குடிதண்ணீரை எப்போ குடிக்கனும்னு உங்களுக்கு தெரியுமா?

Friday, July 20, 2012

நம்மள போல மனுசங்களுக்கு எல்லாமே பக்கத்துல இருந்தாலும் அத அனுபவிக்க முடியாம தினம் தினம் எத்தன எத்தன பிரச்சனைகள் அதுல ஒன்னே ஒன்ன மட்டும் இப்போ பாப்போம் BROTHERS.
*இந்தக் கட்டுரை தண்ணீரை பற்றியது 

இப்பூமி மனிதர்களால் நிரம்பி வழிந்து நாளை மனிதர்களுக்கு இங்கு வாழ இடம் இருக்காதோ என எண்ணி சில விஞ்சானிகள் வேறு கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா?என ஆராய்ச்சி செய்கின்றனர் காரணம் இப்பூமி  பறந்தது விரிந்து இருந்தாலும் மனிதன் வாழ்வதற்கு தகுதியான இடம் கொஞ்சமே ஆம் உண்மை தான்.இப்பூமியை 3 இல் 1 பங்கு கடல் சூழ்ந்து உள்ளது.கடல் முழுக்க தண்ணீர் இருந்தாலும் மனிதன் அதை நேரடியாக பயன்படுத்திவிட முடியாது அது உங்களுக்கே தெரியும்.

அப்படி கடல் நீரை பயன்படுத்தக்கூடிய நாடுகள் சொற்பமே.இந்தியாவை எடுத்துகொண்டால் தண்ணீர் பிரச்சனை பெரும் பிரச்சனை(யாருப்பா அது அங்க அரசியல் பேசுறது SUMO ல ஆள் அனுப்பவா).தமிழ்நாட்டுல தண்ணீர் பிரச்னை நகரங்களில் இருந்து இப்போ கிராமங்களுக்கும் தாவிவிட்டது, காரணம் நகரங்களில் உள்ள தண்ணீர் பற்றாகுறையை தீர்க்க பல கம்பெனிக்கள் போட்டி போட்டு கிராமங்களில் பெரும் பெரும் மோட்டார்களை கொண்டு தண்ணீர் உறிஞ்சுவது தான்.

சென்னையில் தண்ணீர் பஞ்சத்தை சுத்தமாக துடைத்துவிட்டோம் என அரசியல் கட்சிகள் மைக் கிழிய பேசினாலும் நிஜத்தில் அது உண்மையா?தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கிறோம் பேர்வழி என்று கேன் வாட்டர்,பாட்டில் வாட்டர்,பாக்கெட் வாட்டர் என வாங்குவோர் வசதிக்கு தகுந்தாற்போல் சந்தையில் அறிமுகபடுத்தினர்.அறிமுகபடுத்திய அவர்களே(அரசே-ஆம் இதற்கும் அரசு தான் பொறுப்பு)பாக்கெட் தண்ணீரை குடிக்காதீர்கள் அது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று தினசரி நாளேடுகளில் செய்தி வெளியிட்டதை மக்களில் பலர் அறிவர்.அந்த அளவிற்கு தண்ணீர் சுத்தமாக உள்ளது!!!!!.


மோட்டார் போட்டு உறிஞ்சும் தண்ணீர் தான் சுத்தமாக உள்ளதா என்றால் அதற்கு கடல் நீரே பரவ இல்லை போல அந்த அளவிற்கு உப்பு.சமீபத்தில் சென்னையில் தங்கி இருந்த நண்பர் ஒருவர் ஊருக்கு வரும் பொழுது TYPHOID ஜுரத்துடன் வந்தார் காரணம் கேட்டால் அங்கு தண்ணீர் சாக்கடை போல வாடை வருகிறதாம் வேறு வழியில்லாமல் குடித்ததில் வந்த கேடு என்றார்.

அதுபோல (ஹலோ ..ஹலோ என்னா தலைப்பை பற்றி ஒரு செய்தியும் இல்லை-இதை படிக்கும் உங்கள் மனசாட்சி).சரி தலைப்புக்கு வரேன் மேல தண்ணீரை பற்றி இவ்வளவு விபரம் ஏன் என்றால் நமக்கு கிடைக்கும் சுத்தமான தண்ணீரையாவது நாம் சரியாக பயன்படுத்துகிறோமா என்றால் நிச்சயம் இல்லை அதை எப்பொழுது குடிக்க வேண்டும் என்ற அடிப்படை கூட நம்மில் பலருக்கு தெரியவில்லை.இனி தெரிந்துக் கொள்வோம் ....

காலையில் எழுந்தவுடன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுக்கு உதவுகிறது.

சாப்பிடுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் சாப்பிடும் சாப்பாடு செரிக்க உதவுகிறது.

குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் வாதம் மற்றும் மாரடைப்பு வருவதை தடுக்க உதவும்.

சரியான நேரத்தில் தண்ணீர் குடித்து உடல் ஆரோக்கியத்தை பெற எல்லாம் வல்ல அந்த அல்லாஹ் நமக்கு உதவுவானாக.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

9 comments:

 1. நல்லதொரு விளக்கமான பதிவு...
  அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
  பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 2. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திண்டுக்கல் தனபாலன்

  ReplyDelete
 3. யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்....

  நல்ல பதிவு.............

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி எஸ்தர் சபி

   Delete
 4. அஸ்ஸலாமு அழைக்கும், இதில் நான் படித்த அனைத்துமே அற்புதமான தகவல்கள்...... அதில் எனக்குப்பிடித்த சில விசயங்களை நான் எனது முகநூளில் share செய்கிறேன்..... இதுபோல் இன்னும் அதிகமதிகம் கருத்துள்ள தகவல்கள் வரவேண்டும் என்று விரும்புகிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் சலாம் சகோ ,

   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ....தொடர்ந்து இந்த தளத்தோடு தொடர்பில் இருங்கள் ....

   Delete