விநோதினி கொலை வழக்கு - குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!!

Tuesday, August 20, 2013
வினோதினி என்ற இளம் பெண் மீது ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட பரப்பான இவ்வழக்கில் குற்றவாளி சுரேசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆயுள் தண்டனை போதுமா???

காரைக்கால் கோட்டுச்சேரி திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ் (28) என்பவர், எம்.எம்.ஜி நகரில் வசித்து வந்த பொறியாளர் வினோதினியை (23) திருமணம் செய்யும் நோக்கில், வினோதினியை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இது பற்றி வினோதினியிடம் அவர் தெரிவித்தார். ஆனால் வினோதினி சுரேஷ்குமாரின் காதலை ஏற்கவில்லை. இந்நிலையில், வினோதினி கடந்த தீபாவளி பண்டிகையின் போது சென்னையிலிருந்து ஊருக்கு வந்திருந்தார். நவம்பர் 14ஆம் தியதி சென்னைக்கு செல்வதற்காக இரவு 10 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டார். அவருடன் தந்தை ஜெயபால், நண்பர் பத்மநாபன் ஆகியோரும் வந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த சுரேஷ்குமார் ஆசிட்டை எடுத்து வினோதினி மீது வீசினார்.  இதில் வினோதினியின் முகம் மற்றும் உடல் பகுதிகள் வெந்தன. தந்தை ஜெயபால், பத்மநாபன் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. .
இந்த நிலையில் வினோதினியின் இரு கண்களும் பார்வை இழந்தன. உயிருக்கு போராடிய நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினோதினி,  3 மாதம் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தியதி பரிதாபமாக உயிரிழந்தார்.
வினோதினி மீது ஆசிட் வீசிய மறுநாளே சுரேஷ்குமாரை காரைக்கால் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது முதலில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. வினோதினி இறந்ததையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. 6 வாரமாக ஜெயிலில் இருந்து வந்த சுரேஷ்குமாரை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதம் 23ஆம் தியதி ஜாமீனில் விடுதலை செய்தது.
வினோதினி கொலை வழக்கை விரைவாக விசாரணை நடத்தி முடிக்க புதுவை அரசு முடிவு செய்தது. இதையடுத்து கடந்த ஜூன் மாதம் 10ஆம் தியதி மீண்டும் விசாரணை தொடங்கியது. காரைக்கால் செசன்சு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. நீதிபதி மார்கரட் ரோசலின் விசாரணை நடத்தினார். அரசு சார்பில் வாழக்கறிஞர்  வெற்றிச் செல்வனும், சுரேஷ் சார்பில் நாகப்பட்டினத்தை சேர்ந்த வழக்கறிஞர் வீரபாண்டியனும் ஆஜராகி வாதாடினார்கள்.
வினோதினி மீது ஆசிட் வீசிய போது நேரில் பார்த்தவர்கள், ஆசிட் விற்றவர், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்பட 24 பேரிடம் விசாரணை நடந்தது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தியதியே விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று ஆகஸ்ட் 20ஆம் தியதி சுரேசுக்கு ஆயுள் தண்டனை வழங்கி காரைக்கால் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தண்டனை வினோதினியின் தந்தையை திருப்திபடுத்தி இருக்குமா ?
நிச்சயம் திருப்திபடுத்தி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது காரணம்,வினோதினி இறந்தவுடன் புதிய தலைமுறையில் அவரது தந்தை மற்றும் உறவினர்களின் பேட்டியை காட்டினார்கள். அதில் அவரின் தந்தை "என் மகள் முகத்தில் ஆசிட் ஊற்றியவனின் மூஞ்சியில்  ஆசிட் ஊற்ற வேண்டும், வேறு எதுவும் எங்களுக்கு தேவை இல்லை.. தூக்கு தண்டனை வேண்டாம், ஒரு நொடியில் செத்துவிடுவான்... என் மகள் பட்ட கஷ்டத்தை அவன் காலமெல்லாம் பட வேண்டும்" என்றார்.

அதைவிட முக்கியம் அந்த பெண் விநோதினியும் மருத்துவமணையில் இருக்கும் பொழுது, "அவனின் முகத்தில் ஆசிட் ஊற்ற வேண்டும்... நான் அனுபவிக்கும் இதே வேதனையை அவனும் அனுபவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இவை குற்றங்களை குறைக்க இஸ்லாம் சொல்லக்கூடிய கண்ணுக்கு கண்,பல்லுக்கு பல் என்ற நடைமுறையை உண்மை படுத்துகிறது. 
காரைக்கால் நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்தாலும்,சட்டங்களின் ஓட்டைகளை பயன்படுத்தி உயர்நீதிமன்றத்திலோ,உச்சநீதிமன்றத்திலோ இதுபோன்ற குற்றவாளிகள் தப்பித்துவிடக்கூடாது.வினோதினியின் தந்தையின் மன ஓட்டத்திற்கு தகுந்த தண்டனையை நம் அரசால் தரமுடியாது இருப்பினும் எதிர்காலத்தில் பல விநோதினிகள் பாதிக்கப்படக்கூடாது என்றால் மரண தண்டனையே இறுதியான முடிவாக இருக்கும். 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment