முஸ்லிம் பதிவர்கள் சாதித்து கிழித்தது என்ன?

Friday, January 4, 2013தினமலரின் இணைய பத்திரிக்கையை இன்று காலை படித்த பொழுது மனது கனத்தது,காரணம் முஸ்லிம் அல்லாத மற்ற சமூகத்தை சார்ந்த மக்கள் இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் எந்த கோணத்தில் பார்கிறார்கள் என்று.
இது நாள் வரையில் இஸ்லாத்திற்கெதிரான பிரச்சாரங்கள் வெற்றி பெற்று அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வதாகவே உணர்கின்றேன்.இஸ்லாமியன் என்றால் தீவிரவாதி என்ற எண்ணம் சாதாரண மக்களையும் போய் சேர்ந்து விட்டது இனி அவர்களிடம் இருந்து வளரக் கூடிய அடுத்த தலைமுறை இன்னும் இதை விட வீரியமான செயல்களில் இஸ்லாமியருக்கு எதிரான  பிரசாரத்தில் ஈடுபடக்கூடும்.

இஸ்லாமிய பதிவர்களே உங்கள் சக சகோதரன் என்ற உரிமையுடன் கோபத்தோடு கேட்கிறேன்,இப்படி உலகம் முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான போய் பிரச்சாரம் நடக்கிறதே நீங்கள் என்ன செய்கிறீர்கள்,மற்ற பகுதிகளை கூட நாம் பார்க்க வேண்டாம் நாம் வாழும் தமிழகத்தில் இது போன்ற மீடியா யுத்தம் நடக்கிறதே இதை எல்லாம் பற்றி துளியும் அக்கறை இல்லாமல் நீங்கள் எங்கே சென்று கொண்டிருகிறீர்கள். இஸ்லாமிய அடிப்படையை ஒருவர் அறிந்துக் கொண்டால் நிச்சயம் இதுபோன்ற விசம பிரசாரத்தில் ஈடுபட மாட்டார்,அப்படி யாரோ ஒரு மாற்று மத நண்பர் அறிந்துக் கொள்ளவாவது வழி வகை செய்ததுண்டா?

யாரோ ஒருவன் முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் குறை சொல்லி பேசிவிட்டால் வானாத்துகும் பூமிக்கும் குதிகிரீர்கள் உடனே அந்த சம்பவம் நடந்த சுவடே இல்லாமல் எளிதில் மறந்தும் விடுகிறீர்கள்.இதை எல்லாம் ஒரு ஓரத்தில் ஒதுக்கி விட்டு என்றாவது சிந்தித்து அவன் ஏன் அப்படி சொல்கிறான் அதற்க்கு நம் மார்க்கத்தில் தீர்வு என்ன இருக்கிறது,அந்த தீர்வை அறிந்து பிற மக்களிடத்திலே சொல்ல முயன்றது உண்டா?

அவன் விசம பிரச்சாரம் செய்கிறான் என்று சொல்லும் நீங்கள் உண்மை பிரச்சாரம் செய்ய முன் வருவதில்லையே ஏன்?

மாற்று மதத்தவர்கள் நம் மீது வைக்கும் குற்றச்சாட்டிற்கு கண்டும் காணாமல் போகும் நிலை ஏன் உங்களுக்கு?

உண்மை என்னவென்று எனக்கு தெரியும் ஆனால் பதில் யாராவது சொல்லிவிட்டு போகட்டும் என்ற அலட்சியமா?
அல்லது பதில் அறிய முயற்சிக்கவில்லையா?

ஏன் இந்த பொடுபோக்குத்தனம் ?இணையத்தில் வெட்டி அரட்டையும்,ப்ளோகில்(Blog)வெட்டி செய்திகளும்,மார்க்க தொடர்பில்லா கவிதைகளும்,சினிமா விமர்சனங்களும் இன்னும் இன்னும் அல்லாஹு அக்பர் .......சொல்லிமாலவில்லை

இதுபோன்றவர்களுக்கு தங்கள் பதிப்புகளுக்கு நிறைய வருகையாளர்கள் வரவேண்டுமென்று தான் விரும்புகிறார்களே தவிர மார்கத்தை பற்றிய எந்த அக்கறையுமில்லை.இவர்கள் ஒரு விளம்பர பிரியர்கள்.

ப்ளாக் வைத்திருக்க கூடியவர்கள் மற்ற செய்தியை வெளியிடுவதுபோல இஸ்லாம் சம்ந்தப்பட்ட செய்தியை வெளியிட வேண்டும்.செய்திகளை அறிய முடியாதவர்கள் மற்ற ப்ளோகில் இருந்தாவது எடுத்துபோடலமே.மற்று மதத்தவர்கள் ஒரே பொய்யை பல விதங்களில்  எப்படி பல மீடியாக்களில் பரப்புகிறார்களோ,நாமும் அதைவிட அதிகமாக உண்மையை உலகுக்கு சொல்ல வேண்டும்.

என்றோ ஒரு நாள் இஸ்லாத்தின் மேல் பற்றுக் கொண்டு வீராவேசம் போடுவது வீண் வேலை.

நான் படித்த தினமலர் பத்திரிக்கையின் லிங்க் இதோ

அந்த பக்கத்தின் கிழே வாசகர்கள் கமண்ட் பகுதியில் வாசகர்கள் இஸ்லாத்தையும்,இஸ்லாமியரையும் எந்த கண்கொண்டு பார்கிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.

*மார்க்க செய்திகளை,உலகில் இஸ்லாமியருக்கு எதிரான செய்திகளை நடுநிலையோடு வெளியிடும் ப்ளாக் சகோதரர்கள் இந்தக் கட்டுரையிலிருந்து விதிவிலக்கு.


இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

No comments:

Post a Comment