அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்

Saturday, May 26, 2012


பேர சொன்னாலே சும்மா அதிருதுல்ல என்பது சினிமா வசனம்.இது யாருக்கு பொருந்துதோ இல்லையோ 1940 ம் ஆண்டு வாக்கில் கிறிஸ்த்துவ மிசினரிகள்,கிறிஸ்துவ மத போதகர்களை அதிரவைத்த ஒரு வரலாற்று நாயகனின் வரலாற்றை சற்றுப் பார்போம்.


இவரது முழு பெயர் – அஹமது ஹுசைன் தீதாத்
பிறப்பு                                     - ஜுலை 1, 1918
பிறந்த ஊர்                          - குஜராத், (இந்தியா)

1918-1942 வரை இவரது வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள் 
இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை இவர் பிறந்த சில காலங்களிலேயே தென்ஆப்ரிக்காவில் குடிபெயர்ந்து விட்டார்.  இவர் தனது 9வது வயதில் தென்ஆப்ரிக்கா சென்று தனது தந்தையுடன் இணைந்துவிட்டார். இவர் தென்ஆப்ரிக்கா சென்ற சிலகாலத்திலேயே இவரது தாயார் மரணமடைந்தார் (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்).  இவர் கடுமையாக தனது படிப்பில் கவனம் செலுத்தி 6-ஆம் வகுப்பிலேயே மிகச் சிறந்து ஆங்கிலப்புலமை மற்றும் பள்ளியில் நற்பெயர் பெற்றார்! (அல்ஹம்துலில்லாஹ்).  இவர் தனது 16 வதுவயதில் வேலை செய்ய துவங்கினார்.

1936-ம் ஆண்டு பர்னிச்சர் சேல்ஸ்மேன் ஆகா தனது வாழ்க்கைப் பயனத்தை துவங்கினார். அக்கால கட்டத்தில் நசாராக்களால்இஸ்லாம் வாலால்“ பறப்பட்டது என்ற சில சர்ச்சைகள் வெளிவந்தன இந்த சர்ச்சைகளை கண்டு மனம் துவலாமல் நசாராக்களின் வேதங்களை ஆய்வு செய்ய துவங்கினார்இதன்மூலம் இவர் இஸ்லாத்தின் தாவா பணிகளுக்குள் தம்மை அற்பணித்துக்கொண்டார்!


1942-1956 வரை இவரது வாழ்வில் நடந்தவை
சகோதரர் அஹமது தீதாத் அவர்களது தாவாபணி (இஸ்லாமிய அழைப்புபணி) 1942 ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் என்ற இடத்தில் அமைந்துள்ள அவோலன்-சினிமா” என்ற ஹாலில் துவங்கியது. முதன்முதலில் இவர் சொற்பொழிவுகள் நிகழ்த்தும்போது எத்தனை பேர் அதைக்கேட்டார்கள் தெரியுமா?மயங்கிவிடாதீர்கள் வெறும் 15 நபர்களே!
இவரது திறமையான பேச்சாற்றலில் மயங்கிப்போன மக்கள் இவரது சொற்பொழிவுகளை கேட்க ஆவலாக இருந்தனர். சிலகாலங்களுக்குப்பின்னர் இவரது சொற்பொழிவுகள் தென்ஆப்ரிக்காவில் உள்ள ஜோஹனஸ்பர்க் மற்றும் கேப்-டவுன் என்ற நகரங்களில் அரங்கேரியது அப்போது மக்கள் கூட்டம் ஆயிரத்தை தாண்டியது” தனது முதல் கூட்டத்தில் வெறும் 15பேர்களுக்கு சொற்பொழிவாற்றுகிறோம் என்று இவர் கவலைப்படவில்லை! பிறகு நடந்த சொற்பொழிவுக்கூட்டங்களில்1000த்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்(அல்ஹம்துலில்லாஹ்). 
இவர் துண்டுப்பிரச்சுரம் அளிப்பதுஜும்ஆ பேருரை நிகழ்த்துவது முதற்கொண்டு நடைபெற்ற சொற்பொழிவுகளால் இஸ்லாத்திற்கும் கிருஸ்தவத்திற்கும் இடையே ஒறு இணைப்பு பாலத்தை அதாவதுசகோதரத்துவத்தை வளர்த்தார்.

இஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் – 1956-1986 
இவரது பேச்சாற்றலிலும் தாவா சொற்பொழிவுகளையும் கேட்ட பொதுமக்கள் கூட்டம் அபரிமிதமாக வளர்ந்தது! கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தையும் அவர்களது ஆவலையும்,இஸ்லாத்தைப்பற்றிய கேள்விகளையும் கருத்தில்கொண்டுஇஸ்லாமிக் புரபகேஷன் சென்டர் என்ற அமைப்பை 1956ஆம் ஆண்டு இவர் துவங்கினார்! (அறிந்துக்கொள்ளுங்கள் எமது ஆலிம் மற்றும் மவ்லவி சகோதரர்களே இவர்தங்களைப்போன்று எந்த ஜமாஅத்-ஐயும் நிறுவி இஸ்லாத்தைபிளவுபடுத்தவில்லைஇந்த அமைப்பிற்கு உறுதுணையாக இருந்தவர்களும் காரணமாக இருந்தார்கள் (திரு. குலாம் ஹுசென் வெங்கர் மற்றும் திரு. தாஹிர் ரசூல்).  இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள் இஸ்லாமிய புத்தகங்களை பிரசுரிப்பதுபுதிதாகஇஸ்லாத்ததை ஏற்றவர்களுக்கு இஸ்லாமிய வகுப்புகள் நடத்துவது போன்றவைகளேயாகும்!

1958ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களால் அஸ்-ஸலாம் எஜிகேஷனல் இன்ஸ்டியுட் என்ற அமைப்பு பெரேமர் என்ற பகுதியில் சுமார் 75 ஏக்கர் நிலத்தில் உருவானது.


இந்த அமைப்பு இவருக்கு 30 வருடங்கள் மிகவும் பக்கபலமாக அமைந்தது. இவர் பிப்லிகள் தியோலஜி Biblical Theology பற்றி ஆராய்ந்து அதிக இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்தார். மேலும்மக்களை இஸ்லாத்தின்பால் அழைப்புவிடுத்தார். இந்த செயல் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.  பிறகு இவர் தனது கைப்பட பல இஸ்லாமிய நூல்களை இயற்றினார்இஸ்லாமியபிட்நோட்டீஸ்கள்பேம்ப்லட் போன்றவற்றை இலவசமாக அனைத்து மக்களுக்கும் வினியோகிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டார்!  இது மட்டுமல்லாமல் பைபிள் பற்றி இஸ்லாமியவகுப்புகளையும் நடத்தினார்!  இதன்மூலம் இவருக்கு இஸ்லாம்,கிருஸ்தவம் மற்றும் ஜுதயிஷ மக்கள் கூட்டம் பெருகியது!


இவரது சர்வதேச சொற்பொழிவுகள் 1985-1995 
1980 ஆம் ஆண்டிற்குப்பிறகு சகோதரர் தீதாத் தென் ஆப்ரிக்காவிற்கு வெளியேயும் தாவா பணிகளை துவங்க எண்ணினார்!
1985-ஆம் ஆண்டு இலண்டன் நகரில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹால்” என்ற அரங்கில் இஸ்லாமிய சொற்பொழிவு பிரச்சாரம் நிகழ்த்தினார்.
1986-ஆம் ஆண்டு இவருக்கு இஸ்லாத்தை அழகிய முறையில் பரப்பியதற்கு கிங் பைஷல் அவார்டு” கிடைத்தது!. இந்த அவார்டு இவருக்கு சர்வதேச அளவில் நற்பெயரை தேடித்தந்தது!
 இவர் தனது 66-ஆம் வயதிலிருந்து புதுப்பொழிவுடன் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கோண்டு மீண்டும் ஒரு 10ஆண்டுகள் அயராது தனது இஸ்லாமிய தாவா பணிகளை நசாராக்களிடம் மேற்கொண்டார்! இவர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவின் மூலைமுடுக்குகளிலெல்லாம் தனது பயணத்தை தொடர்ந்தார்!

இவர் இஸ்லாமிய தாவா பணிக்காக பயணித்த நாடுகளின் பட்டியல் இதோ! (அல்ஹம்துலில்லாஹ்!)

·                                 சவுதி ஆரேபியா மற்றும் எகிப்து (பல முறை)

·                                 ஐக்கிய ராஜாங்கம் எனப்படும் – இங்கிலாந்து (பலமுறை 1985முதல் 1988 வரை)

·                                  பாகிஸ்தான் (சர்வாதிகாரி ஜியாவுல் ஹக்- சந்தித்தார்),ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மாலத்தீவுகள் (நவம்பர்-டிசம்பர் 1987களில்) இச்சமயம் இவரை ஜனாதிபதி கயும்கவுரவித்தார்

·                                 சுவிட்சர்லாந்து (மார்ச் 1987 ஜெனிவாவில் சொற்பொழிவு)

·                                 US அமெரிக்க (1986களில் திரு. ஸ்வாகர்டுராபர்டு டவுக்ளஸ் மற்றும் மற்ற 2 பேச்சாளர்களுக்கு இஸ்லாமிய சொற்பொழிவு– இடம் அரிஜோனா மாகாணம், US)

·                                 ஸ்வீடன் மற்றும் டென்மார்க் (1991-ல் மட்டும் இஸ்லாமிய சொற்பொழிவுகள்)

·                                 மறுபடியும் US அமெரிக்ககனடா (1994 இஸ்லாமிய சொற்பொழிவு – இடம் கனடா)

·                                 ஆஸ்திரேலியா – (1996ல் அன்னாரது இறுதி சுற்றுப்பயனம்,இதற்குப்பின் இவருக்கு பக்கவாதம் Stroke ஏற்பட்டது)

1996-2005 வரை அன்புமிக்க சகோதரர் அஹ்மத் தீதாத் அவர்களது இறுதிக்கட்ட சோகமான வாழ்க்கை
மே மாதம் 1996 ஆம் ஆண்டு சகோதரர் தீதாத் அவர்களுக்கு வலது-கையின் பக்கம் பக்கவாதம் Paralysis அதாவது கழுத்து முதல் உடலின் ஒருபக்கம் முழுவதும் (அதாவது செரிபிரல் வாஸ்குலர்ஆக்சிடன் என்ற வாத நோய்) ஏற்பட்டது. இதனால் இந்த அன்புச்சகோதரர் பேச முடியாமலும் எதையும் விழுங்கக்கூட முடியாமலும் அவதிப்பட்டார்!  இவருக்கு ஏற்பட்ட இந்தநிலையைக்கண்டு உடனடியாக இவரை ரியாத் நகரில் உள்ள கிங் பைஷல் ஸ்பெஷலிஸ்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.  இவரது இந்த நிலைமை ஆண்டுகள் நீடித்தது மேலும் இக்காலகட்டத்தில் இவர் தென் ஆப்ரிக்காவில் வெருளம் என்ற பகுதியில் தனது வீட்டில் படுக்கையாகவே தனது கடினமான இறுதி ஆண்டுகளை கழித்தார்! இவர் இந்த இக்கட்டான நிலையில் தனது மனைவியின் கவனிப்பில் இருந்துவந்தார்! அன்னார் அவர்கள் ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி2005 ஆம் ஆண்டு தனது இல்லத்திலேயே இயற்கை எய்தினார்! (இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவுன்).  இவரது மண்ணரை தற்போது வெர்குளம் என்ற தென்ஆப்ரிக்க நகரில் உள்ளது!  (மேலும் தகவலறிய www.ahmed-deedat.co.za  கிளிக் it)

சகோதரர்களே! அறிந்துக்கொள்ளுங்கள் மார்க்கத்தை ஒழுங்குபடுத்தி அதை நசாராக்கள் முன் நிறுத்தி தாவா பணிகளை மேற்கொண்ட இந்த சகோதரர் உண்மையில் நமக்காகவும் நம் மார்க்கத்திற்காகவும் அயராது பாடுபட்டுச் சென்றுள்ளார்! இப்படிப்பட்ட நம் தாவா சகோதரர்களுக்கு துவா செய்து இவரது மறுமைக்கு உதவலாமே!

நன்றி
http://en.wikipedia.org/wiki/Ahmed_Deedat (மொழியாக்கம் செய்யப்பட்டது)

ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது! பிழை இருந்தால் தெரிவிக்கவும் இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்வோம்! திருந்திக்கொள்வோம்!

இந்த கட்டுரையை தங்கள் பிளாக்குகளில் பதித்து தாவா பணியாற்றுவோருக்கு வீரியத்தை ஊட்டலாமே!


SOURCE


(Mohammed) Marmaduke Pickthall,
YUSUF ESTES,
Dr. ZAKIR NAIK  
ஆகியோரின் தகவல்கள் http://amazingmuslims.wordpress.com/the-legends/ ல் உள்ளன!
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!)

அல்ஹம்துலில்லாஹ்! படைத்த ரப்புல் ஆலமீனுக்கே எல்லா புகழும்!!

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

6 comments:

 1. அல்ஹம்துலில்லாஹ், நல்லதொரு விஷயததை பகிர்ந்துக்கொண்டமைக்கு. சலிப்புத் தராமல் கட்டுரைகளை சுருக்கி தந்தமைக்கு ஒரு முறைக் கை தட்டலாம். ஏனென்றால் அஹ்மத் தீதாத் அவர்களின் இஸ்லாமிய பணி அவ்வளவு நீண்டது. இன்னும் தங்களின் பிளாக்கை பொலிவுத் தர மெருகூட்டினால் கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். என் வலைத் தளத்தை காண http://itzyasa.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.யாசர் அரஃபாத்
   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்..
   உங்கள் ஆலோசனைக்கு நன்றி இன்ஷா அல்லாஹ் முயற்சி செய்கின்றேன்...

   Delete
 2. அஸ்ஸலாமுஅலைக்கும் ,
  அஹமத் தீதத் பற்றிய அறியாத தகவல்கள் தந்ததுக்கு நன்றிகள்
  மேலும் உங்கள் பனி தொடரட்டும் .
  mithar

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.Mohamed Mithar,
   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்..

   Delete
 3. ஆக்க பூர்வமான கட்டுரை! (I like Ahmed Dee Dhaat).
  எழுத்துப்பிழைகளை, கூடுமானவரை, சரி செய்து எழுதினால் நன்றாக இருக்குமே!
  சற்று கவனம் செலுத்துங்கள்!!
  --- அன்புடன் உங்கள் சகோதரன்:
  பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.
  My BLOG: http://pnonazim.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.காஜா நஜிமுதீன்,

   இன்ஷா அல்லாஹ் இனிவரகூடிய கட்டுரைகளில் எழுத்துப்பிழைகளை, கூடுமானவரை,சரி செய்து செய்துகொள்கின்றேன்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.....தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்..

   Delete