இதை நிரூபித்தால் மோடிக்கு முஸ்லிம்கள் ஆதரவு -TNTJ நேரடி சவால்

Thursday, October 3, 2013
thookki-valiyum-kaatchi

ஒரு வழியாக நரபலி மோடி குறித்து காவிகளும், மீடியாக்களும் கொடுத்த பில்டப்கள் கடந்த 26.09.13 வியாழன் இரவோடு மோடி மாநாடு முடிந்ததோடு முடிவுக்கு வந்தது.

மோடியின் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள முப்பதாயிரம் பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளார்கள்; நாற்பதாயிரம்; ஐம்பதாயிரம் என்று சொல்லிக்கொண்டே போய் கடைசியில் ஒரு லட்சமாகி அது இறுதியில் ஒன்றரை லட்சம் பேரில் வந்து நின்றது.
ஒன்றரை லட்சம் பேர் ரூ10 கட்டணமாகக் கட்டி ஆன்லைன் வாயிலாகப் பதிவு செய்துள்ளார்கள் என்று மோடி மஸ்தான் வேலையை காவிக் கயவர்களோடு சேர்ந்து கொண்டு மீடியாக் கயவர்களும் அரங்கேற்றினர்.
ஆனால் வந்த கூட்டத்தின் அளவு என்ன?
சுமார் 15ஆயிரத்திற்கு நெருக்கமான அளவிலான இருக்கைகளே வாடகைக்கு எடுக்கப்பட்டு அதிலும் அந்த இருக்கைகளும் கூட முழுவதுமாக நிரப்ப வழியில்லாமல் பல இருக்கைகள் காலியானதாக இருந்ததும், அந்த இருக்கைகளையும் மாநாட்டுத் திடலை நிரப்பும் அளவிற்கு போட்டாக வேண்டும் என்ற அடிப்படையில் மிகுந்த இடைவெளிவிட்டு போட்டு, அவைகளுக்கு மத்தியில் பெரிய அளவிலான இடைவெளிவிட்டு மாநாட்டு திடலை இருக்கைகளால் நிரப்ப படுபிரயத்தனம் எடுத்துள்ளது காவிக்கூட்டம் என்பது அந்த நிகழ்ச்சியின் வீடியோ பதிவைக் காணும்போது நன்றாகத் தெரிந்தது.
கூட்டம் கூடியது போல காட்டுவதற்காக எவ்வித மாயாஜாலங்களையெல்லாம் காட்டுவதற்கு இவர்கள் முயற்சித்துள்ளார்கள் என்ற விஷயம் இதன் மூலம் அம்பலத்திற்கு வந்தது.
அடுத்ததாக கூடிய கூட்டம் குறித்து மீடியாக்கள் காவிக் கயவர்களுக்கு ஆதரவாக ஜால்ரா தட்டினர். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறியவர்கள் மறுகணமே சில நிமிடத்துளிகளில் நாலரை லட்சம் பேர் கூடியதாக நாக்கூசாமல் புளுகித் தள்ளினர்.
உத்தரகாண்டில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் மக்களை பத்து டாடா சுமோ காரில் போய் காப்பாற்றியதாக கதை விட்ட இந்தக் கயவர்களுக்கு பத்தாயிரத்தை நாலரை லட்சமாகச் சித்தரிப்பது சின்ன விஷயம் தான்.
ரஜினி காந்த் தனது ரசிகர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டு ரஜினியின் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஆதரவு தெரிவித்தும் பதினைந்தாயிரம் பேரைத் தான் கூட்ட முடிந்தது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ரஜினிகாந்த் நிகழ்ச்சி முடிந்ததும் மோடியை சந்திக்க திருச்சியில் முகாமிட்டுள்ளார் என்று இவர்கள் பரப்பினார்கள். தனது ரசிகர்கள் கூடினாலே ஐம்பதாயிரம் பேர் வந்திருக்க வேண்டுமே? நம் ரசிகர்கள் கூட நரபலி மோடியை ஏற்கவில்லை என்பதை இந்தக் கூட்டத்தில் இருந்து ரஜினி மதிப்பிட்டதில் இருந்தும் இதை அறியலாம்.
இதனால் தான் திருச்சியில் முகாமிட்டுள்ளதாக இவர்கள் சொன்னபடி ரஜினிகாந்த் மோடியை சந்திக்காமலே நழுவிவிட்டார்.
மேலும் பச்சைமுத்து என்ற சாதிக்கட்சி நடத்தும் பாரி வேந்தர் தனது கல்லூரியில் இருந்து மாணவர்களை அனுப்பியும் பேருந்துகளைக் கொடுத்தும் பதினைந்தாயிரம் பேர்தான் வந்தனர் என்றால் பீஜேபிக்காக நரபலி மோடிக்காக வந்தவர்கள் ஆயிரம் கூட தேற மாட்டார்கள் என்பது உறுதியாகும்.
நாம் அறைகூவலாகவே சொல்கிறோம்.
அந்த இடத்துக்கு நாங்கள் வருகிறோம். தினத்தந்தியும் லோட்டஸ் டிவியும் பாஜகவும் சொன்னது போல் நாலரை லட்சம் சேர்களை போட்டுக் காட்டினால் மோடியே பிரதமராக நாங்களும் ஆதரவு தருகிறோம்.
அவ்வளவு வேண்டாம் ஆன்லைனில் பதிவு செய்த இரண்டரை லட்சம் பேருக்கு இரண்டரை லட்சம் சேர்களைப் போட்டுக் காட்டினால் கூட போதும். நாமும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்கிறோம்.
அல்லது இந்த நாலரை லட்சம் பேர் கூடிய அதிசய மாநாட்டுக்காக எவ்வளவு செய்தார்களோ அந்த செலவை அவர்கள் காட்டும் கணக்கின் அடிப்படையில் நாங்கள் தந்து விடுகிறோம்.
தினத்தந்தியும், லோட்டஸ் டிவியும், பாஜகவும் தனியாகவோ கூட்டாகவோ இந்த அறைகூவலை ஏற்கத்தயாரா?
அவ்வளவு வேண்டாம் அதில் பாதியளவு ஒன்னே கால் லட்சம் சேர்களை போட்டுக்காட்டத் தயாரா?
நாம் இப்படி சவால் விடுவதற்கு முன்னர் அந்த இடத்தில் எத்தனை சேர் போட முடியும் என்று மாநாட்டுக்கு மறுநாள் கள ஆய்வு செய்து உறுதி செய்து கொண்டுதான் இந்த சவாலை விடுகிறோம்.
கள ஆய்வு செய்யும் காட்சியை காணுங்கள்.
m1
ஒவ்வொரு பிளாக்குக்கும் இடையே ஒரு லாரி போகும் அளவுக்கு இடைவெளி விட்டு பாஜக போட்டது போல் சேர்களைப் போட்டால் ஒரு வரிசைக்கும் மறுவரிசைக்கும் இடையே இன்னொரு வரிசை அளவுக்கு இடைவெளி விட்டால் அதிகபட்சம் முப்பதாயிரம் சேர்களைக் கூட போட முடியாது என்பதுதான் உண்மை.
இந்தப் புளுகர்களுக்கு இதை பகிரங்க அறைகூவலாக சொல்லிக் கொள்கிறோம்.
THANKS:www.tntj.net

TNTJ வின் இந்த சவாலை ஏற்க பா.ஜ.க தயாரா பொறுத்திருந்து பார்ப்போம்!!!!

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

3 comments:

 1. neenga yen ithellam nondiedukireenga bai?!

  ReplyDelete
  Replies
  1. muthu kumaran :
   //neenga yen ithellam nondiedukireenga bai?!//

   அடுத்த பிரதமர்,இந்தியாவை இவர் தான் காக்க வேண்டும் என்றெல்லாம் உங்களை போன்றவர்களும்,மீடியாக்களும் ஏக பட்ட பில்டப்புகளை கொடுத்து நடத்திய தெருமுனை கூட்டம் மன்னிக்கவும் மிகப்பெரிய மாநாட்டின் அழகை வேறு யார் தான் சொல்வது.

   Delete
 2. கோயிலா? கழிவறையா? – மோடியின் கருத்துக்கு தொகாடியா கண்டனம்! காங்கிரஸ் எதிர்கேள்வி!

  4 Oct 2013
  புதுடெல்லி: கோவில்களைக் கட்டுவதை விட கழிவறைகளைக் கட்டுவதற்கே முக்கியத்துவம் தர வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ள கருத்துக்கு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான விசுவஹிந்து பரிஷத்தின் சர்வதேச செயல் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொகாடியா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நாட்டில் சிறப்பான சுகாதார வசதிகளுக்கான தேவை குறித்து நரேந்திர மோடி கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கோவில்கள் குறித்து தேவையின்றிகுறிப்பிட்டுள்ளதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். சிறந்த சுகாதார வசதிகள் வேண்டும் என்பதில் எங்களுக்கும் நம்பிக்கை உண்டு. ஆனால், இந்த விவகாரத்தில் கோவில்களை இழுத்திருப்பது அவசியமற்றது. இது ஹிந்து சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும்.இதேபோன்றதொரு கருத்தை காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியபோது பாஜக அதை வன்மையாகக் கண்டித்தது. இப்போது, தனது பிரதமர் வேட்பாளரே இவ்வாறு பேசியுள்ளதால் அவரது கருத்தையும் பாஜக கண்டிக்க வேண்டும் என்றார்தொகாடியா.
  இந்நிலையில், மோடியின் கருத்து தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது: கோவில்களைக் கட்டுவதற்கு முன் கழிவறைகளைக் கட்ட வேண்டும் என்று பேச வேண்டிய கட்டாயம் மோடிக்கு ஏற்பட்டுள்ளது. எனினும் அவருக்கு இந்தஞானோதயம் அயோத்தியில் 1992இல் பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்கு முன் ஏற்பட்டிருக்க வேண்டும். பிரதமர் பதவி மீதான கண்மூடித்தனமான ஆசை காரணமாகவே அவர் இப்போது இவ்வாறு பேச நேர்ந்துள்ளது ஜெய்ராம் ரமேஷ்தெரிவித்தார்.
  இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங், டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் “அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் பொதுக் கழிவறை வளாகத்தைக் கட்ட வேண்டும். இப்பிரச்னைக்குத் தீர்வாக இதைச் செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான மறைந்த கான்ஷிராம் கருத்து தெரிவித்தார். அப்போது அவருக்கு பாஜக, ஆர்எஸ்எஸ், விஎச்பி ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தன. அதேபோல், இப்போது மோடிக்கு அவை கண்டனம் தெரிவிக்குமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லா கூறுகையில், “”மோடி ஒரு ஹிந்துத் தலைவர் அல்ல. ஹிந்துக்களைத் தவறாக வழிநடத்தி வாக்குகளைக் கவர்வதற்காக அவரை அப்படிக் காட்டுகிறார்கள். கோவில்கள் மற்றும் கழிவறைகள் குறித்து ஜெய்ராம் ரமேஷ் கருத்து கூறியபோது உடனடியாக அவரை விமர்சித்த பாஜக, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியது. இதையே மோடி கூறும்போது பாஜக வாய் திறக்காதது ஏன்?” என்றார்.

  thanks:http://www.thoothuonline.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9/

  ReplyDelete