காதலர் தினம் ஒரு வழிகேடு

Thursday, February 7, 2013

 காதலர் தினம் என்ற தினம் இன்னும் ஒரு வாரத்தில் வர இருப்பதால் அதை பற்றிய தெளிவு பெரும் பதிவு இது.

காதலர் தினம் ஒரு வழிகேடு:

மக்கள் கூடும் கூட்டங்களில் நபி(ஸல்)அவர்கள் சொற்பொழிவாற்றும் பொழுது அடிக்கடி ஒரு விஷயத்தை நியாபகப்படுத்தி எச்சரிக்கை செய்வதுண்டு அது என்னவென்றால்

காரியங்களில் மிக கேட்டது மார்கத்தில் புதியவைகளை புகுத்துவது

புதியவைகள் அனைத்தும் வழிகேடுகள்,வழிகேடுகள் அனைத்தும் உங்களை நரகநெருப்பில் கொண்டுபோய் சேர்த்துவிடும்.


வாலெண்டைன் என்ற கிறிஸ்த்தவர் ஒருவரின் நினைவாகவே இந்த காதலர் தினம் "Valentine's Day"என்றும் அழைக்கப்படுகின்றது.

ஒரு மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று வரையறை வகுத்து தந்த ஒரே மார்க்கம் " இஸ்லாம்"  மட்டுமே.அப்படிப்பட்ட ஒரு உன்னதமான மார்கத்தில் இருந்து கொண்டு,காதல்,நட்பு என்று சொல்லிக் கொண்டு ஆண்களும்,பெண்களும் சீரழிந்து வருவதை பார்க்கிறோம்.


பற்றாக்குறைக்கு மீடியாவும் இதுபோன்ற தினங்களையும், செயல்களையும் ஊக்கிவிப்பதை தவிர்ப்பதாக தெரியவில்லை.

திரைப்படங்களின் தூண்டுதலால் இளம் வயதிலையே வீட்டை விட்டு யாருடனாவது ஓடிபோவது,கள்ளக்காதல்,மொபைல் போன் மூலமாக முகவரி தெரியாதவர்களுடன் காம உரையாடல் என்று திட்டமிட்டு நம் சமூகம் உருமாற்றப்படுகிறது.

இனி நாம் என்ன செய்வது:

முன் சென்ற தலைமுறை இந்த செயலை பற்றிய ஒரு முன் அறிவும்,தொலைநோக்கும் இல்லாமல் தானுண்டு,தன் வீடுண்டு(தன் வீட்டாரும் பாதிப்படையக் கூடும் என்ற அறிவு கூட அவர்கள் பெரும்பாலானோரிடம் இல்லை) என்றிருந்துவிட்டனர்.இந்த தலைமுறை இளைஞர்களாவது இந்த மானம்கெட்ட இழி செயலை தடுத்து நிறுத்த முனைந்தால் தான் அடுத்த தலைமுறை கொஞ்சத்தில் கொஞ்சமாவது "முஸ்லிமாக " வாழும்.இல்லையென்றால் பெயர்தாங்கி முஸ்லிமாகவே வாழ்வார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு பெரும்பாவங்கள்கூட பாவமாக தெரியாது.

இதையெல்லாம் தடுக்க நாம் என்ன செய்யவேண்டும்,மார்கத்தை பற்றிய தெளிவின்மை காரணமாகவே அவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள் ஆகையால் ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து குறைந்தபட்சம் மாதம் இருமுறையாவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே மார்க்க சொற்பொழிவு தர ஏற்பாடு செய்யவேண்டும்.இஸ்லாத்தை பற்றிய சிந்தனையை அவர்களுக்கு தூண்ட வேண்டும்.அல்லாஹ்வை பற்றிய அச்சத்தை அவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும்.

அதற்க்கு நாம் இயக்க வேறுபாடுகளை களைந்து ஒன்று பட வேண்டும்........


இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment