போராட்டமும் இஸ்லாமியர்களின் மன அழுத்தமும்

Thursday, January 30, 2014
பச்சிளம்  குழந்தைகள் முதல் சிறியவர்கள் வரை,இளைஞர்கள் முதல் இளைஞ்சிகள் வரை   பெரியவர்கள் முதல் முதியவர்கள் வரை என ஒரு சமுதாயத்தின் அத்தனை வகுப்பினரும் மிக மிக திரளாக கலந்துக் கொள்ளப்பட்ட கூட்டம் தான் சமீபத்தில்  TNTJ வினர் சார்பில் நடந்த சிறை நிரப்பும் ஆர்ப்பாட்டம்.தமிழக வரலாற்றில் இப்படி ஒரு உணர்ச்சியும்,உணர்வு பூர்வமான ஆர்பாட்டம் நடைபெறுவது மிக மிக அறிது,னால் அப்படிபட்ட ஆர்பாட்டம் தான் இந்த சிறை நிரப்பும் போராட்டம்.தாங்கள் வேண்டும் என்றே பலி வாங்கப்படுகிறோம், நசுக்கப்படுகிறோம்  என்ற முஸ்லிம்களுடைய  உணர்வின் உந்துதலே அக்கூட்டத்தின் வெளிபாடு.

 பல லட்சக் கணக்கான இஸ்லாமியர்கள் பங்கெடுத்த இக்கூட்டம் TNTJ என்கின்ற ஒரு அமைப்புக்காக மட்டுமே கூடிய கூட்டமல்ல,மாற்று அமைப்புகளை சார்ந்தவர்கள்,பொது மக்கள் என அனைவரும் கலந்துக் கொள்ள காரணம் மேலே கூறியுள்ளதை போல சுதந்திர இந்தியாவில்  60 ஆண்டுக்கும் மேலாக முஸ்லிம்கள் குறி வைத்து நசுக்கப்படுகிறார்கள் என்ற ஒற்றை காரணம் தான்.

இஸ்லாமியர்களின் இவ்வுணர்வை மருத்துவ ரீதியாக பார்த்தால் மன அழுத்தம் என்றே கூறத் தோன்றுகிறது.காலம் காலமாக,தலைமுறை தலை முறைகளாக இந்தியாவெங்கும் பாரபட்சம் இன்றி அனைத்து கட்சிகளாலும்,அரசின் அணைத்து துறைகளாலும்,அரசு சாராத அணைத்து துறைகளாலும் ஒதுக்கப்பட்டு,ஒடுக்கப்பட்டு தனிமை படுத்தப்படுகிறோம் என்பன போன்ற பல காரணங்களை இந்த மன அழுத்தத்திற்கு காரணிகளாக குறிப்பிடலாம்

ஒரு தனி மனிதனுக்கோ அல்லது ஒரு சமூகத்திற்கோ தாங்கள் எல்லா வகையிலும் தங்களை பலம் வாய்ந்தவர்கள் குறிவைத்து முடக்குகிறார்கள் என்கிற உணர்வு அவர்களுக்கு எப்பொழுது மேலோங்குகிறதோ அப்பொழுதே அவன் தான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் உணர்வின் அடிப்படையிலே தான் எடுப்பான்.அது சில சமயம் சரியாகவும்,சில சமயங்கள் தவறாகவும் இருக்கும்.ஆனால் முஸ்லிம்களின் இந்த இட ஒதுக்கீடு போராட்டம் சரியான வகையிலே தங்கள் உணர்வுகளையும்,லட்சிய வெறியையும் கண்ணாடி போல பிரதிபலித்துள்ளது.

மன அழுத்தம் போக்கும் மருந்து என்ன?

தமிழகம் எங்கும் இந்த இட ஒதிக்கீடு போராட்டத்திற்கு பல லட்சக் கணக்கான முஸ்லிம்கள் திரண்டு இருந்தாலும் வழக்கம் போல பத்திரிகைகள் 2500 பேர் ,5000 பேர் ,10000 அதிகமானோர் கலந்துக் கொண்டனர் என்று ஆளுக்கொரு செய்திகளையும்,டெக்கான் க்ரோனிக்கள் நாளிதழ் 75000 பேர்  தமிழகம் முழுவதும் பங்கெடுத்தனர் என்று முஸ்லிம்களின் உணர்வுகளை காலில் போட்டு மித்தித்து பத்திர்க்கை தர்மத்தை காத்தார்கள்.

மாநாடு என்று சொல்வதற்கே லாயக்கற்ற பா.ஜ.க வினரின் ஒரு சில ஆயிரங்களே இருந்த கூட்டத்தை மிக பிரமாண்ட கூட்டம்(திருச்சியில் மோடி கலந்து கொண்ட கூட்டம் ) போல காட்டிய மீடியாக்கள் இஸ்லாமியர்கள் சம்மந்தமாக எழும் குரல்களை வெளி உலகிற்கு தெரியாமல் குரல் வளைகளை நசுக்குவதிலே தெரியும் இவர்களின் நடுநிலை போக்கும் இஸ்லாமிய வெறுப்பும்.

இந்த பத்திரிகைகள் நேற்றும் இப்படி தான் இஸ்லாமியர்களின் உண்மையான உணர்வுகளை இருட்டடித்தார்கள்,இன்றும் இருட்டடிக்கிறார்கள்,நாளையும் இருட்டடிப்பார்கள்.இதற்கு தீர்வு நம் இஸ்லாமியர்கள் நன்கு படித்து ஊடக துறையில் செய்திகளை வெளியிட முடிவு எடுக்கப்படும் பதவிகளுக்கு செல்ல வேண்டும்.

போராட்டத்திற்கு வந்து கொண்டிருந்த வாகனங்களை நிறுத்தி வாகங்களின் உள்ளிருப்பவர்களை கணக்கு எடுப்பதாக சொல்லி செயற்கையாக ஒரு போக்குவரத்து நெரிசலை (TRAFFIC JAM) காவல் துறையினர் ஏற்படுத்தி பல நூற்று கணக்கான வாகனங்களை நிறுத்தி உரிய நேரத்தில் போராட்டத்தில் பங்கெடுக்கவிடாமல் செய்து இஸ்லாமியர்கள் கூட்டம் மேலும் அதிகரிக்காதப்படி செய்ததாகவும் ஒரு  செய்தி எழுகிறது எழுகிறது.இதே மார்க்கம் அறிந்த நம் இஸ்லாமியர்கள் காவல் துறையில் இருந்தால் இது நடந்திருக்குமா ?

அனைத்திற்கும் மேலாக அரசியலில் இஸ்லாமியர்களின் பங்கு மிக குறைவாக இருப்பதே மேல சொன்ன பிரச்சனைகளுக்கும்,வேறு பல  பிரச்சனைகளுக்கும் காரணமாக தெரிகிறது.அரசியலில் அந்த வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.இந்திய நாட்டில் நாம் நீதிகளை பெற  அதிகாரங்களை கையில் எடுக்காதவரை அடக்குமுறைகள் தொடரவே செய்யும்.

இவை அனைத்திற்கும் தீர்வு இட ஒதுக்கீடும்,இஸ்லாமியர்களின் கல்வி முயற்சியும் தான்.எப்படி யூத சமுதாயம் அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக தன் சமுதாயத்தை மிகுந்த சிரத்தை எடுத்து படிக்க வைத்து இன்று உலகையே வசப்படுத்தக் கூடியவர்களாக ஆக்கினார்களோ அது போல இன்னும் அதிக முயற்சிகள் செய்தால் மட்டுமே நாம் வெல்ல முடியும்.

நம் அடுத்த தலைமுறையாவது உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டும் என்றால் ஒவ்வறொரு இஸ்லாமியனும் முயற்சிக்க வேண்டும்,கடுமையாக முயற்சிக்க வேண்டும்....

இது தனி நபர் மட்டுமே சாதிக்க கூடிய விசயமன்று கூட்டாக(ஜமாஅத்) முயற்சித்தால் தான் நம் ஆசை,லட்சியம் இவை அனைத்தும் வெற்றி பெரும்...அதற்கு முயற்சித்து வெற்றி பெற கூடிய கூட்டமாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக....

Image: Vikatan

ஜனவரி 30 பாசிச எதிர்ப்பு நாள்:

தேச தந்தை காந்தியை காவி தீவிரவாதி நாதுராம் கோட்சே சுட்ட தினம் இது(1948).போலி மத சார்பின்மை பேசும் காவி தீவிரவாத கயவர்களுக்கு எதிரான தினம் இன்று........


இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment