பைத்துல்மால்-திருவாளப்புத்தூர்-அழகிய முன்மாதிரி ஊர்

Tuesday, July 31, 2012


இஸ்லாமிய சகோதர,சகோதரிகளே இப்பதிவை அவசியம் படித்து நமது சமுதாயத்திற்கு உதவுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக.

சென்ற சிலப் பதிவுகளுக்கு முன்னால் பைத்துல்மால் என்றால் என்ன என்று அடுத்தப் பதிவுகளில் பார்ப்போம் என்றேன்,இன்ஷா அல்லாஹ் இப்பதிவில் பைத்துல்மாலின் அவசியத்தையும்,அதன் நோக்கத்தையும் பார்ப்போம் வாருங்கள்.

பைத்துல்மாலும் அதன் சிறப்பும்:

"பைத்"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் வீடு,"மால்"என்ற அரபி வார்த்தைக்கு அர்த்தம் பொருள்.இந்த இரண்டுவார்த்தையின் கூட்டையும் சேர்த்து "பொருளகம்"என்று சொல்லலாம்.

பொருளகம் என்றால் என்ன?பொருட்களை சேர்த்துவைத்து அதை தேவையுடையோருக்கு பங்கிட்டுக் கொடுப்பது."எல்லாமும் எல்லோருக்கும்" என்ற அடிப்படையில் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் நபி(ஸல்) அவர்களால் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய வரலாற்று புரட்சி.நாகரீகமும்,மனிதமும் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் கூட எந்த ஒரு அரசும் ஏற்படுத்தாத புரட்சி.மக்களின் வரிப்பணம் நாட்டை ஆள்பவர் சொந்த செலவிற்கே (சுருட்டுவதற்கே) என்று ஆகிவிட்ட நிலையிலும், பைத்துல்மாலின் தனி சிறப்பே "அது தேவையுடையோரின் அல்லது ஏழைகளின் பணம்"அதில் எந்த ஒரு தனிமனிதனும் அல்லது எந்த ஒரு அரசும் அந்தப் பணத்தில் அதிகாரம் செலுத்த முடியாது என்பது தான்.

பைத்துல்மால் இப்பொழுது ரொம்ப அவசியமா?

நமதூரில்(திருவாளப்புத்தூர் )முஸ்லிம்களும் மாற்று மதத்தவர்களும் அமைதியாக வாழ்ந்துவரும் இச்சூழலில் சமீபகாலமாக வேண்டுமென்றே யாரோ சில விசமிகளால் முஸ்லிம்களை பற்றி கசப்பாக உணரவைக்கப்படுகிறது,இதன் தொடர்ச்சியாக பள்ளிவாசல் தெருவில் நமது பள்ளிவாசலுக்கு மிக அருகில் இரண்டு வீடுகள் நம்மை விட்டு மாற்றுமதத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ளது இதற்கு ஆணிவேரே "வட்டி"தான்.

இந்த வட்டியை முழுவதுமாக துடைத்தெறிய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.வட்டி வாங்குவது,கொடுப்பது,அதற்கு கணக்கெழுதுவது,அதற்க்கு சாட்சி சொல்வது அனைத்தும் ஹராம் என்று மட்டும் நாம் ஒருவரிடம் சொன்னால்,அப்போ கடன் நீங்க தரீங்களா?என்ற எதிர் கேள்விகள் தவிர்க்க இயலாதது.இதுப் போன்றவர்களின் கேள்விக்கு பதிலே இந்த பைத்துல்மால்.இனி இதன் மூலம் படிப்புக்கோ,இன்ன பிற அவசிய தேவைக்கோ வட்டி இல்லா கடன் பெறலாம்.

 இதன் மூலம் நம் சமூதாயத்திற்கு விளையும் நன்மைகள் பல உண்டு இந்த பைத்துல்மாலை சிறப்புற நடைமுறைப்படுத்தினால் அதை கண்கூடாக பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.

இத்தகைய சிறப்புமிக்க பைத்துல்மாலை திறம்பட சிறப்பாக நடத்துவதென்பது கத்தியின் மேல் நடப்பதை விட மிகச் சிரமம்.ஏன் என்றால் இதற்க்கு பொருளாதாரம் மிகவும் அவசியம்.அத்தகைய தாராளமான பொருளாதரத்தை உலகெங்கும் வாழும் நமதூர் சகோதரர்களிடமும்,அனைத்து இஸ்லாமியர்களிடமும் எதிர்பார்த்துள்ளது இந்த பைத்துல்மால்.ஆகவே இஸ்லாமிய சகோதரர்களே புனிதமிகு இந்த ரமலான் மாதத்தில் உங்களுடைய ஜகாத்,நன்கொடைகளை தாராளமாக் இதற்க்கு தந்துதவுங்கள். அல்லாஹ் ஹராமாக்கிய ஓர் பெரும் பாவத்தை(வட்டி) துடைத்தெறிய உதவுங்கள்.ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு உதவ முன்வராவிட்டால் யார்தான் உதவி செய்வார் என் சகோதர சமூதாயமே. நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நிச்சயம் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்த்தும்,நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும் மேலும் நம் இறப்பிற்கு பின்னரும் நிலையான நன்மைகளை தரக்கூடிய செயலாக(சதக்கத்துல் ஜாரியா) இது மாறிவிடும்  இன்ஷா அல்லாஹ்.


புனிதமிகு இந்த ரமளானில் நீங்கள் அதிகம் நன்மை பெற அல்லாஹ் இதை ஒரு வாய்ப்பாக கூட உங்களுக்கு ஏற்படுத்தி இருக்கலாம்.இவ்வுலகில் நாம் சம்பாதிக்கும் பணத்தை பலதரப்பட்ட துறைகளில் முதலீடு செய்வதுபோல, நாளை மறுவுலக வாழ்க்கைக்கு உங்கள் செல்வத்தை பல்வேறு நன்மைகளில் முதலீடு செய்ய விரைந்து வாருங்கள் அன்பு சகோதரர்களே.


வலைப்பூ வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு:
என்னால் இயன்றவரை இந்த தகவலை உங்கள் தளத்திற்கு அனுப்பியுள்ளேன்,வலைப்பூ வைத்துள்ள இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ஏறலாம் அவர்களுக்கும் நீங்கள் இந்த தகவலை சொல்லலாம்.உங்கள் வலைப்பூவில் கூட இந்த தகவலை பதிந்து"பைத்துல்மாலுக்கு" உதவலாம்.


கியாமத் நாள் நெருங்கும் பொழுது ஒருவன் தன்னிடமுள்ள ஜகாத் பணத்தை வாங்க தகுதியான நபரை தேடுவான்,ஆனால் அப்படி ஒரு நபரும் இருக்கமாட்டார்கள் அனைவரும் வசதிபடைத்தவர்களாக ஆகிவிடுவார்கள்.

                                                                                      -நபிமொழி(நபிமொழியின் கருத்து)


அப்படி ஒரு நிலையை அடையும் முன்னரே உங்கள் ஜகாத்,சதகாக்களை தந்துதவுங்கள்.

உங்கள் ஜகாத்,நன்கொடைகளை அனுப்பவேண்டிய வங்கி கணக்கு:

A.NOORUL AMEEN
A/C NO:912010037861020
SWIFT CODE-AXISINBB006 (OR)  IFSC CODE-UTIB 0000688 (நீங்கள் பணம் செலுத்தும் வங்கி எந்த CODE நம்பரை கேட்கிறதோ அதை கொடுக்கவும்)

D.D அனுப்புபவர்கள் கீழ் கண்ட முறையில் அனுப்பவும்

A.NOORUL AMEEN (OR) M.M.MOHAMED BUHARI 
A/C NO:912010037861020
PAYABLE AT MAYILADUTHURAI*முகம் தெரியாத நபர்கள் யாரும் இந்த பைத்துல்மாலை பற்றி சந்தேகம் கொள்ளாதீர்.உங்கள் பணம் நன்மைகளில் மட்டுமே முதலீடு செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.இறைவனுக்கு பயந்து சொல்கிறோம் இது எங்களின் சுய தேவைக்காக அல்ல.நோன்பிற்கு பின் முழு கணக்குடன் இன்ஷா அல்லாஹ் பணம் தந்தவர்களின் பெயருடன் அவர்கள் விரும்பினால் பிரசூரிக்கப்படும்.


தான தர்மங்களை செய்யுங்கள்,மரணத்திற்கு முன் ஜகாத் தொகையை முறைப்படி செலுத்தி அல்லாஹ்வின் கோப பார்வையை விட்டும்,கொடுமையான தண்டனைகளை விட்டும் தப்பிக்கொள்ள அல்லாஹ் நமக்கு உதவுவானாக-ஆமீன்

பைத்துல்மால் நிர்வாக குழு

தலைவர்:
A.நூருல் அமீன்

செயலாளர்:
M.M.முஹம்மத் புஹாரி

பொருளாளர்:
M.முஹம்மத் தாரீப்

உறுப்பினர்கள்:
A.பஷீர் அஹ்மத்
M.அஜ்மல் ஷெரிப்
S.ரியாஸ் முஹம்மத்
N.முஹம்மத் ஷாபீன்இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

5 comments:

 1. அல்ஹம்துலில்லாஹ், கொடுக்க மனம் வராத உள்ளங்களையும் உருக வைக்கும் உங்களின் எழுத்துக்கள். இன்ஷா அல்லாஹ் இந்த அழகியக் கடன் முயற்சிக்கு எல்லாம் வல்ல ரஹ்மான் அனைத்து புறங்கலின் இருந்தும் உதவுவனாக. மேலும் இதற்கு யாரெல்லாம் முயற்சியும் உறுதுனையும் எடுத்தார்களோ அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் அதற்கான நிறைவானக் கூலியைத் தந்தருள்வானாக.

  www.itzyasa.blogspot.com (என் பக்கம்)

  ReplyDelete
  Replies
  1. SALAAM,

   தங்களின் வருகைக்கும்,துஆவிற்கும் நன்றி...பைத்துல்மால் சிறப்பாக செயல்பட தங்களால் ஆன உதவியை செய்யுங்கள்....

   Delete
 2. அருமையான சேவை . சிறப்பான செய்தி
  JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
  "Allah will reward you [with] goodness."

  Please visit
  http://nidurseasons.blogspot.in/2012/07/1.html

  அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)

  நற்செயல்களில் ஒருவரை யொருவர் மிகைக்க செய்யுங்கள் என்ற இறை வசனத்திற்கு ஒப்ப தலைப்பட்டார்கள்.
  நீடூருக்கு ஏழுகல் வடக்கே இருக்கிறது திருவாளப்புத்தூர் என்னும் சிற்றுர். அங்கு முஸ்லிம், மக்கள் குடியிருப்பதற்கு மனைகளில்லாமல் அல்லற்பட்டு வந்தனர். இது நமது ஹாஜியார் கவனத்திற்கு வந்தது. வாளாவிருப்பார்களா! முழு முயற்சி செய்து ஜில்லா போர்டு மூலமாக திருவாளப்புத்தூரில் 24 குடியிருப்புகள் மனைகளுக்கு எற்பாடு செய்தார்கள். இவ்வாறு ஹாஜியார் அவர்களது சேவையின் பலனை பிற ஊர் மக்களும் நுகரத் தலைப்பட்டனர்.

  ReplyDelete
  Replies
  1. SALAAM,
   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

   பழைய வரலாற்றை அறிய தந்தமைக்கு நன்றி....தொடர்ந்து தொடர்பில் இருங்கள்....

   Delete
 3. ஆகா தமிழ் மணமா அல்லது சாக்கடை மணமா!!! திரும்பிய திசை எல்லாம் கோப்பி பேஸ்ட் பதிவுகள். தமிழ்மணம் அண்ணாக்கள் சொல்வார்கள் நாங்கள்தான் தமிழில் பெரிய லாடு லபக்குதாஸ்,

  இன்லி, தமிழ்வெளி, tamil10, ஐயாமார்கள் அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருகிறார்கள்.

  என்பா இஸ்கு உங்களிடம் பதிவிடும் பதிபவர்கள் நடத்தும் குடிமி சண்டை தெரியாதா? இந்த டுபுக்குகள் சொல்வார்கள் கோப்பி பேஸ்ட் பண்ணி எழுதினால் உடனே நீக்கி விடுவோம்,

  தமிழ் மணத்தில் வெளிவரும் ஒரு சில பதிவுகள் தவிர எல்லோரும் காப்பி தான். எல்லா பதிபவர்களும் ஏதோ நிருபர்கள் வைத்து செய்தி போடுவது போல். இது மட்டுமல்லாது பதிவை வெளியிடும்போதே சொல்வார்கள் தனிப்பட்ட தாக்குதல், மத சம்மந்தமாக தாக்குதல்கள் கூடாது என்று.

  ஆனால் அங்கே மதங்களை இழிவுபடுத்தி எழுதப்படும் விசயங்களும், தமிழர்களுக்குள்ளே சண்டையை உண்டாக்கும் விடயங்களுமே அதிகம். இந்த நாற்றம் பிடித்த திரட்டியில் எழுத நீயா நானா என்று போட்டி வேறு.

  ReplyDelete