இறைவனின் திருப் பெயரால்
இது தொடர்பாகபர்னெல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாண்டு ஜனவரி மாதமே தான் இஸ்லாத்தை ஏற்றுகொண்டதாகவும் தன் பெயரை வலீத் என மாற்றும் எண்ணமுள்ளதாகவும் தெரிவித்தார்.தற்சமயம் வரை தன் பெயரான வெய்ன் தில்லன் பர்னலை மாற்றவில்லை என்றும்எதிர்காலத்தில் புதிதாய் பிறந்த மகன் என பொருள்படும் வலீத் என்ற பெயரை வைக்கநினைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும்அவ்வறிக்கையில் தான் முதல் முறையாக ரமலான் மாதத்தை அடைய இருப்பதால் தான் முதன்முறையாக நோன்பு இருப்பதை குறித்து மிக சந்தோஷமாக இருப்பதாகவும் தெரிவித்தார். தென்ஆப்பிரிக்க மக்களும் ஊடகங்களும் தன் கிரிக்கெட் ஆட்டத்தில் காட்டும் ஆர்வத்தைமதிக்கும் அதே வேளையில் எந்நம்பிக்கையை ஏற்பது என்பது தனது தனிப்பட்ட உரிமைஎன்றும் கூறியுள்ள அவர் அதை மதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர்முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும்இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லாமற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் மேலாளர்முஹம்மது மூஸாஜீ பர்னெல் இஸ்லாத்தை ஏற்று கொள்வது அவரின் தனிப்பட்ட விஷயம் என்றும்இவ்விஷயத்தில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் முஸ்லீம் வீர்ர்கள் ஹாஷிம் அம்லாமற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோர் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றார்.
இது குறித்துகருத்து தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்கள் பர்னெல் இஸ்லாத்தில்தீவிரமாக உள்ளதாகவும் சமீபத்திய ஐ.பி.எல் போட்டியிலிருந்து ஒரு சொட்டு மதுவும்அருந்தவில்லை என்றும் தெரிவித்தனர். இதில் அம்லாவின் பங்கு ஏதுமில்லை என்றாலும்ஹாஷிம் அம்லா மிக கட்டுபாட்டுடனும் தன் மதத்தை பின்பற்றுவதில் காட்டும் உறுதியும்அனைவரையும் ஈர்த்துள்ளது என்றனர். ஹாஷிம் அம்லா இஸ்லாத்தின் ரோல் மாடலாகவிளங்குவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் மதுபரிமாறப்படும் கேளிக்கைகளில் பங்கேற்க மறுப்பது, சுற்றுபயணத்தில் கூட தன் தொழுகைகளில் உறுதியாய் இருத்தல், தென் ஆப்பிரிக்க அணியினரின் ஸ்பான்ஸரான பீர்நிறுவனத்தின் லோகோ பொறிக்கப்பட்ட ஆடையை அணிய மறுப்பது போன்றவைகளின் மூலம் அவரைஅறியாமலேயே ஹாஷிம் அம்லா பிறர் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் தோன்ற காரணமாகஇருக்கின்றனர் என்றனர். 2006ஆம் ஆண்டு யூசுப் யோஹன்னவாக இருந்து இஸ்லாத்திற்குமாறிய முஹம்மது யூசுப்பை தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்று கொண்ட இரண்டாவது கிரிக்கெட்வீர்ர் பர்னெல் என்பது குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் ஏபல் சேவியர் கடந்தவாரம் தன்னுடைய அமீரக பயணத்தின்போது இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறினார்.
ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் பிறந்த இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலாக்ஸி, போர்ச்சுகல், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, இங்கிலாந்து, துருக்கி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா அணிக்காகவும் விளையாடியவர். மேலும் தன்னுடைய 38வது வயதில் கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வுப்பெறப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஓய்வு பெறுவது வருத்தமாக இருந்தாலும் என்னுடைய வாழ்கையின் புதிய கட்டத்திற்கு செல்வது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய பெயரை பைசல் சேவியர் என்று மாற்றியுள்ளார். இஸ்லாமிய மார்க்கமானது அமைதி, சமத்துவம், சுதந்திரம் மற்றும் நம்பிக்கை அளிப்பதாகவும் இவைகள் அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.தற்போது இவர் ஐ.நா.வின் சார்பில் பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ளார்.
இன்னும் இது போல் பலரும் தூய இஸ்லாமிய மார்கத்திற்கு திரும்பி உள்ளனர் ஆனால் இஸ்லாதிற்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் எல்லா மீடியாக்களும் வேண்டும் என்றே இந்த விசயங்களை மறைகின்றது மேலும் உண்மையற்ற மற்றும் ஆதாரமற்ற விசயங்களை திட்டமிட்டே பரப்பிவருகின்றது அதை இனம் கண்டு நாம் தெளிவடைவோம் இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment