புத்த கயா குண்டு வெடிப்பு - ஹிந்து மதத் துறவி கைது பரபரப்பு தகவல்

Thursday, August 15, 2013
பீகார் : கடந்த ஜூலை மாதம் 7 ஆம் தேதியன்று பீகாரில் உள்ள புத்த கயா கோவிலில் 10 இடங்களில் குண்டு வெடிப்புகள் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டது.அதற்கு வழக்கம் போல முஸ்லிம்களையே காரணம் சொல்லப்பட்டது,இருந்தாலும் எல்லா வழக்குகளையும் போல இப்பொழுதும் உண்மை மீண்டும் தன் முகத்தை காட்டியுள்ளது.

புத்த கயா குண்டு வெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இக்குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக அரூப் பிரமச்சாரி என்ற ஹிந்து மதத் துறவி கைது செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து புத்தகயா காவல் நிலைய அதிகாரி ''மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அரூப் பிரமச்சாரி என்பவரை புத்த கயா குண்டுவெடிப்பு வழக்குத் தொடர்பாக கைது செய்துள்ளதாகவும் புத்த கயா கோவிலில் தங்கி இருந்த அரூப் குண்டுவெடிப்புக்குப் பிறகு தலைமறைவாகி விட்டதாகவும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அரூப்பிடம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும்'' என்றும் தெரிவித்துள்ளார்.
புத்த கயாவில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு இந்திய முஜாஹிதீன் அமைப்பு டுவிட்டரில் பொறுப்பேற்று இருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஃபைனல் பஞ்ச்:இப்பொழுது அரசுத்துறையும்,ஊடகங்களும் என்ன சொல்லப் போகின்றது இந்தியன் முஜாஹிதீனே ஒரு ஹிந்து அமைப்பு தான் என்றா?அல்லது இந்தியன் முஜாஹிதீனில் கூட ஹிந்து துறவிகள் உறுப்பினர்களாக உள்ளார்கள் என்றா???? 

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment