ஏம்பா இந்த அளப்பரைன்னு நீங்க கேட்கலாம் அல்லது நினைக்கலாம். மேற்கொண்டு படிச்சாதானே உங்களுக்கு விபரம் புரியும்.
அல்லாஹ்வின் உதவியை நேரில் பார்த்து,அல்லாஹ்வின் உதவியால் திரண்ட கூட்டத்தை பார்த்த பின்னும் இந்த வார்த்தையை சொல்லாமல் இருக்கமுடியுமா.இறைவனுடைய மிகப் பெரிய கிருபையால் குறிப்பிட்ட தினத்தில்,குறிப்பிட்ட நேரத்தில் "பைத்துல்மால்"அறிமுகப் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைப்பெற்று முடிந்துள்ளது. அல்லாஹ்வினுடைய உதவி இந்தக் கூட்டத்தின் ஆரம்பம் முதலே பிரதிபலித்தது.அது என்ன உதவி?இந்த கூட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்பிருந்தே மழை தூறல்கள் மண்ணை நினைக்க ஆரம்பித்து விட்டது ,நிகழ்ச்சியின் காலை பொழுதிலும் மழை,வானமும் மதியம் வரை இருட்டிக்கொண்டே இருந்தது.நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த துடிப்பான கொள்கை சகோதரர்களுக்கு சிறு சங்கடம்,இவ்வளவு உழைப்பும் வீணாகிவிடுமோ என்று,ஆனால் அல்லாஹ் வேறு விதத்தில் உதவி புறிந்தான் ஆம் நிகழ்ச்சியின் மாலை பொழுதிலிருந்து சிறு தூறல்கள் கூட இல்லை(மறுநாளில் இருந்து நல்ல மழை).
நிகழ்ச்சி அறாம்பிக்கும் முன்பே வந்து குவிய ஆரம்பித்த கூட்டம் மக்களின் ஆர்வத்தை காட்டியது.வெளி ஊரிலிருந்தும் ஆண்களும்,பெண்களும் வந்திருந்தனர்.நிகழ்ச்சி 7.25 மணிக்கு ஆரம்பித்தது,பொதுக் கூட்டத்தின் ஆரம்பமாக சகோ.அப்துல் பாசித் சலாமி அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்தார்கள்.அவரை தொடர்ந்து பேராசிரியர்.அப்துர் ரஹ்மான் பாகவி அவர்கள் பைத்துல்மாலின் சிறப்புகள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் எடுத்த்துரைத்தார்கள்.குறிப்பாக இந்த பைத்துல்மாலை இஸ்லாமிய முஹல்லாக்கள் நிர்வகிகாததின் காரணமாக இஸ்லாமியர்கள் இழந்தது என்ன,வட்டியில் எவ்வாறு இஸ்லாமியர்கள் மூழ்கி இருக்கிறார்கள் அதனால் ஏற்படும் விபரீதம் என்ன என்று அழகாக சொன்னார்கள்.
பின் இறுதியாக இஸ்லாம் சொல்வது என்ன?நாம் செய்வது என்ன? என்ற தன் உரையை ஆரம்பம் செய்த ஜாபார் அலி ஹசனி,எடுத்த எடுப்பிலேயே தர்கா வழிபாடை வன்மையாக சாடினார்.கொடுக்கல் -வாங்கல்,வியாபாரம்,வட்டி போன்ற செயல்களை பிடி,பிடி என்று கடுமையாக பிடித்து குர்ஆன்,ஹதீஸ் படி முஸ்லிம்கள் நடக்கவேண்டும் என்று ஆணித்தரமான கருத்துக்களை கொண்டு எடுத்துரைத்தார்,அதிலும் குறிப்பாக விபச்சாரம்,பெண்கல்வி, திருமண வீட்டில் எடுக்கப்படும் வீடியோ ஆகியவற்றை வன்மையாக விமர்சித்தார்.வீடியோ எடுக்கப்படும் திருமண வீட்டிற்கு இமாம்கள் நிக்காஹ் ஓத செல்லக் கூடாது என்று அழுத்தமாக சொன்னார்.பெண்கல்விக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்தாலும் இன்றைய பெண்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும் செல்போன்,லேப்டாப் போன்ற உபகரணங்களை கொடுத்து அவர்கள் கேட்டு போக நாமே வழிவகுத்து தந்துவிடக் கூடாது என்ற கருத்தை மிக அழகாக கேட்பவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் பதிவு செய்தார்.
ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெண்கள் அதிகமாக பங்கெடுத்தனர் ஒரு கட்டத்தில் அவர்கள் அமரவே இடம் இல்லை,சிலர் நின்றுக் கொண்டே பயானை கேட்டனர்.இனிதே நடந்த இந்த நிகழ்ச்சி 10 மணி அளவில் முடிந்தது.
இந்த நிகழ்ச்சி நல்ல படியாக நடந்து முடிய வேண்டும் என்று இரவு பகலாக கடுமையாக உழைத்த சகோதர்களை இங்கு நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.அவர்களின் உழைப்பை அல்லாஹ் வீனடித்துவிடாமல் அவர்களின் நற்கூலியை நாளை மறுமையில் பன்மடங்காக்கி தருவானாக-ஆமீன்.
பைத்துல்மாலுகேன்றே ஒரு கமிட்டி தனியாக வேண்டும் என்ற கருத்தினை ஏற்று,ஊர் நிர்வாகத்தினர் முன்னிலையில் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்(அல்ஹம்துலில்லாஹ்).இந்த கமிட்டியும்,பைத்துல்மாலும் நல்ல படியாக நடக்க அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திப்போமாக.
நிகழ்ச்சி அறாம்பிக்கும் முன்பே வந்து குவிய ஆரம்பித்த கூட்டம் மக்களின் ஆர்வத்தை காட்டியது.வெளி ஊரிலிருந்தும் ஆண்களும்,பெண்களும் வந்திருந்தனர்.நிகழ்ச்சி 7.25 மணிக்கு ஆரம்பித்தது,பொதுக் கூட்டத்தின் ஆரம்பமாக சகோ.அப்துல் பாசித் சலாமி அவர்கள் கிராஅத் ஓதி ஆரம்பம் செய்தார்கள்.அவரை தொடர்ந்து பேராசிரியர்.அப்துர் ரஹ்மான் பாகவி அவர்கள் பைத்துல்மாலின் சிறப்புகள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் எடுத்த்துரைத்தார்கள்.குறிப்பாக இந்த பைத்துல்மாலை இஸ்லாமிய முஹல்லாக்கள் நிர்வகிகாததின் காரணமாக இஸ்லாமியர்கள் இழந்தது என்ன,வட்டியில் எவ்வாறு இஸ்லாமியர்கள் மூழ்கி இருக்கிறார்கள் அதனால் ஏற்படும் விபரீதம் என்ன என்று அழகாக சொன்னார்கள்.
பின் இறுதியாக இஸ்லாம் சொல்வது என்ன?நாம் செய்வது என்ன? என்ற தன் உரையை ஆரம்பம் செய்த ஜாபார் அலி ஹசனி,எடுத்த எடுப்பிலேயே தர்கா வழிபாடை வன்மையாக சாடினார்.கொடுக்கல் -வாங்கல்,வியாபாரம்,வட்டி போன்ற செயல்களை பிடி,பிடி என்று கடுமையாக பிடித்து குர்ஆன்,ஹதீஸ் படி முஸ்லிம்கள் நடக்கவேண்டும் என்று ஆணித்தரமான கருத்துக்களை கொண்டு எடுத்துரைத்தார்,அதிலும் குறிப்பாக விபச்சாரம்,பெண்கல்வி, திருமண வீட்டில் எடுக்கப்படும் வீடியோ ஆகியவற்றை வன்மையாக விமர்சித்தார்.வீடியோ எடுக்கப்படும் திருமண வீட்டிற்கு இமாம்கள் நிக்காஹ் ஓத செல்லக் கூடாது என்று அழுத்தமாக சொன்னார்.பெண்கல்விக்கு இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்தாலும் இன்றைய பெண்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தன் பிள்ளைகளை கவனமாக வளர்க்க வேண்டும் செல்போன்,லேப்டாப் போன்ற உபகரணங்களை கொடுத்து அவர்கள் கேட்டு போக நாமே வழிவகுத்து தந்துவிடக் கூடாது என்ற கருத்தை மிக அழகாக கேட்பவர்கள் புரிந்துக் கொள்ளும் விதத்தில் பதிவு செய்தார்.
இந்த நிகழ்ச்சி நல்ல படியாக நடந்து முடிய வேண்டும் என்று இரவு பகலாக கடுமையாக உழைத்த சகோதர்களை இங்கு நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.அவர்களின் உழைப்பை அல்லாஹ் வீனடித்துவிடாமல் அவர்களின் நற்கூலியை நாளை மறுமையில் பன்மடங்காக்கி தருவானாக-ஆமீன்.
பைத்துல்மாலுகேன்றே ஒரு கமிட்டி தனியாக வேண்டும் என்ற கருத்தினை ஏற்று,ஊர் நிர்வாகத்தினர் முன்னிலையில் கமிட்டி உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்(அல்ஹம்துலில்லாஹ்).இந்த கமிட்டியும்,பைத்துல்மாலும் நல்ல படியாக நடக்க அல்லாஹ்விடம் நாம் பிரார்த்திப்போமாக.
வாழ்த்துக்கள் !
ReplyDeleteநன்றி ..தனபாலன் தொடர்ந்து நம் தளத்தோடு தொடர்பில் இருங்கள்
Deleteவாழ்த்துகள்
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.
Deleteஸலாம் ... பைத்துல்மால் எவ்வளவு இருக்கு .. எத்தனை மக்களுக்கு உதவி செஞ்சு இருக்காங்க... கொஞ்சம் detail போற்றுந்தா நல்லா இருந்து இருக்கும் ..
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
Deleteஅல்ஹம்துலில்லாஹ்,படிக்கவே ஆனந்தமாய் உள்ளது. இன்ஷா அல்லாஹ் இதற்காக உழைத்த ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நற்கூலியை நிறைவாக்கித் தருவானாக!
மேலும் உங்களுடைய எழுத்துக்களில் நல்ல முன்னேற்றமும் நல்ல முதிர்ச்சியும் பெற்றதாக எண்ணுகிறேன். இன்னும் இத்தளத்தை சிறப்பாக இன்னும் மெருகேற்றித் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இன்னும் அதிகமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தால் பார்த்து மகிழ்ந்து இருப்போம்.
வ அலைக்கும் சலாம் அனானி,
Deleteபைத்துல்மாலின் இருப்பை ஊர்ரர்க்கும்,பைத்துல்மாலுக்கு பணம் தந்தவர்களுக்கும் தான் சொல்வது வளமை.உங்களை போல எந்த உதவியும் செய்யாமல்,பெயரில்லாமல் முகவரி இல்லாமல் வருவோருக்கும் போவோருக்கும் என்றே பள்ளிவாசல் நோட்டீஸ் போர்டில் ஒட்டி இருப்பார்கள் வந்து பார்த்துக் கொள்ளவும் .....
வ அலைக்கும் சலாம் யாசர் அரஃபாத்,
Delete//அல்லாஹ் இதற்காக உழைத்த ஒத்துழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் வல்ல ரஹ்மான் நற்கூலியை நிறைவாக்கித் தருவானாக//-ஆமீன்
//மேலும் உங்களுடைய எழுத்துக்களில் நல்ல முன்னேற்றமும் நல்ல முதிர்ச்சியும் பெற்றதாக எண்ணுகிறேன். இன்னும் இத்தளத்தை சிறப்பாக இன்னும் மெருகேற்றித் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.//
உங்கள் கருத்திற்கு நன்றி ...என்னால் முடிந்த வரை இந்த தளத்தை மெருகேற்ற உழைத்து வருகிறேன்,மேலும் மேரு கேற்ற என்ன என்ன விசயங்களை போடா வேண்டும் என்று தாங்கள் உதவினால் நல்லது....
படங்கள் அதிகம் எடுக்காமல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.வீடியோ விரைவில் APPLOAD செய்கிறேன் இன்ஷா அல்லாஹ்
சிறந்த முயற்சி! வாழ்த்துக்கள். இந்த பணத்தை கல்விப் பணிக்கு அதிகம் செலவழியுங்கள்.
ReplyDeleteSALAM,
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.இன்ஷா அல்லாஹ் பைத்துல்மாலுக்கு வரும் பணத்தை கல்விக்கு செலவழிக்கும் எண்ணம் இருந்தாலும்,அதிகமதிகம் வட்டியை ஒழிக்க பயன் படுத்த வேண்டும் என்பது பெருபாலோனோரின் ஒருமித்த கருத்து...