இயேசு ஒரு கிறிஸ்தவரா?????

Wednesday, December 26, 2012

மேற்கண்ட தலைப்பில் உள்ள கேள்விக்கு கிருஸ்தவர்கள்(?) அளிக்கும் பதில் “ஆம் “ என்பதே. இது உண்மையா ?

இந்த கட்டுரை கிரிஸ்துவர்கள் முன்நிறுத்தும் இது போன்ற கேள்விக்கான பதிலை காரண காரியங்களோடு , ஆதாரங்களோடும் ஆய்வுக்கண்ணோட்டத்தோடும் தரும் ஒரு தாழ்மையான முயற்சியாகும்.



முதல் முதலாக, இந்த "கிறிஸ்து" குறித்து பார்த்துவிட்டு போகலாம்.

என் அனுபவத்தில், சாதாரண கிறிஸ்துவர்கள் உடனடியாக "மீட்பர்" என்று வரையறுப்பார்கள்..

இப்போது "மீட்பர்" என்றால் என்ன என்ற கேள்வி தோன்றும்.

உண்மையிலேயே "கிறிஸ்டோஸ்" என்ற கிரேக்க மொழிச்சொல்லில் இருந்து "எழுத்து பெயர்ப்பால்" உருவானதே இந்த "கிறிஸ்து" என்ற சொல்.


இச்சொல் "Mashiyach" ஹீப்ரு மொழியில் (அல்லது மேசியா) என்று மொழி பெயர்க்கப்படும். எந்த பொருள் ANNOINTED அல்லது "ஒரு தேர்வு". முஸ்லிம்களாகிய நாம் இவரை இயேசு கிறிஸ்து என்று அழைக்க தயங்குவதில்லை.

குர்'ஆனும் இவரை அரபியில் மஸீஹ் என்று அழைக்கின்றது.


////அல்-குர்'ஆன் 4:171

..... நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;.....////



////அல்-குர்'ஆன் 5:75. மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை,......////



குர்'ஆன் இந்த மஸீஹ் என்ற பெயரை ஈஸா(அலை) அவர்களுக்கு மட்டுமே பாவிக்கின்றது. வேறு யாருக்கும் பாவிக்கவில்லை. 

ஆனால் இவ்விடயம் பைபிளுடன் முரண்படுகின்றது.


பல கிறீஸ்தவர்களும் இவ்விடயத்தில் இப்பெயர் ஈஸா(அலை) அவர்களுக்கு மட்டுமே சொல்லபடுகிறதுஎன்று நினைக்கின்றனர்.

இன்னும் இதன் காரணமாக ஈஸா(அலை) அவர்களுக்கு தெய்வீக நிலை உள்ளதாக அவர்கள் கருதுகின்றனர்.

இச்சொல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் போது தான் இயேசு என்ற பெயருக்கு பின்னால் "கிறிஸ்து" என்று போடப்பட்டுள்ளது.இதில் என்ன விடயம் உள்ளதென்றால், பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் மக்களை ஏமாற்ற பாவித்த தந்திரங்களில் இதுவும் ஒன்று என்பதே.இச்சொல் பாவிக்கப்பட்டதன் உண்மை காரணம் என்னவெனில், பழைய ஏற்பாட்டில் இச்சொல் அதிகமாக பாவிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகம் என்பதாலாகும்.இச்சொல் இயேசுக்கு மட்டுமல்லாது மற்ற பிரபலங்களுக்கும் பாவிக்கப்பட்டுள்ளது.

உதாரணங்கள்...:


சங்கீதம் 18:50.

தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

Septuagint மொழிபெயர்ப்பில் (பழைய ஏற்பாடு பழமையான கிரேக்க கையெழுத்து) ( அபிஷேகம் அளிக்கபட்ட]) " "xristo autou" என்று கூறுகிறது.

Vulgate மொழிபெயர்ப்பில் அது “christo suo“ (அவரது கிறிஸ்து) என்று கூறுகிறது.

இங்கும் இது போன்ற ஒன்றை காணலாம்.

(KJV, Isaiah 45:1) says as //“christo meo“(my Christ)//



இன்னும் இவ்விடங்களிலும் இவற்றை காணலாம்.

Leviticus 4:3, 1 Samuel 24:6 and Lamentations 4:20.

இது வரை கிறிஸ்து என்ற பெயர் எவ்வாறு உருவானது என்று பார்த்தோம்.



இப்போது எமது தலைப்பான இயேசு கிறிஸ்தவரா என்று பார்ப்போம்.



பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு கிறிஸ்தவர் என்று நினைக்க காரணமாக இருந்தது அவரது பெயருடன் கிறிஸ்து என்ற சொல்லும் ஒட்டிக்கொண்டிருந்த காரணத்தினால் தான்.

அப்படிப்பார்த்தால் King Cyrus என்ற சிலை வணங்கி அரசனையும் கிறீஸ்தவர் என்று சொல்வார்களா? ஏனெனில் அவருடைய பெயருடனும் கிறீஸ்து என்று வருகிறதே? 


(ஏசாயா 45:1 



கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:)


எனவே இயேசுவின் பெயருடன் கிறிஸ்து என்ற சொல் வருவதினால் அவரை ஒரு கிறிஸ்தவர் என்று சொல்வது மிகவும் தவறான ஒரு முடிவாகும்.



இன்னும் அவர் பேசிய மொழி ஹீப்ரு அல்லது அராமாயிக் மொழி என்று சொல்வார்களானால், அவர் வாழ்ந்த காலத்தில் கூட கிரேக்க மொழிச்சொல்லான கிறீஸ்து என்ற பெயர் அவருக்கு பாவிக்கப்பட்டே இருக்காது.அதே வேளை ஹீப்ரு மொழியில் மேசியா என்று தான் அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

விடயத்திற்கு நேரடியாக வருவதானால், வேதாகமத்தில் குறிப்பாக நான்கு நியமன சுவிசேஷங்களின் படி இயேசு எங்காவது தன்னை கிறிஸ்துவர் என்று சொல்லியுள்ளாரா?

இயேசு பைபிளில் ஒரு இடத்திலும் தன்னை ஒரு கிறிஸ்தவர் என்று சொல்லவே இல்லை. அது பைபிளை நன்கு படித்த கிறிஸ்தவர்களுக்கும் தெரியும். இப்போது புரியும் இந்த கிறிஸ்து என்ற சொல் எவ்வாறு உருவானது என்று!


பைபிள் மூலம் அறீஞர்கள் சொல்லும் தகவல் என்னவெனில், அகிரிப்பா என்ற ஒரு அரசன் தான் முதன் முதலில் கிறிஸ்தவன் என்ற சொல்லை பயன்படுத்தினான் என்று.

[அப்போஸ்தலர் 26:28]

அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான்.

அகிரிப்பா என்பவனும் ஒரு சிலை வணங்கி என்று நாம் அறீகின்றோம். அப்படியென்றால், ஒரு சிலை வணங்கி கண்டுபிடித்த சொல்லை பவுல் என்பவர் அவரை நம்பியோர் மீது திணித்துவிட்டார். என்ன ஒரு வஞ்சகம் இது.

இயேசுவை இறைவனாக சொல்வோர் ஒரு சிலை வணங்கியினால் பெயரிடப்பட்டுள்ளனர் என்பதை அவர்கள் தாங்கிக்கொள்வார்களா?

இப்போதுள்ள கிறீஸ்தவர்களுக்கு இப்பெயரை இயேசு வைத்ததாக பைபிளில் கூட எந்தவிதமான ஆதாரமும் இல்லை. இப்பெயரின் கண்டுபிடிப்பாளர் யாரெனில் அவர் ஒரு சிலை வணங்கி.

இப்போது இயேசு ஒரு கிறிஸ்தவர் அல்ல என்று தெளிவாகிறது. அப்போது அவர் யார்?

அவரை ஒரு முஸ்லிம் என்று குர்'ஆனும், நபி(ஸல்) அவர்களும் அடையாளப்படுத்தியுள்ளார்கள்.


முதலில் முஸ்லிம் என்ற சொல்லின் வரைவிலக்கணத்தை பார்ப்போம்.

முஸ்லிம் & இஸ்லாம் என்ற சொற்கள் "ஸலம்" என்ற மூல அரபிச்சொல்லில் இருந்து வந்ததாகும்.இதன் இலக்கண அர்த்தம் "கீழ்ப்படியும் அல்லது சமாதானம்" ஆகும். நடைமுறையில் முஸ்லிம் என்பவன் எல்லாம் வல்ல இறைவனுக்கு கீழ்ப்படிந்தவனே...

[[அல்-குர்'ஆன்3:64]]

(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

குர்'ஆன் கருத்துப்படி முஸ்லிமின் அடிப்படை கொள்கைகள் மூன்றும் இதோ:

01: இறைவனின் விருப்பத்திற்கு தன்னை சமர்ப்பித்தல்.

02: இறைவனை மட்டுமே வணங்குதல். (இறைவனுக்கு பங்காளர்களாக யாரையும் இணைவைப்பதில்லை.)

03: இறைவனுக்கு முன்னால் மண்டியிட்டு சிரம் பணிதல்.


இயேசு இறைவனின் விருப்பதிற்கு தன்னை சமர்ப்பித்த ஆதாரம்.


மாற்கு 14:36.

அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார்.


லூக்கா  22:42.

பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படிசெய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.



இயேசு ஒரே இறைவனை மட்டும் வணங்கியதற்காக ஆதாரம்:


மாற்கு 12:29.

இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.

யோவான் 17:3.

ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இறைவனுக்கு சிரம்பணிந்த ஆதாரம்.(இது முஸ்லிம்கள் மட்டுமே கடைப்பிடிக்கும் முறையாகும்.)


மத்தேயு 26:39.

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.



இப்போது இவ்வாதாரங்களை முன்வைத்து இயேசு (ஈசா (அலை)) நிச்சயமாக ஒரு முஸ்லிம் தான் என்றும், அதேவேளை நிச்சயமாக அவர் ஒரு கிறிஸ்தவர் அல்ல என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


அல்ஹம்துலில்லாஹ்.

(இக்கட்டுரை சகோ. இப்னு அன்வர் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழியாக்கம் செய்யபட்டது.)

source:ஏசு அழைக்கிறார்

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment