யப்பா இந்த மீடியா இருக்கே!?

Friday, June 28, 2013மாற்றான் தாய் பிள்ளை என்ற சொற்பதத்தை அடிக்கடி நாம் கேள்விப்பட்டதுண்டு.அந்த சொல் வேறுயாருக்காவது பொருந்துமோ இல்லையோ இஸ்லாமியர்களுக்கு மிகச்சரியாக பொருந்தும்.மீடியாக்களை பொறுத்தவரை இது மிகச்சரியான வார்த்தையே.சில மாதங்களுக்கு முன் இலங்கையை சார்ந்த ரிசானா என்ற பெண்ணின் மேல் கொலை குற்றம் சுமத்தப்பட்டு,சந்தேகத்திற்கு இடமின்றி தகுந்த சாட்சிகளின் அடிப்படையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.இதை எதிர்கிறேன் என்று  இஸ்லாத்தின் கொலைகுற்ற சட்டத்தின் மேல் நேரடியாகவே மீடியாக்கள் போர்தொடுத்தன.

பக்கம்,பக்கமாக,பத்தி,பத்தியாக பத்திரிக்கைகளை இஸ்லாத்தின் மேல் பொல்லாங்கு சொல்லி நிரப்பின.பொது ஜன மக்களை  இஸ்லாத்திற்கெதிராக திருப்ப முயற்சித்தன.இதன் முதுகெழும்பாக FACEBOOK,TWITTER போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விஷ கருத்துக்களை ஏராளமாக ரொம்ப தாரளமாக பரப்பின.

ஆனால் சமீபத்தில் ஒரு செய்தி அதை சொல்லிவைத்தாற்போல் எல்ல மீடியாக்களும் முரட்டு கைகொண்டு மறைத்துவிட்டன,தினமலர் மட்டும் செய்தி வெளியிட்டது அதுவும் ஒரு ஓரத்தில் யாரையும் அவ்வளவாக ஈர்க்காத துண்டு செய்தி.

கிழே உள்ள படத்தை பெரிதாக்கி படிக்கவும்.
படத்தை பெரிதாக்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்


இஸ்லாத்தை பொறுத்தவரை கொலையானவரின் ரத்த பந்த உறவுகள்,கொலைக்கு பகரமாக கொலை செய்தவரின் நஷ்டஈட்டை பெற்றுக்கொண்டோ அல்லது சாதரனமாகவோ மன்னிக்காவிடில் மரணதண்டனைதான் இறுதி தீர்வு.மற்ற நாட்டின் சட்டங்கள் போல அல்லாமல் அநீதி இழைக்கப்பட்டவரின் பக்கத்திலிருந்தே அணுகுவதால் இஸ்லாமிய சட்டம் மனித உரிமைகளை காக்கின்றது,மேலும் அநீதி இழைக்கப்பட்டவருக்கு தான் அந்த கொடுமையின் கோரம் புரியும்,மற்றவர்கள் வேடிக்கை பார்பவர்களே.

 உதாரணத்திற்கு :

வினோதினி என்ற பெண் தன்னை காதலிக்க மறுத்ததால் சுரேஷ் என்பவன் அவளின் முகத்தில் ஆசிட் ஊற்றிவிட்டான்,இதனால் அந்த பெண்ணின் முகம் சிதைந்ததொடுமட்டுமல்லாமல் அவரின் கண்பார்வையும் பொய்,சில தினங்களில் இறந்துவிட்டார் இது அனைவரும் படித்த,அறிந்த செய்தி தான்.நமக்கு இது செய்தி பாதிக்கப்பட்டவருக்கு?

அவர்கள் என்ன கூறினார்கள் தெரியுமா !!!!

புதிய தலைமுறையில் அவரது தந்தை மற்றும் உறவினர்களின் பேட்டியை காட்டினார்கள். அதில் அவரின் தந்தை "என் மகள் முகத்தில் ஆசிட் ஊற்றியவனின் மூஞ்சியில்  ஆசிட் ஊற்ற வேண்டும், வேறு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை.. தூக்கு தண்டனை வேண்டாம், ஒரு நொடியில் செத்துவிடுவான்... என் மகள் பட்ட கஷ்டத்தை அவன் காலமெல்லாம் பட வேண்டும்" என்றார்.

அதைவிட முக்கியம் அந்த பெண் விநோதினியும் மருத்துவமணையில் இருக்கும் பொழுது, "அவனின் முகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்... நான் அனுபவிக்கும் இதே வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இது ஒரு சாம்பிள் தான் இது போன்றவை இன்னும் ஏராளம்..

இவை அனைத்தும் குற்றங்களை குறைக்க இஸ்லாம் சொல்லக்கூடிய கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல் என்ற நடைமுறையை உண்மை படுத்துகிறது. 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment