இஸ்லாம்,தீவிரவாதம்,மீடியா( பகுதி -2)

Thursday, November 10, 2011
நாம் சென்றப் பகுதியில் இஸ்லாத்திற்கு எதிரான செயல்பாடுகள் மீடியாவில் அதும் குறிப்பாக செய்தித்துறையில் எவ்வாறு உள்ளது  எனப் பார்த்தோம்,இனி இந்த பகுதியில் பொழுதுபோக்குதுறை எவ்வாறு இஸ்லாத்திற்கு எதிராக செயல் படுகின்றது எனப் பார்ப்போம்(இறைவன் நாடினால்).

பொழுதுப்போக்கு என்பது ஒருவனுடையா போகாதப் பொழுதை பிடித்துத் தள்ளி வெட்டியாகத் தள்ளுவதுத் தான் பொழுதுபோக்கு எனப்படுவது.அந்த பொழுதுப்போக்கின் உச்சக்கட்டம் தான் சினிமா.இஸ்லாத்தை குறிவைத்து தாக்கும் இரண்டாம் ஆயுதம் சினிமா.பழைய தமிழ் சினிமாக்களில் எல்லாம் முஸ்லிம்களுடைய பெயரை கூட பயன்படுத்தமாட்டார்கள்,அப்படியே பயன்படுத்தினாலும் முடிந்த அளவு நல்லவர்களாகவே சித்தரிப்பார்கள்,ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக முஸ்லிம்களை முடிந்த அளவுக்கு தவறானவர்களாகவே தமிழ் சினிமா சித்தரிக்கின்றது,அதிலும் கடந்த 5 வருடங்களாக அந்த வேலையை சிறப்பாக செய்து வருகின்றது.விஜயகாந்தின் படத்தில்  முஸ்லிம்களை  தீவிரவாதிப் போல்  சித்தரித்து விட்டு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் அதே முஸ்லிம்களிடம் ஓட்டுப் பிச்சை கேட்பது உறைந்த உண்மை,விஜயகாந்தின் ரூட்டை அப்படியே பின்பற்றி வருகிறார் நடிகர் விஜய்.அரசியலுக்கு வருவது அவர் அவர் விருப்பம் அனால் இன்னொருவரை காயப்படுத்தி குளிர் காய நினைகின்றார் நடிகர் விஜய்.சமீபத்தில் வெளியான வேலாயுதம் படத்தில் தான் அந்த வேலையை செய்து இருக்கின்றார்,அந்தப் படத்தில் தீவிரவாதிகளிடம் இருந்து மொத்த தமிழ்  நாட்டையும் காப்பாற்றி(படத்துல மட்டும் தான் ) தனது அரசியல் எண்ணத்தை வெளிப்படுத்தி  இருகின்றார்.படம் நெடுக முஸ்லிம் தீவிரவாதி,ஜிஹாத் இன்னும் இதுப் போன்ற வார்த்தைகளை கூறி ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் வெறுப்பையும் சம்பாத்தித்து உள்ளார் விஜய்.ஏண்டா நாயே ஜிஹாதினுடைய உண்மையான  அர்த்தம் எங்கள் வேதத்தில் என்ன  உள்ளது தெரியுமாடா நாயே,முஸ்லிம் என்றாலே  தீவிரவாதியா அப்பறம் ஏன்டா அரசியலுக்கு வந்தா மட்டும் இஸ்லாமிய ஓட்டுக்கு பிச்சை எடுக்கனும்,இப்படி நம் உள்  மனது அந்தப் படத்தை பார்க்கும்  பொழுது கேட்கின்றது.அந்தப் படத்திலே வருகின்ற காட்சியிலே எதிரிகள் வெடிகுண்டு எங்கே வைத்து இருகின்றார்கள் என்று தெரியாது அதை நாயகன் விஜய் கேட்கும் பொழுது,பள்ளி கூடமா,பார்க்கா,பீச்சா,கோயிலா என்று கேட்கின்றார்.தீவிரவாதிகள் முஸ்லிம்கள்,அந்த தீவிரவாதிகள் குண்டுவைத்தால் ஹிந்துக்கள் வழிபடும் கோவிலில்தான் குண்டுவைப்பார்கள் என்ற கருத்தை விஜய் பதியவைக்கின்றார்.ஆனந்த விகடன் போன்ற புத்தகங்களில் கூட இன்னும் எத்தனை நாளைக்கு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக காட்டுவார்கள் என்று வெளிப்படையாகவே எழுதியுள்ளார்கள்.படம் நெடுக ஜிஹாத் என்றால் அப்பாவி மக்களை எந்த ஈவு,இரக்கமின்றி எந்த காரணமும் இல்லாமல் கொல்லுவதுதான் என்ற அர்த்தத்தையும் பதிய வைக்க முயன்று இருகிறார்கள்.படம் எடுக்கின்றேன் என்று லட்சக் கணக்கான முஸ்லிம்களை கொதிப்படையா வைத்து இருகின்றார்கள்,இறுதிக் காட்சியில் மட்டும் பாவம் செயுரவன்லாம்  அல்லாஹ்வை கூப்பிடக் கூடாது என்று சொல்கின்றார்,படம் முழுக்க இஸ்லாமியர்களை தீவிரவாதி என்று காட்டிவிட்டு இந்த ஒரு வசனத்தில் இஸ்லாமியர்களை சமாளித்துவிடலாம் என்று முட்டாள் தனமாக யோசித்துள்ளார்,குறைந்த பட்சம் இதுபோன்ற படங்களுக்கு முஸ்லிம்கள் செல்வதையும்,அதற்க்கு ஆதரவு தருவதையும்,இதுப் போன்ற நடிகர்களின் ரசிகர்மன்றத்தில் உறுப்பினராக இருப்பதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும் ,இன்னும் இதுப்போன்ற படங்கள் ஏராளம்,ஏராளம் அதை எல்லாம் எழுதினால் 1000  பகுதிக் கூட எழுதினாலும் முடியாமல் தொடரும் தொடர்க்கதை.சினிமாவின் முலாயமாக எந்த தவறும் செய்யாத முஸ்லிம்களை காயப்படுத்தி ,வம்புக்கு இழுத்தது போதாமல் மேலும் வழி கெடுக்க வந்து விட்டது டி.வீ சேனல்கள் கடந்த 3 வருடங்களாக நோன்புப் பெருநாள்,ஹஜ்ஜுப்  பெருநாள் போன்ற நன்மையான நாட்களில் திரைப்படங்கள்,பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் என்று தீபாவளி,பொங்கல்,கிறிஸ்துமஸ் போன்ற நாட்களில் ஒழிப்பரப்புவதுப் போன்ற நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள்.இஸ்லாத்திற்கும் திரைப்படத்திற்கும்,போழுதுப்போக்கிற்கும் என்ன சமந்தம்,வெட்டியாகப்  பொழுதை போக்குவது இஸ்லாம் வெறுக்க கூடிய செயலாக இருகின்றது,மேலும் இதுப் போன்ற நிகழ்ச்சிகளை இஸ்லாமியர்கள் பார்பத்தின் முலம் அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய நல்ல அமல்களை விட நேரிடும்.அது ஏனோ தெரியவில்லை நம்மை சுற்றி பல இஸ்லாமிய அமைப்புகள் இருந்தும் நாம் மேலே குறிப்பிட்ட திட்டமிட்டு செய்யப்படுகின்ற இஸ்லாத்திற்கு எதிரான செயல்களை கண்டிக்காமல் கைகட்டி வேடிக்கைப் பார்கின்றனர்,இனிவரக் கூடிய நாட்களிலாவது இஸ்லாத்திற்கு எதிரான செயல்களில் இஸ்லாமியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.  

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment