விபச்சாரத்தை சட்டபூர்வமாக ஆக்கவேண்டும்

Friday, January 11, 2013

டெல்லி மாணவியின் கற்பழிப்பு சம்பவத்தை தொடர்ந்து,கற்பழிப்பு சம்மந்தமான சட்டம் கடுமையாக்குவது உள்ளிட்ட பல அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க நீதிபதி ஜே.ஸ்.சர்மா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கமிட்டியிடம் பாரதிய பாட்டிடா என்ற தன் ஆர்வ தொண்டு நிறுவனம்(!!!!!!)விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.மேலும் நாட்டில் இதுபோன்ற கற்பழிப்புகள் நிகழ காரணம் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்காதது தான் என்றும் கூறியுள்ளது.
- தினத்தந்தி 10.1.2013

இது ஒரு புறம் இருக்கட்டும் விபச்சாரம் சம்மந்தமாக இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்போம்

விபச்சாரத்தின் பக்கம் கூட நெருங்காதீர்கள் அது மானக்கேடான பாவம் என்று குர்ஆன் சொல்கிறது.

விபச்சாரம் என்பதை அவ்வளவு ஒரு பெரிய பாவமாக,வழிகேட்டில் இழுத்து செல்லும் செயலாக இஸ்லாம் சொல்கிறது.


விபச்சாரத்தை இந்தியாவில் சட்டபூர்வமாக ஆக்கிவிட்டால் என்ன?

உடலில் ஏற்படும் கிளர்ச்சியின் காரணமாக அதீத மணத்தூண்டுதலின் காரணமாக ஒரு ஆண் ஒரு பெண்ணையோ அல்லது ஒரு பெண் ஆணையோ உடலின் இச்சைகளை தீர்க்க நாடி செல்கிறார்கள்.

எந்த ஒரு செயலும் சட்டப்பூர்வமாக்கப்பட்டால் காலப்போக்கில் அது சகஜமான செயலாகிவிடும்.சமுதாயத்தில் விபச்சாரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிடும்.

இந்த மானக்கேடான செயலை அங்கீகரித்தால் நிச்சயம் இதனால் பல பெண்களின் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை,இதில் ஆண்கள் பாதிக்கப்படுவது என்பது சிறு சதவிகிதமே.

காலபோக்கில் மனைவி இருக்க கணவன் வேறு பெண்ணை நாடி செல்ல ஆரம்பித்துவிடுவான்.

விபச்சாரத்தில் ஈடுபட துணை இல்லை என்றால் வேறு பெண்ணை பலவந்தமாக நாடுவான்.

அப்படி பலவந்தமாக நாடும்பொழுது பாதிக்கப்பட்டவர்களால் எந்த ஒரு எதிர்ப்பையும் காட்டிட முடியாது.

தவறுகள் நாட்டில் பெருக ஆரம்பிக்கும்.


சட்டபூர்வமாக்கபடாமலே நாட்டில் அன்றாடம் விபச்சார தவறுகள் எவ்வளவோ நடகின்றது.தலைமறைவாக நடக்கும் தவறுகள் வெளிப்படையாகவே நடக்க ஆரம்பித்து விடும்.கற்பழிப்பு தவறுகளும் நாட்டில் மழிந்துவிடும்.

சராசரியாக ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு பெண் இந்தியாவில் கற்பழிக்கபடுகிறாள் என்று ஒரு புள்ளி விபரம் குறிப்பிடுகிறது. தூத்துக்குடியை சார்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்தாகரத்திர்க்கு ஆளாகி கொல்லப்பட்டால்.

ஆக,கற்பழிப்புகள் தைரியமாக செய்ய இவர்களை தூண்டுவது எது?

விபச்சாரம் செய்தும்,விபச்சாரத்திற்கு ஆதரவாகவும் செயல்பட இவர்களுக்கு துணிச்சல் எங்கிருந்து வந்தது?

இவை இரண்டுக்குமான பதிலை அறிவுடையோர் நடுநிலையாக சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

கற்பழிப்புகள் நாட்டில் சர்வசாதாரணமாக நடக்க மிக முக்கிய காரணமாக திகழ்வது பெண்களின் ஆடைகளும்,அவர்களின் நளினமும் தான்.


பெண்களின் ஆடையை பற்றி சொல்லும் முன் ஆடை என்றால் என்ன என்று முதலில் தெரிந்துக் கொள்ளவேண்டும்.

நாம் ஏன் ஆடை உடுத்தவேண்டும் ?பிறருடைய ஆபாச பார்வையிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆகும்.ஆடை என்பது வெறும் உடலின் அந்தரங்க உறுப்புகளை மறைக்கவேண்டும் என்பதர்காக மட்டுமல்ல.ஒரு ஆணுக்கு,பெண்ணின் எந்த உறுப்புகள் எல்லாம் சபலத்தையும்,காமவெரியையும்   கூட்டுமோ அதை மறைக்க வேண்டும்.ஒரு பெண்ணுக்கு,ஆணின் எந்த உறுப்புகள் மோகத்தை ஏற்படுத்துமோ அதை அதை ஆணும் மறைக்கவேண்டும்.

ஒரு  ஆண் தன் தொப்புளுக்கு மேலிருந்து முழங்கால் வரை கட்டாயம் மறைக்கவேண்டும்.

ஒரு பெண் முகத்தை தவிர தலை முழுவதும் மூடி(தலை முடி கூட வெளி தெரியக்கூடாது) மணிக்கட்டுவரை மறைத்திருக்கவேண்டும்,பாதங்களை கூட அந்நிய ஆண் பார்த்துவிடாத வகையில் மறைத்திருக்க வேண்டும்.இவை அனைத்தையும் கொண்ட இறுக்கம் இல்லாத ஆடையை அணிய வேண்டும்.


இது போன்ற ஆடைகள் தான் ஒருவருக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் தரும்.

பெரும்பாலும் ஆணை பொறுத்தவரை பெண்ணை விட பலம் மிக்கவன் என்பதாலும் எளிதில் காம தூண்டுதலுக்கு இலக்காகிவிடுவான் என்பதாலும் கற்பழிப்புகளில் அவன் பங்கு மட்டுமே உள்ளது.

 சினிமாக்களிலும்,விளம்பரங்களிலும்,தொலைகாட்சிகளிலும் வரும் பெண்கள் தங்கள் அழகை வெளிபடுத்த மறைக்க வேண்டிய உறுப்புகளை வெளிச்சம் போட்டு காட்டிவிடுவதால் சாதாரண ஒரு ஆண்மகனுக்கும் இந்த காம சிந்தனை ஊட்டபடுகிறது.

எவர் ஒருவரும் தான் உறுதியானவர்கள்,எது ஒன்றும் தங்களை அசைத்துவிடமுடியாது என்று சொல்ல முடியாது ஏனென்றால் நம் பகுதிகளில் ஒரு பழமொழி உண்டு "தவறு செய்ய வாய்பில்லாதவரை எல்லோரும் ஒழுக்கமானவர்கள் தான்" .

சினிமாக்களில் பார்த்த காட்சிகளில் சற்றும் குறையாது ஒரு அழகான பெண் பின்னழகை பிதுங்க காட்டும் டைட் ஜீன்,டைட் டீ-ஷர்ட் போட்டு  முன்னழகை முன் வருபவர்க்கு காட்டி ஆள் நடமாட்டம் இல்லா பகுதிகளில் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம் காமவெறி பிடித்தவனை விட்டுவிடுவோம் தவறு செய்ய என்னமில்லாதவனை கூட தவறு செய்ய அந்த தருணம் தூண்டிவிடும்.செயல் அளவில் தவறு செய்ய முடியாவிட்டாலும் அவன் வக்கிரமான பார்வை அவள் உடம்பில் எங்கு படும்??இதை கூட இதுபோன்று ஆடை அணியும் பெண்கள் உணரவில்லையா என்று கூட கேட்க முடியவில்லை ஏனென்றால் எல்லாம் தெரிந்து தான் அணிந்து வருகிறார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு அவர்களின் டீ-ஷர்ட்களில் கிஸ் மீ ,ட்ரை மீ போன்ற ஆண்களை தூண்டி இழுக்க கூடிய வாசங்களை போட்டுக்கொள்வார்கள்.

இப்படி ஆடை ஒழுக்கத்தை சரியாக கடைபிடிக்காமல் நான் செல்வேன் ஆனால் எந்த ஆண்மகனும் என்னை சீண்டக்கூடாது என்றால் இதில் என்ன நியாயம் உள்ளது.தவறு செய்பவனை விட அதை தூண்டக்கூடியவனை தண்டிக்கவேண்டும் என்று தான் எந்த ஒரு அறிவாளியும் சொல்வார்கள்.



இது போன்று ஆடை சமந்தப்பட்டதில் இது என் உரிமை இதில் யாரும் தலையிட முடியாது என்று கூறி ஆண்களை தூண்டிவிட்டு காம வேளைகளில் ஈடுபடவைத்து விடுகிறார்கள்,இதன் காரணமாக விபச்சாரமும் பெறுகின்றது என்பது தான் உண்மை.

இந்த இழி செயலை செய்பவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம்.அந்த சட்டத்தை இது நாள் வரை விமர்சித்தவர்கள் தன்னை அறியாமலே அந்த இஸ்லாமிய சட்டம் வேண்டும் என்பதை வேறுவிதமாக வெளிபடுத்துகிறார்கள்.

உதாரணத்திற்கு:கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்தி,சிறுமியை பாலியல் பலாத்தாகரம் செய்து கொன்றவனுக்கு எதிராக கடுமையான கண்டனங்கள் எழுந்தது அவனை கொல்ல வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுத்தனர்.இதை காவல்துறையும் வாய்ப்பாக பயன்படுத்தி கடத்திய இருவரில் ஒருவனை என்கொவ்ன்டரில் கொன்றது.மக்களின் எதிர்ப்புக்கு மாறாக ஆதரவு பெருகியது.பாதிக்கப்பட்டவர்களின் நிலையிலிருந்து பார்த்தால் இது நியாயமாகவும் உள்ளது.


மேலே குறிப்பிட்டுள்ளது போல விபச்சாரத்திற்கு ஆதரவாக சிலர் பேசமுடிகிறது என்றால் நம் சட்டத்தால் இது போன்ற செயல்களை தடுக்கு முடியாது என்றே அர்த்தம்.

இந்தியாவின் குற்றவியல் சட்டம் 375 கற்பழிப்புக் குற்றத்தைப் பற்றி விவரிக்கின்றது. விதி 376, கற்பழித்தவனுக்குக் குறைந்தபட்சம் 7 வருடங்கள் தண்டனை விதிக்கலாம்; இருப்பினும் கோர்ட் நினைத்தால் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம். இவை தான் கற்பழிப்புக் குற்றத்திற்கு இந்தியாவின் குற்றவியல் சட்டம் கூறுகின்ற தண்டனையாகும். இந்தத் தண்டனையால் இதுபோன்ற காமக் கொடூரன்களைத் திருத்திவிட முடியுமா? இதற்குத் தீர்வு இஸ்லாமிய சட்டம் தான்; குர்ஆன் கூறுகின்ற குற்றவியல் சட்டம் தான்.


இஸ்லாத்தின் விபச்சார குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது:

விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.  (அல்குர்ஆன் 24:2)

கிராமவாசி ஒருவர் (மற்றொருவருடன்) வந்து,அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்பளியுங்கள்'' என்று கேட்டார். அவரது எதிரி எழுந்து நின்று, உண்மை தான் சொன்னார். எங்களுக்கிடையே அல்லாஹ்வின் சட்டத்தின்படி தீர்பளியுங்கள்'' என்று கூறினார். அந்த கிராமவாசி (எதிரியைச் சுட்டிக் காட்டி), என் மகன் இவரிடம் கூலியாளாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். (அப்போது) இவரது மனைவியுடன் விபசாரம் செய்து விட்டான். மக்கள் என்னிடம்,உன் மகனுக்குக் கல்லெறி தண்டனை கொடுக்கப்பட வேண்டும்' என்று கூறினர். நான் என் மகனை அதிலிருந்து காப்பாற்ற ஈட்டுத் தொகையாக நூறு ஆடுகளையும் ஓர் அடிமைப் பெண்ணையும் தந்தேன். பின்னர் (சட்ட) அறிஞர்களிடம் கேட்டேன். அவர்கள்,உன் மகனுக்கு நூறு கசையடிகளும், ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தான் கொடுக்கப்பட வேண்டும்' என்று தீர்ப்புக் கூறினார்கள்'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவருக்குமிடையே நான் அல்லாஹ்வின் சட்டத்தின்படியே தீர்பளிக்கிறேன்: அடிமைப் பெண்ணும், ஆடுகளும் உன்னிடம் திருப்பித் தரப்பட வேண்டும்; உன் மகனுக்கு நூறு கசையடிகளும் ஓராண்டு காலத்திற்கு நாடு கடத்தும் தண்டனையும் தரப்பட வேண்டும்'' என்று கூறிவிட்டு (அருகிலிருந்த) ஒரு மனிதரைப் பார்த்து,உனைஸே! இவருடைய (கிராமவாசியின் எதிரியுடைய) மனைவியிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டால்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுப்பீராக'' என்று கூறினார்கள். அவ்வாறே, உனைஸ் (என்னும் அந்தத் தோழர்) அப்பெண்ணிடம் சென்று (அவள் குற்றத்தை ஒப்புக் கொண்டதும்) அவளுக்குக் கல்லெறி தண்டனை கொடுத்தார்.

அறிவிப்பவர்கள்: அபூஹுரைரா (ரலி), ஸைத் பின் காலித் (ரலி) 
நூல்: புகாரி 2896, 2725, 6633, 6828, 6836, 6843, 6860, 7195, 7260

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருந்தபோது அஸ்லம்' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து நான் விபசாரம் செய்துவிட்டேன்'' என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய திசைக்கே சென்று (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) நான்கு தடவை ஒப்புதல் வாக்குமூலம் அவர் தந்தார் . ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவரை அழைத்து,உனக்கு என்ன பைத்தியமா?'' என்று கேட்டார்கள். பின்னர்,உனக்குத் திருமணம் ஆகிவிட்டதா?' என்று கேட்டார்கள். அவர் ஆம்'' என்றார். எனவே, அவரை (பெருநாள்) தொழுகைத் திடலுக்குக் கொண்டு சென்று அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். (அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்.) அவர் மீது கற்கள் விழுந்த போது அவர் (வலி தாங்க முடியாமல்) வெருண்டோட ஆரம்பித்தார். இறுதியில் (மதீனாவின் புறநகர்ப் பகுதியில்) பாறைகள் நிறைந்த அல்ஹர்ரா' எனும்) இடத்தில் அவர் பிடிக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்பட்டார்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி 5270


எதற்கெடுத்தாலும் தமிழ் கலாச்சாரம் என்று பேசக்கூடியவர்கள் எங்கே?உங்கள் வீட்டுப் பெண்களை இதுப் போன்ற அனானகரீகமான ஆடைகளை போட வேண்டாம் என்று என்றாவது சொன்னதுண்டா?





    




 



இத்தளத்தின் பதிவுகளை இலவசமாக இமெயிலில் பெற்றிடுங்கள்...

1 comment:

  1. அருமையான பதிப்பு...வாழ்துக்கள்

    Regards,
    Abu Nadeem

    http://ungalblog.blogspot.com
    http://niduronline.blogspot.com

    ReplyDelete