"தலைவா"வுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்

Saturday, August 17, 2013
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி கூத்தாடி,கனவிலும் நினைக்க முடியாத இடத்திற்கு சென்றவர் நடிகர் விஜய்.கோடிகளில் சம்பளம்,Audi ளில் ஊர்வலம் என்று  கூத்தாடி வாழ்கையை கழித்தவருக்கு பயங்கர அடியை தந்தது "துப்பாக்கி".முஸ்லிம்களுக்கு களங்கம் விளைவித்து தன் சுய லாபத்திற்காகவும்,தன் ஹீரோயிசத்தை நிலைநாட்டுவதற்காவும் இஸ்லாமியர்களை பகிரங்கமாகவே பகைத்து,பின் பெட்டி பாம்பாக அடங்கினார்.


இப்படி பம்முவதெல்லம் சமூக அக்கறையின் காரணமாக அல்ல.தன் அடுத்த படத்திற்கு பிரச்சனை வந்து தன்  சம்பாத்தியத்தில் மண் விழுந்துவிடக் கூடாது என்று தான்."துப்பாக்கியால்" வேண்டுமென்றே இஸ்லாமியர்களை குறிவைத்தார்.மற்ற சமுதாய மக்களை காட்டுவதை விட இஸ்லாமியர்களை காட்டினால் தான் கல்லா கட்டமுடியும் என்று நம்பினார்.துப்பாக்கி படத்தை பற்றி அன்று விமர்சனம் எழுத நினைத்தும் நேரமின்மையால் முடியவில்லை.

மிகப்பெரிய சமுதாயத்தை ஒரு படத்திற்காக எதிர்த்துவிட்டோமே, சினிமாவில் விட்டாலும்,அரசியலில் பிடித்துவிட வேண்டும்.ஒட்டு வாங்க அங்கு தானே ஓட வேண்டும்,குல்லா போட்டு வித விதமாக நோன்பு கஞ்சி குடிக்க அவர்களோடு போஸ் தரணுமே என்றெல்லாம் யோசித்தவரின் சிந்தனையில் உதித்தது தான் "தலைவா" படத்தை,இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான "ஈகை திருநாள்" அன்று படத்தை ரிலீஸ் செய்து கல்லாவும் கட்டிவிடலாம்,முஸ்லிம்களையும் தாஜா செய்துவிடலாம் என நினைத்தார். அவர் ஒன்று நினைக்க இறைவன் வேறு ஒன்றை நாடுகிறான்.

என்ன என்னவோ காரணத்தால் தமிழகத்தில் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே செல்கின்றது.படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளரை  வைத்து மீடியாக்களிடம் புலம்பவைத்து பார்த்தார்,பத்திரிக்கையாளர்கள்  சந்திப்பில் சோகமே உருவாக நின்றும் பார்த்தார்,youtube  ல் கூட கெஞ்சி பார்த்துவிட்டார் ம்ஹும்..ஒன்று நடக்கல.எதுவுமே பயன் தராத பொழுது இந்தியனின் இறுதி ஆயுதம் "உண்ணாவிரதம்".அதை கூட தன்  படக் குழுவினருடன் இருக்கபோவதாக மிரட்டிபார்த்தார்.மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தார்,இறுதியில் உண்ணாவிரதத்திற்கு கூட அனுமதிமறுப்பு என அவர் முயற்சிகள் புஸ்வானமாகின.

அவரின் கட்ட கடைசி முயற்சியான முதல்வர் சந்திப்பாவது கை கொடுக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.அதுவரை அவர் பொறுத்திருந்தாலும் மக்கள்????நான் கேள்வி பட்டது வரையில் தாளாரமாக திருட்டு DVD  களிலும்,இன்டர்நெட்டில் இலவசமாக டவுன்லோட் செய்தும் பார்த்து வருகின்றனர்.படம் வேறு நல்லா இல்லை,அப்பட்டமாக பல படங்களின் தழுவல்,படம் வேஸ்ட் என்ற விமர்சனத்தையே கேட்க முடிவதாலும்.படம் வெளியானாலும் ஓடுவது  சந்தேகமே.!!!

இந்நிலை நாளை கமலையும் நெருங்கும் தூரம் வெகு தொலைவில் இல்லை.

மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் தலைவாவுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்  

இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment