நோன்பிற்கு பின் அன்றும் இன்றும்

Thursday, September 22, 2011
இறைவனின் திருப் பெயரால் 
      அல்லாஹ்வினுடைய பேரருளுடைய புனித மிக்க ரமலான் நம்மைவிட்டு பிரிந்து சென்று நாம் ஷவ்வாலுடைய மாதத்தில் இருக்கின்றோம்.அந்த புனிதமிக்க ரமலான் மாதம் நம்மை பிரிந்து முழுமையாக ஒரு மாதம் ஆகிவிட்டது,இந்நிலையில் அன்றும் இன்றும் நம்முடைய செயல்பாடுகளை ஒப்பிட்டு சற்று பின்னோக்கி பார்போம்.


ரமலான் வந்ததும் ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை அனுபவித்து அன்று முதல் நம்முடைய பள்ளிவாசலை தொழுகையை கொண்டு அலங்கரித்தோம்.நம்மில் பலர் இரவில் கண் விழித்து தஹஜ்ஜுத் என்னும் தொழுகையை நிறைவேற்றினோம்,பகல் எல்லாம் அந்த ஏக இறைவனுக்காக நோன்பு இருந்தோம்.ஜகாத்,சதகா போன்ற தாண,தர்மங்களை செய்தோம்.ரமலான் கடைசி பத்தினுடைய ஒற்றைப்படை இரவுகளிலே 1000 மாதங்களை விட சிறப்புமிக்க லைலத்துல் கத்ர் இரவினை அடைய தொழுது துஆ செய்தோம்.எல்லா நேர தொழுகைக்கும் ஆர்வமுடன் முன்க்குட்டியே வந்து பள்ளியில் அமர்தோம்,குர்ஆனை அதிகமதிகம் ஓதினோம்,இப்படி அந்த ரமலான் நம்முடைய இபாதத்களில் சென்றது ஆனால் மறுநாளே எல்லா ஊர்களிலும் உள்ள பள்ளிவாசல்கள் வெரிசொடியது ஒரு வரிசை,இரண்டு வரிசை நிற்பதற்கே ஆள் இல்லை.இத்தகைய நம் நிலைக்கு காரணம் ரமலான் நம்மை பண்படுதவில்லை என்பதே நிதர்சன உண்மை.பண்படுத்துதல் என்பது இறையச்சத்தை கொண்டு வர வேண்டும்.அந்த இறையச்சம் நம்முடைய உள்ளத்தை தூய்மை அடைய செய்யவேண்டும்.இது தான் நோன்பு நம் மீது கடமையாகபட்ட நோக்கம்.இதனை பின் வரும் குர்ஆண் வசனம் கூறுகின்றது.
விசுவாசங் கொண்டோரே ! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாகப்பட்டிருன்தது போல் உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாகப்பட்டிருகின்றது (அதனால்) நீங்கள் (உள்ளசுத்தி பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். அல் - குர்ஆன்  2 : 183

 இங்கே நாம் இன்னொரு விசயத்தையும் தெளிவுபடுத்தியாக வேண்டும்.நம் ஆலிம் மக்களில் பலர்,முஸ்லிம் சஹோதரர்களில் பலர்,இந்த நோன்பு வைபதின் அர்த்தமே பஞ்சு மெத்தைகளில் படுத்துறங்கும் பணக்காரர்கள்,படுக்க பாய் கூட இல்லாமல் கட்டந்தரையிலே படுத்துறங்கும் பரம ஏழைகளின் பசி,பட்டினியை உணர்த்துவதே நோன்பின் மாண்பு,நோன்பின் நோக்கம் என்று புரிந்து வைத்துள்ளனர்.இதனால் தான் அரசியல் கட்சியின் தலைவர்கள் கூட இந்த பட்டினியை காரணம் காட்டி நாங்களும் அதனை(நோன்பு) உணர முஸ்லிம்கள் போல நோன்பு வைத்து மாலையில் திறகின்றோம் என்கின்றனர்,மேலும் சிலர் இந்த நோன்பிலே மருத்துவ குணம் உள்ளது.11 மாதங்கள் சாப்பிட்டு,சாப்பிட்டு வயிறு சாப்பாட்டை செரிக்க   வைக்க தொடர்ந்து இயங்குவதால் அதற்கு ஒரு ஓய்வாக இந்த நோன்பை  இறைவன் ஏற்படுத்தி இருகின்றான் என்று கூறி நோன்பினுடைய நோக்கத்தை திசை திருப்புகின்றனர்.உண்மையில் நாம் மேலே சொன்ன மருத்துவரீதியான காரணங்களும்,பசி பட்டினியை உணர்த்தும் காரணங்களும் நோன்பின் மூலம் கிடைக்கப்பெறும் காரணங்கள் தானே தவிர நோன்பு நம் மீது கடமையாக்கப்பட்டதின் காரணம் அல்ல.
 

நோன்பு நம் மீது கடமையாக்கப்பட்டதின் காரணம் நமக்கு அந்த நோன்பின் மூலம் "தக்வா" என்றுச் சொல்லக்கூடிய இறையச்சம் வர வேண்டும் என்னும் காரணத்திற்கு தான்.இதையே தான் அந்த குர்ஆன் வசனத்தின் (2 : 183) இறுதியில் "நீங்கள் (உள்ளசுத்தி பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம்" என்று கூறுகின்றான்.அதனால் தான் நோன்பு நோற்றுள்ள காலகட்டத்தில் தனியே நம்மை ஒரு அறையில் பூட்டி நம் எதிரே நமக்கு பிடித்தமான சாப்பாட்டு வகைகளை வைத்தாலும் நாம் சாப்பிடமாட்டோம் இதனை புரிந்து கொள்ள இன்னுமொரு உதாரணம் மற்ற நாட்களில் தொழுகை போன்ற இபாதத்களில் ஈடுபடுவதைவிட நோன்பு காலங்களில் அதிகமதிகம் இபாதத்களில் ஈடுபடுவோம் காரணம் அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த பயபக்தி,உள்ளசுத்தி தான் காரணம்.

இத்தகைய சிறப்புமிக்க ரமலான் நோன்பை அல்லாஹ் சொல்லக்கூடிய    "தக்வா"  வரவேண்டும் என்பதற்காகவா நோற்றோம் என்பது நமக்கே புரியாத புதிர்! .காரணம் பெருநாள் தொழுகை முடிந்ததும் தர்கா போன்ற இடங்களுக்கு சென்றும்,திரை படங்களுக்கு சென்றும்,நோன்பிலே அத்தனை நாட்கள் சேர்த்து வாய்த்த நன்மைகளை கொண்டுபோய் குப்பைகளிலே கொட்டுவது இது தான் நம் சமுதாயத்தின் வாடிக்கையாக உள்ளது.ரமலானின் ஒரு மாத காலம் முழுவதும் "இறையச்சத்தை" கொண்டு வர ஒரு பயிற்சி களம் தான்.அத்தகைய பயிற்சி பெற்று நாம் இறையச்சத்தின் மூலமே அல்லாஹ்வின் நேசத்தை பெற முடியும்.இதுவே நாம் நமக்காக செய்து கொள்ளும் பெரும் உதவி.இந்த உதவியே நம்மை நரக நெருப்பிலிருந்து காத்துக் கொள்ளக்கூடிய வழி.அத்தகைய வழியை அடைய இனி வரக்கூடிய காலங்களில் முயற்சி செய்ய அந்த ஏக இறைவனிடம் "துஆ" செய்வோம்.நம்மை அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்க பிழை பொறுக்கச் சொல்லி "தவ்பா" என்னும் பாவ மன்னிப்பு தேடுவோம்.நல் அமல் செய்யகூடிய நன் மக்களாக அந்த அல்லாஹ் நமக்கு அருள் புரிவனாக -ஆமின்.

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment