அங்கோலாவில் இஸ்லாம் தடையா? உண்மை என்ன?

Tuesday, November 26, 2013
அங்கோலா ஆப்பிரிக்காவின் நடுப்பகுதியிலே தெற்காக அமைந்துள்ள ஒரு குட்டி நாடு. இந்நாட்டுக்குத் தெற்கு எல்லையில் நமீபியாவும், வடக்கே காங்கோ மக்களாட்சிக் குடியரசும், கிழக்கே சாம்பியாவும், மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலும் உள்ளது.

கடந்த சில நாட்களாக ஒரு செய்தி காட்டு தீ போல இணைய தளம் மூலமாக வேகமாக பரிவி வருகிறது அது தான் "இஸ்லாத்தை முழுவதுமாக தடை செய்த உலகில் முதல் நாடாக அங்கோலா உருவெடுத்துள்ளது" என்பதே அந்த செய்தியாகும்.இதன் உண்மை தன்மையை சற்று அலசுவோம் இன்ஷா அல்லாஹ்... 


முதலில் இது சம்மந்தமாக உலா வரக் கூடிய செய்திகளை பார்த்துவிடுவோம்,

அங்கோலா நாடு இஸ்லாம் மதத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை மசூதிகளை மூடி வைக்கவும் அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அந்நாட்டின் கலாச்சாரத் துறை அமைச்சர் ரோசா க்ரூஸ் இசில்வா செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டின் நீதி மற்றும் மனித உரிமைகளுக்கான அமைச்சகம் இஸ்லாம் மதத்தை அங்கீகரிக்கவில்லை; ஆகவே மறு உத்தரவு வரும்வரை மசூதிகளை மூடிவிடப் பணித்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.
"அங்கோலாவின் கலாச்சாரத்துக்கு உடன்பட்டு வராத வழிபாட்டு முறைகளைக் கொண்ட மதங்களை நாங்கள் தடைசெய்துள்ளோம்; அவ்வகையில் இஸ்லாம் மதமும் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையின் ஒரு பகுதியாக மசூதிகள் இடிக்கப்படும்" என்றும் அமைச்சர் கூறினார். "சட்ட அங்கீகாரம் கோரி ஆயிரக்கணக்கான மனுக்கள் வந்துள்ளன" என்றும் அப்பெண் அமைச்சர் கூறினார்.
அங்கோலா அதிபர் ஜோஸ் எட்வர்டோ டாஸ் சாண்டோஸ் இது பற்றி கூறுகையில் "இது இறுதியானது; இவ்வாறாக எங்கள் நாட்டில் இஸ்லாமிய ஆதிக்கத்தை முறியடிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இது சம்மந்தமாக சில புகைப்படங்களையும் முகநூலிலும்,ட்விட்டரிலும் ஷேர் செய்யப்படுகிறது....
இவை தான் பல்வேறு மீடியாக்கள்,மூலமாக சொல்லப்படும் செய்திகள். இப்பொழுது இதன் உண்மை தன்மையை ஆராய்வோம்........


அமெரிக்காவில் உள்ள அங்கோலாவின் தூதர்கள் இந்த செய்திகளை முழுவதுமாக மாறுகிறார்கள்.

வாசிங்க்டன் D.C  உள்ள அங்கோலாவின் தூதரக அதிகாரி ஒருவர் தொலைபேசி வாயிலாக தெரிவித்த செய்தி என்னவென்றால்,அங்கோலாவில் இஸ்லாத்திற்கு மட்டுமல்ல எந்த ஒரு மதத்திற்கும் தடை இல்லை, இஸ்லாத்திற்கு தடை என்ற செய்தி வெறும் வதந்தி தான் என்றார்.அங்கோலா எந்த ஒரு மதத்தின் விசயங்களுக்கும் உள் நுழையாது.எங்களது நாட்டில் காதொலிக்,பாப்டிஸ்ட்,ப்ரோடோஸ்டேன்ட், முஸ்லிம் என்று பல மதத்தவர்களும் இங்கு வாழ்கிறார்கள்.எங்கள் நாடு அணைத்து மதத்தவர்களுக்கும் சுதந்திர நாடு என்று தெரிவித்து இருந்தார் என்று  International Business Times மேற்கோள் காட்டியுள்ளது.

முதலில் சொன்ன செய்தியின் உண்மை தன்மையை அறியும் முன்னேரே  நம்முடைய சகோதரர்கள் பரப்புரையை ஆரம்பித்துவிட்டனர்."pray for Muslims in Angola" இப்படி ட்வீட் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.கூடவே மேலே நாம் இணைத்துள்ள பள்ளிவாசல் இடிப்பது போன்ற போட்டோகளையும் இணைத்து அனுப்புகின்றனர். 

ஆனால் International Business Times கூறுகின்றது பள்ளிவாசல் இடிப்பது போன்ற படங்கள் 2008 ல் எடுத்தது.தற்போதைய படங்கள் அவை இல்லை. 

ஃபித்னா (குழப்பம்) செய்வதுகொலையைவிடக் கொடியதுஅவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பிகாஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும்மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்”. 
அல் குர்ஆன் :2:217

தான் காதில் கேட்டதை எல்லாம் உண்மை எது பொய் எது என்று அறியும் முன்னரே பரப்புபவர்களை பொய்யர்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறியுள்ளதை கூட நம் சகோதரர்கள் அறியவில்லையா?அல்லது அறிந்தும் அறியாததுபோல உள்ளார்களா??????

இஸ்லாத்திற்கு எதிராக எந்த செய்தி வந்தாலும் முதலில் பரப்புபவர்கள் நம் இஸ்லாமிய சகோதரர்களாக தன உள்ளார்கள்...என்று இவர்கள் திருந்துவார்களோ!!!!!!

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

6 comments:

 1. Replies
  1. சலாம் சகோ,

   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

   Delete
 2. sago........ ungalai maathiri naanum manithan naan badiththaithaan ungaludan bakirvu seitheyn....atharkkaaga kadumaiyaaka vimarsikka veyndiya avasiyam illai.....Email-il theylivu paduththuthaley siranthathu.......islaththirku ethiraaga nadakkum kodumai ninaiththu aathaingap pattuthaan antha message forward seitheyney thavira ithu poiyaana seithi endru theyrinthu veynum endrey parappavillai..jassakkallah kairan

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ,

   முதலில் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திட விரும்புகிறேன்,உங்கள் இ மெயிலை பார்த்து இதற்கு நான் பதில் சொல்லவில்லை...நான் எடுத்து சொல்லி இருக்கும் குற்றசாற்று இந்நேரம் தளத்திற்குரியது,இதை கண் மூடித்தனமாக FACEBOOK,TWITTER,EMAIL ல் ஷேர் செய்தவர்களுக்குரியது.

   இப்பொழுது உங்களுக்கான ஒரு ஆலோசனை...

   இனி இது போல ஒரு செய்தி கேள்விப்பட்டால் நன்கு ஆராய்ந்து பதியவும்..இல்லையேல் பொய்யை பரப்பியவர்களில் நாமும் ஒரு ஆளாவோம்,அல்லாஹ்விடத்திலும் இதற்கு பதில் சொல்லும்படி ஆளாக நேரிடும்....

   மன வருத்தம் ஏற்பட்டு இருப்பின் அல்லாஹ்விற்கா என்னை மன்னியுங்கள்.....

   Delete
 3. இப்படித்தான், நம்மில் பலர், ஆராயாமல் - தான்தோன்றிமுறையில், எடுத்தேன்; கவிழ்த்தேன் என்கிற ரீதியில், கேட்ட / படித்த செய்திகளை, மிகைப்படுத்தியும் கூட, E mail, Face Book, Tweeter போன்றவற்றில், பரவ செய்துவிடுவது கண்டிக்கத்தக்கது.
  --- அன்புடன் உங்கள் சகோதரன்:
  பரங்கிப்பேட்டை - காஜா நஜிமுதீன், ரியாத்.

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ,

   உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...

   Delete