விஜய் டி.விக்கு புகாரை உடனடியாக அனுப்புங்கள்

Wednesday, August 1, 2012



கீழ்க்கண்ட ஈமெயில் முகவரிக்கு உடனடியாக நீங்களும்,உங்கள் நண்பர்களும் முடிந்தளவு புகார் கடிதம் அனுப்புங்கள் .....காரணம் கீழே...









இந்த புனிதமான ரமளானில் செய்யவேண்டிய அமல்கள் பல உண்டு,குர்ஆன் ஓதுவது(நோன்பில் மட்டுமே ஓதுவது சிறந்தது அல்ல),திக்ருகள் செய்வது,தான தர்மங்கள் செய்வது,இன்னும் பல பல நன்மையான செயல்கள் உண்டு..இந்த நோன்பிலே கட்டுப்பாடாக இருக்ககூடிய நாம் நோன்பு முடிந்து மறுநாளே ஷைத்தானுடைய இலக்குக்கு ஆளாகிவிடுகிறோம்.சில வருடங்களுக்கு முன் நோன்பு பெருநாள் அன்றே திரையரங்குக்கு படம் பார்க்க செல்வார்கள்(அது இன்று நம் சமுதாயத்தில் நிலவும் அசிங்கம்) ஆனால் கடந்த ஒரு சில வருடமாக சமுதாய ஒழுக்ககேட்டை வீட்டின் வரவேற்பறைக்கே கொண்டு வரும் தொலைகாட்சி சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு மாற்று மதத்தவர்களின் பண்டிகைகளான பொங்கல்,தீபாவளி, கிறிஸ்த்துமஸ், ஆங்கில வருட பிறப்பு இதுப் போல போல புனிதமான ஈதுல்-பித்ரு என்று சொல்லகூடிய ஈகை(தான தர்மங்கள் கொடுக்கும்) திருநாளை இஸ்லாத்திற்கு துளியும் சம்மந்தமில்லாத விபச்சாரத்தை தூண்டக்கூடிய சாதனமான திரைப்படங்களை மக்களுக்கு ஒலிபரப்பு செய்து இஸ்லாத்தை கொச்சை படுத்திவருகின்றனர்.

இத்தகைய நாளில் நன்மைகளை அதிகமதிகம் செய்ய வேண்டும்,ரமலான் நம்மை விட்டு பிரிந்ததை எண்ணி உண்மையாக வருந்த வேண்டும் ,அடுத்த வருடம் இந்த ரமலானை நாம் சந்தீப்போமா என தெரியாது அதனால் ராமலானிலே செய்த பாவங்களுக்கு மீட்சி தேட வேண்டும்,இப்படி பல இபாதத்களில் கழிய வேண்டிய அந்த நாளை மார்க்கம் தடுத்த ஒரு செயலில் அந்நாளை கழிக்கிறோம்.இதை எந்த ஒரு முஸ்லிம் அமைப்புகளும் கண்டுக்கொள்ளவில்லை என்ற என் ஆதங்கத்தை http://tvpmuslim.blogspot.in/2011/11/2.html இந்த கட்டுரையில் வெளிப்படுத்தினேன்,இதன் அடுத்தகட்ட முயற்சியாக சம்மந்தப்பட்ட தொலைகாட்சி சேனல்களுக்கு புகார் தகவலையும் அனுப்பியுள்ளேன்.ஒரு கை ஓசை தராது சகோதரர,சகோதரிகளே.....மக்களை பாவங்களில் இருந்து மீட்க சமுதாய குரலுக்கு கை கொடுங்கள் ....இரும்பை உருவாக்கும் பொழுதே வளைக்க வேண்டும் அது இறுகியது வளைப்பது கடினம்,அதுப் போல இது போன்ற மாரகத்திர்க்கு புறம்பான செயல்களை ஆரம்பத்திலையே கலை எடுக்காவிட்டால் சமுதாய சீரழிவிற்கு இது ஒரு காரணமாககூடும்.நாளை இது பற்றி இறைவனிடம் இதுப் பற்றிய கேள்விக்கு பதில் சொல்ல நேரிடும்....

       "வரும் முன் காப்பது அறிவு"

 

உங்கள் புகார்களை அனுப்பவேண்டிய முகவரிகள்(நாகரீகமான முறையிலே புகாரை தெரிவியுங்கள்):

விஜய் டிவி :hello@startv.com 


கலைஞர் டிவி:feedback@kalaignartv.co.in 


சன் டிவி :http://www.sunnetwork.org/Contact-us.aspx 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

4 comments:

 1. உண்மைதான் நண்பரே.இது முஸ்லீம் திருநாளில் மட்டும் அல்ல வேறு எந்த மத திருவிழா அன்றும் இதுபோன்று இரத்த வெறி,காமவெறி,ஜாதிவெறி போன்றவற்றை தூண்டும் எந்த மோசமான திரைப்படங்களும் இது போன்ற நன்னாளில் ஒளிபரப்பக்கூடாது.இதனை உணர்த்தவேண்டியது நமது கடமை.இது மதத்திற்காக அல்ல நமது தேச பாரம்பரியத்திற்காக.புகாரை அனுப்பிவிட்ட்ன்.

  ReplyDelete
 2. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

  இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

  தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

  அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaththam@gamil.com

  please visit: www.tamilnaththam.blogspot.com

  ReplyDelete
 3. தமிழ் மணத்தில் இன்றைய மதவாத பதிவுகள்!

  இன்றைய காப்பி அண்ட் பேஸ்ட் இணையதளங்கள்!

  தமிழ் நாத்தம் ஒரு அறிமுகம்!

  அன்புள்ள தமிழ் வாசக நெஞ்சங்களே நீங்கள் அறிந்த தகவல்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் கருத்துக்களை பதியவேண்டிய முகவ்ரி. tamilnaaththam@gamil.com

  please visit: www.tamilnaththam.blogspot.com

  ReplyDelete