காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்

Saturday, May 5, 2012
மலேசியாவில் உள்ள ஒரு மாகானத்தில் ஒரு சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னை கற்பழிக்க வந்த ஒருவனுக்கு மிக மோசமான தண்டனையை கொடுத்துள்ளார்.அப்படி என்ன தான் நடந்தது அங்கு.
அந்த பெண் தனது வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த பொழுது,எங்கிருந்தோ வந்த ஒருவன் கத்திமுனையில் அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் உள்ள பணத்தை கேட்டுள்ளான்.அந்த பெண்ணும் பயந்து அவன் கேட்டதை கொடுத்துள்ளார்.பணம் பரித்தது மட்டும் போதாது என்று அந்த பெண்ணை கீழே தள்ளி பலவந்தமாக கற்பழிக்க முயன்றுள்ளான்.அந்த சமயத்தில் அவன் பையில் வைத்திருந்த கத்தி கீழே விழ அந்த கத்தியை கொண்டு அந்த பெண் அவனின் பிறப்புறுப்பை அறுத்தெரிந்துவிட்டார்.அவனின் நிலை என்ன என்று தெரியவில்லை.இவ்வளவு துணிச்சலாக செயல்பட்ட அந்த பெண்மணியின் பெயர்,முகவரி,போட்டோ என்று எதனையும் மலேசிய காவல்துறையினர் தரமறுத்துவிட்டனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது போல இந்தியாவிலும்,மற்ற நாடுகளிலும் உள்ள  பெண்கள் தைரியமாக செயல்பட்டால் கற்பழிப்புகள் குறைய அதிக வாய்ப்புள்ளது..நன்றி:தினத்தந்தி.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment