இந்தியாவை விட்டு போய்டுவேன்-கமல் நடித்ததில் பிடித்தது

Monday, October 7, 2013
"இனி ஒரு பிரச்னை இது போன்று வந்தால் நான் இந்தியாவை விட்டு வேறு நாட்டிற்கு செல்வேன் "இவை சில மாதங்களுக்கு முன் விஸ்வரூபம் தடங்களின் பொழுது கமல் பேசிய வார்த்தைகள்,இவற்றை அவ்வளவு எளிதில் நாம் மறந்து விட முடியாது.


கண் கலங்கி,நாவுகள் துடி துடிக்க.கேட்பவர் மனதில் அதிர்வை ஏற்படுத்தும் வார்த்தைகளை பேசினார் கமல்.என் வீட்டை விட்டு நாட்டை விட்டு போகிறேன் என்று வெள்ளந்தியாக பேசினார்.ஒரு கலைஞனுக்கு பிராச்சனையா?என்று அப்பாவி மக்கள்(ரசிகர்கள்) சிலர் தன் சொத்து பத்திரங்களையும்,வீட்டு சாவியையும் கமலுக்கு அனுப்பி வைத்ததாக கமலே கூறினார்(இதுவெல்லாம் உண்மையா பொய்யா என்று கமலுக்கு தெரியும்).

கமல் அழுதும் அழுகாமல் பேசும் வீடியோவை எல்லா தொலைக்காட்சி  சேனல்களும் திரும்ப,திரும்ப ஒளிபரப்பியது.விஸ்வரூபம் என்கின்ற ஒற்றை பிரச்னை தான் தமிழகத்தின் ஒட்டுமொத்த பிரச்னை போல காட்டியது இந்த கேடு கெட்ட மீடியாக்கள்.

இந்த பிரச்னையை முஸ்லிம்,ஹிந்து பிரச்சனையாக்க காவிகளும்,காவி  வெறி பிடித்த மீடியாக்களும் பெரிதும் பாடுபட்டன.இதற்க்கு கமல் நேரடியாக உதவாவிட்டாலும்,மறைமுகமாக உதவினார்.அதற்க்கு தகுந்தார் போலவே தினம் ஒரு ஸ்டேமென்ட் விட்டு கொண்டிருந்தார்.முஸ்லிம்கள் என்னிடம் அண்ணனாக பழகினால் என்ன,தம்பியாக பழகினால் என்ன எனக்கு தேவை என் படம் ரிலிஸ் ஆகி ஓடி நான் சம்பாதிக்க வேண்டும்.சமூக பொறுப்பாவது மன்னாங்ககட்டியாவது என்பதைப் போல கமல் நடந்துக் கொண்டார்.

நான் தமிழன்,நான் இந்தியன் என்றெல்லாம் மீடியாவின் முன்னிலையில் உணர்வை தூண்டிவிடக்கூடிய அளவில் பேசினார் கமல்.போனா போய் தொலையுது அந்த படத்த ரிலிஸ் பண்ண விடுவோம் என்று முஸ்லிம்களே முடிவுக்கு வந்தனர்.இத்தனைக்கும் இஸ்லாமியர்கள் வெறுக்கும் காட்சிகளும்,இஸ்லாமியர்களை வெறுக்க வைக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. 

இப்படியெல்லாம் நாள் ஒரு பேசும்,பொழுதொரு அழுகையுமாக காட்சி தந்த கமல்,சமீபத்தில் ஒரு உண்மையான செய்தியை வெளியிட்டுள்ளார்.

"விஸ்வரூபம் படத்தை வெளியிடுவதில் ஏற்பட்ட தொல்லைகளை நினைத்து கோபத்தில் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றேன். ஆனால் நாட்டை விட்டு போக மாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார்"

கமலுக்கு சில கேள்விகள் : 


 • கோபத்தில் பேசுபவர்கள் உங்களை போல அழுது புலம்புவார்களா?(திட்டமிட்டு வேண்டும் என்று தான் பேசியுள்ளீர்கள்) 
 • ஒரு வேலை நீங்கள் கோபத்தில் தான் பேசினீர்கள் என்று வைத்துக் கொண்டாலும்,படம் ரிலிஸ் ஆனதும் அதை சொல்ல தவறியது ஏன் ?
 • விஸ்வரூபம்-2 தயாராகி சில மாதங்களில் வெளி வரவிருக்கும் இந்த தருணத்தில் இது போன்ற செய்தியை தாங்களே சொன்னதன் காரணம் என்ன ? 
 • மீண்டும் ஒரு பிரச்னை உங்கள் படத்திற்கு வந்தால் தமிழன்,இந்தியன் என்று பேசி முஸ்லிம்களை ஓரம்கட்ட நாடுகிறீர்களா?


இந்த செய்திக்கு பின் உள்ள உண்மைகள் என்ன:

முன்னரே  சொன்னது போல தன் சரக்கு போனியாக வேண்டும் என்பதற்காக நடிப்பின் எந்த எல்லைக்கும் சென்று மக்களை ஏமாற்ற  தயங்காதவர் என்பதை தனக்கு தானே முரண்பட்டு நிருபித்துள்ளார் கமல்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

5 comments:

 1. பேய்கள் நாடான்டால்
  சாதான்கள் வேதம் ஓதுமடி என்ர பழ மொழி நினைவுக்கு வருகிரது

  ReplyDelete
 2. எப்போ இடத்தை காலி பண்ணப் போறாராம்....:-)

  ReplyDelete