நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 15)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதம் கடந்த மனித நேயத்திற்குச் சான்றாக அமைந்த மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!

அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) என்ற நபித்தோழரின் வீட்டில் ஒரு ஆடு அறுக்கப்பட்டது. அவர் வீட்டுக்கு வந்தவுடன் 'நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா? நமது அண்டை வீட்டில் உள்ள யூதருக்குக் கொடுத்தீர்களா?' என்று கேட்டார்கள். 'அண்டை வீட்டாரை எனது வாரிசாக அறிவித்து விடுவாரோ என்று நான் எண்ணும் அளவுக்கு ஜிப்ரீல் எனும் வானவர் எனக்கு வலியுறுத்திக் கொண்டே இருந்தார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அப்போது தெரிவித்தார்.
நூல் : திர்மிதி 1866
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 14)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
இது போல உஹதுப் போரின் போது முஸ்லிம்களுக்கு ஆரம்பத்தில் வெற்றி கிடைத்தாலும் இடையில் அவர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டது. தோற்று ஓடிய எதிரிகள் மலைக்குப் பின் புறமாக வந்து சுற்றி வளைத்த போது, செய்வதறியாமல் நபித் தோழர்கள் சிதறி ஓட்டம் பிடித்தனர். ஆனால் எதிரிகள் சுற்றி வளைத்துக் கொண்ட பின்பும், தமது தோழர் களில் பெரும்பாலானோர் சிதறி ஓடிய பின்பும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் களத்திருந்து ஓட்டம் பிடிக்கவில்லை. அபூதல்ஹா (ரலி) போன்ற மிகச் சிலருடன் சேர்ந்து கொண்டு சமர் புரிந்தனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் முகத்தில் கடுமையான வெட்டுக் காயம் ஏற்பட்டது.
நூல் : புகாரி 4064, 3811
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 13)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
ரபீஆ (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு ஒன்று விட்ட சகோதரர். அவரது மகனைத் தான் ஹுதைல்' என்ற கூட்டத்தார் கொலை செய்திருந்தனர். தம் சகோதரர் மகனை (தம்பியை அல்லது அண்ணனை) கொலை செய்தவர்களை முதல் மன்னிப்பதாக அறிவிக்கிறார்கள். தமது குடும்பத்தார் அனைவரிடமும் இது பற்றிப் பேசி அவர்கள் அனைவரையும் மன்னிக்கச் செய்து தாமும் மன்னிக்கிறார்கள்.
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 12)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....

ஆன்மீக வாதிகளால் நமக்கு நன்மை செய்ய முடிகிறதோ, இல்லையோ அவரைப் பகைத்துக் கொண்டால் நிச்சயமாக அவரால் நமக்குத் தீமை செய்ய முடியும் என்ற தோற்றத்தை ஆன்மீக வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர். 'பிடி சாபம்' என்று சொல் விட்டால் நமது கதி அதோ கதி தான் என்று மக்களை நம்ப வைத்து விடுகிறார்கள்.

பெண்களைக் கற்பழிப்பார்கள். வெளியே சொன்னால் சாபம் போட்டு விடுவேன் என்பார்கள்.
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 11)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் போது அவர்களுக்கு இயன்றதையே கட்டளையிடுவார்கள். அப்போது சில நபித் தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களைப் போன்றவர்களாக இல்லை. அல்லாஹ் உங்களின் முன் பாவங்களையும், பின் பாவங்களையும் மன்னித்து விட்டான்.' என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். அந்தக் கோபத்தின் அறிகுறி அவர்களின் முகத்தில் தென்பட்டது. ' நான் உங்களை விட இறைவனை அறிந்தவன். அவனை அதிகம் அஞ்சுபவன்' எனக் கூறினார்கள்.
நூல் : புகாரி: 20
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 10)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
நபிகள் நாயகத்தின் பள்ளிவாசல் மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியை பிலால் (ரலி), இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இருவரிடம் தான் நபிகள் நாயகம் (ஸல்) ஒப்படைத்திருந்தார்கள்.
நூல் : புகாரி 617, 620, 623, 1919, 2656, 7348

இவருக்கு இவ்வளவு உயர்ந்த தகுதியை வழங்கியிருப்பதிருந்து இந்த மாமனிதரின் போத்தனமில்லாத பரிசுத்த ஆன்மீக வாழ்வை அறிந்து கொள்ளலாம்.
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 9)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
அதிகாரம் படைத்தோர், அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றாலும், 'நாங்கள் பக்குவம் பெற்ற வர்கள், துறந்தவர்கள்' என்றெல்லாம் அவர்கள் தம்மைப் பற்றி கூறிக் கொள்வதில்லை. எனவே அவர்கள் சாமான்யர்களையும், பிரமுகர் களையும் பாரபட்சமாக நடத்துவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 8)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுகளவு கூட பெருமையையும், புகழையும் விரும்பியதில்லை என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்:

நபிகள் நாயகத்துடன் நான் ஒரு போரில் பங்கெடுத்துக் கொண்டேன். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின்தங்க வைத்தது. (முன்னே சென்று கொண்டிருந்த நபிகள் நாயகம்) என்னிடம் வந்து ஜாபிரா?' என்றனர். நான் ஆம் என்றேன். 'என்ன பிரச்சினை' என்று கேட்டார்கள்.
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 7)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....மற்றொரு அற்புத வரலாற்றைப் பாருங்கள்!

என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏமனுக்கு (இன்று இது தனி நாடாகவுள்ளது.) ஆளுநராக அனுப்பினார்கள். நான் ஏமன் நோக்கிப் புறப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள்.
விடை பெறும் போது,
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 6)



சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....

'மக்களிடம் சர்வ சாதாரணமாக முஹம்மது பழகுகிறார்; யாரும் அவரை நெருங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கோரிக்கையை முன் வைக்கலாம்; நீண்ட நாள் பழகிய நண்பனுடன் எடுத்துக் கொள்ளும் உரிமையை எடுத்துக் கொள்ளலாம்; எப்படி நடந்தாலும் அவர் கோபம் கொள்ள மாட்டார்; தேவைக்கேற்ப வாரி வழங்குவார்' என்றெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் தான் அறிமுகமில்லாத கிராமவாசிக்கு இப்படி நடக்க முடிந்தது.
Continue Reading

நபிகள் நாயகம்vsதலைவர்கள்-(பகுதி 5)



நபி(ஸல்)அவர்களின் மீது இன்று ஏற்படுத்தப்பட்டுள்ள தவறான குறைகளை களைய வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.P.J அவர்களின் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலே இக்கட்டுரை.
நீண்ட நாட்களுக்கு பிறகு தொடர் எனபதையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகின்றேன்.

சென்ற கட்டுரையின் தொடர்ச்சி....
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி 2433, 2055, 2431
Continue Reading

PROBLEM SOLVED வலைத்தளம் ரெடி.....


இதுவரை நமது வலைப் பூவில் ஏற்பட்ட பெரிய சிக்கலால்(வலைதளத்தை ஓபன் செய்து பார்க்க முடியவில்லை,ERROR ரிசல்ட் தான் வந்தது) இந்த வலைதளத்தை என்னால் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு எந்த கட்டுரைகளையும் கடந்த 3 மாதங்களாக வெளியிடமுடியாமல் இருந்தது. தற்பொழுது தான் அந்த பிரச்சனை சரியானது அல்ஹம்துலில்லாஹ்...இனி தொடர்ச்சியாக கட்டுரைகள் வெளிவரும் இன்ஷா அல்லாஹ்,ஆதலால் முன்பு போல தங்களுடைய ஆதரவையும்,கருத்துகளையும் எதிர்பார்கின்றேன்.....

குறிப்பு:வலைத்தளம் ஓபன் ஆக வேண்டும் என்பதால் சாதாரன TEMPLETS பயன்படுத்தி உள்ளதால் வாசகர்கள் மன்னிக்கவும் இந்த பிரச்சனையும் விரைவில் சரிசெய்யப்படும் இன்ஷா அல்லாஹ்....