அப்பாவி முஸ்லிம்கள் கைதும் ஷிண்டேவின் கடிதமும்

Monday, September 30, 2013
தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் கைது செய்யப்படமால் பார்த்துக் கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் மாநில முதல்வர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அப்பாவி முஸ்லிம் வாலிபர்கள் சட்டத்தால் கொடுமைப்படுத்தப்படுவதாக மத்திய அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. தீவிரவாதம் என்ற பெயரில் எந்த அப்பாவி முஸ்லிமும் தவறுதலாக கைது செய்யப்படக் கூடாது. தங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு, தாங்கள் வேண்டும் என்றே குறிவைக்கப்படுவதாக சில சிறுபான்மையின வாலிபர்கள் கருதுகின்றனர்.
தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றங்களுக்கு சிறப்பு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு தீவிரவாத வழக்குகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும். தீவிரவாதத்தை ஒடுக்கும்போது சமுதாய நல்லிணக்கத்தை மனதில் வைத்து சட்ட அதிகாரிகள் செயல்பட வேண்டும். தவறுதலாக கைது செய்யப்படும் சிறுபான்மையினரை உடனே விடுவிப்பதுடன் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மேலும் அவர்களை தவறுதலாக கைது செய்யும் போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களின் மனசாட்சி:
மத்திய உள்துறை அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு முதலில் பாராட்டுக்கள்.
தேர்தல் வருகிறது அதனால் இப்படி அறிவிப்பு செய்றாங்கப்பா என்று சிலர் சொல்வதை பொய் படுத்தும் விதமாக உண்மையாகவே முஸ்லிம்களின் நலன் கருதி இந்திய அரசு செயல் பட வேண்டும்.
இந்த அறிக்கை வெறும் பெயரளவில் இல்லாமல் உணமையாகவே செயல் பட வேண்டும்.
ஆளும் அரசு எந்த கட்சியாக இருந்தாலும் முஸ்லிம்கள் என்ன எதிர்பார்கிறார்கள் அரசிடம்? கலவரம் போன்ற வன்முறை நிகழும்போது உயிருக்கும்,உடமைகளுக்கும் உரிய பாதுகாப்பு,பொய் காரணங்களை சொல்லி கைது செய்யாமல் இருப்பது.பிற சமுதாய மக்களுக்கு தருவது போல படிப்பிலே,வேலை வாய்ப்பிலே உரிய இட ஒதுக்கிடு அவ்வளவே..
முஸ்லிம்களை தேடி வரவேண்டியது இல்லை,விளம்பரம் தேவை இல்லை.மேலே சொன்னவற்றை செய்யும் நல் அரசுக்கு முஸ்லிம்கள் தானாகவே வந்து வாக்களிப்பார்கள்.  

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

3 comments:

  1. What you say about this

    http://www.dailymail.co.uk/news/article-2437201/Kenya-Westgate-mall-attack-Al-Shabaab-terrorists-shot-children-5-times.html

    ReplyDelete
    Replies
    1. தவறுகள் யார் செய்தாலும் தவறு தான்,அது இஸ்லாமியராக இருந்தாலும் சரியே....

      இஸ்லாம் சொல்கிறது:

      ஒரு அப்பாவியை அநியாயமாக கொன்றவன்,உலகில் உள்ள அனைவரையும் கொன்றதற்கு சமம் என்று(உலகில் உள்ள அனைவரையும் கொள்ளும் பாவம்,ஒரு வனை கொள்வதற்கு சமம்.அவ்வளவு பாவங்களை சம்பாதித் கொண்டான்.அவனுக்கு கொடுமையான நரகம் தான் பரிசு)

      இந்தியாவாகட்டும்,அல்லது வேறு பிற நாடாக இருக்கட்டும் ஏதானும் போராட்டமோ,பயங்கரவாத தாக்குதல் நடந்தாலோ இஸ்லாத்தோடு தான் முதலில் இணைத்து பேசப்படும்,பின் மெல்ல மெல்ல வருடங்கள் உருண்டதும் உண்மைகள் தெரியவரும் அது முஸ்லிம்கள் செய்த தாக்குதல் இல்லை என்று.பொறுத்து இருந்து பார்ப்போம் இந்த கென்யா தாக்குதலுக்கு காலம் என்ன உண்மையை மறைத்துவைத்துள்ளது என.


      முஸ்லிம்கள் செய்தார்கள் என்ற செய்தி வந்ததால் இக்கேள்வி கேட்டிர்கள்,இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்(கிழே உள்ள லிங்கை படிக்கவும்)

      http://tvpmuslim.blogspot.in/2012/06/blog-post_30.html

      http://tvpmuslim.blogspot.in/2012/07/7-photo-gallery.html

      Delete
  2. paarpponga bai!
    kadthamaa eluthanum..
    nadavadikkai eduththaal ennaa..!?
    athikaarikal meethu...

    ReplyDelete