உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!

Saturday, December 31, 2011
என்ன தலைப்பு இப்படி இருக்குனு நினைகிறிங்களா ,அதுக்கான காரணத்த கடைசியா சொல்லுறேன்,இப்போ இதை படிங்க ... ஜனவரி என்கிற ஆங்கில மாதம் பிறக்கப் போகின்றது,ஊரெல்லாம் கொண்டாட்டமாகவும், கோலாகலமாகவும் உள்ளது...வெடி சத்தத்தின் இடையே இந்த கட்டுரை எழுதுகின்றேன் சாரி type செய்கின்றேன்,இந்த தருணத்தில் எனக்கு தெரிந்த சில விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.
 ஆரம்பத்தில் ஆண்டின் தொடக்கம் ஏப்ரல் மாதத்தில்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘போப்பாண்டவர்’ தான் புத்தாண்டை ஏப்ரலிலிருந்து ஜனவரிக்கு மாற்றினார் . இதனை ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே ஜனவரி 1 ஆம் நாளை புத்தாண்டின் முதல் நாளாக ஏற்றுக் கொண்ட ஐரோப்பியர்கள் மற்ற ஐரோப்பியர்களைப் பார்த்து ஏப்ரல் 1 ஆம் நாள் ‘முட்டாள்களின் தினம்’ என்று அழைக்கத் தொடங்கினர்.
(ஆகா!! என்ன ஓர் அறிவுப்பூர்வமான வரலாறு?!!) -நன்றி:http://ayappadi.blogspot.com/2011/12/1.html 

சுமார் 200 வருடங்கள் இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவர்களாக இருந்ததால் இந்தப் பண்டிகை இன்று பொது பண்டிகை போல ஆகிவிட்டது.தொலைகாட்சிகளிலும்,வானொலியிலும் ஆங்கில புத்தாண்டு பண்டிகை சிறப்பு நிகழ்சிகள் வேறு.. இது கிறிஸ்தவர்களுக்கே சமந்தமில்லாத பண்டிகை என நிரூபணம் ஆனபோதும்(அவர்களின் பைபிளே சாட்சி),இந்த பண்டிகையை கொண்டாடாதவர்கள் மத-தீவிரவாதிகள் போல(குறிப்பாக இஸ்லாமியர்கள்) ஆக்கப்பட்டதுதான் பெரும் வேதனைக்குரிய விஷயம்.

யார் இஸ்லாம் அல்லாத பிரமாத கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ, அவர்கள் அம்மதத்தை சார்ந்தவர்களே என்ற நபிமொழியின் எச்சரிக்கை இருக்க சில இஸ்லாமியர்கள் அதை காதில் வாங்குவதாக இல்லை.ஆங்கில புத்தாண்டிற்க்காக ஜனவரி 1 அன்று அதிகாலை தொழுகை செல்வது,new  year resolution என்ற பெயரில் இஸ்லாத்திற்கு சம்மந்தம் இல்லாத எதை,எதையோ செய்கிறார்கள்...

சில இஸ்லாமியர்களின் நிலை இப்படி இருக்க ஹிந்துகளுடைய நிலைமையோ ரொம்ப மோசம்.ஹிந்துகளின் பண்டிகையான பொங்கல், தீபாவளி இன்னும் பிற பண்டிகையை கிறிஸ்த்துவர்கள் கொண்டாடுகிறார்களா இல்லை ஆனால் கிறிஸ்த்துவர்களின் பண்டிகையான ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஹிந்துக்கள் போட்டி போட்டு கொண்டாடுகிறார்கள்.

உண்மையை சொல்வதென்றால் கிறிஸ்துவர்களை விட ஹிந்துக்களே இப்பண்டிகையை அதிகம் கொண்டாடுகின்றார்கள் என்பது என் அனுமானம். இதில் காலையில் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம், புத்தாடை,etc. 

இது ஒரு புறமிருக்க பண்டிகை என்ற பெயரில் வீண்விரயம்,சென்னை போன்ற பெருநகரங்களில் நள்ளிரவில் ஆண்களும் பெண்களும் நட்சத்திர ஹோட்டல்களில் குடித்துவிட்டு கூத்து,கும்மாளம்.கிராமங்களில் ஏழைக்கேற்ற எள் உருண்டை......இது போன்ற நேரங்களில் தனியே வரும் பெண்களின் கற்புக்கு பாதுகாப்புள்ளதா என்றால் நிச்சயமாக இல்லை எனலாம்.இதற்கு பெருநகரங்களில் போடப்பட்டுள்ள காவல்துறை கண்காணிப்பும்(அந்தளவிற்கு புத்தாண்டு கொண்டாட்டகாரர்கள் மீதுள்ள நம்பிக்கை),சில வருடங்களுக்கு முன் ஆங்கில புத்தாண்டு அன்று ஒரு வடமாநிலத்தில் இரண்டு பெண்களை 20 க்கும் மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட செய்தியையும் உதாரணமாக சொல்லலாம்.

சொல்ல வந்ததை சொல்லிவிட்டேன்,இதையும் மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாடுபவர்களை நினைத்தால்,உங்களையெல்லாம் திருத்தவே முடியாது! என்றே தோன்றுகின்றது.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

16 comments:

 1. தங்கள் வருகைக்கு நன்றி வான்ஜூர் பாய்...இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.....தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..

  ReplyDelete
 2. ஸலாம் சகோ.தி.முஸ்லிம்,
  நல்லதொரு விழிப்புணர்வூட்டல் பதிவு.
  நன்றி சகோ.

  பொருளாதாரமும் சுற்றுப்புறமும் உடல்நலனும் உலகெங்கும் மாசாகும் இந்த மடநாளில்... என் மகிழ்ச்சி எங்கேயோ காணாமல் போனது சகோ..!

  வேண்டுகோள்:-
  கமெண்ட் போடுவோர் வசதிக்காக, word verification-ஐ தூக்குங்க சகோ.

  ReplyDelete
 3. va alaikum salam.....
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்.........

  //கமெண்ட் போடுவோர் வசதிக்காக, word verification-ஐ தூக்குங்க சகோ.//எப்படி தூக்குவது என்று தெரியவில்லை உதவுங்கள்.....

  ReplyDelete
 4. உண்மையை சொல்வதென்றால் கிறிஸ்துவர்களை விட ஹிந்துக்களே இப்பண்டிகையை அதிகம் கொண்டாடுகின்றார்கள் என்பது என் அனுமானம். இதில் காலையில் கோயிலில் சிறப்பு பூஜை, அன்னதானம், புத்தாடை,etc.


  நீங்க சொல்லி இருப்பது சரிதான். மதங்களையும் பண்டிகைகளையும் சம்மந்தப்படுத்தாமல் எல்லாரும் ஒருதாய் மக்களாக எல்லா பண்டிகைகளையும் எல்லாருமே கொண்டாடலாமே?

  ReplyDelete
 5. மெம்பராக இணைத்துக்கொண்டேன். வேர்ட் வெரிபிகேஷன் நீக்கிடுங்க

  ReplyDelete
 6. தளத்தில் உறுபினரானதிர்க்கு நன்றி....எப்படி word verification நீக்குவது தெரியவில்லை?உதவுங்கள் சகோ.....

  ReplyDelete
 7. Lakshmi said
  உங்கள் நல்ல எண்ணம் எனக்கு விளங்குகின்றது....நீங்கள் நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள் நல்லது..இக்கருத்து மேலோட்டமாக பார்த்தால் சிறந்ததாக தெரியும் சற்று ஆழமாக சிந்தியுங்களேன் சகோ.

  அரசியல்வாதிகள்,சினிமாகாரர்கள்,பிரபலங்கள் ஆகியோர்களில் சிலர் தங்களை நடுநிலைவாதிகள் என்று காட்டிகொள்வதர்காக இப்படி எம்மதமும் சம்மம்தம் என்ற கொள்கையை சொல்வார்கள்.மனிதனின் இயற்கை அறிவின்படி பார்த்தால் இது அப்பட்டமான நடிப்பு என்றே தோன்றும்.ஒருவனுக்கு ஒரு கொள்கைதான் இருக்க முடியும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொள்கை இருந்தால் அது அவனுடைய பச்சோந்திதனத்தை காட்டும்,அதாவது நீங்கள் 1+1=2 என்கிறீர்கள்,இன்னொருவர் 1+1=4 என்கின்றார் இதை பார்க்கும் ஒருவரிடம் இதில் எது சரி என்று நீங்கள் கேட்கிறீர்கள் 1+1=2 இதுவும் சரிதான்,1+1=4 என்பதும் சரிதான் என்று உங்களிடம் அவர்சொல்கிறார் இதை ஏற்றுகொள்வீர்களாஇதனால் தான இஸ்லாம் சொல்கிறது நடுநிலையாளராக இருங்கள் என்று.இஸ்லாம் சொல்லும் நடுநிலை மேற்சொன்னத் போல அல்ல.தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம்,நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்று சுட்டிக்காட்ட வேண்டும்,அவர் முஸ்லிம் அல்லாதவராக இருந்தாலும் சரி,முஸ்லிமாக இருந்தாலும் சரி.இவ்வளவு விளக்கமும் எதற்கு என்றால்,நம் கண்ணிற்கு அப்பட்டமாக தெரிகின்றது கிறிஸ்த்துவ மத அடிப்படையில் கிறிஸ்த்துமசோ,jan 1 நியூ இயர்ரோ இல்லை(அவர்களின் பைபிள் அடிப்படையில்).அவர்களுக்கே இது பண்டிகை இல்லை எனும் பொது இதை கொண்டாட நாம் யார்?ஒருவேளை அவர்களுடைய பண்டிகை என்றே இதை வைத்து கொண்டாலும்,அவர்களுடைய பண்டிகையை கொண்டாடுபவர் தான் நடுநிலையாளர்கள்,கொண்டாடாதவர் மதவாதிகள் என்கிற என்னத்தை நம் மூலையில் விஷ ஊசி போல ஏற்றி விட்டார்கள் உங்கள் மனதில் உட்டபட(//மதங்களையும் பண்டிகைகளையும் சம்மந்தப்படுத்தாமல் எல்லாரும் ஒருதாய் மக்களாக எல்லா பண்டிகைகளையும் எல்லாருமே கொண்டாடலாமே?//). அதை கூடவா நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை சகோ.

  நாம் வீட்டில் நியூ இயர் கொண்டாடினாலும் சரி,வீதியிலோ,அல்லது வேறு இடங்களிலோ கொண்டாடினாலும் சரி அதற்காக செலவு செய்யப்படும் 1 மிட்டாய் கூட வீண் விரயம் தான்.எதியோப்பிய,உகாண்டா,சோமாலிய இன்னும் ஆப்ரிக்கா கண்டத்திலே உள்ள பல நாடுகளில்,ஏன் இந்தியாவில் கூட எத்தனை கோடி கணக்கான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள்.நமக்கு உடுத்த நல்ல உடையும்,3 வேலையும் உண்ண அளவுக்கு அதிகமான சாப்பாடு என நாம் இருக்க,உயிர் வாழவே உணவில்லாமல் லச்ச கணக்கில் இறக்கும் மக்களின் நிலையை நாம் சிந்தித்தோமா.நியூ இயர் கொண்டாட்டம் என்றே பெயரில் பொது சொத்துக்கள் சேதம்,அதை கொண்டாடுபவர்களில் சிலருக்கு உடல் சேதம்,உயிர் சேதம் என்று தினசரிகளில் வரும் செய்தி நாம் படிப்பதற்கு மட்டும் தானா?சிந்திக்க வேண்டாமா?இவ்வளவு ஏன் அன்றைய தினத்தில் நியூ இயர் கொண்டாட்டம் என்ற பெயரில் பெண்களின் கற்பு சூரையாடபடிகின்றது.. இது எல்லாம் தேவையா.

  அதனால் தான் குர்ஆன் சொல்கின்றது"உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்கள்"என்று.உங்களுக்கு புரியிராமதிரி சொல்லனும்னா உனக்கு தேவையான அளவுக்கு எவளோ வேணும்னாலும் செலவு பண்ணிக்கோ ஆனால் அனாவசியமாக 1 பைசா கூட செலவு பண்ண கூடாது.இப்படி காசை வீண் விரயம் செய்பவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி,முஸ்லிம் நாடுகளாக இருந்தாலும் சரி இஸ்லாமிய பார்வையில் அது தவறுதான்.

  ReplyDelete
 8. அஸ்ஸலாமு அழைக்கும்.வரஹ்....
  நல்ல பதிவு சகோ...வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. அஸ்ஸலாமு அலைக்கும் துபாயில் புத்தாண்டுக்காக நிறைய செலவு செய்து வானவேடிக்கை ஒருபுறமென்றால் பிற நாட்டிலிருந்து வேலை செய்வதற்க்காக வந்திருந்த குறிப்பாக இந்தியர்கள் தண்ணீரை பாலித்தீன் பைகளில் நிரப்பி தங்களுடைய flatலிருந்து வருவோர் போவோர் மீது எரிந்து தங்களுடைய மகிழ்ச்சியை(?) பரிமாறிக்கொள்கிறார்களாம்.அடுத்தவனை தொந்தரவு செய்வதில் என்ன சந்தோஷம் கொண்டார்களோ தெரியவில்லை.எத்தனை குப்பைகள் பார்க்கவே கண்ராவியாக இருக்கும்.இவர்களெல்லாம் எப்போதுதான் திருந்த போறாங்களோ தெரியவில்லை.

  ReplyDelete
 10. வ அலைக்கும் சலாம் சகோ.

  RMY BAATCHA தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி சகோ.இந்த தளத்தில் உறுபினராகுங்கள்,இந்த தளத்தின் அப்டேட் நியூஸ் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லவா .. தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.........

  ReplyDelete
 11. வ அலைக்கும் சலாம் சகோ.

  முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ்,தங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி சகோ.அரபு நாடுகளில் பல பெயரளவுக்கே முஸ்லிம் நாடக உள்ளது என்பதற்கு நீங்கள் சொன்ன சம்பவமே போதும்...இஸ்லாத்திற்கு சம்மந்தம் இல்லாத செயல்களை செய்வோர் இனியாவது திருந்துவார்களா..

  இந்த தளத்தில் உறுபினராகுங்கள்,இந்த தளத்தின் அப்டேட் நியூஸ் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லவா .. தொடர்ந்து தொடர்பில் இருங்கள்.........

  ReplyDelete
 12. ஸலாம்

  சகோ ப்ளாக் சம்பந்த கேள்விகளுக்கு நான் உதவுகிறேன். என்னுடைய மெயில் id sulthanmydeen.cad[at]gamil.com .. at என்றால் @ ..

  என்னை தொடர்பு கொள்ளுங்கள்

  ReplyDelete
 13. வ அலைக்கும் சலாம் சகோ.சிந்தனை,

  ப்ளாக் சமந்தமாக எனக்கு சந்தேகம் ஏற்பட்டால் இன்ஷா அல்லாஹ் உங்களை தொடர்பு கொள்கின்றேன்..... நீங்களும் இந்த தளத்தோடு தொடர்பில் இருங்கள்...

  இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் உறுபினராய்டுங்க சகோ.சிந்தனை.இந்த தளத்தின் அப்டேட் நியூஸ் உங்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லவா ..

  ReplyDelete
 14. உள்ளத்தில் உள்ளதை, உலக நடப்பில் உள்ளதைச் சொன்னீர்கள்; சரியாகச் சொன்னீர்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள்...

  ReplyDelete
 15. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.NIZAMUDEEN,
  உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்.........

  ReplyDelete