு முஸ்லிம் அல்லாதவர்களின் மூலையில் உதிக்கும் அர்த்தம் தீவிரவாதம்,இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள்.
இஸ்லாத்தில் தீவிரவாதம் இல்லை என்று இதற்கு முன் பல அறிஞர் பெருமக்கள் கட்டுரையின் மூலமும்,மேடை மற்றும் ஜும்ஆ பிரசங்கத்தின் போதும் விளக்கங்களை கொடுத்தாலும் நாளுக்கு நாள்  பெருகிவரும் மீடியாவின் தாகத்தால் இஸ்லாமும் இஸ்லாமியர்களும் ஆபத்துக்கு உள்ளாக்க படுகின்ற நிலை ஏற்பட்டு விட்டது.அறிஞர்களை மட்டுமே இஸ்லாம் சமந்தமான மறுப்பிற்கு முற்றிலும் சார்ந்து இருக்க முடியாத நிலை இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது.அவர் அவர்களுக்கு தோன்றும் ஆதாரமான விசயங்களை வைத்து எல்லா வகையிலும் மறுப்பு கொடுத்தால்தான் எதிர்வரும் ஆபத்துகளை தடுத்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியும்.இதனைப் படிக்கும் மக்களிடையே சிறிதளவேனும் விழிப்புணர்வையும்,தாக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் அது தான் என்னுடைய ஆவல்,குறிப்பாக முஸ்லிம் அல்லாத நண்பர்களில் ஒருவராவது  இக்கட்டுரையின் மூலமாக இஸ்லாமியர்களைப் பற்றிய தவறான புரிதலை கைவிட்டாலே அதுவே இக்கட்டுரைக்கு கிடைத்த வெற்றி.

இஸ்லாத்தை குறிவைத்து தாக்கும் ஆயுதங்களில் மிக முக்கியமானது மீடியா.இன்று இருக்கக்  கூடிய மீடியாக்களில் 99 % மீடியாக்கள் இஸ்லாத்தையும் அது கொண்டு இருக்கக் கூடிய ஆழமான நம்பிக்கையையும் கொச்சைப்படுத்துவதே அதற்குரிய தினசரி வேலையாக உள்ளது.தொலைக்காட்சி வழியாகவும்,தினசரி நாழிதழ்கள் மூலமாகவும் நாம் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்று பச்சைக் குத்த முற்பட்டு அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்,மேலும் அனைத்து முஸ்லிம்களை தீவிரவாதிகள் என்றுசொல்லாமல் சொல்வதின் மூலம் பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலம் முஸ்லிம்களை தனிமை அடையவைக்க பார்கிறார்கள்.1950 களில் மேலைநாடுகளில் பிரபலமான சொல் " Hate Policy " தனக்கு பிடிக்காதவர்களை மற்றவர்களுக்கும் பிடிக்கவிடாமல் வெறுக்கவைக்கும் திட்டம்,அதாவது ஒரு நாயை நடுத்தெருவிலே கொன்றால் அதனைப் பார்பவர்களும்,கேள்விப்படுபவர்களும் நாயை கொன்றவனை கேள்விமேல் கேள்விக் கேட்டு தொலைதெடுப்பார்கள் சிலச்சமயம் கோபமும் படுவார்கள்,ஆனால் அதே நாயை வெறிபிடித்த நாய் என்றும் நேற்று பக்கத்து  தெருவிலே 2 பேரை கடித்து விட்டது இன்று நம் தெருவிலே 3 பேரை கடித்து விட்டது அதிலே 2  பேர் இறந்துவிட்டார்கள்,3 பேர் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார்கள்,இதை இப்படியே விட்டால் நாளை யாரை கடிக்குமோ என்று கப்சாவை கிளபிவிட்டு அந்த நாயை கொன்றால் யாரும் ஏதும் கேட்கமாட்டார்கள் அதை தடுக்கவும் மாட்டார்கள் .இதே நிலைமை தான் இன்று இஸ்லாமியர்களுக்கு.ஐவேளை தொழும் முஸ்லிம்களையும்,மார்க்கச் சட்டங்களை சரிவரச் செய்யும் முஸ்லிம்களையும்,தாடிவைத்து இருபவர்களையும்,ஜுப்பா அணிந்து இருப்பவர்களையும் தீவிரவாதிகளாக இருக்ககூடும் என்று இந்த மீடியாக்கள் நம்மை நம்பவைகின்றது,எந்த அளவுக்கு எனில் இஸ்லாமிய அடையாளங்களை சுமந்து இருப்பவர்களை பார்த்து இஸ்லாமியர்களே கேலி பேசுகிறார்கள் அவர்களை தீவிரவாதிகள் என்று.பார்த்தீர்களா அவர்களுடைய சூழ்ச்சியை !! மேலும் இது போன்ற இஸ்லாமிய அடையாளங்களை சுமப்பவர்களுக்கு இவ்வுலகத்திலே பெயர் என்ன தெரியுமா? Conservatives, fundamentalists அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள சட்டத்தை இன்றும் நாம் பின்பற்றுவதால் நம் இஸ்லாமியர்கள் அனைவரும் பழமைவாதிகள்,அடிப்படைவாதிகள்,இப்படி நம்மை பழமைவாதிகள்,அடிப்படைவாதிகள் என்றுக் கூறி இஸ்லாத்தைப் பற்றிய தவறான புரிதலை கொண்டு வருகின்றனர்.இக்காலத்திருக்கு பொருந்தாத பழையச் சட்டங்களை வைத்து இருக்க கூடிய இவர்கள் காட்டுமிராண்டிகள்,தங்களுடைய மத நம்பிகைக்காகவும்,இறைவனுடைய பெயரை பயன்படுத்தியும் 1000 ,1000 பொது மக்களை வெடிகுண்டு வைத்து கொல்லும் வெறிபிடித்தவர்கள் என்று நம்மைப் பற்றிய தவறான அச்சத்தை உலகிற்கு விதைகிரார்கள்  இந்த இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் வெறிபிடித்தவர்கள்.


இவர்கள் கொச்சைப்படுத்தி அழிக்க நினைக்கும் இஸ்லாத்தைப் பின்பற்றக் கூடிய இஸ்லாமியர்கள் எல்லோரையும் போல வெகு சாதாரணமாக தான் இப்பூமியில் வாழ்ந்து கொண்டிருகிறார்கள்.வெகுஜன மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு இருப்பது போல மனதில் குரோதத்தையும்,தீவிரவாதத்தையும் சுமந்து இருப்பவர்கள் இல்லை.முஸ்லிம்களே ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள்,முஸ்லிம் அல்லாதோர் ஒரு அறியச் செயலை செய்தால் சாதனை,முஸ்லிம்கள் செய்தால் அச்செயல் முடிந்தவரை மூடிமறைக்கபடும்,நீங்கள் செய்யும் ஒவ்வொரு  செயலுக்கும் மதச் சாயம் பூசப்படும் அதனால் உங்கள் பேச்சிலும்,செயலிலும் கவனம் தேவை.மதப்பற்று உள்ள இஸ்லாத்திற்கு எதிரான மீடியாவினர் முஸ்லிம்களை சீண்டிப் பார்க்கவே நினைகின்றனர் அதுவும் தினமலர் போன்ற பத்திரிகைக்கு இதல்லாம் அல்வா சாபிடுரா மாதிரி.நம் உயிரினும் மேலான உத்தம நபி(ஸல்) அவர்களை கார்டூன் படம் வரைந்து நம்மை எல்லாம் சீண்டிப் பார்த்தது உங்களுக்கு நினைவிருக்கும்.இதோ தினமலரின் இன்னுமொரு மதத்துவேசப்  போக்கு.


நாம் ஏற்கனவே குறிபிட்டதுப் போல முஸ்லிம்கள் இப்பூமியில் எல்லோரையும் போல சாதாரணமாக தான் வாழ்கிறார்கள் இன்னும் சொல்லப் போனால்மற்றவர்களை விட  நடுநிலைமையாகவும்,நேர்மையாகவும் தான் இருக்கிறார்கள்,மிகச் சில முஸ்லிம்கள் தான் சொல்லதகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் இது எல்லா மதத்திலும் உள்ள இயல்பு அதற்கும் மேலாக சொல்லப் போனால் இது மனித இயல்பு.நடுநிலையாக நடந்து கொள்ளும் இஸ்லாமியர்களைப் பற்றிய செய்திகளை அங்கொன்றும்,இங்கொன்றுமாக சில நாளேடுகளில் பார்கின்றோம்(அதுவும் மிக சிலதே) அப்படி கிடைத்ததுதான்  பாகிஸ்தான் பற்றிய செய்தி.


மேற்குறிப்பிட்ட செய்தி தினத்தந்தி 1 .11 .2011  பக்கம் 14 ல்,பாகிஸ்தான் பற்றிய செய்தி வெளிவந்துள்ளது  அதில் பாகிஸ்தானின் செயல் பாராட்டப்படக்க கூடியது.பிறர் மதவிசயங்களில் தலையிடக்கூடாது,அது கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு எதிராக அவர்களை ஆளக் கூடிய மாநிலமோ,தேசமோ தாங்கள் கொண்டிருக்ககூடிய நம்பிக்கையையும்,மதத்தையும் மற்றவர்களின் மேல் திணிக்கக்கூடாது என்பதற்கு உதரணமாக இச்செயல் உள்ளது. எல்லா மதத்தவர்களுக்கும் பொதுவான நாடாண இந்தியாவில் பாபரி மஸ்ஜிதை காவி வெறிப்பிடித்தக் கூட்டம் இடித்து முஸ்லிம்களின் மனதை புண்படுத்தி,இந்தியா உலக நாடுகளின் முன் தலைக்குனிந்தது,ஆனால் முஸ்லிம்களுக்காகவே உண்டாக்கப்பட்ட நாட்டில் ஹிந்துக்களுக்கு இப்படி ஒரு தீர்ப்பு.தனது அண்டை நாடாண இந்தியாவில் தன்னுடைய மார்கத்தையும்,மார்க்க நம்பிக்கையையும் கேலிக்குத்தான நிலையில்(பாபரி மஸ்ஜித் இடிப்பு),தனது நாட்டில் ஹிந்துக்களை அவமானப்படுத்தாமல் நாடு நிலைமையாக நடந்துக் கொண்டது பாகிஸ்தான் அரசு.

"ஒரு சாராரின் மேல் உள்ள கோபம் உங்களை நீதியிலிருந்து பிறழச் செய்து விட வேண்டாம்" என்கின்றது குர்ஆன்.இது தான் இஸ்லாம்.

பொழுது போக்குதுறையின்  மூலயமாக இஸ்லாத்திற்கு எதிரான செயலை இறைவன் நாடினால் அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.


இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment