சில தாவரங்கள் விஷமுள்ள விதைகளைக் கொண்டிருக்கின்றன.
இது, தாவரங்களை உணவாக உட்கொள்ளும்
விலங்குகளிடமிருந்து
தங்களை
பாதுகாத்துக்
கொள்ள,தாவரங்கள் கொண்டிருக்கும்
பாதுகாப்பு
முறையாகும்.
இருப்பினும்
அமெரிக்காவில்
வாழும்
ஒருவகை
கிளியினம்
இதுபோன்ற
விஷமுள்ள
விதைகளை
உணவாக
உட்கொள்கிறது.
இது
மிகவும்
வியப்புக்குரிய
செயலாகும்.
ஏனெனில்
தாவரங்களை
உணவாக
உட்கொள்ளும்
மற்ற
விலங்கினங்கள்
இந்த
செடியின்
பக்கம்
தலைகாட்டவே
பயப்படும்போது,
இந்த பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
இந்த பறவையினம் மட்டும் தொடர்ந்து விஷமுள்ள இந்த விதைகளை உணவாக உட்கொண்டும் எந்த வித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
ஆங்கிலத்தில் 'மகாவ்' (MACAW)என அழைக்கப்படும் இந்த கிளியினம், விஷ விதைகளை உணவாக உட்கொண்டாலும் எந்த பாதிப்புக்கும் உள்ளாவதில்லையே: எப்படி? என்கிற கேள்வி, விஞ்ஞானிகளின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த கிளியினத்தை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது அவைகளிடம் உள்ள முற்றிலும் வித்தியாசமான நடத்தையை அறிய முடிந்தது.
அவைகள் உணவாக உட்கொள்ளக்கூடிய, ஆனால் விஷத்தன்மையுள்ள இந்த விதைகளை உட்கொண்டதும், இந்த கிளிகள் பாறை போன்ற ஒரு இடத்திற்குப் பறந்து செல்கின்றன. அங்குள்ள பாறைகளை கொஞ்சம், கொஞ்சமாக அரித்து களிமண் தன்மை கொண்ட பாறைகளை விழுங்குகின்றன. இவ்வாறு களிமண் தன்மை கொண்ட பாறைகளை கிளிகள் விழுங்கும் இந்த செயல், எந்தவித நோக்கமும் இன்றி செய்யக்கூடிய செயல் அல்ல. உண்மையிலேயே, அவைகள் விழுங்கக் கூடிய களிமண் தன்மை கொண்ட பாறைகள், கிளிகள் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்மையை முறித்து விடுகின்றன. எனவேதான் இந்த பறவையினம் விஷத்தன்மை உள்ள விதைகளை உணவாக உட்கொண்டாலும், எந்தவித பாதிப்புக்கும் உள்ளாவதில்லை.
இந்த பறவையினம், விஷத்தன்மை உள்ள விதையை செரிக்க வைக்கக்கூடிய மருத்துவ அறிவை எப்படி பெற்றுக் கொண்டது? இந்த பறவையினம், தான் உணவாக உட்கொண்ட விதையில் உள்ள விஷத்தன்iமையை முறிக்கும் வித்தையை எப்படி கற்றுக் கொண்டது? ஒருவேளை இப்படி இருக்கலாமோ? கிளிகள் மருத்துவ கல்லவியைக் கற்று, அதன் மூலம் விஷத்தை முறிக்கக்கூடிய குணம் களிமண் தன்மையுள்ள பாறைகளுக்கு உண்;டு என்பதை அறிந்திருக்குமோ? நிச்சயமாக அப்படி இல்லை.
ஒரு தாவரவிதையை பார்த்தவுடன், அது விஷத்தன்மை உள்ளதா? இல்லையா?என்பதை ஆறறிவு படைத்த மனிதர்களால்கூட தெரிந்து கொள்ள முடியாது. அப்படியே அறிந்து கொண்டாலும், அந்த தாவரவிதையிலுள்ள விஷத்தன்மையை போக்க மருத்துவ அறிவு இல்லாத சாதாரண மனிதர்களால் முடியாத காரியம். விஷத்தன்மையைப் போக்க வேண்டுமெனில், அதைப்பற்றிய விபரம் அறிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள முடியுமேத் தவிர, சாதாரண மனிதர்களால் தாவரவிதையிலுள்ள விஷத்தன்மையை இல்லாமல் செய்ய முடியாது. ஆறறிவு படைத்த மனிதர்களின் நிலையே இவ்வாறு இருக்கும்போது,ஐந்தறிவு படைத்த பறவையினம் மருத்துவம் கற்றுக் கொண்டு, விஷத்தன்யுள்ள தாவரவிதையில் உள்ள விஷத்தை இல்லாமல் செய்வது என்பது நடக்காத காரியம். மனிதன் பல வருடங்கள் படித்து, ஆய்வுசெய்து பெறக்கூடிய மருத்துவ அறிவு,கிளிகளுக்கு எதேச்சையாக கிடைத்திருக்கும் என்பது ஆறறிவு படைத்த மனிதர்களால் ஏற்றுக் கொள்ளக்கூடியதா? நிச்சயமாக ஏற்றக்கொள்ள முடியாது. எல்லாம் அறிந்த வல்ல அல்லாஹ்வே கிளிகளுக்கு இந்த அறிவை வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று, கிளிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றன.
அல்லாஹ் அருள்மறை
குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'அவர்கள் தங்களுக்குள்ளே (இது பற்றிச்) சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ்;வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்கும் இடையிலுள்ளவற்றையும்,உண்மையையும், குறிப்பிட்ட ஒரு தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை; எனினும் நிச்சயமாக மனிதர்களில் பெரும்பாலோர் தங்கள் இறைவன் சந்திப்பை நிராகரிக்கிறார்கள்.' (அத்தியாயம் 30 ஸூரத்துர் ரூம் - 6வது வசனம்)
No comments:
Post a Comment