நபிகள் நாயகத்தை காமுகராக சித்தரித்தப்படம்-Video attached

Sunday, September 16, 2012
என்னை நீங்கள் உங்களுடைய மனைவி,மக்கள்,உங்கள் செல்வம் உங்கள் உயிர் இவை எல்லாவற்றையும் விட என்னை அதிகமாக நேசிக்காதவரையில் நீங்கள் உண்மை முஸ்லிமாகிவிடமுடியாது- நபி மொழி


படத்தின் TRAILER வந்ததிர்க்கே இவ்வளவு எதிர்பென்றால்,படம் வெளிவந்தால் ??????????

இந்திய அரசு இந்த TRAILER ய் நேற்று முதல் தடை செய்துவிட்டது.  எகிப்து, லிபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்த நபர் மாயமாகியுள்ளதோடு அவர் குறித்த தகவல்களும் போலியானவை என்பது துலாம்பரமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் தயாரிப்பாளர் தம்மை தவறாக வழி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படத்தை தயாரித்து இயக்கியவரின் பெயர் சாம் பசில் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது   உண்மையான பெயர் அதுவல்ல என தற்போது தெரியவந்துள்ளது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டில் 59 நடிகர்கள், திரைக்கு பின்னால் 45 தொழிநுட்பவியலாளர்கள் ஊழியர்களுடன் 2 மணி நேரம் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இது லொஸ் ஏஞ்சல்சிலுள்ள ஒரு திரையரங்கில் கடந்த ஆண்டு சுமார் காலியான ஆசனங்களுடன் ஒரே ஒரு முறை திரையிடப்பட்டுள்ளது. எனினும் இந்த திரைப்படத்தின் 14 நிமிடங்கள் ஓடும் மாதிரி திரைப்படம் கடந்த ஜூனில்  யூடியுப் சமூக இணைதளத்திற்கு  சாம்பஸில் என்பவர் அனுப்பியுள்ளார்.
இது மிக மோசமாக தயாரிக்கப்பட்டு இயக்கப்பட்ட மோசமான நடிப்புடன் கூடிய திரைப்படம் என விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் இதில் முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் பல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் தந்தையற்றவர், கழுதை, முதல் முஸ்லிம் மிருகம், தன்னினச் சேர்க்கையாளர் என பல மோசமான வார்த்தைகளால் இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.
எனினும் இந்த திரைப்படத்தை எகிப்தின் அல் நாஸ் தொலைக்காட்சி அரபு மொழி பெயர்ப்புடன் வெளியிட்டதைத் தொடர்ந்து முஸ்லிம் நாடுகளில் திரைப்படத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின.
இந்த திரைப்படத்தை தயாரித்த சாம் பசில் என்பவர் 100க்கும் மேற்பட்ட   இஸ்ரேல் யூதர்களின் நிதியுதவியுடன் 5 மில்லியன் டொலர் செலவில் தயாரிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இஸ்ரேல் இதனை மறுத்துள்ளது. இவ்வளவு தொகை நிதியுதவி தமது நாட்டில் இருந்து செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளது(அப்படியே நம்பிட்டோம்).
எனினும் இந்த சாம் பசில் என்வர் குறித்து விபரம் தேடியுள்ள ஏ.பி. செய்திச் சேவை அவரது முகவரியில் நகல்லா பஸ்ஸலி நகல்லா என்பவரையே தொடர்பு கொண்டதாகவும் அந்த நபர் இந்த திரைப்படத்தின் முகாமையாளராக செயற்பட்டதாகவும். தாம் பசில் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார் (யார் இவர் என்பதை அடுத்த பதிவில் பாப்போம் இன்ஷா அல்லாஹ்).
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பணியாற்றியவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தாம் தவறாக வழிநடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த திரைப்படத்தில் நடித்த சின்டி லீ கார்சியா, தாம் கடந்த புதன்கிழமை பசிலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர் பயந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் உணர்வுபூர்வமாக பொங்கி இருக்ககூடிய இந்நேரத்தில் நாம் செய்வதில் சரி எது?தவறு எது?என்று சீர்த்தூக்கி பார்க்கவேண்டும். 


சரி:
 • எதிர்ப்பை காண்பிப்பது.
 • தான் மட்டும் அல்லாது தன் சகோதர சகோதரிகளுக்கும் அந்த உணர்வை ஊட்டுவது.
 • அந்த தரம் கெட்ட சினிமாவை வெளியிட  விடாமல் தடுப்பது.
 • நீங்கள் எது வேண்டுமானாலும் செய்து விட்டு போக முஸ்லிம்கள் பொறம்போக்குகள் அல்ல என்று உணர்த்துவது.
 • இனி இதுபோன்று முஸ்லிம்களுக்கு எதிரான நிகழ்வுகள் மீண்டும் நடக்குமேயானால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும் என்று காட்டியது.


தவறு:
 • எதிர்ப்பை காண்பித்தாலும் அதற்கும் ஒரு வரைமுறை உண்டு.இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியர்களுக்கும் ஏன் தனக்கெதிராக எதிரிகள் தங்கள் உயிரை குடிக்க தயாராக இருந்தப்பொழுதும் அவர்களின் தூதர்களை நபி(ஸல்)அவர்கள் ஒன்றும் செய்யவில்லை இன்று தூதரகத்தையும்,தூதர்களையும் நாசப்படுத்துவதை முஸ்லிம்கள்  தவறு என்பதை உணர வேண்டும்.
 • ஆர்பாட்டம் என்ற பெயரில் அத்து மீறி பொதுமக்களுக்கு இடையூறு செய்வதை(TRAFFIC) கைவிட வேண்டும்.
 • இளைஞர்கள் ஆர்வகோலாராக மாறி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் (கூச்சல் குழப்பம்,தூதரகத்தின் மேல் கல் எரிவது )செயலை செய்யக்கூடாது.
 • எல்லாவற்றிர்க்கும் மேலாக இஸ்லாமியர்கள் பலர் அந்த குழப்பவாதியின் படத்தை அதில் என்ன தான் அப்படி உள்ளது என்பதை பார்பதற்காக YOUTUBE ல் பார்கின்றனர்.அதனால் அந்த படத்தின் HITCOUNTER கூடி அதற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படகூடும் .ஆகையால் அதை பார்ப்பதை விட்டும் விலகி இருப்பது சிறந்தது.  

கோரிக்கை :
மானங்கெட்ட YOUTUBE தன் இணையதள விளம்பரத்திற்கு இந்த வீடியோவை நன்றாக பயன்படுத்தி வருகின்றதையும் நாம் வன்மையாக கண்டிக்க வேண்டும்.குறைந்தது இன்று ஒரு நாலாவது அந்த இணையதளத்தை நாம் பார்க்காமல் நம் எதிர்ப்பை தெரிவிப்போம்.இதன் மூலம் ஒரு சிறு நஷ்டத்தையேனும் நாம் விளைவிப்போம். 

அந்த கேடு கெட்ட படத்தை தான் இங்கு கிழே சேர்த்துள்ளதாக நினைத்தால் தவறு பின் என்ன படம் அது ?நீங்களே பாருங்க ...
இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

22 comments:

 1. சலாம் சகோ.தி.முஸ்லிம்..,
  மிக நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றி..!
  சரி/தவறு இரண்டும் அருமையான பாயிண்ட்ஸ்..!

  ReplyDelete
  Replies
  1. SALAM,
   நன்றி சகோ.இப்பொழுது உங்கள் தளத்தை தான் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்(2012 தீபாவளி : 2 தேதிகளில் 2 கிழமைகளில்..?!).தொடந்து நம் தளத்தோடு தொடர்பில் இருங்கள்

   Delete
 2. - உயிரினும் மேலாக -

  ReplyDelete
 3. - உயிரினும் மேலாக - என்பது உண்மையா?

  ReplyDelete
  Replies
  1. ஆம் உண்மை தான் சகோ.அதிலென்ன சந்தேகம் .....

   Delete
 4. இஸ்லாமியர்கள் பலர் அந்த படத்தை அதில் என்ன தான் அப்படி உள்ளது என்பதை பார்பதற்காக YOUTUBE ல் பார்கின்றனர்.அதனால் அந்த படத்தின் HITCOUNTER கூடி அதற்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்படகூடும் .ஆகையால் அதை பார்ப்பதை விட்டும் விலகி இருப்பது சிறந்தது.

  ReplyDelete
  Replies
  1. சலாம்,
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.தொடர்ந்து நம் தளத்தோடு தொடர்பில் இருங்கள்...

   Delete
 5. அஸ்ஸலாமு அலைக்கும் அருமையான பதிவை தக்க நேரத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம்,
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.தொடர்ந்து நம் தளத்தோடு தொடர்பில் இருங்கள்...

   Delete
 6. //கடந்த 2004ம் ஆண்டு இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை இயக்கிய இணை இயக்குநர் தியோ வான் கொப் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.//

  பதிவில் மேழே உள்ள செய்தி நடந்து வரும் காரணிகளுக்கு சம்பந்தம் இல்லையே

  ReplyDelete
  Replies
  1. SALAM,
   அவ்வாறு தான் கேள்விப்பட்டேன்.தவறுகள் இருந்தால் தக்க சான்றுகளுடன் எடுத்து சொன்னால் அந்த குறிப்பிட்ட செய்தியை நீக்க உதவியாக இருக்கும்...அல்லாஹ் மிக அறிந்தவன் ...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ.

   Delete
 7. கடந்த 2004ம் ஆண்டு இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை இயக்கிய இணை இயக்குநர் தியோ வான் கொப் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  -- What you want to mention by this exactly?

  ReplyDelete
  Replies
  1. SALAM,

   இதன் மூலம் ஏற்பட்ட விளைவை தான் சொல்லியுள்ளேன்.இதுபோன்ற வன் செயல்கள் அது சரியா தவறா என்றால்,நிச்சயம் தவறு...அல்லாஹ் மிக அறிந்தவன் ...உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி சகோ.

   Delete
 8. சலாம் சகோ! செய்திகளோடு கூடிய தேவையான பதிவு. தலைப்பை பார்த்தவுடன் அந்த வீடியோவினை பகிர்ந்திருப்பீர்களோ என நினைத்தேன். அல்லாஹ் போதுமானவன்!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம்,
   தேவையான மாற்றங்கள் செய்துள்ளேன் சகோ.உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி......

   Delete
 9. 1). இது ஒரு ஆபாசமான பதிவோ, அசிங்கமான பதிவோ அல்ல.. சத்தியமாக..

  யூ டியூப் தளத்துக்கும், அதை நடத்திட்டு வர்ர கூகுள் நிறுவனத்துக்கும், அவர்களது “துணிச்சலை”ப் பாராட்டி, நன்றி சொல்லிக்கறோம்! நன்றி ஐயா! நன்றி!!
  டிஸ்கி - இப்ப சொல்லுங்க, இது ஒரு அசிங்கமான பதிவா??

  ---------------------------------------------------------------
  இப்படி கேவலமாக ஒரு மதத்தை தாக்கும் பதிவுகள் தமிழ் மணத்தில் ஏராளம் ஏராளம். உலகம் முழுவதும் ஒரு மதத்தின் நபியை இழிவுபடுத்திய செயலால் கொந்தளிப்பாக இருக்கிறது அப்படி இருக்கும் போது இவர் எழுதுவதை பார்த்தீர்களா? யூ டியூப் அதன் துணிச்சலுக்கும் நன்றியாம்.

  மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

  உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

  please visit: http://tamilnaththam.blogspot.com

  please write: tamilnaaththam@mail.com

  ReplyDelete
  Replies
  1. சலாம்,

   //உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா//சகோதரா உங்கள் உண்மையான ஆவேசம் எனக்கு புரிந்து விட்டது,புரிய வேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி தான்.

   Delete
 10. வீடியோ என்ன வீடியோ. உங்க மதப் புத்தகங்களே முகமதுவை காமுகனாகத்தானே சித்தரிக்குது?

  ReplyDelete
  Replies
  1. பெயர் சொல்ல கூட தைரியம் இல்லமால் பெயர் மறைத்து விஷ கருத்துக்கள் சொல்லும் நண்பரே,காமுகனாக சித்தரிக்கிறது என்று பொத்தம் பொதுவாக சொல்லாமல் உங்களிடத்திலே ஆதாரம் இருந்தால் தாருங்கள் நாம் விவாதிக்கலாம்.முஸ்லிம்கள் சார்பாக விவாதிக்க இன்ஷா அல்லாஹ் நான் தயார்!!!!!

   Delete
  2. பெயர் சொல்ல கூட தைரியம் இல்லமால் பெயர் மறைத்து விஷ கருத்துக்கள் சொல்லும் நண்பரே,காமுகனாக சித்தரிக்கிறது என்று பொத்தம் பொதுவாக சொல்லாமல் உங்களிடத்திலே ஆதாரம் இருந்தால் தாருங்கள் நாம் விவாதிக்கலாம்.முஸ்லிம்கள் சார்பாக விவாதிக்க இன்ஷா அல்லாஹ் நான் தயார்!!!!!

   Delete
 11. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

  சிறப்பானதொரு பதிவு

  == எதிர்ப்பை காண்பித்தாலும் அதற்கும் ஒரு வரைமுறை உண்டு.இஸ்லாத்திற்கும்,இஸ்லாமியர்களுக்கும் ஏன் தனக்கெதிராக எதிரிகள் தங்கள் உயிரை குடிக்க தயாராக இருந்தப்பொழுதும் அவர்களின் தூதர்களை நபி(ஸல்)அவர்கள் ஒன்றும் செய்யவில்லை இன்று தூதரகத்தையும்,தூதர்களையும் நாசப்படுத்துவதை முஸ்லிம்கள் தவறு என்பதை உணர வேண்டும்.==

  தெளிவான புரிதல் சகோ

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் GULAM,
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.தொடர்ந்து நம் தளத்தோடு தொடர்பில் இருங்கள்...

   Delete