கண்ணா மோடி,10000 புர்க்கா வாங்க ஆசையா? -100 வது பதிவு

Thursday, September 26, 2013
2014 தேர்தலில் எப்படியாவாது பிரதமராகிவிட வேண்டும் என்கின்ற முனைப்போடு செயல்படுகிறார்கள் மோடியும் அவரது சகாக்களும். என்னத்தான் முஸ்லிம்கள் மேல் இந்த பாசிச,காவி தீவிரவாத கும்பலுக்கு வெறி இருந்தாலும்,அதை தற்பொழுது நேரடியாக காட்ட முடியாத நெருக்கடியான நேரம்.இந்நேரத்தில் அவர்களுக்கு முஸ்லிம்களின் ஆதரவு தேவை. அதை எப்படியாவது, எவ்வளவு பாடுபட்டாலும் பரவாயில்லை பாதியில் பாதி முஸ்லிம்கள் ஓட்டுகளையாவது பொறுக்கி ஆகவேண்டும் என்கின்ற நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் பா.ஜ.கட்சியினர்.


2002 ல் குஜராத்தில் நடந்த படுகொலைகளை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.மற்ற சமூதயத்தவர்களுக்கு,கலவரத்தில் மக்கள் கொல்லப்பட்டனர் என்பது வெறும் செய்தி,ஆனால் முஸ்லிம்களுக்கு மனதில் ஆறாத வடு.2500 பேர் (அரசு கணக்கெடுப்பின் படி,கணக்கில் வராதது எத்தனையோ) கோத்ரா ரயில் எரிப்பு என்கின்ற போலி காரணத்தைகாட்டி,முஸ்லிம் குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் என்று அனைவரையும் கொன்று குவித்தது இந்த மோடி அரசு.பல ஆயிரக் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு அகதிகள் ஆயினர்.

தாங்களும் இந்நாட்டின் குடிமக்கள்,ஒரு ஹிந்துவுக்கு இந்த நாட்டில் உள்ள அதே உரிமை தனக்கும் உண்டு என்றும்,மாற்று மதத்தவர்கள் படிப்பறிவில்,வேலை வாய்ப்பில் முன்னேறியது போல தானும் முன்னேற வழி வகை உண்டு,சதி,மத வேறுபாடுகள் இல்லாமல் தன்னை நடத்துவார்கள் என்றும் நினைத்துக் கொண்டு, தனது  மாநிலத்தை ஆளப்போகும் இந்த அரசியல் கட்சியை நம்பி ஓட்டளித்தானே ஒரு சாதாரண முஸ்லிம்,அவனின் மன நிலை என்னவாக இருக்கும்.

கடந்த இந்த 11 வருடங்களில் கலவரம்,கலவரம் என்று நேரடியாகவும், மறைவாகவும் முஸ்லிம்களின் மேல் வேண்டும் என்றே  திட்டமிட்டு போர் தொடுக்கிறது இந்த பாசிச,காவி தீவிரவாத கும்பல்.

வேண்டுமென்றே ஒரு கலவரம் நடத்துவது,அதில் முஸ்லிம்களை கொல்வது,பின் முஸ்லிம்களையே விசாரணைக்கு அழைத்து சென்று காலம் முழுக்க அவர்களை சிறையிலே வேதனையோடு வாழ செய்வது இவைகள் தான் இவர்களின் கடந்த கால,நிகழ் கால,எதிர்கால சாதனைகள்.இவர்களை நம்பும் தன சமூதாயத்திர்காவது ஏதாவது செய்வார்களா என்றால் ஒரு சல்லி காசுக்கு புரோஜனம் கிடையாது.

மீண்டும் முதல் பத்தியின் செய்திக்கு வருவோம்,
முஸ்லிம்களை எப்படியாவது கெஞ்சி,கொஞ்சி,இந்த ஊடகத்துறையின் வாயிலாக சில பொய்களை காக்க வைத்து,இந்த நாடே இந்த மோடியை தான் பிரதமராக எதிர்பார்கிறது என கருத்து திணிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

நாங்கள் சமத்துவம் பேசும் சண்முகசுந்தரம் என்று என்னதான் இவர்கள் வேஷம் போட்டாலும் தான் போலிகள் என்பதை தங்களை அறியாமலே பளிச்சென்று காட்டிவிடும் வெத்து வேட்டுகள் இவர்கள்.

ரமளானில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி என்பது எப்பொழுது எல்லாம் அரசியல் கட்சிகளின் வியாபாரமாக,விளம்பரமாக போய்விட்டது,அதற்க்கு மோடியும் விதி விலக்கல்ல.ஒரு ரமலான் நிகழ்ச்சியிலே திருவாளர் மோடி அவர்கள் முஸ்லிம்களுக்கு நான் அதை செய்தேனாக்கும்,இதை செய்தேனாக்கும்,என் ஆட்சியிலே இவ்வளவு முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளேன்,என்னை எதிர்க்கும் முஸ்லிம்கள் குறைவு,நான் என்றென்றும் முஸ்லிம்களின் நண்பன் என்றெல்லாம் பக்கம் பக்கமாக கதை அளந்து விட்டுகொண்டிருந்தார்.அந்த நிகழ்ச்சியிலேயே தெரிந்தது இவர்கள் பேசும் சமத்துவம் வாயைதாண்டி செல்லாது என்று.

மோடி உரையாடி முடித்ததும் ஒரு முஸ்லிம் சகோதரர் எழுந்து தன் தொப்பியை தந்து அணிந்து கொள்ளும் படி எவ்வளவோ சொல்லியும் அவர் கடைசி வரையில் அணியவே இல்லை.

கருத்து திணிப்பு உதாரணம் 1:

மோடி கலந்து கொண்டு உரையாற்றவுள்ள திருச்சி மாநாட்டிற்கு வருகை தருவதற்காக ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆனலைன் வாயிலாக தங்களது பெயர்களை 10ரூபாய் பணம் கட்டி பதிவு செய்துள்ளனர் என்று கதையளந்தது தான் இதில் உச்சகட்ட ஜால்ராவாக இருந்தது.  

1லட்சம பேர் அளவிற்கு ஆனலைன் வாயிலாக இவர்களது மாநாட்டிற்கு வருகை தர பதிவு செய்யக்கூடிய அளவிற்கா இவர்களது தொண்டர்கள் கணினியுடனும், இணையதளத்துடனும் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். அந்த அளவிற்கா அனைத்து விஷயங்களையும் இணையதளத்தில் அப்டேட்டாக இவர்கள் வைத்துள்ளார்கள் என்று ஆச்சர்யப்பட்டுப்போய் அவர்களது இணையதளத்தை விசிட் செய்தோம்.

 பிஜேபியின் தமிழக இணையதளத்தில் நிகழ்ச்சிகள் என்ற பகுதியில் அவர்களது அன்றாட நிகழ்ச்சிகள் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. அதில் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட நிகழ்ச்சியை பார்த்தால் காரித்துப்பி விடுவீர்கள். ஆம்! கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி மின்வெட்டைக் கண்டித்து மாணவர்களிடம் கையெழுத்து வாங்கிய செய்திதான் கடைசியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் ஆண்டுகளுக்கு முன்பாக அப்டேட் செய்யப்பட்டதுதான் இவர்களது லேட்டஸ்ட் செய்தியாம்.

இந்த லட்சணத்தில்தான் இவர்களது இணையதள அப்டேட் இருக்கின்றது என்றால் இத்தகைய சூரப்புலிகள்தான் ஆன்லைன் வாயிலாக ஒரு லட்சம் பேர்களை பதிவு செய்துள்ளார்களாம். கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது.  இப்படிப்பட்ட நிலையில் இருப்பவர்களைத்தான் ஒன்றுமில்லாத விஷயங்களைக்கூறி, பொய் செய்திகளைப் புனைந்து மிகப்பெரிய சாதனை மன்னர்களைப் போல காட்ட முயல்கின்றனர். இதிலிருந்த இந்த மீடியாக்களின் கோர புத்தி தெளிவாகின்றது.


கருத்து திணிப்பு உதாரணம் 2:

மோடி கூட்டத்துக்கு முஸ்லிம் பெண்கள் அணியும் 10,000 'புர்கா' ஆர்டர் : பில்லுடன் ஆதாரங்கள் அம்பலம்!
சப்ளை செய்த கடைக்காரர் இது வெறும் 'கொட்டேஷன்' தான் என்கிறார் - திக் விஜய் சிங் ஆதாரங்களோடு உண்மையை போட்டு உடைத்துள்ளார். 

அநியாயங்களை ஆதாரங்களோடு செய்து விட்டு இன்று 10000 புர்காக்களை ஆர்டர் செய்து கூட்டத்தில் இந்துத்வா பெண்களுக்கு புர்காவை மாட்டி விட்டு "எங்களுக்கும் முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்" என்ற பொய்யுரை மோடிக்கு தேவையா? முன்பு அமிதாப் பச்சன் மோடியை ஆதரிப்பதாக ஒரு போலி வீடியோ இணையத்தில் விட்டு அங்கும் மோடி மூக்கறுபட்டார். 20000 பேர் கூட அமர முடியாத திருச்சி மாநாட்டுக்கு ஒரு லட்சம் பேர் ஆன்லைனில் பதிந்துள்ளதாக ஒரு பொய்யுரை. இணையத்தில் அதிகம் தேடப்படும் ஒருவர் மோடி என்ற பொய்யுரை: குஜராத் ஒளிர்கிறது என்ற பொய்யுரை:

அப்பப்பா...... எத்தனை பொய்கள்.


இவர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இத்தனை பொய்யுரைகள் என்றால் பிரதமராகி விட்டால் பொய்களையே தனது ஆசானாக வைத்து ஆட்சி நடத்துவார். இந்திய தேசத்தை படு பாதாளத்துக்கு கொண்டு செல்ல அந்நிய நாட்டு படையெடுப்பு தேவையில்லை. மோடியை பிரதமராக்கினாலேயே நமது நாடு அதள பாதாளத்துக்கு சென்று விடும். நாட்டின் முன்னேற்றத்தில் அக்கறை உள்ள தேச பக்தர்கள் மோடியை பாராளுமன்றத்துக்கு அல்ல திஹார் ஜெயிலுக்கு அனுப்ப முயற்சிக்க வேண்டும்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

1 comment: