Facebookல் Like போட போகிறீர்களா அப்படினா இது உங்களுக்கு தான்

Friday, August 23, 2013
யாரோ ஒருவர் போடும் Photo’s, Comment’s and Status போன்ற விஷயங்களை நானும் ஒப்புகொள்கிறேன், இது சரிதான் என்பதற்காக உள்ளது தான் Like Buttons.நாம் செய்யும் like நம்முடைய நண்பர்கள் வட்டத்திற்கு நாம் அதை லைக் செய்துள்ளோம் என்ற செய்தியுடன் செல்லும். இதையே அவர்கள் like செய்தது  page ஆக இருந்தால் எப்போதெல்லாம் page owner தங்களுடைய page யை update செய்கிறார்களோ அப்போதெல்லாம் நமக்கும் அந்த விபரம் வரும்.

 பயன் படுத்துவோர் :
இதை சிலர் பயன்பாடு தெரிந்து பயன்படுத்துகிறார்கள், சிலர் பயன்பாடு தெரியாமல் ஏதோ வருகிறது கிளிக் பன்னுவோம் என்று பயன்படுத்துகிறார்கள். அதன் பயன்பாடு தெரியாமல் பயன்படுத்தும் நண்பர்கள் தான் அதிகம். ஏதோ நமக்கும் பேஸ் புக் account வேண்டும் என்று open செய்துவிட்டு அதில் வருவதையெல்லாம் OK, Accept, Like என்றும் கொடுக்கிறார்கள்.
நமது முஸ்லிம் சமுதாயமும் லைக் ஆப்ஷனும் :
இன்று பெரும்பாலும் நமது முஸ்லிம் சமுதாய மக்கள் facebook கை விபரம் தெரிந்தும் தெரியாமலும் பயன்படுத்துகிறார்கள். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம், தேவையற்ற ஹராமான பல விஷயங்களை  நமது முஸ்லிம் மக்கள் like கொடுப்பதால் அது அவர்களுடைய நபர்கள் வட்டத்திற்கும் செல்கிறது. ஒரு ஹராமான காரியத்தை பரப்புவதற்கு நாமும் காரணமாகிறோம். அதிலும் சினிமா மற்றும் ஆபாசம் சம்பந்தப்பட்ட Post க்கு like அதிகம். சினிமாகாரர்களுக்கு அதுதான் தொழில், பணம் ஈட்டுவதற்காக நடிக்கிறார்கள். நடிகைகள் என்ற பெயரில் தங்களின் உடலை வெளிமக்களுக்கு காட்டி பிச்சை எடுக்கிறார்கள். அந்த நடிகைகளின் Post க்கு நம்ம முஸ்லிம் மக்களும் like கொடுக்கிறார்கள். அது மட்டுமா நடிகர்கள் மத்தியில் போட்டி தல, தளபதி, ஸ்டார் மற்றும் சிங்கம் என்று தலையா  likeகு, தளபதியா comments, சிங்கம்ன share பண்ணுங்க என்று. இந்த மானங்கெட்ட பொழப்பு அந்த நடிகர்களுக்கே தெரியாது. அந்த நடிகர்கள் எப்படி நடித்தால் சம்பாதிக்கலாம் என்று தன் சுயநலத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வேலைவெட்டி இல்லாமல் அவர்களுடைய பெயரையும், Photoவையும் பேஸ்புக்கில் போட்டு நம்முடைய வாழ்கையை இழந்து கொண்டிருக்கிறோம்.
 இது ஒரு பக்கம் இருக்க நடிகைகள் Photo Paste பண்ணி இதில் யார் அழகு, யார் கவர்ச்சி, யார் குடும்பப்பெண் என்று கேள்வி.? நடிக்க வந்துட்டாலே அவள் குடும்பப்பெண் என்ற தகுதியை இழந்துவிட்டாள். ஏதோ நடிகைகள் எல்லாம் இவங்க சொந்தங்கள் மாதிரி பேஸ்புக்கில் like, comment & share செய்து கொண்டாடுகிறார்கள்…
 கடந்த ஒன்றரை மாதமாக ஒரு சிறு புள்ளிவிபரம் எடுத்தோம். அதில் முடிவு என்ன தெரியுமா? சராசரியாக ஒரு நாளில் ஒரு நடிகையின் Photo விற்கு 8000 முதல் 10,000 like விழுது. அதில் குறைந்தபட்சம் 400 முதல் 500 வரை நமது முஸ்லிம் சமூகத்துடையது. அதே போல் ஒரு நடிகையின் போடோக்கு மிகவும் அதிகம் like இருந்தது. நாங்கள் ஒரு கணக்குக்காக பத்து முஸ்லிம் சகோதரர்களிடம் கேட்டோம். அவர்கள் பதில் என்ன தெரியுமா? அவள் முஸ்லிம்  என்று. என்ன ஒரு வேடிக்கையான பதில் பாருங்கள். அல்லாஹ் நம் முஸ்லிம் சமூகத்தை காப்பாற்றுவானாக!!! ஆமீன்….
 இதே facebookகை பெரும்பாலான இஸ்லாமிய இயக்கங்களும் தங்களுக்கென ஒரு பக்கத்தை திறந்து வைத்துள்ளார்கள். ஏன் இந்த இஸ்லாமிய இயக்கங்களின் பக்கத்தை like பண்ணவில்லை என்று கேட்டால்? அபோதுதான் அவர்கள் மூளையை பயன்படுத்தி பதிலளிப்பார்கள். எப்படி? அது TMMK போட்டது, இது TNTJ போட்டது, PFI போட்டது என்று பதிலளிபார்கள். இப்படி முஸ்லிம் மக்கள் தங்களுக்கு சாதகமான பக்கங்களுக்கு மட்டுமே Like ஆப்சன் என்றால் என்ன, எதற்கு பேஸ் புக்கில் உள்ளது, எதற்கு நாம் பயன்படுத்த வேண்டும்?
விழைவு அல்லது பயன் :like பண்ணுகிறார்கள். இதனால் நம் முஸ்லிம் இயக்கங்களின் பக்கத்திற்கு மொத்தாகவே சில நூறு like மட்டுமே விழுகிறது. ஆனால் தேவையற்ற சினிமா போன்ற பக்கங்களுக்கு லட்சங்களை தாண்டி இந்த like செல்கிறது. இதற்கு முஸ்லிம்கள் மட்டும்தான் காரணம் என்று நாங்கள் சொல்லவில்லை. முஸ்லிம்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை. ஆகவே எனதருமை முஸ்லிம் சமூகமே தேவையற்ற ஹராமான விஷயங்களை குறிப்பாக சினிமாகாரர்களின் பக்கத்தை Unlike செய்துவிடுங்கள். இஸ்லாம் சம்பந்தமான அறிவு சார்ந்த விஷயங்களை மட்டும் like, share & comments செயல்களை பயன்படுத்துங்கள் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம். இதில் தவறேதும் இருந்தால் அல்லாஹ்வுக்காக பொறுத்துக்கொள்ளவும்.
அழகிய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது.தீய பரிந்துரை செய்பவருக்கு அதில் பங்கு உள்ளது.அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்-குர்ஆன்  4:85)

Thanks:imdtime.com

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment