பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு

Wednesday, May 9, 2012
"உண்மை பேசுவது எவ்வளவு கசப்பாக இருந்தப் போதிலும் பொய் சொல்லாதே" என்பது இஸ்லாத்தின் முக்கிய கட்டளைகளுள் ஒன்று.மனிதனின் உடன்பிறவா உறவாகிவிட்ட இன்றைய இணையதள பக்கங்களில்  தினம் தினம் எத்தனை எத்தனை இஸ்லாத்திற்கெதிரான பொய்கள் பரப்பபடுகின்றது என்பது இணையதளங்களை பயன்படுத்துவோருக்கு நன்கு தெரியும்.நாம் வாழ கூடிய இவ்வுலகில் எல்லா மதங்களின் மீதான தாக்குதலை விட,இஸ்லாத்தின் மீதான தாக்குதல் மிக,மிக அதிகம்.எங்கோ ஒரு மூலையில் நடந்த தாக்குதல்கள் கால ஓட்டத்தில் சில  தமிழ் தளங்களுக்கும் அந்த தோற்று நோய் ஒட்டிகொண்டது.
அதனை எதிர்க்க முஸ்லிம் வலைதள சகோதரர்கள்,மற்றும் நடுநிலையாளர்கள் சிலர் முயன்று வருகிறார்கள்.
சில இஸ்லாமிய சகோதரர்கள் தங்கள் நேரத்தையும் பார்க்காது செலவழித்து இஸ்லாத்திற்கெதிராக வைக்கப்படும் பொய்யான  குற்ற சாட்டுக்களுக்கு அவர்கள் விளங்கி கொள்ளும் வகையில் பதிலளிகிறார்கள் இதனை படிக்கும்  சிலர்  இஸ்லாத்திற்கெதிராக தாங்கள் சொல்லும் வார்த்தையில் உண்மை இல்லை என்பது நன்குவிளங்கியவுடன் மன்னிப்புடன் விலகிகொள்கிறார்கள்.ஆனால் இன்னும் பலரோ குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வெட்கமே  இல்லாமல் மீசையை தட்டி விட்டுகொண்டே சொல்வார்கள்.அது போன்ற நபர்கள் தான் தருமி,வால்பையன்,சார்வாகன்

தருமியின் WHY  I  AM  NOT  MUSLIM  என்ற கட்டுரைக்கு(பதிவு - 17 ) மறுப்பெழுதி(November 24, 2011) கட்டுரை ஒன்றை வெளியிட்டேன் என்பது வாசகர்களுக்கு தெரியும்.அந்த மறுப்பை முழுவதுமாக பின்னூட்டத்தில் வெளியிட முடியாது(பெரிதாக இருப்பதால்) என்பதால்,பின்னூட்டத்தில் என் என்த முகவரியை குறிப்பிட்டு உங்கள் கேள்விக்கு பதில்  உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தேன்.என் பின்னூட்டத்தையும் தருமி வெளியிட்டார் ஆனால் நான் சொன்ன பதிலுக்கு மறு கேள்வி அவரிடம் இருந்து இல்லை.


பின் என் சொந்த வேலைகளில் நான் மூழ்கிவிட்டதால் அந்த மறுப்புக் கட்டுரையை மறந்தேவிட்டேன்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நான் தருமியின் தளத்தை பார்க்கும் பொழுது தான் அதிர்ந்தேன்.அவர் கேட்ட கேள்விக்கு நான் நியாயமாக என்ன பதில் நான் சொல்லி இருந்தேனோ அதை எல்லாம் காதிலே வாங்காமல் காற்றிலே பறக்கவிட்டு பழைய பஞ்சாங்கத்தையே பாடிகொண்டி இருந்தார்.ஒரு வேலை நம்முடைய மறுப்புக் கட்டுரையை மறந்து விட்டாரோ என்று மீண்டும் அவரின் கட்டுரைக்கு பின்னூட்டம் இட்டு நியாபகபடுத்தினேன்.இதில் என்ன வேடிக்கை என்றால் என் பின்னூட்டத்தை வெளியிட்டு விட்டு  மறுப்பெழுத வராமல் மறுபடியும் வெவ்வேறு கட்டுரைகளில் வித,விதமாக இஸ்லாத்தை தாக்கி பொய் பேசி தன் பெரிய மனுஷ தனத்தை தொடர்ந்து வெளிபடுத்திகொண்டு  இருக்கிறார் தருமி.

இவர் இஸ்லாத்தை தாக்கி கட்டுரை வெளியிட்டால் அந்த பின்னூட்டங்களில் வால்பையனும்,சார்வாகனும் ஆஜர் ஆகி பின்னூட்டமிடும் முஸ்லிம்களுக்கு ஆதாரமில்லாத விசயங்களை எழுதுவார்கள்,முஸ்லிம் சகோ.கள் எவ்வளவு பதில் சொன்னாலும் அதை ஏற்காமல் பழைய பாட்டை தான் பாடுவார்கள்.இவர்கள் அனைவருக்கும் கட்டுரை மறுப்பின்
லிங்க் அனுப்பட்டுள்ளது.இருப்பினும் என்ன காரணத்தாலோ வால்பையனும்,சார்வாகனும் சில நாட்களாகவே வேறு கட்டுரைகள் கூட வெளியிடுவதால் என் பின்னூட்டத்தையும் அவர்கள் பாத்திருக்க சந்தர்பம் இல்லை என்றே நான் கருதுகின்றேன்.ஆனாலும் இந்த தருமி மட்டும் தொடர்ந்து கட்டுரை வெளி இடுவாராம் மறுப்பு சொல்ல முடியுமான்னு மார்தட்டுவாராம்.மறுப்பு கொடுத்தால் சத்தத்தையே காணும்,.எங்களுக்கு மறுப்பு சொல்லி கட்டுரை வேணாம் என்கின்ற பெயரில் மாதங்களை வீணடிக்க வேணாம் நேரடி விவாதத்திற்கு தயாரான்னு கேட்டா இந்த GENTLE  MAN சொன்ன பதிலை வாசகர்களே பின்னூட்டத்திலே நீங்களே பாருங்க சிரிப்பு வரும்.இது என்ன போங்கு விளையாட்டாள இருக்கு.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

6 comments:

 1. பதில் கொடுத்து விட்டீர்கள். ஆனால் தருமி பார்க்காதது போல் சென்று விடுவார்.

  ReplyDelete
 2. தங்கள் வருகைக்கு,கருத்திற்கும் நன்றி சுவனப்பிரியன்.அவருடைய கட்டுரைகளில் உங்களுடைய,சகோ.ஆஷிக்குடைய சளைக்காத பின்னூட்டங்களை படித்தப் பின் தான் எனக்கு மறுப்பெழுத ஆர்வமே வந்தது..
  //பதில் கொடுத்து விட்டீர்கள். ஆனால் தருமி பார்க்காதது போல் சென்று விடுவார்//அனுபவம் பேசுதோ.
  இவ்வளோ தூரம் வந்துட்டிங்க அப்படியே இந்த தளத்தில் MEMBER ஆய்டுங்க.தொடர்ந்து இந்த தளத்தின் UPDATE NEWS கிடைக்க வேண்டுமில்லையா..

  ReplyDelete
 3. குரானில் நடந்த வரலாற்றை- தவறாக உளறி உள்ளதை இன்று வரை சுபி இங்கே மறுக்க வில்லை. http://suvanappiriyan.blogspot.in/2012/02/blog-post_23.html
  http://devapriyaji.wordpress.com/2012/02/26/3857/
  மேலும் வரலாற்று அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். ஊகங்களின் பெயரில் அல்ல. இதை விமர்சிக்கவும்.

  கிறிஸ்து- இறுதிதூதர்- யார்? இயேசுவா-முஹம்மது நபியா?
  http://devapriyaji.wordpress.com/2012/05/13/jesus-or-mohammad/

  ReplyDelete
 4. //குரானில் நடந்த வரலாற்றை- தவறாக உளறி உள்ளதை இன்று வரை சுபி இங்கே மறுக்க வில்லை. http://suvanappiriyan.blogspot.in/2012/02/blog-post_23.html
  http://devapriyaji.wordpress.com/2012/02/26/3857/
  மேலும் வரலாற்று அடிப்படையில் தான் பார்க்க வேண்டும். ஊகங்களின் பெயரில் அல்ல. இதை விமர்சிக்கவும்.//

  குரானில் நடந்த வரலாற்றை என்று உங்கள் தலைப்பை இட்டுள்ளீர்கள்.அந்த வரலாறு நிச்சயம் நடந்துள்ளது அதனை குர்ஆன் பதிவு செய்துள்ளது என்ற உண்மையை தாங்கள் (அறியாமல்)ஒத்துகொண்டமைக்கு முதலில் நன்றி.

  தொல்லியல் என்றால் என்ன என்பதனை அறிய இதனை பார்க்கவும்-http://en.wikipedia.org/wiki/Archaeological_site

  இந்த சம்பவங்களை பற்றி குறிப்பிடும் பொழுது குர்ஆனிலே ஏன் அதனுடைய காலம் குறிப்பிடப்படவில்லை என்று கேட்கிறீர்கள்.இது போன்ற சம்பவங்கள் நடந்த இடம்,காலம்,நேரம், என்றெல்லாம் குர்ஆனிலே குறிப்பிட்டு இருந்தால் இன்று இருக்கும் குர்ஆனை விட 10 மடங்கு பெரிய குர்ஆன் தான் இருக்கும்.அப்பொழுது உங்களை போன்றவர்கள் என்ன கேட்பார்கள் இவ்வளவு பெரிய வேதத்தை என்று நாங்கள் முழுவதும் படிப்பது அதனை என்று செயல்படுத்துவது என்று....ஒரு வேளை சம்பவங்கள் நடந்த இடம்,காலம்,நேரம் இவ்வற்றை எல்லாம் குறிப்பிட்டு இருந்தாலும் அப்பொழுதும் உங்களை போன்ற அறிவு ஜீவிகள் யார் அப்பொழுது அதனை ஆட்சி செய்தார் என்று கேட்பார்கள் உங்களுக்கு கேள்வி மட்டும் தானே கேட்க தெரியும்(தினமும் எவ்வளவு பேர பாக்குறோம்)..
  குர்ஆன் ஏன் இதுப் போன்ற குறிப்புகளை குறிப்பிடவில்லை.ஏனென்றால் இதுபோன்ற சம்பவங்களில் குர்ஆன் குறிப்பிடும் பொருள்(subject)மட்டுமே முக்கியம்..நீங்கள் ஒருவரிடத்திலே வேளை செய்கிறீர்கள் உங்களை அவர் கடைக்கு அனுப்பி ஒரு மிட்டாய் வாங்கிவரசொல்கிறார்(சும்மா ஒரு பேச்சிக்குதான்).நீங்கள் கடைக்கு போய் வேறு பொருளோ அல்லது ஒன்றும் வாங்காமல் வேடிக்கை பார்த்துவிட்டு திரும்ப மாட்டீர்கள் காரணம் உங்களை கடைக்கு அனுப்பியதே மிட்டாய் வாங்க தான்.இங்கு மிட்டாய் என்பது தான் பொருள்(subject)அதனை நன்கு விளங்கியதால் தான் அதனை நீங்கள் வாங்கிவருகிரீர்கள்.இந்த சம்பவத்தினை ஒருவர் உங்களிடத்திலே கேட்டல் நான் கடைக்கு நடந்து போனேனா அங்கு ஒரு நாய் போச்சு,பஸ் போச்சு,அப்பறம் ஒரு பெரிய கட்டடம் கட்டுறாங்க இதலாம் தாண்டி பச்சை கலர் பெயிண்ட் அடிச்சு சிவப்பு கம்மி போட்ட....இப்படி நீங்கள் மிட்டாய் வாங்கி வரும் வழியில் என்ன நடந்தது எதுப் போனது என்றெல்லாம் அவரிடம் விவரிக்க மாடீர்கள் ஏனென்றால் அதற்கு அவசியம் இல்லை என்று விளங்கி வைத்துள்ளீர்கள்,வேண்டும் என்றால் நீங்கள் மிட்டாய் வாங்கிய கடையை குறிப்பிடுவீர்கள் அதும் அவசியம் ஏற்பட்டால்.
  அதுப் போல தான் இறைவனுக்கு மாறு செய்தவர்களை இறைவன் அழித்தான் என்பது தான் subject ஆகவே அவனுக்கு மாறு செய்யக் கூடாது என்பது இதிலிருந்து பெறப்படும் நியதி.இங்கு நியதியும்,பொருளும் தான் முக்கியம் இடமும்,காலகட்டமும் அல்ல.....இருந்தாலும் கார்போன் 14 செய்யப்பட்டுள்ளதா,ஆதாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கும் பதில் உள்ளது கிழே குறிப்பிடும் லிங்கை பார்க்கவும்.

  http://en.wikipedia.org/wiki/Madain_Salih
  http://www.dainst.org/en/project/tayma?ft=all

  //கிறிஸ்து- இறுதிதூதர்- யார்? இயேசுவா-முஹம்மது நபியா?
  http://devapriyaji.wordpress.com/2012/05/13/jesus-or-mohammad///
  இதற்க்கு மறுபெழுதுவது வீண் வேளை என்றால் தலைபிற்கும் கட்டுரைக்கும் சமந்தமே இல்லை. இயேசுவை பற்றி உங்கள் கட்டுரையிலே குறிப்பிடுள்ளீர்கள் ஆனால் முஹம்மது நபியை பற்றி குர்ஆன் என்ன சொல்கின்றது,நபி மொழி என்ன சொல்கின்றது,பைபிள் என்ன சொல்கின்றது என்றும் ஒன்றும் குறிப்பிடவில்லையே(எங்கையாவது காப்பியடித்து அதனை கட்டுரையில் paste செய்ய மறந்திருக்கலாம்).குர்ஆனிலோ,நபி மொழியிலோ,பைபிளிலோ முஹம்மது நபி இறுதி தூதர் இல்லை என்று ஏதேனும் ஆதாரம் இருந்தால் தாருங்கள்....

  ReplyDelete
 5. திருவாளப்புத்தூர் முஸ்லீம் : சகோதரே தருமி தெளிவாக சொல்லி விட்டாரே தனது தளத்தின் முகப்பில்

  " கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே! " என்று ... பிறகு ஏன் நேரத்தை வீனடிகிரீர்கள் ... அவருக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் பதிலளிக்க தெரியாது... இவர்களாவது விவாதத்திற்கு வருவதாவது ... வேலைய பாருங்க பாஸ் ...

  ReplyDelete
  Replies
  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

   உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ...
   //" கேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே! " என்று ... பிறகு ஏன் நேரத்தை வீனடிகிரீர்கள்//அவருக்கு கேள்வி கேட்கமட்டும் தான் தெரியும்குறது ஒருபுறமிருந்தாலும்,கேட்குற கேள்விக்குட அறிவுக்கு பொருந்தாத அர்த்தமில்லா கேள்வியை கேட்குரார்னு மக்களுக்கு புரியனுமில்லையா,ஏதோ பக்க பக்கமா கட்டுரை எழுதுறத பார்த்து மக்கள் இவர் பக்கம் உண்மை இருப்பதாக நினைத்துவிட கூடாதில்லையா.

   தொடர்ந்து தொடர்பில் இருங்கள் இன்ஷா அல்லாஹ்..

   Delete